வியாழன், 8 ஜூலை, 2010
மாம்பழம் சாப்பிட வாங்க!
தில்லி சுற்றுலா கழகம் ஜூலை 2-3 தேதிகளில் 22வது மாம்பழ விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவானது பீதம்புரா பகுதியில் அமைந்துள்ள ”தில்லி ஹாட்” வளாகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ரகம் ரகமாக எத்தனை மாம்பழங்கள்? இங்கே எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. முக்கியமான சில வகைகள், மல்லிகா, கரேலா, பப்புகோஷா, பாதாம், குலாப்ஜாமுன், அல்ஃபோன்சா, தோதாபரி மற்றும் பல.
அமைதிச்சாரல் வலைப்பூவில் குறிப்பிடப்பட்டிருந்த ”சச்சின்” வகை மாம்பழத்தினையும் காட்சியில் வைத்திருந்தனர்.
ஒரு சில விற்பனைக்கூடங்கள் இருந்தாலும், அவற்றில் தில்லியில் பொதுவாகக் கிடைக்கும் ”தசேரி, லங்க்டா, சோசா” வகை மாம்பழங்களே விற்பனை செய்யப்பட்டது வருத்தமாக இருந்தது.
மாம்பழ விழாவினை முன்னிட்டு மேஜிக் ஷோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மாம்பழம் சாப்பிடும் போட்டி, மற்றும் பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இசை போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆங்காங்கே ”மாம்பழங்களை தொடாதீர்கள்” என ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், அங்கே வந்திருந்த ஒரு பெண்மணி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வகை மாம்பழத்தினையும் கையில் எடுத்து வாசனை பார்த்து எல்லோரையும் படுத்திக்கொண்டு இருந்தார். மாவடு அளவு இருந்த ஒரு மாம்பழத்தினை எடுத்து தனது மகனுக்கு காண்பிக்க வீட்டுக்கு எடுத்துச் செல்லவா என்றும், ”தேங்காய்-மாங்காய்” என்ற ஒரு வித மாம்பழத்தை பார்த்து, ”இதை உடைத்தால் தண்ணீர் வருமா?” என்றும் காட்சியாளர்களை கேட்டது தான் அதன் உச்ச கட்டம் .
பல வகை மாம்பழங்களை பார்த்து ரசித்தால் மட்டும் போதுமா என்ன? அதுவும் வளாகத்தின் வெளியிலேயே அழகான படங்கள் – “Can You Resist It?” என கேட்கும்போது? அதனால் கிடைத்த மாம்பழ வகைகளில் எல்லாவற்றில்லும் ஒரு கிலோ வாங்கி வந்தேன். இந்த வாரம் எனது வீட்டில் “மாம்பழ வாரம்ம்ம்ம்ம்!”
Labels:
தில்லி
ஓ, போயிட்டு வந்தாச்சா.. நாங்க போக நினைச்சு கேன்சல் ஆகிட்டே இருக்கு. எப்போ வரைக்கும் இருக்கு கண்காட்சி தில்லி ஹட்ல?
பதிலளிநீக்குஏங்க நீங்க வேற ஆர்வத்தை தூண்டி விடுறீங்க??
பதிலளிநீக்குஎன்ன (வெங்கட்) நாகராஜரே! மாம்பழத்தைக் காட்டி நாடகத்தை ஆரம்பித்து வைத்து விட்டீர். உங்கள் பதிவைப் படிக்கும் அனைத்து வீடுகளிலும் மாம்பழக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் வரை நாடகம்தான். நடக்கட்டும். நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க விக்னேஷ்வரி, தில்லி ஹாட்ல நடந்த 22-வத் மாம்பழ ஃபெஸ்டிவல் 4ஆம் தேதி முடிந்தது. நீங்க அடுத்த விழாவுக்குத் தான் காத்திருக்கணும்...
பதிலளிநீக்குவாங்க கவிதை காதலன்,
பதிலளிநீக்குஆர்வம் வந்துடுச்சா, சரி போய் மாம்பழம் சாப்பிடுங்க சரியா... :)
வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி, ஏதோ நம்மால ஆன உதவி... அது சரி நீங்க அழைச்சிட்டு போகப்போறீங்கதானே?
பதிலளிநீக்கும்ம் மகிழ்ச்சியான மாம்பழ வாரமாக்கட்டும்
பதிலளிநீக்குவாங்க லாவண்யா, வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி :)
பதிலளிநீக்கு//”தேங்காய்-மாங்காய்” என்ற ஒரு வித மாம்பழத்தை பார்த்து, ”இதை உடைத்தால் தண்ணீர் வருமா?” என்றும் காட்சியாளர்களை கேட்டது தான் அதன் உச்ச கட்டம்//
பதிலளிநீக்குசூப்பர் காமெடிப்பா.. என்னோட மாம்பழ பதிவையும் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல் :) நமக்குக் காமெடி, ஆனா அங்க இருந்த காட்சியாளர்தான் பாவம். இது மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்காங்களோன்னு நினைச்சு இருப்பாங்க. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
பதிலளிநீக்குஹலோ.. எங்க ஊருக்கு வாங்க.. தினுசு தினுசா மாம்பழம் சாப்பிடலாம்.. சீசன்ல..
பதிலளிநீக்குவாங்க ரிஷபன் சார், உங்க ஊர்ல “மாம்பழச்சாலை” இருக்கும்போது தினுசுதினுசா மாம்பழம் கிடைக்காதா என்ன? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு