அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். நாட்கள் வெகு வேகமாக பறந்து போகின்றது.
சில நாட்கள் முன்னரே 1 ஜனவரி 2019 அன்று புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னது போல இருக்கிறது.
அதற்குள் அடுத்த ஆண்டு வந்து விட்டது – இதோ புத்தாண்டு வாழ்த்துகளுடன் பதிவிற்கு வந்து
விட்டேன். அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த
புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிமையாகக் கழியட்டும்.
இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?
நீங்கள் சிலரை
வெல்லலாம். சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள். உங்களுக்கு நீங்களே
சவாலாக இருங்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனிமனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள்
– கோனார் மெக்ரிகர் (ஐயர்லாந்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர்)
கன்னத்தில் குழி – பலருக்கு இப்படி குழி விழும் பார்த்து
இருக்கிறீர்களா? அது ஒரு வித அழகு. கன்னக் குழிக்காகவே கவிதை எழுதிய சிலர் உண்டு! ஒரு
மாதிரிக் கவிதை கீழே…
என்னைப்
புதைக்க
எப்பொழுது
வெட்டினாய்!
இத்தனை
அழகான குழி!
ஒன்றுக்கு
இரண்டாய் உன்
கன்னங்களில்!
அப்படிக் கன்னத்தில் குழி ஏன் விழுகிறது என்று சமீபத்தில்
தமிழ் கோராவில்
ஒரு கேள்வி. அதற்கு திரு சுரமுத்து ரங்கநாதன் எழுதியிருந்த பதில் ரொம்பவும் ஸ்வாரஸ்மாக
இருந்தது. எனக்குப் பிடித்தது என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் – எழுதிய அவருக்கு
நன்றியுடன். பல் மருத்துவர்களிடம் செல்லும்போது
அவர்கள் வாயில் விளையாடிக் கொண்டிருக்க நம்மால் எழுந்திருக்கவும் முடியாமல் ஒரு வித
திண்டாட்டம் தான். தலைநகரில் உள்ள முடிதிருத்தகங்களுக்குச் சென்றாலும் இதே உணர்வு தான்
எனக்கு! நம் தலையை அவர்கள் வசம் ஒப்படைத்து விட்டு நாம் படும் பாடு! கரணம் தப்பினால்
மரணம் என்று தோன்றும் – அதுவும் முகச்சவரம் எப்போதாவது செய்து கொள்ளும்போது கொஞ்சம்
கூட அசையாமல் அமர்ந்திருப்பேன்! கையில் கத்தி அவரிடம் அல்லவா இருக்கிறது! சரி கன்னத்துக் குழிகளுக்கு வருவோம்!
சிலருக்கு மாத்திரம் கன்னத்தில் குழி விழுவது
எதனால்?
அது
ஒரு தனியார் பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி. அங்கே இலவசமாக பற்களை சுத்தம் செயகிறார்கள் என கேள்விப்பட்டேன். எனக்கு பற்களில் பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தபோதும் பற்பசை விளம்பரங்களில் பற்கள் மின்னும் ஒரு எஃபெக்டை பார்க்கும்போது யாருக்குத்தான் ஆசை வராது. இப்போது தெரியும் அந்த மின்னும் எஃபெக்ட் வீடியோ எடிட்டிங்கில் கொண்டுவரமுடியும் என்பது. அப்போது ஏதோ நிஜமாகவே மின்னுகிறது என்று நினைத்தேன்.
உள்ளே
போய் அவர்கள் சொன்ன நாற்காலியில் அமர்ந்தேன். அந்த நாற்காலியைப் பார்க்கும்போதே அவ்வளவு ஆசையாய் இருந்தது. எனக்கு எனோ மனதில் மசாஜிங் சீட், நெக்ரெஸ்ட் எல்லாம் உள்ள ஒரு காஸ்ட்லீ கார் வந்து போனது. எனக்குத் தெரிந்து அந்த கார்களில் கூட இரண்டு லிவர்தான் வைத்திருப்பார்கள் ஒன்று முன்னே, பின்னே நகர்த்துவதற்கு. இரண்டாவது பின்னாடி சாய்ப்பதற்கு. இங்கு லிவ்ர்கள் கூட இல்லை. எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ். அதுவும் நாற்காலியில் நான்கைந்து மடிப்புகள் இருந்தன. டாக்டர் ஒரு பட்டனை அழுத்தினால் அதுவே மடங்கி விரிகிறது. அந்த நாற்காலியை பார்த்த உடனேயே பயங்கர நம்பிக்கை வந்தது. மனதிற்குள் நினைத்தேன் , "எவ்வளவு ப்ரொஃபெஷனலா பண்றாங்க இல்ல.."
அதில்
உட்கார்ந்து சாயும் வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. பின் டாக்டர் கை நீட்டி ஏதோ சொல்லவந்தார். கைகுலுக்க நீட்டுகிறார் என்று நானும் கைநீட்ட, அவரும் வேறு வழியில்லாமல் கைகுலுக்கிவிட்டு பின் தொடர்ந்தார். "இதோ பாருங்க.. இதை முடிக்கற வரைக்கும் நீங்க பேசமுடியாது. உங்க வாயில இந்த கிளிப்ப போட்டுடுவேன். அதனால ரொம்ப வலிச்சா கைய இப்பிடிக் காட்டுங்க . ரொம்ப இல்ல, உங்களால மேனேஜ் பண்ணமுடியும்னா கைய இப்பிடி காட்டுங்க. எச்சி துப்பணும்னா இப்பிடி காட்டுங்க. ரொம்ப வலிக்குது, கிளிப்ப எடுக்கணும்னா இப்பிடி காட்டுங்க..". அத்தனை முத்திரைகளையும் அதற்குள் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. "இன்னொரு தடவ சொல்லுங்க.." என்று சொல்ல வாயைத் திறந்தபோது கிளிப்பைப் போட்டுவிட்டார். கூடவே தப்பித்துச் சென்றுவிடாமல் இருக்க ஒரு சீட் பெல்ட்டையும் மாட்டிவிட்டார். வலி தாங்க முடியவில்லை.
கிளிப்பைப் போட்டதோடு சரி. அதன்பின்னர் அவர் என் கையை கவனிக்கவே இல்லை. கடைசியாய் சொன்னதால் கிளிப்பை கழட்டச் சொன்ன முத்திரை மட்டும் ஞாபகம் வந்தது. நான் அந்த முத்திரையை காட்டுகிறேன். யாரும் கவனித்தாற்போல் தெரியவில்லை. அவர் கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று தொலைவில் இருக்கும் யாருக்கோ கை காட்டினார். என்பக்கம் திரும்பி "ட்டு மினிட்ஸ்" என்றபடி மீண்டும் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டார். என் கை கழட்டச் சொல்லும் சின்முத்திரையிலேயேதான் இருந்தது. ஆனால் அவர் பார்க்கவில்லை.
வாயில்
போட்ட அந்த கிளிப்பை அவ்வளவு துல்லியமாக வடிவமைத்திருந்தார்கள். எப்படி என்றால் வாயை இருப்பதிலேயே பெரிதாய் திறக்கவேண்டும். அதே சமயத்தில் வாயின் இருபுறங்களிலும் உதடுகள் சேரும் அந்த முனை கிழிந்துவிடக் கூடாது என்ற அளவில் அந்த கிளிப் அமைக்கப் பட்டிருந்தது. அதாவது இன்னும் 1 மிமீ வாயைத் திறக்க முற்பட்டாலும் இருபக்கமும் உதடுகள் சேரும் அந்த முனை கிழிந்துவிடும்.
அவர்
"ட்டூ மினிட்ஸ்" என்று சொல்லி சென்ற இருபத்தைந்தாவது நிமிடத்தில் ஒரு கும்பல் வந்தது. மாணவர்களாம்! இடையில் அந்த கும்பலைப் பிய்த்துக்கொண்டு வந்த அந்த டாக்டர் என்னைத்தான் பார்க்கப் போகிறாரோ என்று நான் நினைக்கும்போது, மாணவர் பக்கம் திரும்பி என் பக்கம் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டார்(சபை நாகரிகம் கருதி முதுகு என்கிறேன்). பின் ஆத்து ஆத்துன்னு ஆத்த ஆரம்பித்தார் சொற்பொழிவை.
இவ்வளவு
நேரமும் வலியோடு வாயை அகலப் பிளந்தபடி கையில் சின்முத்திரையோடு நான். அவர்கள் யாருமே என் சின்முத்திரையை கவனித்ததாய்த் தெரியவில்லை. கடைசி வரிசையில் நின்ற இரண்டு படிக்காத பையன்கள் மட்டும் கவனித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த முத்திரையையெல்லாம் பற்றி எதுவும் தெரியாது போலும். என் கைமுத்திரையைக் காட்டிய படி இருவரும் ஏதோ பேசி சிரித்துக்கொண்டார்கள்.
டாக்டர்
என் வாயை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தார். இல்லை. அவர் வாயாலேயேதான். என் வாயை மாடலாக வைத்து பாடம் எடுத்தார். ஆங்கிலத்தில் எடுத்தார் . இடையிடையே டீத், டூத் என்ற இரு வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் புரிந்தது. எப்படி பற்களை சுத்தம் செய்வது என்று டெமோ கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன்- அவனுக்கு அப்போதுதான் மீசைமுளைக்கத் தொடங்கியிருந்தது. அந்த மாணவன் முன்னே வந்து, "சார்.. நான் பண்றேன் சார்.. நான் இதுவரைக்கு பண்ணினதே இல்ல", என்றான். கோபம் வந்தது,"என்னது..பண்ணினதே இல்லையா.. டேய்.. ஒண்ணாவது படிக்கறப்ப டீச்சர் சொன்னாங்க-ன்னு அன்னிலேந்து இன்னிவரைக்கும் தெனம் ரெண்டு தடவ பிரஷ் பண்றேன்.. அப்படி மெயின்டைன் பண்ண பல்ல ஒன்கிட்ட காட்டுவேன்-னு கனவுல கூட நினைக்காத.." என்று சொல்ல நினைத்தேன். எங்கே.. வாயில் கிளிப்பும் கையில் சின்முத்திரையும் இருக்கிறதே. கடைசியில் அவன்தான் வந்து வாய்த்தான் என் பல்லை சுத்தம் செய்ய.
அவர்
சொல்லச் சொல்ல இவன் செய்துகொண்டிருந்தான். இடையில் ஒரு மாணவி சந்தேகம் கேட்கிறாளாம். "சார் இந்த எடத்துல.." என்றபடி ஆர்வக் கோளாறில் தன் கையிருந்த பேனாவை என் வாய்க்குள் விட்டாள் .(எந்த இடத்தில் என்று காட்டுகிறாளாம்). நல்ல வேளை.. "டோன்ட் டூ தட்" என்று டாக்டர் அதட்ட நான் தப்பினேன். அவள் என்ன செய்ய இருந்தாளோ.
ஒருவழியாக, எல்லாம் முடிந்தவுடன் ஒரு மாணவி கேட்டாள், "சார், இதுக்கு மரத்துப் போற ஊசி போட்டு பண்ணனுமா?"- என்றாள். தான் மறந்துவிட்டதை எண்ணி பின் ஒரு வினாடியில் சுதாரித்த டாக்டர், "யா.. இட்ஸ் பெட்டர் " என்றார்.
வாயை
மூடிப் பார்த்துக் கொண்டேன். மூட முடிந்தது. ஆனாலும் மூடாத மாதிரியே ஒரு ஃபீலிங். வீட்டிற்குப் போய் கண்ணாடியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். பல் மின்னவேண்டும் என்பதற்காகத்தானே போனேன். மின்னுகிறதா என்பதற்காக சிரித்துப் பார்த்தேன். முன்னைவிட வெண்மையாய்த்தான் இருந்தது. ஆனால் அந்த மின்னும் எஃபெக்ட்டெல்லாம் வரவில்லை.
ஆனால்
சிரிக்கும்போது..
எப்போதுமில்லாமல்..
இப்போது..
புதிதாக..
கன்னத்தில் குழி விழுகிறது !
(அவ்வளவு நேரம் வாயை அப்படி பிளந்த நிலையில் வைத்திருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் கன்னத்தில் குழி விழும் போலும் )
புத்தாண்டை ஒரு நல்ல நகைச்சுவை பதிவுடன் ஆரம்பிக்க நினைத்திருந்தேன்.
நான் எழுதுவதற்கு பதில் இப்படி படித்ததைப் பகிர்ந்திருக்கிறேன். இந்த நாளும் வரும்
வருடங்களின் எல்லா நாட்களும் இனிதாகவே அமைந்திடட்டும். மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
நானும் ரசித்தேன் அந்த பதிலை. நல்ல அனுபவம். எனக்கும் அந்த அனுபவம் எல்லாம் இருந்தது. எழுத ஆரம்பித்து ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டேன் அப்போது!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்.
எழுத ஆரம்பித்து ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டேன் அப்போது! ஹாஹா... இப்போது எழுதலாமே ஸ்ரீராம்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹா... ஹா...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பதிவை ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரசித்தேன் சிரித்தேன்.
பதிலளிநீக்குபதிவினை ரசித்து சிரித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹாஹா! நல்ல சுவாரஸ்யமான பதிவு. பல் டாக்டரிடம் பல்லைக்காட்டி அதை அவர் கழட்டி என் கண்முன் நீட்டி, பின்னர் தூக்கி எறிந்த அனுபவங்கள் எனக்கு நிறையவே உண்டு. பல் மருத்துவ கல்லூரியோடு இணைந்த பல் மருத்துவ மனைக்கு போகவே கூடாது. ஆளாளுக்கு நம் பல்லை குடைந்து கன்னம் வீங்கிப் போய் விடும். முதலில் காட்டியிருந்த மேற்கோள் அருமை!
பதிலளிநீக்குபல்லைக் கழட்டி காண்பிக்கும் டாக்டர் - ஹாஹா... எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு பானும்மா... மேற்கோளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குநகைச்சுவையுடனும், நல்ல கருத்துடனும்
தொடங்கியிருக்கும் இப்புத்தாண்டு அனைவருக்கும் நன்மை தரட்டும்.
அருமையான ஹாஹா பதிவு. கன்னத்தில் குழி அழகோ அழகு.
தினம் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன் .நல் வாழ்த்துகள் மா.
நகைச்சுவையுடனும் நல்ல கருத்துடனும் தொடங்கி இருக்கும் புத்தாண்டு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவை இரசித்தேன்! எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபதிவை தாங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டக்காரர்கள் ஜி
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
கன்னத்தில் குழி - அதிர்ஷ்டக்காரர்கள் ஜி! இருக்கலாம் கில்லர்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு நாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரவிச்சந்திரன்.
நீக்குவாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மா...
நீக்குVery interesting to read. Happy New year 2020 to you and your family.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பகிர்வு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குபுத்தாண்டுக்கும் கன்னத்தில் குழிக்கும் ஏதும் ஜம்பந்தம்:) இருக்குமோ:) எனக்கெதுக்கு ஊர் வம்பு...:)
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
என்ன ஜம்பந்தம் இருக்கப் போகிறது :)) ஒரு சம்பந்தமும் இல்லை அதிரா... ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் வேலைப்பளு குறையவும் பிரார்த்தனைகள். பொன்மொழி, கன்னக்குழி இரண்டுமே அருமை. பல் மருத்துவரிடம் போனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இத்தனைக்கும் நான்போனது பற்களைச் சுத்தம் செய்யத்தான்.
பதிலளிநீக்குஇந்தக் கன்னக்குழி ஏதோ நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் என எப்போதோ எதிலோ படிச்சேன். ஞாபகம் இல்லை.
பல் மருத்துவரிடம் போனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - உண்மை கீதாம்மா...
நீக்குகன்னக்குழிக்கும் நரம்புக் குறைபாடுக்கும் சம்பந்தம் - தெரியவில்லை கீதாம்மா. அப்படியும் இருக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிரித்துக்கொண்டே வாசித்தேன். புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குபதிவினை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசுவாரஸ்யம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு