இந்த வார செய்தி:
படம்: இணையத்திலிருந்து....
இரண்டொரு நாட்களாக ஹரியானா
மாநிலத்தின் ரோ[ஹ்]தக் நகரில் ஓடும் பேருந்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் காணொளி எல்லா
தொலைகாட்சிகளிலும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு சகோதரிகள் பேருந்தில் வரும்போது மூன்று
இளைஞர்கள் அவர்களை கிண்டல் செய்ய, தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, மூன்று
இளைஞர்களையும் தங்களது பெல்ட், கை-கால்கள் கொண்டு தாக்கி இருக்கிறார்கள். அதை
பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தனது அலைபேசியில் படம்பிடித்து வெளியிட, அந்த
மூன்று இளைஞர்களையும் கைது செய்து, பிறகு பிணைய உத்திரவாதத்தில் ஜெயிலிலிருந்து வெளியே
விட்டு இருக்கிறார்கள்.
அந்த மூன்று இளைஞர்களில்
இருவர் இந்திய ராணுவத்தில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். செய்தி வெளியானதும்
அவர்களது தேர்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போராடிய இரண்டு பெண்களுக்கும் Bravery Award தருவோம் என ஹரியானா மாநிலம் செய்தி வெளியிட்டது. பொதுவாக வட இந்தியாவில், குறிப்பாக ஹரியானா,
உத்திரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பெண்களுக்கு இருக்கும் தொல்லைகள்
அதிகம்! வெளியே சொல்லப்படாத தொல்லைகள் ஒவ்வொரு கிராமத்திலும் உண்டு.
இப்படி இரண்டு பெண்கள்
தைரியமாக போராடியதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டிக் கொண்டிருக்க,
அப்பெண்கள் சம்பந்தப்பட்ட இன்னுமொரு காணொளியும் இப்போது வெளிவந்திருக்கிறது –
கடந்த மே மாதமும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது பூங்கா ஒன்றில் ஒரு
இளைஞரை அப்பெண்கள் அடிப்பதை இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள். கூடவே பேருந்தில் இருந்த சக பயணிகளில் சில
பெண்கள், அந்த மூன்று இளைஞர்களின் மேல் குற்றமில்லை என்று உறுதிச்சான்று அளிக்க,
ஹரியானா மாநில அரசு அப்பெண்களுக்கு அறிவித்த Bravery Award-ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
உண்மையில் நடந்தது என்ன
என்பதை யாரும் வெளியே சொல்லப் போவதில்லை என்று தான் தோன்றுகிறது. பெண்களைப் போகப் பொருளாகவே பார்ப்பதும், தனது
சகோதரிகள், தாயைத் தவிர மற்ற அனைவரையும் தவறான கண்ணோட்டதுடன் பார்ப்பதும்,
நண்பர்களோடு இருக்கும் தைரியத்தில் பெண்களை துன்புறுத்துவதும், கிண்டல் செய்வதும்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அடிப்படையான நல்லொழுக்கத்தினை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்-பெண்
இருபாலாருக்கும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது மட்டும் தான் இது போன்ற செயல்கள்
நடப்பதைத் தவிர்க்கும் வழியாகத் தோன்றுகிறது.
இந்நிகழ்வில் குற்றம்
யாருடையது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
இந்த வார ரசித்த பாடல்:
இந்த வார ரசித்த பாடலாக, மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி ஆகியோரின் குரலில்
இளையராஜாவின் இன்னிசையில், ”விடியும் வரை காத்திரு” படத்திலிருந்து ”நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு...” பாடல் இதோ உங்களுக்காக!
இந்த வார காணொளி:
ஊஞ்சலில் ஆடுவது யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள்? அதுவும் இதமான காற்று
அடிக்க, மழை பெய்து கொண்டிருக்க, நம்மீது மழைத்துளி படாது ஊஞ்சல் ஆடினால் ஆஹா
ஆனந்தம் தான்! இங்கே பாருங்களேன்
இக்காணொளியை – இப்படி ஊஞ்சல் ஆடினால் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!” என்று பாட்டு கூட பாடலாம்!
இந்த வார புகைப்படம்:
சமீபத்தில் தில்லியில் உள்ள ஒரு
முகலாயர் கால நினைவுக் கட்டிடம் ஒன்றை புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தேன்.
அப்போது எடுத்த “பக் பக் மாடப் புறா!” ஒன்றின் புகைப்படம்
இந்த வார புகைப்படமாக!
படித்ததில் பிடித்தது:
சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!
கோ.மோகன்ராம்
இப்பதிவு:
கடந்த சில
வருடங்களாக வலைப்பூவில் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பயண அனுபவங்களையும், மற்ற செய்திகளையும்
தொடர்ந்து பகிர்ந்து வந்ததில் என்னையும் அறியாமல் நிறைய பதிவு செய்து விட்டேன்
போல! சில நாட்கள் முன்னர் பார்த்தபொழுது “அட
நான் கூட இவ்வளவு எழுதிவிட்டேனா?” என்று வியப்பாகத் தான் இருந்தது!
அட ஆமாங்க!
இப்பதிவு என்னுடைய 800-வது பதிவு! பதிவுலகில்
பல ஜாம்பவான்கள் சத்தமில்லாது ஆயிரம், ஆயிரத்தி ஐநூறு என பதிவுகள் எழுதி
இருக்கும்போது, நானும் 800-வது பதிவுகள் எழுதி விட்டேன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகவும்
இருக்கிறது! இருந்தாலும் சொல்லி விட்டேன்!
தொடர்ந்து
எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
800 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதம 1
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரன்ந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு800-வது பதிவுக்கு -- வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குத ம இரண்டு ..
பதிலளிநீக்குஅசத்தல் பதிவு அசத்தல் படங்கள்
பாடல் அருமை
அதைவிட அருமை நனைக்காத நீர் ஊஞ்சல்..
சூப்பர் தலைவா...
எண்ணூறு பதிவுகளின் நேர்த்தியை இந்தப் பதிவே காட்டிவிட்டது..
ஹாட்ஸ் ஆப்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மது.
நீக்கு800 ஆவது பதிவிற்கும், விரைவில் 1000 ஆவது பதிவை எட்டவும் வாழ்த்துக்கள்! பழக்கலவையை இரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு800 ஆவது பதிவிற்கு பாராட்டுகள் நண்பரே! பாடல் , படம் அருமை! கவிதை மிகவும் இரசித்தேன்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்கு800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ ..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குவாழ்த்துகள் சகோ... பல்லாயிரமாக பல்கிப் பெருகட்டும் பதிவுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தகவல் எல்லாம் நன்றாக உள்ளது... 800வது பதிவுக்கு வாழ்த்துக்கள் த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குமுதல் செய்தியை நானும் பாசிட்டிவுக்கு எடுத்து வைத்திருந்தேன். நேற்று இந்தச் செய்தி நானும் படித்தேன். ஆனாலும் சிறு குறிப்போடு வைத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்தேன்.
800 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇந்த ரேட்டில் போனால் 800 என்ன ஆயிரமே சீக்கிரம் எட்டிவிடும்..வாழ்த்துக்கள். இந்த மாதிரி ஊஞ்சல் இருக்கிறதா. புறாபடம் சூப்பர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குவாழ்த்துக்கள் 800வது பதிவுக்கு.
பதிலளிநீக்குபுறா அழகு.
கணொளிகள் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஇந்த வார ஃப்ரூட் சாலட் அருமை.
பதிலளிநீக்கு800வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஎப்போதும் போல இன்றும் ஃபுரூட் சாலட் சுவையாக இருந்தது.
பதிலளிநீக்கு800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.
த.ம. 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நீக்குஅட ! 800 ஆ.. சபாஷ் ! தொடர்க
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஉங்களது 800 பதிவும் பயனுள்ள பதிவுகள் . என்று படித்தாலும் அன்றையகாலதிற்கேற்றவாறு உள்ள பதிவு போல தோன்றும். உங்களது பயணக்கட்டுரை பதிவுகளை புத்தகங்களாக வெளியிடலாம். பாராட்டுகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குபுத்தகம் போடுவதில் சில சங்கடங்கள் உண்டு. முடிந்தால் e-புத்தகமாக வெளியிட எண்ணம். பார்க்கலாம்!
அந்த மாடப்புறா ,800 வது பதிவு எழுதி சாதனை படைத்த உங்களையே உற்றுப் பார்ப்பதாக தெரிகிறது ,வாழ்த்துகள்!
பதிலளிநீக்குத ம 8
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஇன்றைய ஃப்ரூட் சால்ட்டும் எப்போதும் போல் அருமை!
மழையில் நனையாது சிலுசிலுவென்ற காற்றுடன் ஊஞ்சலாட்டம் அருமை!
படித்ததில் பிடித்தது, படித்ததும் பிடித்தது!
தங்களின் 800 ஆவது பதிவு சாதனைக்கு வாழ்த்துக்கள்.விரைவில் பன்மடங்கு தங்கள் சாதனைகள் பெருக இறைவனை பிராத்திக்கிறேன்.!
நீண்ட நாட்கள் கருத்திடாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.என் பதிவை (அணிலாக நான்) காண பணிவுடன் அழைக்கிறேன்!
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஉங்கள் பக்கமும் வருகிறேன்....
800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் விரைவில் 1000 த்தை தொட எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஜி
பதிலளிநீக்குநேசமுடன் கில்லர்ஜி
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குமுதலில் உங்க எண்ணூறு வுக்கு இனிய பாராட்டுகள். ஒன்றும் இதுவரை சோடைபோகலை!!!
பதிலளிநீக்குபுறா சூப்பர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஎண்ணூறுக்கு நல்வாழ்த்துகள்! தொகுப்பு அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குKeep going with your nice blog awaiting more on rural side of NORTH
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் U!
நீக்கு''....நல்லொழுக்கத்தினை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்-பெண் இருபாலாருக்கும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது மட்டும் தான் இது போன்ற செயல்கள் நடப்பதைத் தவிர்க்கும் வழி...'''
பதிலளிநீக்குVetha.Langathilakam
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் அவர்களே.....
நீக்குசமைத்தது மீதமானால் மட்டுமே
பதிலளிநீக்குஅம்மா அதிகம் சாப்பிடுவாள்!
மனதைத் தொட்ட வரிகள் ! 800 வது பதிவிற்கு வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குவழக்கம் போல இன்றும் சூப்பர் சாலட்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.
நீக்குஎண்ணூறாவது பதிவு... ஆஹா, வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குப்ரூட் சாலட் எப்பவும் போல் சுவை....
பதிலளிநீக்குஆஹா... 800-ஐ பிடிச்சாச்சா.... வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குகவிதை உண்மை.... 800 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்கு800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ...சூப்பர்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
நீக்குதம. 12
பதிலளிநீக்குதமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
நீக்கு800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇற்றை, குருஞ்ச்செய்தி அருமை. பாடலும் மிகவும் ரசித்தோம். புகைப்படம் பக்பக்கொள்ளை அழகு!
வித்தியாசமான காணொளி மனதைக் கொள்ளை கொண்டது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு//பெண்களைப் போகப் பொருளாகவே பார்ப்பதும், தனது சகோதரிகள், தாயைத் தவிர மற்ற அனைவரையும் தவறான கண்ணோட்டதுடன் பார்ப்பதும், நண்பர்களோடு இருக்கும் தைரியத்தில் பெண்களை துன்புறுத்துவதும்// - உண்மை.... பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முயல்வதை ஆதரிக்கவேண்டும், ஒரு சில இடங்களில் தவறு நேர்ந்தாலும். ஹரியான அரசு பரிசை அளித்ததா?
பதிலளிநீக்கு