ஏழைகளின் ஊட்டி – பகுதி 3
சென்ற வாரத்தில் ரோஜாத் தோட்டம் பற்றி பார்த்தோம்
அல்லவா? அத்தோட்டத்திலேயே பட்டுப்பூச்சிகள் வளர்க்கும் பண்ணையும், பூச்செடிகள்
விற்பனை நிலையமும் இருக்கின்றது. பட்டுப்பூச்சிகள்
வளர்ப்பதை நீங்கள் அங்கே காண முடியும்.
நாங்கள் சென்ற நேரம் காலை நேரம் என்பதால் அங்கே வேலையாட்கள் சுத்திகரிப்பு
வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். அதனால்
எங்களுக்கு பட்டுப்பூச்சி வளர்ப்பு முறைகளை பார்வையிட வாய்ப்பில்லாது போயிற்று.
நெய்வேலி நகரம் போல தோட்டம் இருந்திருந்தால்
அங்கிருந்து பூச்செடிகளை வாங்கி வந்து பராமரிக்கலாம் – இருப்பது தில்லியின்
அடுக்கு மாடி குடியிருப்பு. பூந்தோட்ட ஆசையெல்லாம் எங்கே!
”Gent's Seat பகுதியிலிருந்து எடுத்து படம்”
ரோஜாத் தோட்டத்திலிருந்து வெகு அருகில் இருக்கும்
ஓர் இடம் Lady’s Seat என்று அழைக்கப்படும் இடம். ஆங்கிலேயர்களின்
ஆட்சிக்காலத்தில் ஒரு பெண்மணி இங்கே அமர்ந்து மலைமுகட்டில் சூரியன் மறையும் அழகிய
காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனால் இந்த இடத்திற்கு Lady’s Seat
என்ற பெயர் வந்ததாகவும் செவிவழிக் கதைகள் சொல்கின்றன. எது எப்படியோ இப்போது அங்கே இருப்பது சிமெண்ட்
கொண்டு கட்டப்பட்ட ஒரு இருக்கை தான்.
அங்கிருந்து பல அழகிய காட்சிகளைக் காண முடியும்.
”மற்றொரு படம் - இரண்டு இருக்கைகள்”
Lady’s Seat மட்டும் தானா,
எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என ஆண்களும் குழந்தைகளும் கேட்டுவிடுவார்களோ என
தமிழக அரசு, இவ்விடத்தில் மேலும் இரண்டு இருக்கைகளை அமைத்து அதற்கு Gent’s Seat மற்றும்
Children’s Seat என்ற பெயர் வைத்து விட்டார்கள்! தவிரவும் இங்கே
மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மேடையும் உண்டு.
அதன் மேலே செல்ல நிறைய படிகள் இருக்கின்றன. அவற்றின் வழியே மேலே ஏறிச் சென்று அழகான
காட்சிகளைக் காண முடியும். எனக்கேனோ
மைக்கேல் மதனகாமராஜன் பட Climax காட்சி மனதில் வந்து போனது! ஆனாலும் அதன் மேல்
ஏறி நின்று சில காட்சிகளை படம் பிடித்தேன்.
”மர வீட்டிலிருந்து எடுத்த படம்”
இந்த Lady’s
Seat பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை
ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருக்கிறது.
மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைநோக்கி வழியாக சேலம் நகரினையும், மேகமூட்டம்
இல்லாதிருந்தால் மேட்டூர் அணையைக் கூட இத்தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும்
என்றும் சொல்வதுண்டு. நாங்கள் சென்ற
சமயத்தில் மேகமூட்டமும், மழையும் சேர்ந்து கொண்டதால், தொலைநோக்கி வசதியை
அப்போதைக்கு மூடி வைத்திருந்தார்கள்.
”பந்தா காட்டும் அப்பாடக்கர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு”
சில கம்பி வலைத் தடுப்புகள் இருந்தாலும் அதையும்
தாண்டி அந்த பாறையின் மேல் நின்று இயற்கை எழிலை ரசிக்க முற்பட்டு விபத்துகள்
அதிகம் உண்டாவது வழக்கமாகிவிட்டது. அதனால் அருகே இருந்த ஒரு பெரிய பாறையில் பந்தா
காட்டும் இளைஞர்களுக்காகவே ஒரு அறிவிப்பு எழுதி வைத்திருந்தார்கள் – ஏற்காட்டில்
ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே ஆனால் மூன்று மயானங்கள்!
”எங்களுக்கும் இங்கே இடமுண்டு!”
”என் குட்டிச் செல்லத்துக்கு குளிருது! யாராவது ஒரு போர்வை கொடுக்க மாட்டாங்களா!”
சற்றே நின்றிருந்த மழையும் மீண்டும் ”நான் உங்களை மகிழ்விக்க வந்துவிட்டேன் என்று
சொல்லியபடியே பொழிய ஆரம்பித்தது”. Lady’s
Seat மேடையிலேயே
சற்று நேரம் காத்திருந்தோம். மழையில்
நனைந்துவிட்டதால், சில குரங்குகள் தங்களது குடும்பத்தோடு அங்கே
ஒண்டிக்கொண்டன. பக்கத்திலேயே மனிதர்கள்
இருந்தாலும் ஒன்றும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தன. அது எனக்கும் வசதியாக படம் எடுக்க உதவிற்று.
”சப்புக் கொட்ட வைக்கும் மாங்காய்! என்னைக் கொஞ்சம் தின்னேன்!”
”குடும்ப பாரத்தைச் சுமக்க தந்தைக்குத் தோள் கொடுக்கும் தனயன்!”
மழை சற்றே குறைய அங்கிருந்து வெளியே
வந்தோம். சுற்றுலாத்தலங்களுக்கே உரிய மாங்காய், சுண்டல், தின்பண்டங்கள் அங்கே அணிவகுத்திருக்க,
அவற்றை பார்க்க மட்டுமே முடியும் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்! பக்கத்திலே
ஒரு சிறுவன் தனது தந்தையின் தொழிலில் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார். பலூன்களை தட்டியில் கட்டி வைத்திருக்க, பலரும்
அதை துப்பாக்கி கொண்டு வெடிக்க வைத்தார்கள்.
பல பெண்கள் Revolver
ரீட்டாக்களாகவும், Gun Fight காஞ்சனாக்களாகவும் மாறி
இருந்தார்கள். எதற்கு வம்பு என்று சற்றே ஒதுங்கி நின்று கொண்டேன்!
”மர வீடு - மைக்கேல் மதனகாம ராஜன் வீட்டினை நினைவு படுத்தியது!”
இப்படி இனிமையான இயற்கைக் காட்சிகளை கண்ட
பிறகு அங்கிருந்து புறப்படத் தயாரானோம்! அடுத்ததாய் எங்கு செல்ல உத்தேசம்? என்று
என்னவள் கேட்க, அதற்கு நான் சொன்ன பதில் – ”சற்றே
பொறுத்திருந்து பார்!” - அதே பதில் தான் உங்களுக்கும் – அடுத்த பதிவில் சொல்லி
விடுகிறேன். அது வரை சற்றே
பொறுத்திருங்கள்!”
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அந்தப்பாறையைப் பார்க்க முதுகுத் தண்டு சிலீர் என்கிறது.
பதிலளிநீக்குபடங்களுடன் பதிவு அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் யாவும் கண்ணுக்கு குளுமை .....ஏற்காட்டில் இருந்து பக்கம்தானே மேட்டூர் டேம் ,அங்கேயும் ஒரு விசிட் அடித்து விடலாமே :)
பதிலளிநீக்குத ம 3
இது ஒரு நாள் பயணம் தான் நண்பரே.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
இந்த மரவீடு சமீபத்தில் வைத்தார்களோ? நாங்கள் சென்ற போது பெண்கள் இருக்கை ஆண்கள், குழந்தைகள் இருக்கை மட்டுமே இருந்தன. பாறையின் அறிவிப்பு பயமுறுத்துகிறது! புகைப்படங்கள் எல்லாம் பளிச்!
பதிலளிநீக்குமர வீடு சமீபத்தில் தான் ஏற்படுத்தி இருக்க வேண்டும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...
இருப்பது ஒரு மருத்துவ மனை; கல்லறைகள் மூன்று – என்ற வாசகம் கொண்ட அந்த கல் என்னை மேலும், மேலும் சிந்திக்க வைக்கிறது.
பதிலளிநீக்குத.ம.4
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குஏற்காட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும் தங்கள் பதிவை படிக்கும்போது புதிய இடத்தை பார்ப்பதுபோல் இருக்கிறது. மரவீடு சமீபத்தில் தான் வைத்திருக்கிறார்கள். படங்கள் அருமை. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஒரே ஒரு மருத்துவமனை
பதிலளிநீக்குமூன்று மயானங்கள்
அருமையான வாசகங்கள்
ஆனால் இளைஞர்கள் படித்து அதன்படி நடப்பார்களா என்ன?
சொல்ல வேண்டியதை சொல்லி வைப்போம். கேட்பதும் கேட்காததும் அவர்கள் விருப்பம்! என்று நினைத்து எழுதி இருக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
தம 5
பதிலளிநீக்குதமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசிலிர்க்க வைக்கும் படங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅழகான படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸும் அருமை. அதிலும் அந்த குரங்கு தன்னுடைய குட்டியை வைத்திருக்கும் படம் அழகு.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
படங்கள் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி ....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
சுகமான சுற்றுலா... உங்களுடன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஒரே ஒரு மருத்துவமனை.. ஆனால், மூன்று மயானங்கள்!..
பதிலளிநீக்குமனம் விட்டுச் சிரித்தேன்!..
அழகான ஏற்காடு.. அருமையான பயணம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குநாங்களும் ஏற்காடு பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்த ஊருக்காகக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஏற்காடு பயணமே இன்னும் முடியவில்லை..... அடுத்த ஊருக்கு சில நாட்கள் பிறகு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா.
படங்கள் அனைத்தும் அருமை, மர வீடு அழகா இருக்கு அந்த மாங்காய் ஸ்ஸ் சப்பு கொட்ட வைக்கிறது.. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குமாங்காய் பிடிக்காதவர்கள் குறைவே.! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா....
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அழகிய படங்களுடன் சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபாறை அறிவுப்பு அப்படி பயமுறுத்தினால் அதன் கிட்டே போகமாட்டார்கள் என்று வைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு..
பாறை அறிவிப்பு - சிலராவது கடைபிடிக்கட்டுமே என்று நினைத்திருப்பார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
ஏற்காடு பயணம் அருமை. மர வீடு அதைவிட அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குபடங்களும் அனுபவங்களும் எங்களை அந்த இடத்திற்கே அழைத்துச்சென்றுவிட்டன. தந்தைக்கு உதவும் தனயன் புகைப்படம் மனதை நெருடியது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குபடங்களுடன் உங்களின் பதிவு மிக அருமை .உங்களின் பதிவினை தொடர்ந்து படித்தாலும் இன்றுதான் முதன் முதலாக கருத்து இடுகிறேன் .தமிழகத்தில் இருந்த காலங்களில் அடிக்கடி கொடைக்கானல் ,ஊட்டி போயிருக்கிறேன் .எனக்கு என்னவோ ஊட்டியை விட கிராமம் போல் இருத்த கொடைக்கானல் பிடிக்கும் இப்பொது எப்படியோ தெரியவில்லை .ஏற்காடு போனது இல்லை மறுமுறை தமிழகம் வரும் போது ஏற்காடு செல்லவேண்டும் .
பதிலளிநீக்குஉங்கள் பதிவினை படித்தபின்பு கொடைக்கானல் ஊட்டி மலரும் நினைவுகளில் முழ்கி விட்டேன்
நன்றி .
தொடர்ந்து எனது பதிவினை படிப்பது தெரிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரிகாலன்.
அருமை! அந்தப் பாறை பயமுறுத்துகின்ரது. நம்மவர்கள் அழகாக போஸ் கொடுக்கின்றார்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு