நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ”ஜூனியர் ஜேசீஸ் க்ளப்”பில் நான் சேர்மன் பொறுப்பிலும் மற்ற கல்லூரி நண்பர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தோம். கல்லூரியில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நானும் நண்பர்களும் பங்கெடுத்துக்கொள்வோம்.
ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் நானும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் போட முடிவு செய்தோம். நாடகத்தில் மொத்தமாகவே ஆறு கதாபாத்திரங்கள்தான். கதாநாயகன், நாயகி மற்றும் நான்கு நண்பர்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது. மாலை ஆறு மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணியிலிருந்தே நாடகத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒப்பனை செய்துகொண்டு ஐந்து மணிக்குள் தயாராகிவிட்டோம். கதாநாயகி சந்தன நிறத்தில் தங்க நிற ஜரிகை பார்டர் போட்ட புடவை-ஜாக்கெட்டில், உதட்டுச்சாயம், வளையல், காதணி, கழுத்துக்குச் சங்கிலி என தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அலங்கரிக்கப்பட்ட அந்த அழகுப் பெட்டகத்தை என்னுடைய மிதிவண்டியின் கேரியரில் உட்கார வைத்து அரங்கத்தை நோக்கிச் செல்லும் போது வழி நெடுகிலும் பல ஜோடி கண்கள் இருவரையும் மொய்த்துக் கொண்டிருந்தது.
முக்கிய சாலையில் வந்து சுற்றிலும் பார்த்தபடியே வேக வேகமாக மிதிவண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். பிறந்ததிலிருந்து அதே ஊரில் இருந்ததால் சாலையில் செல்லும் பெரும்பாலானவர்கள் என்னை அறிந்தவர்களாக இருந்தனர். அனைவரது பார்வையிலும், ”என்ன இது, நாகராஜன் சார் பையன் ஒரு அழகிய பெண்ணை இவ்வளவு வேகமாக சைக்கிளில் அழைத்துச் செல்கிறானே?” என்ற கேள்விக்குறி!
என் வயதொத்த நண்பர்கள் வேறு ஆங்காங்கே சேர்ந்து எங்களை பின் தொடர ஆரம்பித்தார்கள். என் பின்னால் உட்கார்ந்திருந்த அழகு தேவதையோ குனிந்த தலை நிமிராமல், கையால் என்னை இடித்தவாறு “சீக்கிரம் போங்க, சீக்கிரம் போங்க!” என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. அது சைக்கிள் செல்லும் வேகத்தில் ”என்னைக் காப்பாத்துங்க, காப்பாத்துங்க!” என்ற அபலைக் குரலாக மற்றவர்களுக்கு கேட்டிருக்குமோ என்னவோ?
அவர்கள் அனைவரிடமிருந்தும் காப்பாற்றும் எண்ணத்தோடு காற்றைக் கிழித்துக்கொண்டு மிதிவண்டியை அதிவேகமாக செலுத்தி நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் பின் உள்ள அறையினுள் சென்ற பின்னர்தான் எனக்கு உயிரே வந்தது.
நாடகம் தொடங்குவதற்கு முன் பார்த்தால் எங்களைத் துரத்தி வந்த நண்பர்கள் அனைவரும் நான் நாடகத்தில் நடிக்கப் போவதைப்பற்றித் தெரிந்துகொண்டு மேடையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். நாடகம் ஆரம்பித்தவுடன், ”யாருடா அந்த பொண்ணு?” என்று கத்தியதுடன் நில்லாமல் அரங்கமே அதிரும்படியான விசில் சத்தம் வேறு. அத்தனை சத்தங்களுக்கிடையே நாடகத்தினை நல்லபடியாக முடித்து அனைவரது பாராட்டினையும் பெற்றோம்.
கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பதற்கு கல்லூரித் தோழிகளிடம் கேட்காமல் நண்பர்களில் ஒருவருக்கே கதாநாயகி வேடத்தினைக் கொடுத்துவிட்டோம். நண்பரும் எந்தவித சங்கடமுமின்றி ஒத்துக்கொண்டு விட்டார். அதில் அவரை விட அவரது அம்மாவுக்கு அதிக ஆர்வம் வந்து விட நண்பருக்கு ஒப்பனைகள் செய்ய நான்கு நாட்களுக்கு முன்னிருந்தே எல்லாவிதமான தயாரிப்பு ஏற்பாடுகளில் இறங்கி நண்பரை ஒரு அழகான பெண்ணாக மாற்றியிருந்தார்.
பெண்ணாக நடித்த நண்பருக்கு நல்ல கைத்தட்டல். நாடகம் முடிந்து நண்பரும் வேடம் கலைத்து ஆணாக வந்த பின்னர், எங்களைத் துரத்திய அத்தனை நண்பர்களின் முகத்திலும் லிட்டர் லிட்டராக அசடு வழிந்தது.
இரவு வீடு திரும்பி டிபனை சாப்பிட்டுவிட்டு படுத்த போது நிஜமாகவே ஒரு பெண்ணை கயவர்களிடமிருந்து காப்பாற்றிய ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது என்னவோ நிஜம்.
//ல்லூரியில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நானும் நண்பர்களும் பங்கெடுத்துக்கொள்வோம். //
பதிலளிநீக்குஅப்ப படிக்கலைன்னு சொல்லுங்க
//து சைக்கிள் செல்லும் வேகத்தில் ”என்னைக் காப்பாத்துங்க, காப்பாத்துங்க!” என்ற அபலைக் குரலாக மற்றவர்களுக்கு கேட்டிருக்குமோ என்னவோ?
//
ஹிஹி
//கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பதற்கு கல்லூரித் தோழிகளிடம் கேட்காமல் நண்பர்களில் ஒருவருக்கே கதாநாயகி வேடத்தினைக் கொடுத்துவிட்டோம். நண்பரும் எந்தவித சங்கடமுமின்றி ஒத்துக்கொண்டு விட்டார்//
கவுதுடீங்க
//பெண்ணை கயவர்களிடமிருந்து காப்பாற்றிய ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது என்னவோ நிஜம்//
இது ரொம்ப ஓவர்
Haa haa. Nice. So you were Chairman in college culturals? Good Venkat! Interesting experience.
பதிலளிநீக்கு//பெண்ணை கயவர்களிடமிருந்து காப்பாற்றிய ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது என்னவோ நிஜம்//
பதிலளிநீக்குஆமாமா!. எல்லாம் வயசுக் கோளாறு.
அது சரி! இன்னுமா அவளை, இல்லை! இல்லை! அவனை நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
அப்ப போட்டொ எதுவும் எடுக்கலியா?
பதிலளிநீக்குஹீரோ சார் :)
பதிலளிநீக்குஒரு விரிவுரையாளரையே அந்த பெண் (!!) மயக்கிவிட்டதை ஏன் எழுதவில்லை வெங்கட்?!!
பதிலளிநீக்குபாவம் மக்கள். ம்ம் நல்ல நகைச்சுவை போங்கள்
பதிலளிநீக்கும்ம்... நைஸ்!
பதிலளிநீக்குஅந்த கடைசி வரிகள் சூப்பர்!!!
பதிலளிநீக்குசூப்பர்.. ஹீரோயினைக்காப்பாத்திட்டீங்க :-))
பதிலளிநீக்குவாங்க LK, "அப்ப படிக்கலைன்னு சொல்லுங்க" - சொல்ல மாட்டேனே... :) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க மோகன், அது நல்ல ஒரு அனுபவம். :) நன்றி.
பதிலளிநீக்குவாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்], அவளை [னை] இப்போதும் நினைத்ததால்தானே இந்த இடுகை. :)
பதிலளிநீக்குவாங்க ரிஷபன் சார், போட்டோ எடுத்தோம், ஆனா இந்த இடுகையில அதை சேர்க்கலை. :) வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க முத்துலெட்சுமி, நன்றி :)
பதிலளிநீக்குவாங்க குமார், இது நடந்தபோது அந்த விரிவுரையாளர் இல்லை, நமது கல்லூரி சுற்றுலா போதுதான் அந்த விரிவுரையாளர் மயங்கினார். :) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க லாவண்யா [உயிரோடை], வரவுக்கு நன்றி.
வாங்க ப்ரியா, தேங்க்ஸ் :)
வாங்க ஆர். ஆர். ஆர் சார், தங்களது உற்சாகமான கருத்துக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல், காப்பாத்திடோம்ல.... :) நன்றி.