புதன், 7 நவம்பர், 2012

அக்பர் கட்டிய அலகாபாத் கோட்டை


திரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 10

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9

படகுப் பயணம் முடிந்து கரை சேர்ந்தோம். அப்துல் கலாம் பான் பராக் துணையோடு நேரத்தினைக் கழித்துக் கொண்டிருந்தார். “அடுத்தது எங்கே?என்ற கேள்விக்கு முதலில் கோட்டையையும், அதன் உள்ளே இருக்கும் பாதாள்புரி மந்திர் மற்றும் அக்‌ஷய் வட் பார்த்து விட்டு வந்து விடுங்கள் – நான் இங்கேயே காத்திருக்கிறேன் என்றார். 



சங்கமத்திலிருந்து அருகிலேயே யமுனை நதியோரம் தான் அக்பர் தனது ராஜ்ஜியத்தினைக் காக்க கோட்டை கட்டத் தீர்மானித்த இடம்.  1583 – ஆம் வருடம் அக்பர் இந்தக் கோட்டையினைக் கட்டினார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் உள்ளே பார்க்கவேண்டிய சில அற்புதமான விஷயங்கள் உள்ளன.

யமுனை ஆற்றிலிருந்து பார்க்கும்போது கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இக்கோட்டை தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  ராணுவம் என்றாலே ரகசியம் தானே! அதனால் கோட்டையின் பல பகுதிகளைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை.  இரண்டு மூன்று இடங்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள்.  கோட்டைக்குள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் எழுப்பிய ஸ்தூபம் ஒன்றும் [தற்போதைய கௌஷம்பி பகுதியில் எடுத்து வரப்பட்டதாக சொல்லப்படுகிறது], சரஸ்வதி குண்ட் என்றழைக்கப்படும் சரஸ்வதி நதியின் பிறப்பிடமும், ஜோதாபாய் அரணமணையும் இருக்கிறது.  அசோகர் காலத்து தூணில் ஹுவான் சுவாங், பீர்பல், போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. 



இந்த இடங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக் கடிதம் பெற வேண்டும். அனுமதிக் கடிதம் பெற்றால் இவ்விடங்களை சுலபமாகப் பார்க்க முடியும்.  எல்லோரும் பார்க்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் இரண்டு – அவை கோட்டையினுள் இருக்கும் பாதாள்புரி கோவில் மற்றும் அக்‌ஷய்வட் என்று அழைக்கப்படும் ஒரு இறப்பே இல்லாத மரம்.  பாதாள் புரி கோவில் பூமிக்குள் அமைக்கப்பட்டு இருக்கிறது.  ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி கீழே இறங்கிச் சென்றால், நிறைய சன்னதிகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாய் பார்த்தவண்ணம் நீங்கள் வெளியே வந்து விடலாம்.  அக்‌ஷய் வட் மரத்தினையும் நீங்கள் பார்க்கலாம்.

நாங்கள் சென்றபோது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலிருந்து சில பயணிகள் சுற்றுலாவாக வந்திருந்தார்கள்.  அவர்களுடன் பேசியதில் ஒரு குழுவாக வந்திருப்பது தெரிந்தது.  தமிழகத்திலிருந்து பேருந்திலேயே வந்திருப்பதாகவும் – வடக்கில் நிறைய இடங்களைப் பார்த்து விட்டு – மொத்தம் 20 நாட்கள் தொடர்ப் பயணம் செய்யப்போவதாகவும் சொன்னார்கள்.  கிட்டத்தட்ட ஐம்பது பேர் கொண்ட குழு.  அவர்கள் வந்திருந்த பேருந்தின் கண்ணாடியில் மிகவும் பொருத்தமாகத்தான் எழுதி இருந்தது! – உலகம் சுற்றும் வாலிபன்”!   





கோட்டையின் வெளிச்சுவர்களில் பல மரங்கள் முளைத்து வேர்கள் வெளியே தெரிகின்றன.  அப்படிச் சிலவற்றை புகைப்படங்கள் எடுத்தோம்!  கோட்டை பராமரிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.  அக்பர் காலத்தில் கட்டிய கோட்டைகளிலேயே இது தான் மிகப் பெரியதும், சிறப்பானதும் என்று சொல்கிறார்கள்.  அழிந்து வரும் பல புராதனச் சின்ன்ங்களில் இதுவும் ஒன்று என நினைக்கும்போது வருத்தம் தான் மிஞ்சும். 




கோட்டையிலிருந்து வெளியே வரும்போது பலவிதமான மக்களைச் சந்திக்கலாம். படகுக் காரர்கள், சில்லறை வியாபாரிகள், சங்கமத்திலிருந்து உங்களை நகரத்திற்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் கேட்கும் பெண்கள், நீண்ட தாடியும், ஜடாமுடியும் வைத்திருக்கும் சாமியார்கள், இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து தனது நாட்டில் சென்று “See this…  Poor Indiansஎன்று காண்பிக்கப்போகும் வெள்ளைக்காரர்கள்  என பலதரப்பட்ட மக்களையும் பார்த்தபடியே வெளியே வரலாம். 



சில நாட்களுக்கு முன் ஒரு ஞாயிறன்று நாளைய பாரதம்என்ற தலைப்பில் வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்று இங்கே தான் எடுத்தேன்.   பலரை சிந்திக்க வைத்த அப்புகைப்படம் கையில் பாம்புடன் இருக்கும் ஒரு சிறுவன் படம். பாம்பினை அனாயாசமாக கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் சிறுவனிடம் உனக்குப் படிக்க ஆசையில்லையா, இப்படி சிறுவயதிலேயே பாம்பினை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாயே?என்று கேட்டேன்.  எங்க தாத்தா, அப்பா என அனைவருமே இப்படித்தான் பிழைத்தார்கள், நான் மட்டும் படித்து என்ன செய்யப் போகிறேன், காசு கொடுத்தால் கொடு, இல்லையெனில் ஆளை விடு, அங்கே வண்டியில் ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் வருகிறது, நான் போகணும்!என்றான்.

இப்படியாக கோட்டையையும் அதனுள் இருக்கும் சில புராதனமான இடங்களையும் கண்டுகொண்டு எங்கள் வாகனத்தினைத் தஞ்சமடைந்தோம்!  பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கிச் செல்வோமா? 

மீண்டும் அடுத்த பயணப் பகிர்வில் சந்திக்கும்வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

44 கருத்துகள்:

  1. படங்களும் பகிர்வும் அருமை... தொடர்கிறேன்...tm2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. படங்களும் தகவல்களும் நன்று. சிறுவனின் பதில் இன்றைய பாரதத்தை வெட்கப்பட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவனின் பதில் - எனக்கும் அதிர்ச்சி மற்றும் பரிதாபம்...... கேட்டபிறகு நானும் நண்பரும் ஒன்றுமே பேசாது பயணத்தினைத் தொடர்ந்தோம் - அதிர்ச்சியோடு...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. கோட்டைகள் பல இப்படி தான் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது நல்ல அனுபவம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  4. சின்னப்பசங்க தெளிவாக இருக்காங்களோன்னு சிந்தனை வருதே!

    கோட்டையைப் பராமரிக்கலைன்னா கம்போடியாவில் மரங்கள் எடுத்துக்கிட்ட கோவில் நிலைமைதான் இங்கும்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்போடியாவில் மரங்கள் எடுத்துக்கிட்ட கோவில்... தகவல் புதிது... முழு விவரமும் சொல்லுங்க டீச்சர்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. நமது தொல்லியல் துறை புராதானச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பலவிதமான பயண அனுபவப் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  6. பாதுகாக்கப்படவேண்டிய இடம்
    அலட்சியப்படுத்தப்படுவது ஆதங்கத்தை அளிக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதங்கம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. பாம்பை போட்டோவில் மற்றும் டிவி யில் பார்க்கவே அய்யாசாமி பயப்படுவார் எப்படி தான் இந்த பையன் கையில் பிடிக்கிறானோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பை பார்த்தாலே அய்யாசாமி பயப்படுவார்... :) நீங்க சொல்லிட்டீங்க, நிறைய பேர் சொல்லவே பயப்படுவாங்க! :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  8. நேரில் பார்க்க இயலாத குறையை உங்களின் விரிவான வர்ணனைகள் மற்றும் புகைப்படங்கள் தீர்த்து விடுகின்றன வெங்கட். அந்தச சிறுவனின் துணிச்சல் வியக்க வைத்தாலும் அவள் சொன்ன வார்த்தைகள் வருத்தத்தை வரவழைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  9. \\அப்துல் கலாம் பான் பராக் துணையோடு நேரத்தினைக் கழித்துக் கொண்டிருந்தார். \\இந்தத் தொடரை முதல் முறையாகப் படிக்கிறேன் பிரபலங்களின் பெயரை இப்படிப் படித்ததும் ஷாக்காகிக் போனது இவர் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெயரைப் படித்ததும் ஷாக்காகி போனது... //

      முந்தைய பகுதிகளைப் படித்தால் இவர் யாரென்பது புரியும்... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

      நீக்கு
  10. கோட்டைகளை ஒழுங்காக பராமரித்தால் இன்னும் அழகாக இருக்கும்......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர்...

      நீக்கு
  11. நேரில் சென்று பார்த்தது போல் ஒரு வர்ணனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  12. இந்தக் கோட்டையை பற்றிய செவி வழிக்கதையும் உண்டு.

    முகுந்த ப்ரம்மச்சாரி என்பவர் அவருடைய சிஷ்யருடன் இங்கு வாழ்ந்ததாகவும் ஒருநாள் அவருடைய சிஷ்யர் உணவு எடுத்து வரும் பொழுது அவர் அறியாமல் சிலர் அதில் மாட்டிறைச்சி கலந்து விட முகுந்த் அதை உண்டதாகவும் பின்னர் விஷயம் அறிந்த அவர் திரிவேணி சங்கமத்தில் உயிர் விட்டார். குரு இறக்க தன் கவனமின்மையே காரணம் என்று அவருடைய சிஷ்யனும் உயிர் துறந்தார்.

    இவர்கள் இருவருமே அக்பர் பீர்பாலாக மறுபிறவி எடுத்ததாகக் கதையும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கதை இதுவரை கேள்விப்பட்டதில்லை சீனு. புதிய தகவலுக்கு நன்றி.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  13. சிறுவனின் பதில் என்னவோ செய்தது. புராதான சின்னங்களை மக்களாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. புராதானச் சின்னங்களான கோட்டைகளை மரம் அழிப்பது ரொம்பவே வருந்தத்தக்க விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  15. கோட்டையின் படம் கவர்கிறது. மரம் முளைத்திருப்பது கவலையைக் கொடுத்தாலும் அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது. பாதாளக் கோவில் படமெடுக்க அனுமதியில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். கோவில் உள்ளே படங்கள் எதும் எடுக்கவில்லை....

      நீக்கு
  16. ஆஹா! படித்த கணமே இந்த இடங்களையெல்லாம் பார்த்து பரவசப் படவேண்டும் எனும் பேராவல் எழுதுகிறது. படிக்காமல் விடுபட்ட முந்தைய பதிவுகளை படிக்க உட்காருகிறேன் வெங்கட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்காமல் விட்ட பதிவுகளை முடிந்த போது படிங்க மோகன்ஜி அண்ணா....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. படமும் செய்தியும் பயனுள்ளது. மரம் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. நல்ல பயண அனுபவம். இப்போதெல்லாம் பயணக் கட்டுரைகள் அதிகம் வருவதில்லை. தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  18. http://thulasidhalam.blogspot.com/2010/08/4.html

    இதுலே பாருங்க. படங்களும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ படிச்சுடறேன்....

      வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  19. வணக்கம் நண்பரே
    நலமா...
    நீண்ட இடைவெளி ஆகிவிட்டது...
    வழக்கம் போல உங்கள் தளம்
    அருமையான தகவல்களுடன் என்னை வரவேற்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஙக்ளது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  20. காசிப்பயணத்தையும், கையில் பாம்பை வைத்துள்ள சிறுவனின் நிலைமையையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....