அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.
நன்மை என்பது
ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாக
சிறுகச் சிறுகச் சேர்த்து திரட்டும்
தேன் போன்றது;
தீமை என்பது
ஒருவன் கண்பட்டு
அந்த தேனடை ஒரு நிமிடத்தில்
அழிவது போன்றது.
- ஜேம்ஸ் ஆலன்
நன்மை மற்றும் தீமை பற்றிய ஜேம்ஸ் ஆலன் அவர்களின் வாசகம் உங்களுக்கும் பிடித்திருக்கும்
என நம்புகிறேன். சரி இன்றைய பதிவிற்கு வரலாம். பதிவர் ஜோதிஜி அவர்கள் பற்றி நீங்கள்
அறியாமல் இருக்க முடியாது. பிரபல பதிவர் - மிகச் சிறப்பான பதிவுகளை எழுதக் கூடியவர்.
இது வரை அமேசான் தளத்தில் மட்டுமே 20 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. தவிர www.freetamilebooks.com தளம் வாயிலாகவும் இவரது புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அமேசான் தளம் நடத்தும்
Pen to Publish Competition 2019-க்காக, எழுதிய மின்புத்தகம் தான் ”ஐந்து முதலாளிகள் கதை”.
பனியன் என்றாலே திருப்பூர் என்று சிலர் சொல்வதுண்டு! திருப்பூர் நகரமும் அதை நோக்கி
வேலை தேடி வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், பணம் போட்டு தொழில் நடத்தி உள்நாட்டில்
விற்பனை செய்வது மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்களும்
உங்கள் நினைவுக்கு வருவார்கள். கூடவே சாயப்
பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அங்கே இருக்கும் நொய்யல் ஆற்றை மொத்தமாக அழிவின்
பாதைக்கு அழைத்துச் சென்றதும் உங்களுக்குக் கூடவே நினைவுக்கு வரும். நண்பர் ஜோதிஜி அவர்கள் அதே ஊரில் கிடைத்த அனுபவங்கள்,
அவர் பார்த்த முதலாளிகள், தொழிலாளிகள் என தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்ட
நூல் தான் இந்த “ஐந்து முதலாளிகள் கதை”.
மனிதர்களுக்குள் நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு விதங்களிலும் உண்டு. உழைப்பாளிகளை ஏமாற்றியே பிழைக்கும் முதலாளிகள் ஒரு
பக்கம் என்றால், முதலாளிகளை ஏமாற்றும் தொழிலாளிகளும் உண்டு. பணம் வந்து விட்டால் மது,
மாது என்ற சூதுகளில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களும் உண்டு, நல்லதை மட்டுமே நினைத்து
நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் சிறப்பாகச் செயல்படும் முதலாளிகளும்
உண்டு. இப்படி ஜோதிஜி அவர்கள் தனது திருப்பூர்
வாழ்க்கையில் பார்த்த பல முதலாளிகள் பற்றிய விஷயங்களை இந்த மின்புத்தகம் வாயிலாக பகிர்ந்து
கொண்டிருக்கிறார். அனைவரும் படித்துத் தெரிந்து
கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. மேலோட்டமாக விஷயங்களைச் சொல்பவர்கள் இருந்தாலும், ஒரு
தொழில்/இடம் பற்றிச் சொல்பவர் அதே இடத்தில் இருந்து தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளும்போது உண்மையான பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். அப்படியான ஒரு மின்னூல்
இந்த ஐந்து முதலாளிகள் கதை.
அமேசான் தளத்தில் உள்ள இந்த மின்புத்தகத்தின் விலை ரூபாய் 59/- மட்டும்.
Kindle Unlimited கணக்கு உங்களிடம் இருந்தால் இலவசமாகவும் படிக்க முடியும். அப்படியான
கணக்கு இல்லாதவர்கள் 59/- ரூபாய் கொடுத்து தரவிறக்கம் செய்து கிண்டில் வழியாகவும் அல்லது
Android அலைபேசி வழியாகவும் அல்லது கணினி வழியாகவும் கூட படிக்க முடியும். நாளை வரை (5 ஜனவரி 2020) இந்த மின்புத்தகத்தினை
இலவசமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. என்னிடம் கிண்டில் இருந்தாலும் இதுவரை Kindle
Unlimited கணக்கினை நான் பயன்படுத்துவதில்லை – ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்! மாதம்
169/- ரூபாய் கொடுத்து கணக்கு துவங்கினால் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் தரவிறக்கம்
செய்து படிக்கலாம். ஆனால் ஒரு மாதம் கட்டணம்
கட்டவில்லை என்றாலும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் உங்கள் கணக்கிலிருந்து
அகற்றப்படும் – இந்த ஒரு காரணத்திற்காகவே கணக்கு துவங்குவதில் எனக்கு ஒரு தயக்கம்.
இது பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும்!
கூடவே கிண்டில் மூலம் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம் என்றே
சொல்ல வேண்டும் – கூடவே தேவையான புத்தகத்தினை பணம் கொடுத்து வாங்கி தரவிறக்கம் செய்து
வைத்துக் கொண்டால் எத்தனை நாளானாலும் உங்கள் கணக்கில் அப்புத்தகம் இருக்கும் என்பது
கூடுதல் வசதி. அந்த ஒரு காரணத்திற்காகவே தேவையான புத்தகங்களை தரவிறக்கம் – இலவசமாகவோ
அல்லது பணம் கொடுத்தோ அவ்வப்போது தரவிறக்கம் செய்து கொள்வதை இப்போது வழக்கமாக வைத்திருக்கிறேன்.
வரும் நாட்களில் தேவை என்று தோன்றும் பட்சத்தில்
Kindle Unlimited கணக்கினை துவங்கிக் கொள்ளலாம் என்று இப்போதைக்கு விட்டு வைத்திருக்கிறேன்.
கிடைக்கும் நேரத்தில் படிக்க முடிவது சில மணித்துளிகள் மட்டுமே என்பதாலும் இந்த முடிவு.
திருப்பூர் பற்றியும், அங்கே இருக்கும் தொழில் நிலவரம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,
தொழிலாளி-முதலாளிகளுக்கு இடையே இருக்கும் உறவுகள், விதம் விதமான மனிதர்கள் என பல விஷயங்களையும்
இந்த மின்புத்தகம் வாயிலாகச் சொல்லி இருக்கிறார் நண்பர் ஜோதிஜி அவர்கள். நீங்களும் தரவிறக்கம் செய்து வாசித்துப் பார்க்கலாமே!
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியைக் கிளிக்கலாம்!
இந்த நாளின் கிண்டில் வாசிப்பு பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என
நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால்
மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது தில்லியிலிருந்து…
நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநல்லதொரு பதிவு .நன்றி மா வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குபகிர்வுக்கு நன்றி ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஐந்து முதலாளிகளின் கதை
பதிலளிநீக்குவாழ்வியல் அனுபவம்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபகிர்வுக்கு நன்றி. புத்தகத்தை விமரிசனமும் செய்திருக்கலாமோ? இங்கே பையர் கிண்டில், அமேசானில் கணக்கு ஆரம்பித்துத் தருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம்.
பதிலளிநீக்குஅமேசான் கிண்டில் கணக்கு துவங்குவது வெகு சுலபம் தான் கீதாம்மா... நீங்களே கூட செய்யலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு வாசகம். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குபதிவும் வாசகமும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கிண்டில் அமேசான் தளங்கள் சென்ற்தில்லை அதன் தொழில் நுட்பம் தெரியாது என்பதே சரி
பதிலளிநீக்குகிண்டில் அமேசான் தளங்கள் - அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லை ஜி.எம்.பி. ஐயா. நீங்களும் கற்றுக் கொள்ளலாம்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாலசுப்ரமணியம் அய்யா இந்த வருடம் புதிதாக கற்றுக் கொள்வதில் இதற்கு முதலிடம் கொடுங்க. நன்றி வெங்கட்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்கு‘ஆயிரம் தச்சர் கூடி அமைந்ததாம் மண்டபம். ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன?’ என்ற புதிர் நினைவுக்கு வருகிறது ஜேம்ஸ் ஆலனின் அருமையான கருத்தை படித்தபோது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு