திங்கள், 14 மார்ச், 2011

தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன்!

சில நாட்கள் முன்பு “"ரிஜப்சன்"-ன்னா என்னாபா?” என்ற பதிவில் தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன் பற்றி பிறகு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இங்கே நடக்கும் அப்படிப்பட்ட ஒரு ரிசப்ஷனை உங்கள் கண்முன்னே கொண்டுவர முயற்சிக்கிறேன்.

தில்லியிலேயே பலகாலம் தங்கிவிட்ட தமிழர்கள் தனது பெண்ணோ, பையனோ கல்யாண வயதிற்கு வந்துவிட்டால் பெரும்பாலும் தில்லி வாழ் மணமகன்/மகளையே தேடுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் ஒத்து வராது என்பது தான்! என்னமோ பல தலைமுறைகளாக இங்கேயே தங்கி விட்டது போல் பேசுவார்கள். அப்படிப்பட்ட கல்யாணங்கள் பெரும்பாலும் தில்லியிலேயே நடந்து விடுவதால், சிலரை முதல் நாள் மாலை ரிசப்ஷனுக்கும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கும் அழைப்பார்கள்.

நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! மணமகளுக்கு ராஜஸ்தானிய/குஜராத்தி/பஞ்சாபி முறைப்படி ஒரு காக்ரா/சோளிதான் உடையாக இருக்கும்!

மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்குமென்றால் 04.30 மணிக்கே மணப்பெண்ணும் மணமகனும் ஏதாவது ஒரு ப்யூட்டி பார்லர் சென்று பழைய வண்டியை டிங்கரிங் செய்து டெண்டிங், பெயிண்டிங் செய்வது போல முகத்தினை டிங்கரிங் செய்து வருவார்கள். கண்டிப்பாக மணப்பெண் தலைமுடியை கட்டியிருக்க மாட்டார் – தலைவிரி கோலம்தான்! அதிலும் ஆங்காங்கே சில பல முடிகளில் மட்டும் கோல்டன் அல்லது சில்வர் கலரிங் உண்டு. பின்னே வீடியோ எடுப்பதற்காக போடும் விளக்குகளில் பளபளக்க வேண்டாமா!

சரி மணப்பெண்/மணமகன் என்பதால் அவர்களை விட்டுவிடலாம். வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள் – ஏதோ அவர்கள் தலைமையில்தான் அந்த நிகழ்ச்சியே நடப்பது போல!

நடுங்கும் குளிராக இருந்தாலும் பட்டுப் புடவை சரசரக்க வருவார்கள், ஆனால் ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக் கொள்ளாமல் தோளில் அங்கவஸ்த்ரம் போல ஒரு ஷாலை மடித்துத் தொங்க விட்டுக் கொள்வார்கள் – ஸ்வெட்டர் போட்டால் – போட்டிருக்கும் நகை நட்டெல்லாம் எப்படி அடுத்தவர் கண்களுக்குத் தெரியும் என்ற நியாயமான கவலைதான் – அப்படி குளிரில் ஏதாவது ஜூரம் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள்.

கண்டிப்பாக டிஸ்கோ ஜாக்கி உண்டு. கண்ணைப் பறிக்கும் விளக்குகள் அங்கும் இங்கும் ஒளியைச் சிதற, 10 X 10 அளவில் ஒரு பெரிய தரைமேடை இருக்கும். அங்கே இருக்கும் டிஸ்கோ ஜாக்கி புதிய புதிய பஞ்சாபி பாட்டுகளையும், ஹிந்தி மொழி சினிமா பாடல்களையும் போட கண் மண் தெரியாமல் ஆட வேண்டும்! பாடல் வரிகள் கண்டிப்பாகப் புரியாது – அதிகமான இரைச்சலான இசையில் கை கால் சுளுக்கிக் கொண்டது போல ஆட்டிக்கொண்டு இருப்பார்கள். தமிழ்ப் பாட்டுக்கு – டப்பாங்குத்தாக இருந்தாலும் கண்டிப்பாக “நோ நோ” தான் – ”மதராஸி கானா மத் லகாவ் யார்!” என்று சுத்தத் தமிழன் ஒருவர் அலறுவார்!

அதுவும் கடந்த மூன்று-நான்கு மாதங்களில் நான் சென்ற சில ரிசப்ஷன்களில் “ஷீலா, ஷீலா கி ஜவானி!” மற்றும் “முன்னி பத்நாம் ஹுயி டார்லிங் தேரேலியே” போன்ற கருத்தாழமிக்க பாடல்களுக்கு ஏதோ தாங்கள் ஜென்மம் எடுத்ததற்கான பலனே இதுதான் என்பது போல ஆண்களும் பெண்களும் நடனம் ஆடுவதை கண்டிருக்கிறேன்.

தமிழர்களின் சிறப்புச் சிற்றுண்டியான இட்லி, வடை, தோசை போன்றவை இருந்தாலும், பெரும்பாலும் நம் ஆட்கள் நான், சப்பாத்தி என்று பிய்த்துப் பிராண்டிக்கொண்டு இருப்பார்கள்! இட்லி, வடை தோசை போன்றவற்றை வட இந்தியர்கள் மட்டுமே ஒரு கட்டு கட்டுவார்கள் – இரண்டு இட்லி, ஒரு வடைக்கு அரை பக்கெட் சாம்பாருடன்!

ரிசப்ஷன் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க – இன்னொரு பக்கத்தில் கண்டிப்பாக தீர்த்தவாரி உண்டு. அப்படி தீர்த்தவாரி கண்டவர்கள் டோல் மேளத்திற்கு ஆடுவது போல ஆடிக்கொண்டு இருப்பார்கள்!

இப்படியெல்லாம் நடக்கும் தலைநகர தமிழரின் ரிசப்ஷனுக்கு எனக்கு அழைப்பு வந்தாலே வேறு வழியில்லாமல் மனதுக்குள் நடுக்கத்துடன் தான் செல்கிறேன்!

தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காகவோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து! இதில் உங்களுக்கும் ஒத்த கருத்து இருக்கும் என நினைக்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்!

வெங்கட் நாகராஜ்



32 கருத்துகள்:

  1. நல்ல பதிவு...நிறைய திருமணங்கள் இப்படி தான் நடக்கின்றன..

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அடுத்ததாக டெல்லியிலிருந்து ஏதும் கல்யாணப் பத்திரிக்கை வராதா என ஏங்க வைச்சுட்டீங்க வெங்கட்.

    வயசானவங்க (பெண்கள்) தங்களை 10 வயதாவது குறைத்துக்கொள்ளச் செல்லும் அலங்கார மேக்-அப், தீர்த்தவாரி, 2 இட்லி + 1 வடைக்கு, அரை பக்கெட் சாம்பார், அட்டா....

    நீங்க பார்த்து ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் நாங்க வரமுடியும்.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    [இங்கேயும் அதுபோலெல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் ஆண் பெண் இளைஞர்/இளைஞி மட்டுமல்லாமல் எல்லாக் கிழபோல்ட்டுகளும் (KBs)சேர்ந்து ஆடுதுங்க, வெங்கட்]

    பதிலளிநீக்கு
  3. //அதுவும் கடந்த மூன்று-நான்கு மாதங்களில் நான் சென்ற சில ரிசப்ஷன்களில் “ஷீலா, ஷீலா கி ஜவானி!” மற்றும் “முன்னி பத்நாம் ஹுயி டார்லிங் தேரேலியே” போன்ற கருத்தாழமிக்க பாடல்களுக்கு ஏதோ தாங்கள் ஜென்மம் எடுத்ததற்கான பலனே இதுதான் என்பது போல ஆண்களும் பெண்களும் நடனம் ஆடுவதை கண்டிருக்கிறேன்.//

    ஹிஹி! கேட்கும்போதே எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்குது வெங்கட்ஜீ! ரெண்டுமே சூப்பர் பாட்டு! :-)

    பதிலளிநீக்கு
  4. //வட இந்தியர்கள் மட்டுமே ஒரு கட்டு கட்டுவார்கள் – இரண்டு இட்லி, ஒரு வடைக்கு அரை பக்கெட் சாம்பாருடன்!//

    போனமுறை தில்லி வந்திருந்தபோது, கன்னாட் ப்ளேஸ் "மதறாஸ் ஹோட்டலில்’ வட இந்தியர்கள் கோப்பை கோப்பையாக சாம்பாரை பருகி ரிப்பீட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்! :-)

    பதிலளிநீக்கு
  5. //ரிசப்ஷன் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க – இன்னொரு பக்கத்தில் கண்டிப்பாக தீர்த்தவாரி உண்டு. அப்படி தீர்த்தவாரி கண்டவர்கள் டோல் மேளத்திற்கு ஆடுவது போல ஆடிக்கொண்டு இருப்பார்கள்!//

    ஆமா, அவங்க ஆடுறதுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. சரக்கு உள்ளே போனாலாவது தாளசுத்தமா ஆட மாட்டாங்க...?

    பதிலளிநீக்கு
  6. //தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காகவோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து! //

    உண்மை! முற்றிலும் உண்மை! அதிலும் ஆடம்பரத்துக்காக, பந்தாவுக்காக, லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிடுவது உறுத்தல்தான். அதை நிறுத்தி உருப்படியாக செய்வதுதான் சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. //தலைவிரி கோலம்தான்!//

    -- இங்கேயும் பாதி ரிஜப்ஷன்கள் அப்படித்தான் நடக்கின்றன... ரிஜப்ஷனுக்கு நீளமா தலை சீவி, குஞ்சம் வைத்து நம்ம வழக்கப்படி செய்யலாம் என்று ஆரம்பித்து நான் வாங்கிக்கட்டிக் கொண்டது இன்னும் நினைவிலிருக்கின்றது...

    அரை பக்கெட் சாம்பாரா...? கட்டுபடியாகாதே பாஸ்..

    பதிலளிநீக்கு
  8. இங்கே நடக்கும் தமிழ் ரிசப்ஷன்களுக்குப் போனதில்லை. ஆனால் வட இந்தியர்களின் இவ்வகைக் கொண்டாட்டங்களை நான் மதிக்கிறேன். நாம தான் முன்னாடி காலத்துல பண்ணிட்டிருந்த முறைகளை விட்டுட்டுப் புதுசா மாறிட்டோம். ஆனா அவங்க எவ்ளோ என்ஜாய் பண்ணாலும் அவங்க பாரம்பரிய சடங்குகளை விட்டுக் குடுக்கறதில்லை.

    பதிலளிநீக்கு
  9. வெங்கட் இங்கயும் இப்ப வரவேற்ப்புக்கு தலையை விரித்துப் போடுவது ஒரு பேசன் ஆகிவிட்டது. தீர்த்தவாரி பொதுவில் நடப்பது இல்லை. இரவு தனியாக நடக்கும் .

    //வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள்//

    இங்கயும் இருக்கே அது....

    இப்ப ஒரு சிலக் கல்யாணங்களில் இந்த ஆட்டம் உண்டு. அவர்கள் ஆடுவது போதாதென்று மணமக்களையும் ஆட சொல்லுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  10. கூஊஊஊஊஊர்ந்த கவனிப்பு!!!!!!!!!!! பதிவர் குண விசேஷங்களில் நல்லா தேறிட்டீங்க:-)))))

    இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. இதுவரை இந்தமாதிரி வட இந்திய திருமணங்களில் கலந்து கொண்டது இல்லை.ஆனால்,எங்கள் அப்பர்த்மேன்ட்க்கு பக்கத்தில் ஒரு கிரவுண்ட் இருக்கிறது.அங்கே அடிக்கடி கல்யாணங்கள் நடக்கும்.பார்த்திருக்கிறேன். வீட்டினுள் பயங்கர இரைச்சல்தான் கேட்கும்.

    //நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! //
    ரூபாய் நோட்டு மாலையுடன், மாப்பிள்ளை குதிரையில் போவதை சொல்ல மறந்துடீன்களே?எங்க அப்பார்ட்மென்ட்ல ஒரு தமிழ்காரருக்கு இப்படித்தான் ரிசப்ஷன் நடந்தது

    பதிலளிநீக்கு
  12. தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காகவோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து!
    மனப்பூர்வமாய் ஒத்துப் போகிறேன்..

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டம் போட்டா பதிவு போல வருது. தனியா பதிவே போடறேன்.

    பதிலளிநீக்கு
  14. //புதுகைத் தென்றல் said...

    பின்னூட்டம் போட்டா பதிவு போல வருது. தனியா பதிவே போடறேன்...//

    same blood. ஒவ்வொரு வரிக்கும் எதும் சொல்லனும் போல இருக்கு. ஏன் நம்ம ஆட்கள் இப்படி கலாச்சாரத்தை மதிக்க விரும்புவதில்லைன்னு புரியலை. நேத்துதேன் ‘டைனமிக்’ கல்யாணம்னு ஒன்னும் பாத்து தொலைச்சேன். ச்சீ... சென்னைல ஒரு தோழியின் கல்யாணம் முழுக்க முழுக்க தமிழ் சம்பிரதாயப்படி நடந்தது. ரெண்டு பேருமே வெளிநாட்டுல தங்கி படிச்சவங்க, கல்யாணத்துக்கு அப்புறமும் வெளிநாடு போறவங்க. இபப்டியும் சில பேர் இருக்காங்க, அபப்டியும் சில பேர்!!!

    பதிலளிநீக்கு
  15. http://pudugaithendral.blogspot.com/2011/03/blog-post_5905.html

    பின்னூட்டம் இங்கே

    பதிலளிநீக்கு
  16. இரண்டு இட்லி, ஒரு வடைக்கு அரை பக்கெட் சாம்பாருடன்! அடப்பாவிகளா???

    பதிலளிநீக்கு
  17. டில்லியில் வாழ்ந்தாலும், தமிழரின் புண்பட்ட பண்பாட்டு வக்கிரங்களை மிக நாசூக்காக கையாண்டிருக்கின்றீர்கள். முடிவில் தாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு நான் இரு கரம் நீட்டி வரவேற்பதோடல்லாமல் அதுவே ஒவ்வொருவர் மனத்திலும் இனி வரும் காலங்களில் அப்படியே செயல்முறை படுத்துவதுவேன் என்ற திட எண்ணத்தினை, மாற்றத்தினை தோற்றுவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன், திரு வெங்கட்ராமன் அவர்களே!!

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  18. அட்டகாசமான வர்ணனை வெங்கட். அசத்திடீங்க..
    ஒரு தவலை சாம்பாரை ஒரு ஜூனியர் சர்தார்ஜி தில்லி சரவணபவனில் குடிச்சுகிட்டு இருந்தான். மொடா குடிகாரன். அதில இருக்கிற மொளகாவைக் கூட தின்னுபிட்டான். அங்கதான் சாம்பாருக்கு எக்ஸ்ட்ராவா சார்ஜ் பண்றாங்க போலருக்கே.. ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I can not open your rvsm.in for a long period. the message is

      This blog is open to invited readers only.

      Just revert to blogspot. Thank you.

      நீக்கு
  19. இந்த ஊர்க்காரங்க மட்டும்தான் அப்படின்னு நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
  20. தில்லி என்னங்க தில்லி..நம்ம ஊர்லயே இந்தக்கூத்தெல்லாம் நிறைய பேர் பண்றாங்க...ரியாத்தில் நாங்கள் இருக்கிறோம்...ஊருக்கு வரும்போது நம் முறைப்படி கல்யாணம் எப்படி நடக்கும் என்று என் மகளுக்குக் காண்பிக்க வேண்டுமென்று வருடக்கணக்காய் ஆவல்...அவள் கல்யாணத்தில்தான் இந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது...கல்யாணம் என்பது ஒரு fashion parade ரகத்துக்குப் போய்விட்டது...

    பதிலளிநீக்கு
  21. Pl refer to the last line.

    No I don’t. Opulent weddings should continue in society: those who can, should. Those, who can’t, should not imitate them.

    Orphanages can receive money from other sources, not from cutting such weddings and saving the money. The couple may go, immediately after such weddings, to an orphanage and feed the orphan kids the same food they have fed in the grand wedding dinner. Reason: such food is unknown to the orphan kids; and let them enjoy for a day. If you give money to orphanages, it may not go to food only, but get shiponed off to other activities there. By visiting the orphanages, and talking to the kids there, the message will sink in that the kids, after all, are lovable. Physical relationship is important – like such visits. Psychological support is more important than material support to orphaned kids. I was with an NGO for some time; and I should know!

    Now coming to the rationale of these weddings. The lavish spending, for e.g, the pandals put up the tent contractors, the grand dinners, the Bharat,(the horse driven cart with driver) the band, and many more, all employ a large workforce The workers you may have noticed come from slums and depend on such contractors. They look forward to the marriage seasons. Why don’t you look at the faces of the band musicians, and the pandal construction workers ? By opposing such weddings, aren’t you depriving of their livelihood ?

    Thus, you see the benefits flow from up to down.
    Don’t criticize such weddings. Criticse only the imitations because the poor parents try to pretend, thereyby landing themselves in permanent financial troubles later on.

    The rich should exist so that the poor can live !

    பதிலளிநீக்கு
  22. Dear Venkat Nagaraj!

    Only observations are not good to read. They may be interesting only.

    As the last commenter Paasamalar said, the craze for imitating the non Tamil customs has spread to all cities in TN. This is due to ingress of northerners into TN or information channels. Just as the western customs have entered and we all accept that.

    Girls with flowing hair down, in jeans, will make you panick. They should be permitted to sport all.

    Tamil custom associates flowing down hair with amangalam. Not other customs.

    You cant stop the features of other customs attracting the new geenration. That is asking for the impossible.

    It is bound to happen.

    If people imitate, the reason is very simple: They found the alien customs lively, beautiful and interesting.

    Why not change your customs also so? Then the girls will like to stick to that.

    பதிலளிநீக்கு
  23. இன்னும் இங்கு வரவில்லை இனிமேல் வந்திடும்.

    பதிலளிநீக்கு
  24. கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும், தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    Dear Jo Amalan Rayan Fernando, Thanks for sharing your views.

    பதிலளிநீக்கு
  25. தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில் //
    மாற்றுக்கருத்து இல்லை. அனாவசிய வீணாகும் செலவுகளைக் குறைத்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
  26. வெங்கட் மிக அருமையான பதிவு. நானும் மும்பைதானே.அடிக்கடி அழைப்பு வரும் வேண்டா வெறுப்பாககல்ந்துகொண்டுவருவேன்.

    பதிலளிநீக்கு
  27. பட்டுப்புடவையும் அங்கவஸ்திர சால்வையும் :))

    பதிலளிநீக்கு
  28. என்னத்தச் சொல்ல? பணக்காரங்களை விடுங்க, எப்படி பணத்தை செலவழிக்கன்னு தெரியாம முழிக்கிறாங்க. ஆனா, புலியப் பாத்து பூனை சூடு போட்ட கதையா, நடுத்தரக் குடும்பங்களும்ல இதுபோலச் செய்றாங்க? தில்லியளவு இல்லைன்னாலும், மிகச்சில அநாச்சாரங்கள் தின்னவேலியிலும் ஆரம்பிச்சிருக்குது. மதக்கட்டுப்பாடுகள் காரணமா (நல்லவேளை) பாட்டும், ஆட்டமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  29. டில்லி வாழ் தமிழர்களின் ரிசெப்ஷன் வாசித்தபோது எனது மூத்த மகன் டில்லியில் உள்ள அலுவலக நண்பர்களுக்கு (மகன் அப்போது டில்லியில் வேலை பார்த்தான்) 2005 இல் கல்யாண ரிசெப்ஷன் கொடுத்தது நினைவில் வந்தது.கல்யாணம் திருவனந்தபுரத்தில். இங்கேயும் ஒரு ரிசெப்ஷன் இருந்தது. டில்லியில் மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலில் உள்ள ஹாலில் ரிசெப்ஷன் நடைபெற்றது. பரிசு என்று எல்லோரும் கொடுத்தது பூங்கொத்துகள் தான். வந்த ஆண்கள்  கோட் சூட்டில் தான். பெண் மல்லிகை பூ தலையில் வைத்தது அவர்களுக்கு வினோதம். டில்லி ரிசெப்ஷன் களில் ஒரு வித்யாசம். வந்தவர்கள் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஒரு மினி இந்தியா தான். 
    நமது மக்கள் சாஹி பனீரையும் நாணையும் சாப்பிட, வட  இந்தியர்கள் மசாலா தோசை, வடை சாம்பார் என்று வெளுத்து காட்டினார். டில்லி வாழ் தமிழர்களின் ரிசெப்ஷன் வாசித்தபோது எனது மூத்த மகன் டில்லியில் உள்ள அலுவலக நண்பர்களுக்கு (மகன் அப்போது டில்லியில் வேலை பார்த்தான்) 2005 இல் கல்யாண ரிசெப்ஷன் கொடுத்தது நினைவில் வந்தது.கல்யாணம் திருவனந்தபுரத்தில். இங்கேயும் ஒரு ரிசெப்ஷன் இருந்தது. டில்லியில் மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலில் உள்ள ஹாலில் ரிசெப்ஷன் நடைபெற்றது. பரிசு என்று எல்லோரும் கொடுத்தது பூங்கொத்துகள் தான். வந்த ஆண்கள்  கோட் சூட்டில் தான். பெண் மல்லிகை பூ தலையில் வைத்தது அவர்களுக்கு வினோதம். டில்லி ரிசெப்ஷன் களில் ஒரு வித்யாசம். வந்தவர்கள் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஒரு மினி இந்தியா தான். 
    நமது மக்கள் சாஹி பனீரையும் நாணையும் சாப்பிட, வட  இந்தியர்கள் மசாலா தோசை, வடை சாம்பார் என்று வெளுத்து காடில்லி வாழ் தமிழர்களின் ரிசெப்ஷன் வாசித்தபோது எனது மூத்த மகன் டில்லியில் உள்ள அலுவலக நண்பர்களுக்கு (மகன் அப்போது டில்லியில் வேலை பார்த்தான்) 2005 இல் கல்யாண ரிசெப்ஷன் கொடுத்தது நினைவில் வந்தது.கல்யாணம் திருவனந்தபுரத்தில். இங்கேயும் ஒரு ரிசெப்ஷன் இருந்தது. டில்லியில் மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலில் உள்ள ஹாலில் ரிசெப்ஷன் நடைபெற்றது. பரிசு என்று எல்லோரும் கொடுத்தது பூங்கொத்துகள் தான். வந்த ஆண்கள்  கோட் சூட்டில் தான். பெண் மல்லிகை பூ தலையில் வைத்தது அவர்களுக்கு வினோதம். டில்லி ரிசெப்ஷன் களில் ஒரு வித்யாசம். வந்தவர்கள் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஒரு மினி இந்தியா தான். 
    நமது மக்கள் சாஹி பனீரையும் நாணையும் சாப்பிட, வட  இந்தியர்கள் மசாலா தோசை, வடை சாம்பார் என்று வெளுத்து காட்டினார். டில்லி வாழ் தமிழர்களின் ரிசெப்ஷன் வாசித்தபோது எனது மூத்த மகன் டில்லியில் உள்ள அலுவலக நண்பர்களுக்கு (மகன் அப்போது டில்லியில் வேலை பார்த்தான்) 2005 இல் கல்யாண ரிசெப்ஷன் கொடுத்தது நினைவில் வந்தது.கல்யாணம் திருவனந்தபுரத்தில். இங்கேயும் ஒரு ரிசெப்ஷன் இருந்தது. டில்லியில் மயூர் விஹாரில் குருவாயூரப்பன் கோயிலில் உள்ள ஹாலில் ரிசெப்ஷன் நடைபெற்றது. பரிசு என்று எல்லோரும் கொடுத்தது பூங்கொத்துகள் தான். வந்த ஆண்கள்  கோட் சூட்டில் தான். பெண் மல்லிகை பூ தலையில் வைத்தது அவர்களுக்கு வினோதம். டில்லி ரிசெப்ஷன் களில் ஒரு வித்யாசம். வந்தவர்கள் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். ஒரு மினி இந்தியா தான். 
    நமது மக்கள் சாஹி பனீரையும் நாணையும் சாப்பிட, வட  இந்தியர்கள் மசாலா தோசை, வடை சாம்பார் என்று வெளுத்து கட்டினர்.
    Jayakumar


    Jayakumar

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....