ஏற்கனவே இரண்டு மூன்று தொடர் பதிவுகளுக்கு சில பதிவுலக நண்பர்கள் அழைத்திருந்தார்கள். இப்போது நண்பர் ஆர்.வி.எஸ். பெயர்க்காரணம் பற்றிய ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருக்கிறார். முன்பு வந்த அழைப்புக் கானவைகளையே இன்னும் முடிக்கவில்லை. இந்த “Wanted” பட்டியலில் இன்னுமொன்றை சேர்க்க வேண்டாமே என்று உடனே [ஒரு வாரம் கழித்து எழுதி விட்டு, “உடனே”ன்னு வேற போட்டுக்கிறயா?" என்று யாரோ முணுமுணுப்பது எனக்கு கேட்கலைங்க!] எழுதி விட்டேன்.
பெயர் வைப்பதில் நிறைய பழக்கங்கள். என் அக்கா கணவரின் வீட்டில் மாற்றி மாற்றி இரண்டு பெயர்கள் தான் வரும். ஆண்களுக்கு – கணபதி சுப்ரமணியன் – கைலாஸ்! ஆண் குழந்தைக்குத் தாத்தாவின் பெயர்தான். அதனால் மாற்றமின்றி பல தலைமுறைகளாக இதே பெயர்தான் எனக் கேட்டிருக்கிறேன். தில்லி சக பதிவர் கலாநேசன் கூட ஒரு பகிர்வில் ஒரு ஊரில் உள்ள வித்தியாசமான பெயர் வைக்கும் முறை பற்றி எழுதியிருந்தார். எத்தனை குழப்பங்கள் நேர்ந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.
என்னுடைய அப்பா-அம்மா எனக்கு வைத்த பெயர் வெங்கட்ராமன். அதன் முன் அப்பா பெயரும் சொந்த ஊரின் பெயரும் சேர்த்து வி.நா. வெங்கட்ராமன் – அதாவது விழுப்புரம் நாகராஜன் வெங்கட்ராமன் – அப்பாடா! அடிச்சு முடிக்கறதுக்குள்ள கை வலிக்குது – படிச்சு முடிக்கறதுக்குள்ளே உங்க கண் அசதியாகப் போகுது – அதனால வெங்கட்ராமன் அப்படின்னே தொடரலாம்.
பொதுவா ஒரு குழந்தை பிறந்தால் நம்ம ஊர்ல மூணு பேரு வைப்பாங்களாம். ஒரு பெயர் தான் எனக்கு வைச்சாங்க! ம்… எதற்காக எனக்கு இந்த பெயர் வைச்சாங்கன்னு எங்க அப்பாகிட்ட நேத்திக்கு கேட்டேன். உடனே அவர் கேட்டது – “ நீ பிறந்து 39 வருஷம் கழிச்சு ஏண்டா இப்படி ஒரு சந்தேகக் கேள்வி?” ["அய் வயசு தெரிஞ்சு போசச்சே"ன்னு யாரும் சந்தோஷப் படவேண்டாம்! நாங்க எப்பவுமே ரொம்ப வெளிப்படையான ஆளு!]
சரி காரணத்துக்கு வருவோம்! எங்க அக்கா முதல் குழந்தையா பிறந்ததுக்கப்புறம் திருப்பதி வெங்கடாஜலபதிகிட்ட எங்க அப்பா ஒரு டீல் போட்டுட்டாரு! ”இரண்டாவதை பையனா பொறக்க வையுங்க ஏழுமலையானே, அப்படி பொறந்தா அந்த பையனுக்கு உங்க பேரையே வைக்கறேன்” என்பது தான் அந்த டீல்! சொன்ன சொல்லைக் காப்பாத்தணுமில்லையா, இது தான் நான் “வெங்கட்ராமன்” ஆன கதை!!!
பள்ளியிலும் – V.N. VENKATRAMAN என்று தான் பெயர் இருந்தது பத்தாவது படிக்கிற வரை! ஆனா, பத்தாவது மார்க் ஷீட் கொடுத்த போது எனக்கு ஒரு “A” Certificate குடுத்துட்டாங்க! அதாவது மார்க் ஷீட்டை டைப் செய்த ஆசாமி அப்போ என்ன நினைப்புல இருந்தாரோ தெரியல, என் பெயருடன் ஒரு “A” சேர்த்து, V.N. VENKATARAMAN ஆக்கிட்டாரு! இப்படி கூடுதலா ஒரு ”A” சேர்த்ததால, என் பேரு வெங்கடராமன் ஆகி, அது வெங்காயராமன் ஆனது பத்தி முந்தியே பெயர்க் குழப்பங்கள் என்ற தலைப்பில் இங்கே எழுதியிருக்கேன்.
அப்பா-அம்மா என்ன பேரு வைச்சாலும் நம்ம கூட படிக்கிற நண்பர்கள் எப்படியும் நமக்கு பட்ட பேரு வைக்காம விடமாட்டாங்களே! என்னோட உயரத்துக்கு தகுந்த மாதிரி Orient Longman, லம்பு [ஹிந்தியில] அப்படின்னு எல்லாம் நமக்கு பேர் வைச்சிருந்தாங்க! ஒரு நாள் யாருக்கும் தெரியாம நான் வெல்லத்தை எடுத்து [திருடி!] சாப்பிடறதை பார்த்துவிட்டு எங்க பாட்டி“வெல்லம் திருடி வெங்கட்ராமா"ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க! இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடற மாதிரி எங்கம்மா என்னை பாசத்தோடு கூப்பிடும் “ டேய் டில்லி எருமை!” தான் நான் மிகவும் ரசிப்பது. ஒழுங்கா என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே திரும்பாத நான், இப்படிக் கூப்பிட்ட உடனே திரும்பி ”என்னம்மா?” என்பேன்.
கல்லூரி காலத்தில் சக மாணவிகள் நிறைய பட்டங்கள் எல்லாம் குடுத்திருப்பாங்க! – அது எல்லாமே எனக்குத் தெரியாது, தெரிஞ்சாலும் எழுத முடியாது… [சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசை இல்லைன்னு தப்பிச்சுடலாமே! ]
தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் ஆர்.வி.எஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி, இந்த தொடர் பதிவினை யார் தொடர விரும்புகிறார்களோ அவர்களை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போமா?
வெங்கட் நாகராஜ்.
அதெப்படி அம்மாவுக்கு அப்பவே இப்படி வரப்போகும் 'தில்லி' சம்பந்தம் தெரிஞ்சது!!!!!!!
பதிலளிநீக்குநல்ல பெயர் காரணம்
பதிலளிநீக்குநான் கேக்க நினைத்ததை துளசி கேட்டுட்டாங்க :))
பதிலளிநீக்குsuper delli ......, ha ha haa
பதிலளிநீக்குmattiningala, mattiningala....
வெங்கட்ராமன்னு பேரு இருந்தா கூட இப்படி ஒரு பட்டபேரு வருமா ??
பதிலளிநீக்கு@துளசி டீச்சர்
பதிலளிநீக்குஅதுதான் அம்மா
பெயர்க்காரணம் அருமையா சொல்லியிருக்கீங்க..
பதிலளிநீக்குசுவையாய் இப்படி பெயர் வைத்த கதை சொல்ல முடியுமா?!
பதிலளிநீக்குரசித்து படித்தேன்.
”பேரைச் சொல்லவா” இதுவரைச் சொன்னதே மிகவும் நன்றாகவே ரசிக்கும்படி இருக்குது.
பதிலளிநீக்கு//ஒழுங்கா என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே திரும்பாத நான், இப்படிக் கூப்பிட்ட உடனே திரும்பி ”என்னம்மா?” என்பேன் //
”அம்மா” அழைக்கிறார் என்றால், சும்மாவா!
[தேர்தல் நேரம் வேறு. மந்திரி ஆக்கினாலும் ஆக்கலாம்]
வாழ்த்துக்கள், வெங்கட்.
ஒரிஜினல் பெயரைவிட, பட்டப்பெயர்கள் சுவாரஸ்யம்!!
பதிலளிநீக்குகல்லூரி காலத்தில் சக மாணவிகள் நிறைய பட்டங்கள் எல்லாம் குடுத்திருப்பாங்க! – அது எல்லாமே எனக்குத் தெரியாது, தெரிஞ்சாலும் எழுத முடியாது… [சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசை இல்லைன்னு தப்பிச்சுடலாமே! ]
பதிலளிநீக்கு.......ஆஹா...தப்பிச்சிட்டீங்க!
அட! அட! என்ன ஒத்துமை! என்ன ஒத்துமைடாப்பா!
பதிலளிநீக்குஅதெப்பிடி சார்!இப்பிடி?
ஹஸ்பெண்ட் வொய்ஃப் ரெண்டு பேருமே ஒரே நாளில்
பேரைச் சொல்லவா எழுதி இருக்கீங்க?இன்னைக்குத்தான் எழுதறதுன்னு
பேசி முடிவு பண்ணி எழுதினீங்களா?
ஆமாம்.நீங்க யாரையோ 'ஹலோ' னு கூப்பிடறதா கேள்விப்பட்டேனே?
நியாயமா?
உங்களுக்கு கிடைச்ச பட்டப் பேரெல்லாம் சூப்பர்
பேர் காரணம் அருமை.
பதிலளிநீக்கு//என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம் சின்ன சின்ன கண்ணைக்காட்டி சிரிக்கும் எங்கள் பாப்பாவிற்கு// என்ற ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருது.
ஒவ்வொரு பெயராய் சொல்லி அதை வேண்டாம் என்பதற்கு காரணம் சொல்லி பாடுவார்கள்.
நன்றாக இருக்கிறது அனுபவப் பகிர்வு.
பதிலளிநீக்குபதிவு மடன்னு மடன்னு படின்னு சொல்ற மாதிரி இருக்கு.அருமை.
பதிலளிநீக்குஉங்க பாட்டி வச்ச பேரு சூப்பர். உங்க பேர இங்க இருக்கிறவங்க எப்படி எல்லாம் கூப்பிடராங்கன்னே ஒரு பதிவு போடலாமே...
பதிலளிநீக்குநீ பிறந்து 39 வருஷம் கழிச்சு ஏண்டா இப்படி ஒரு சந்தேகக் கேள்வி?” ["அய் வயசு தெரிஞ்சு போசச்சே"ன்னு யாரும் சந்தோஷப் படவேண்டாம்! நாங்க எப்பவுமே ரொம்ப வெளிப்படையான ஆளு!]
பதிலளிநீக்கு:))
ஓ.. நீங்க தான் அந்த ஹலோ பார்ட்டியா..?
பதிலளிநீக்குஅவங்களும் உங்க மகளும்,உங்களை எப்படி கூப்பிடுவாங்கன்னு சொல்லலியே!!!
உங்கள் பதிவு மிக நன்று, திரு. V.T.V அவர்களே!
பதிலளிநீக்குபெயர்க்காரணம் அருமையா சொல்லியிருக்கீங்க..
பதிலளிநீக்குவெ.நா! கலக்கிட்டீங்க !டில்லி ராஜதானி மாதிரியில்லே உங்க நடை விறுவிறுன்னு போகுது.
பதிலளிநீக்கு@@ துளசி கோபால்: அதுதான் அம்மா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு## உயிரோடை: நன்றி சகோ.
@@ முத்துலெட்சுமி: நன்றி. உங்களுக்கும் சேர்த்து துளசி டீச்சருக்கு பதில் சொல்லிட்டேன்!
## பித்தனின் வாக்கு: நன்றி நண்பரே! மாட்டிட்டனா!
@@ எல்.கே.: இன்னும் நிறைய பேரு இருக்கு! பப்ளிக் வாட்சிங்! என் சார்பா துளசி டீச்சருக்கு பதில் சொன்னதற்கு நன்றி கார்த்திக்,
## அமைதிச்சாரல்: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
@@ ரிஷபன்: மிக்க நன்றி சார். உங்கள் இடமிருந்து பாராட்டுகள் – மிக்க மகிழ்ச்சி.
## வை. கோபாலகிருஷ்ணன்: ”அம்மா அழைக்கிறார் என்றால் சும்மாவா!” அதுதானே. நல்ல கருத்துரை – மிக்க நன்றி ஐயா.
@@ ஹுசைனம்மா: ஒரிஜினல் பேர்கள் எப்பவுமே சோ-சோ தான். பட்டப்பெயர்களில் நிறைய விஷயங்கள் தெரியும் அந்த நபரைப் பற்றி! :)
## சித்ரா: ஆமாம்! தப்பிச்சுட்டோம்ல! மிக்க நன்றி.
@@ ராஜி: ரசித்தமைக்கு மிக்க நன்றி!. ஆஹா இந்த ஹலோ விஷயம் இப்படி ஜுரம் மாதிரி பரவிடுச்சா! கவனிக்கணும்! :)
## கோமதி அரசு: கருத்திட்டமைக்கு நன்றிம்மா! அது என்ன பாடல்? உங்களுக்கு முழுதும் தெரிந்தால் தெரிவியுங்களேன். நான் கேட்ட/படித்ததில்லை. தெரிந்து கொள்ள ஆசை.
@@ கனாக்காதலன்: மிக்க நன்றி நண்பரே..
## ஆசியா உமர்: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
@@ கலாநேசன்: பாட்டி வைச்ச பேருதான் நிறைய பேருக்குப் பிடிச்சுருக்கு போல! நம்ம பேரைத் தான் இங்க நாறடிக்கறாங்களே :(
## புதுகைத் தென்றல்: :) நன்றி சகோ.
@@ ஸ்வர்ணரேக்கா: கருத்திற்கு மிக்க நன்றி. என் பெண் என்னை அப்பான்னு தான் கூப்பிடுவா :) சில சமயம் செல்லமா “அம்மு!”
## ஈஸ்வரன்: ஆஹா V.N.V. இப்ப V.T.V. ஆயிடுச்சா திரு R.E.P.? நன்றி அண்ணாச்சி!
@@ சே. குமார்: மிக்க நன்றி நண்பரே.
## மோகன்ஜி: ராஜ்தானி மாதிரி போச்சா! மம்தா தீதிக்குக் கேட்டுதுன்னா – தமிழ்நாட்டுக்குத் தான் ஏற்கனவே ராஜ்தானி இருக்கே, இது வேற எதுக்குன்னு கொல்கத்தா அனுப்பிடப் போறாங்க! :) ரசித்தமைக்கு மிக்க நன்றி மோகன்ஜி!
தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
பெயர்க்காரணம் சூப்பர்ங்க.
பதிலளிநீக்கு//என் பேரு வெங்கடராமன் ஆகி, அது வெங்காயராமன் ஆனது//
நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.பட்டப் பெயர்கள் அருமை.
நீங்க ஒரு 'உயர்ந்த' மனிதர்ன்னு சொல்லுங்க...
பதிலளிநீக்குகணபதி சுப்ரமண்யம்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்.. ;-)))
@@ ஜிஜி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. பட்டப்பெயர்கள் என்றுமே சுவையானது! :)
பதிலளிநீக்கு@@ ஆர்.வி.எஸ்.: ஆமாம்! 6 அடி 1 அங்குலம் :) கணபதி சுப்ரமண்யம் உங்களுக்கு பிடித்த பெயரா? ஓ!
திருப்பதி வெங்கடாஜலபதியிடம் டீல். நல்ல நகைச்சுவை. ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் ஒரு கதை உள்ளது. வலைப் பதிவிற்காக VENKATNAGARAJ என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!.
நீக்குவலைப்பதிவிற்காக வெங்கட் நாகராஜ் [எனது அப்பா பெயரையும் சேர்த்த்து]