எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 10, 2011

பெயர்க் குழப்பங்கள்இந்தியா பலவிதமான மொழிகள்  பேசும் மனிதர்களால் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே!  அதைப் பற்றி பெரிதாய் நான் என்ன சொல்லி விடப்போகிறேன்?


பலவிதமான மொழி பேசும் மனிதர்கள், ஒவ்வொரு மொழி பேசும் மனிதர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள்தான் , ஆஹா எத்தனை எத்தனை?  வட இந்தியர்கள் நரேஷ் குப்தா, ராகுல் பஜாஜ், உஜாஹர் சிங் விர்மானி போன்ற பெயர்கள் வைத்துக்கொள்ள, நம் ஊரிலோ  கந்தசாமி, ராமசாமி, சுப்ரமணியன், வெங்கடராமன் என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்கிறோம்.

அந்தந்த ஊரில் இருக்கிற ஆட்கள் ஊர் ஆட்களின் பெயரை ஒழுங்காக உச்சரித்து விடுகின்றனர்.  ஆனால் தில்லி போன்ற பெருநகரில் எல்லா மாநில மக்களும் வேலை நிமித்தமாகவோ, வியாபார விஷயமாகவோ, சேர்ந்து வசிக்கும்போது ஏற்படும் பெயர் குழப்பங்களை சொல்லி முடிக்க, இந்த ஒரு வலைப்பதிவு பற்றாது… 

நம்ம ஆளுங்க பெயரை எப்படி வட இந்தியர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கறாங்களோ அதே மாதிரி வட இந்தியர்களோட பெயரை நம்ம ஆளுங்க ஒரு வழி பண்ணிடுவாங்க. ஆங்கிலத்தில் Arora என்று எழுதி இருப்பதை இந்த ஊர்க்காரர்கள் அரோடா என்று படிக்கின்றனர். நாம் அரோகரா எனச் சொல்வதுபோல அரோரா என்றே சொல்வோம்

நம்ம தமிழ் மொழியோட சிறப்புன்னு சொல்லக்குடியமட்டும் உங்க பெயரில் இருந்ததுன்னு வெச்சுக்கோங்க, உங்க பெயரை நாறடிச்சுடுவாங்க இந்த வட இந்தியர்கள், ஏன்னா ஹிந்தி மொழியிலகிடையாது.  எழில்மலை, எழிலரசு, தமிழரசி, கனிமொழி இந்த மாதிரி பேரையெல்லாம் இந்த வட இந்தியர்கள் எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா, எஜில்மலாய், எஜிலரசு, தமிஜரசி, கனிமொஜின்னுதான் கூப்பிடுவாங்க

திருவனந்தபுரம் என்ற பெயரை அப்படியே சொல்ல முடியாம, நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் அதை Trivandrum-னு மாத்திட்டாங்க.  அதைக்கூட தப்புத்தப்பா தான் இந்த ஊர் மக்கள் சொல்லுவாங்க.  நான் சும்மா இல்லாம அந்த ஊரோட முழு பேர்திருஅனந்தபத்மநாபபுரம்னு அவங்ககிட்ட சொல்லி வைக்க, அந்த பெயரை ஒரு வழி பண்ணிட்டாங்க.

தில்லில வேலைக்குச் சேர்ந்த புதுசுல என் பெயரை யார் கேட்டாலும் முழுசாவெங்கடராமன்அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன். அதை அவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணிட்டதால, சில மாதங்களுக்குப் பிறகு யார் கேட்டாலும்வெங்கட்அப்படின்னு சுருக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.   

இந்த பெயர்க் குழப்பங்களை எல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது.  என்னோட பெயர் போட்ட முத்திரை செய்யணும்னு ஒரு கடைல போய் பேரு, விலாசம் எல்லாம் சரியா பெரிய எழுத்துல எழுதிக்  குடுத்துட்டு வந்தேன். இரண்டு நாள் கழித்து கடைக்குப் போய், நல்லா வளைச்சு வளைச்சு எழுதிய எழுத்துக்கள்ல போட்டு இருந்த என் முத்திரையை வாங்கிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து பேப்பர்ல முத்திரை போட்டா, அறை நண்பர்கள் எல்லாம் படிச்சுட்டு, விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு, “டேய் உனக்கு சரியாதான் பெயர்  வச்சுருக்கான்அந்த முத்திரைக்காரன்னு சொல்லி.  என்னடான்னு புரியாம படிச்சா, “Venkataraman” அப்படின்னு எழுதும்போது, T போடறதுக்கு பதிலா Y போட்டு வைச்சுடுச்சு பயபுள்ள.

எல்லா நண்பர்களும், ”வெங்கடராமன்னு கூப்பிடறதுக்கு பதிலாவெங்காயராமன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பேசாம இந்த ஊர்ல இருக்கற வரைக்கும் இந்த ஊர்க்காரங்க வாய்ல நுழையறமாதிரி வேற பெயர் எதையாவது வச்சிக்கலாமான்னு யோசனையா இருக்கு!  நீங்க என்ன சொல்றீங்க?

37 comments:

 1. தங்கள் பெயர் குழப்ப அனுபவம் நகைச்சுவையாக இருந்தது.

  You may like to visit
  gopu1949.blogspot.com

  ReplyDelete
 2. ஹிஹி! வெள்ளைக்காரங்கதான் முகோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா, பனோபாத்தியாயா-ன்னெல்லாம் சொல்ல கஷ்டப்பட்டு முகர்ஜீ, சட்டர்ஜீ, பேனர்ஜீன்னு மாத்துனாங்களாமே ஐயா? மெய்யாலுமா...? :-)

  ReplyDelete
 3. ஹஹஅஹா,. இது ரொம்ப சகஜம். எங்க கிளையன்ட் சைனாக்காரன் , கார்த்திக்னு கூப்பிடாம, கேத்தி நு கூப்பிடுவான்

  ReplyDelete
 4. //குழந்தைகளின் ஒவ்வொரு பேச்சுமே நமக்கு பாடம்தான். கவிதை மூலம் அழகாய் சொல்லி இருக்கீங்க சார்.

  Word verification-ஐ எடுத்து விடுங்களேன். தொல்லை தருகிறது. //

  மேற்படி பின்னோட்டம் கொடுத்தற்கு மிக்க நன்றி.

  நான் வலைப்பூவுக்குப் புதியவன்.
  word verification என்பது எங்கே உள்ளது? அதை எப்படி நீக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கவும். என் e-mail id: valambal@gmail.com
  gopu1949.blogspot.com

  ReplyDelete
 5. அப்போ கொஞ்சம் காஸ்ட்லி ஆன மனுஷன் தான்!! (ஏன்னா வெங்காயம் இப்போ காஸ்ட்லி ஆன விஷயம்)

  ReplyDelete
 6. அதுக்குத்தான் நாங்க லக்‌ஷ்மியானது.. :)

  வெங்காயராமனா.. விலைமதிப்பு மிகுந்த பெயர்..:)

  ReplyDelete
 7. நம்ம பெயர்கள் வெள்ளைக்காரங்க கிட்டையும் வடக்கத்தார் கிட்டையும் படும் பாடு திண்டாட்டம் தான்.

  ANANDHA PADMANABHAN...18 எழுத்துப்பெயரில் 11 எழுத்து Padmanabhan மட்டும் அவர்கள் கையில் கொடுத்தேன்..ஆளாளுக்கு பிச்சி பிச்சி எடுத்து இப்பொழுது Padi..paddy..pad நாட்டுக்கொரு உச்சரிப்பாக மாற்றி விட்டார்கள்...

  உங்கள் பெயர் படும் பாட்டை சொன்னது சுவராசியம்... இப்போ வெங்காயராமன் நல்ல மதிப்பு மிக்க பெயராக இருக்கும் பொன்ராஜ் மாதிரி..

  ReplyDelete
 8. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... விலை மதிப்பில்லா பெயர்தான்....

  ReplyDelete
 9. காஸ்ட்லி பேர் தான்!

  ReplyDelete
 10. டெல்லி கார்பரேட்டிலிருந்து வருவார்கள். மீட்டிங் நடுவே அவர்களுக்கு வரும் மெசெஜைக் கொண்டு தர வேண்டும். அரோரா.. குப்தா.. மகிஜா.. எந்தப் பேரும் முதலில் புரியாது. அந்த நேரத்தில் ஒருவர் ‘மல்லகி..’ என்றார் அடிக்கடி பேச்சின் நடுவே. அவரை நான் பார்க்கவே இல்லையே என்று பக்கத்தில் இருந்த (ஹிந்தி தெரிந்த) வரைக் கேட்டபோது ‘அது ஆள் இல்ல.. மத்லப் தான் மல்லகி ந்னு சொல்றார்’ என்றாரே பார்க்கலாம். பெயர்க் குழப்பம் தீர்க்க முடியாதுதான்.

  ReplyDelete
 11. ரொம்ப காஸ்ட்லி பேரு வெச்சிருக்காங்கபோலிருக்கு :-)))

  தண்டபாணி என்பவர் தண்டா பானி ஆவதெல்லாம் வடநாட்டில ஜகஜமப்பா :-))

  ReplyDelete
 12. பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி நேம்.என் ஈசியான பெய்ரை எப்படி எல்லாம் மாற்றினாங்கன்னு ஒரு பதிவே போடலாம்.

  ReplyDelete
 13. பகிர்வு இப்ப உள்ள நிலமைக்கு ஒத்து வருது .காஸ்ட்லி நேம்.என் ஈசியான பெய்ரை எப்படி எல்லாம் மாற்றினாங்கன்னு ஒரு பதிவே போடலாம்.

  ReplyDelete
 14. பாத்து சார்.'வெங்காயராமன்' ங்கற பெயரை படிச்சுட்டு யாராவது இன் கம் டாக்ஸ்ல உங்களை போட்டு குடுத்துடப் போறாங்க

  ReplyDelete
 15. காஸ்ட்லியான பேரு சூப்பரா இருக்கு. :))

  ReplyDelete
 16. எனது இந்த பகிர்வுக்கு கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

  இண்ட்லியில் வாக்களித்து பிரபலப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. வெங்கடராமனை “வெங்காயராமன்” ஆக மாற்றி “சங்கட ராமன்” ஆக வைத்து விட்டார் அந்த முத்திரையர். நன்று! நன்று!

  ReplyDelete
 18. என் நண்பர் வரதராஜனின் பெயருக்கு நடுவே கால் போட்டு (double A) 'வராத'ராஜனாக்கிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
  நல்ல பதிவு வெங்கட். இயல்பான நகைச்சுவை எளிதாக கைகூடி வருவது ஒரு வரம். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 19. ஹாஹா கடைசியில் காமடி தான் போங்க

  ReplyDelete
 20. @@ ஈஸ்வரன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  @@ சந்திரமோகன்: உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது மோகன். ”வராத” ராஜன் :)

  @@ ஜலீலா கமல்: நன்றி சகோ.

  ReplyDelete
 21. //வெங்காயராமனா.. விலைமதிப்பு மிகுந்த பெயர்..:)// முத்துலெட்சுமி மேடம் சூப்பர் கமென்ட். ;-)

  வெங்'கெட்ட'ராமன்னு தான் பெயர் எடுக்க கூடாது. நல்ல குழப்படிகள். ;-)

  ReplyDelete
 22. @@ RVS: மிக்க நன்றி. ”வெங்கெட்டராமன்” - நல்ல கருத்து!

  ReplyDelete
 23. பரவால்லை காஸ்ட்லியானபேருதான்.
  இதுபோல நேசமணிபொன்னையாங்க்ரபேர் எப்படி மாறித்து தெரியுமா? நாசமாத்தான் நீ போனியா?:))))))))))))

  ReplyDelete
 24. நல்ல காஸ்ட்லியான பேரா வச்சிருக்காங்க நண்பரே...

  ReplyDelete
 25. @@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. நேசமணி பொன்னையா தெரு :) ஜனகராஜ் தான் அதை அப்படி கர்ணகொடூரமா படிப்பார்.

  @@ கலாநேசன்: மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 26. இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. ஹா...ஹா.

  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் what is in a name ?a rose is a rose ...என்பார்கள்... ஆனால் நீங்கள் பட்ட பாடு என் கண்களில் வெங்காய கண்ணீரை வரவழைத்து விட்டது போங்கள்! இதே போல் எனக்கும் சில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன...விரைவில் பதிகிறேன்... (ஆனால் இத்தனை நகைச்சுவையாக முடியுமா என்று தெரியவில்லை...)

  ReplyDelete
 29. ரொம்ப உசத்தியான பேர் போல தான் இருக்கு!


  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 30. @@ ஜலீலா கமல்: மிக்க நன்றி சகோ

  @@ மாதேவி: மிக்க நன்றி சகோ.

  @@ எல்லென்: மிக்க நன்றி சார். நீங்களும் எழுதுங்களேன்...

  @@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: மிக்க நன்றி சார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் கருத்து என் வலைப்பூவில்.

  ReplyDelete
 31. சுவாரஸ்யமான பதிவு வெங்கட்.

  ழ தொல்லை பெரும் தொல்லைதான் வடக்கத்திக்காரங்களுக்கு.

  சண்டிகட் அப்படி அவங்க சொல்றத நாம் சண்டிகார்னு சொல்லுவோம்.

  கர்நாடகாவை அவன் கர்நாடக் அப்பிடிம்பான்.

  நாடு பெரிசுல்ல.பேர்க் குழப்பமும் பெரிசாத்தான் இருக்கும்.

  ReplyDelete
 32. உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. இவர்கள் பெயரை நாம் குழப்புவதும் நம் பெயரை அவர்கள் குழப்புவதும் வேடிக்கைதான். நேற்று ஒரு அஞ்சல் வந்தது – அதில் என் பெயரை Venkatra Man என்று எழுதி இருந்தார்கள் – Venkatra Woman யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை :)

  ReplyDelete
 33. சங்கடராமன்னு ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.. ஹி..ஹி..


  வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

  ReplyDelete
 34. @@ கவிதை காதலன்: மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....