நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு
வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
படைப்பாற்றல்
என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்
கொள்வது என்பதை தெரிந்து கொள்வது – ஸ்காட் ஆடம்ஸ்.
(Dilbert Cartoons உங்களுக்குத் தெரிந்தால் இவரைத் தெரிந்திருக்கும் – ஆம் பிரபல கார்ட்டூனிஸ்ட்
ஆன ஸ்காட் ஆடம்ஸ் சொன்னது தான் இன்றைய வாசகம்!]
பதிவர்
சந்திப்பு – 12 டிசம்பர் 2019:
துளசி டீச்சருடன் இனிய சந்திப்பு!
தன்னுடைய இந்தியப் பயணத்தில் ஒருநாளாக இன்று
எங்கள் இல்லத்தில் துளசி டீச்சரும், கோபால் சாரும். நம் நெருங்கிய உறவினர் போல் தான்
வெகு இயல்பாக இருவருடனும் பேசலாம்.
நீயூசி கதைகளும், ரஜ்ஜூ, ஜன்னு, தோட்டம்,
ராஸ்பெரி என்று பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியலை. திருப்பதி சென்று வந்ததால்
லட்டு பிரசாதத்துடன் எங்களைக் காண வந்தார். பரீட்சைக்குச் சென்ற ரோஷ்ணி வரும் வரை காத்திருந்து
பார்த்து விட்டே கிளம்பினார்கள்.
ப்ளாகர் காலத்து நட்பு என்றெல்லாம் இப்போது
தோணுவதேயில்லை. நம் வீட்டில் உள்ள ஒருவர் பக்கத்து ஊரிலிருந்து வருகிறார் என்று சொல்லலாம்.
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி டீச்சர்! வரும் நேரம் முன்பே தெரியாததால் திருவரங்க நட்புகளிடம்
சொல்ல முடியலை. மன்னிக்கவும்.
பக்தி
வெள்ளம் – 18 டிசம்பர் 2019:
மார்கழியில் பக்தி வெள்ளத்தில் மிதப்பது இருக்கட்டும்.
உங்கள் வீட்டு தொலைக்காட்சி அல்லது சவுண்ட் சிஸ்டத்தின் ஒலியை சற்றே குறைவாக வைக்கலாம்.
இது அக்கம் பக்கத்தவர்களுக்கும் அல்லது உங்களுக்கே கூட நன்மை தரலாம்.
நேற்று என் தம்பி மனைவி கூட சொல்லிக் கொண்டிருந்தாள்.
சென்னையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு கோவிலில் அதிகாலை 3 மணிக்கே பாடல்களை அலற
விடுகிறார்களாம்.
கொஞ்சம் அடுத்தவர்களைப் பற்றியும் யோசிப்போம்!!!
கோலத்தட்டு
– 20 டிசம்பர் 2019
சுவாமி மேடையில் மாற்றி மாற்றி போடுவதற்காக சமீபத்தில்
கடைத்தெருவில் வாங்கியது. நவராத்திரி சமயங்களிலோ அல்லது வீட்டுக்கு வருபவர்களுக்கு
மஞ்சள் குங்குமத்துடன் வைத்துக் கொடுக்க ஏற்றது. உபயோகமான பொருள் தான் இல்லையா!
திருவரங்கத்திலிருந்து
கோலம் – 22 டிசம்பர் 2019:
திருவரங்கத்தில் நேற்று ஒரு அபார்ட்மென்ட் வாசலில் போட்டிருந்த
கோலம்!!
புது வரவு
– மண் பாண்டம் – 23 டிசம்பர் 2019:
பக்குவப்படுத்துதல்…
நீரில் குளித்து
எண்ணெயில் குளித்து
நெருப்பில் குளிக்கத்
தயாராகிறது
இந்த மண்சட்டி!!
மனிதர்களாகிய நாமும்
அது போல்
எல்லாவற்றையும்
கடப்பது தானே
பக்குவம்!!!
Queen
– Web Series – 23 டிசம்பர் 2019:
மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களைப் பற்றிய
புதிய தொடர். இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்ட
சிறுமியாகவும், அழகும் பன்முகத்திறமையும் கொண்ட சிறுமியாகவும் நம்மை ஈர்க்கிறார்.
வறுமையிலும் கொடிது சிறுவயதில் தாய் தந்தையிடம் கிடைக்க
வேண்டிய அன்பு, அரவணைப்பு, ஊக்கப்படுத்தும் வார்த்தைகள், பாராட்டு போன்றவை கிடைக்காமல்
போவது.
முதல் எபிசோடில் பார்த்த காட்சிகளே இன்னும் மனதை விட்டு
நீங்கவில்லை. இது ஒரு இணையத் தொடர். கூகிள்
செய்தால் உங்கள் அலைபேசி வழியே பார்க்க முடியும். மேலதிகத் தகவல் வேண்டுமென்றால் தருகிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன்.
Hero
- சினிமா – 25 டிசம்பர் 2019:
ஹீரோ படத்திற்கு ரம்பா தியேட்டரில் சென்று பார்த்து வந்தோம்.
தியேட்டரில் யாரையும் காணோம். ரொம்பவே குறைவான பார்வையாளர்களே!
என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப்
பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
வாசகம் உட்பட கதம்பம் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குமண்பாண்டம் அழகு. துளசி டீச்சர் வருகை, சந்திப்புக்கு வாழ்த்துகள்.
குயீன் தொடர் பாதி பார்த்து நிறுத்தி இருக்கிறேன். சி கா படம் பார்க்கும் பொறுமை இல்லை!
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குகுயின் தொடர் நான் இன்னும் பார்க்கவில்லை - பார்க்கும் பொறுமையும் இல்லை! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ம்ம்ம் எல்லோரும் சொல்லி இருக்காங்க. ஜெ.ஜெ. பற்றிய தொடர். ஒரே ஒரு மாறுதலான விமரிசனமும் படிச்சேன். பார்க்கணும்னு இருக்கு! பார்ப்போம். இதைத் தவிர்த்து மற்றவை முகநூலில் படிச்சேன்.
பதிலளிநீக்குமுடிந்த போது ஜெஜெ பற்றிய தொடர் பாருங்கள் கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புதிய மட்பாண்டம் அழகு...
பதிலளிநீக்குவழக்கம் போலவே கதம்பம் அருமை...
புதிய மட்பாண்டம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Excellent writing. Whatever you write you make it interesting. Wonderful skill.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
க்வீன் தொடரில் ஐந்து வரை பார்த்தோம். அதனைப் பார்த்தபோது அவரின் உறுதியை உணரமுடிந்தது. பள்ளிப்பருவம் முதல் அவர் எதிர்கொண்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் தனக்கான ஒரு பாதையை வகுத்துக்கொள்வதற்கு அச்சாரமாக இருந்ததைப் போலக் காணப்பட்டது. அவரைப் பற்றி பலர் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. எவ்வளவுதான் மைனஸ் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை திருமதி இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக நான் வியந்த ஆளுமை செல்வி ஜெயலலிதா.
பதிலளிநீக்குஇனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திருமதி இந்திரா காந்திக்கு அடுத்தபடியான ஆளுமை செல்வி ஜெயலலிதா - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
துளசி டீச்சர், கோபால் சார் அவர்களை மதுரை பதிவர் மாநாட்டில் சந்தித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குதுளசி டீச்சரை நீங்களும் சந்தித்திருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
டீச்சர் எங்கள் வீட்டுக்கும் வந்துள்ளார்.
பதிலளிநீக்குஆஹா மகிழ்ச்சி ஜொதிஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவர் சந்திப்பு, மற்றும் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகதம்பம் அழகு.
கதம்பத்தின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இன்றைய கதம்பத்தில் உள்ள அனைத்தும் அருமை. தொலைக்காட்சி அல்லது சவுண்ட் சிஸ்டத்தின் ஒலியை சற்றே குறைவாக வைக்கலாம் என்ற தங்களின் யோசனை மார்கழித் திங்களுக்கு மட்டுமல்ல எல்லா நாட்களுக்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குஒலியை எப்போதும் குறைவாக வைக்கலாம் என்பது சிறப்பு வே. நடனசபாபதி ஐயா. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமுடிவில் "பக்குவப்படுத்துவது" ஆகா...!
பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பக்தி வெள்ளம் - சப்தம் எல்லோருக்கும் தொந்தரவு தருகின்றது என்று எல்லா மதத்தவர்களும் புரிந்துகொள்ளணும்.
பதிலளிநீக்குஆஹா..துளசி டீச்சர் இந்தியாவிலா? நான் சமீபத்தில் ஸ்ரீரங்கம் தொடங்கி மலையாள திவ்யதேசங்கள் வரை ஆலயங்களுக்குச் சென்றிருந்தேன்... எங்கும் பார்க்கும் வாய்ப்பு கிட்டலை.
சப்தம் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்பதை புரிந்து கொள்ளத் தான் வேண்டும். ஆனாலும் புரிந்து கொள்ளாதவர்களே இங்கே அதிகம் தான் நெல்லைத் தமிழன்.
நீக்குதுளசி டீச்சர் தற்போது அவர்கள் ஊர் திரும்பிச் சென்று இருப்பார்கள் என நினைக்கிறேன் நெல்லைத் தமிழன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
துளசி டீச்சரும் திரு கோபாலும் பழக இனிமையானவர்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு///மார்கழியில் பக்தி வெள்ளத்தில் மிதப்பது இருக்கட்டும். உங்கள் வீட்டு தொலைக்காட்சி அல்லது சவுண்ட் சிஸ்டத்தின் ஒலியை சற்றே குறைவாக வைக்கலாம்//
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது பொயிண்ட்டூ:), இங்கெனில் பொலீஸ் க்குச் சொல்லிடுவினம்:))..
அந்த மண்சட்டி பார்க்க ஆசையாக இருக்குது. இங்கு முன்பு இதுவரை சில சட்டிகள் வாங்கி விட்டேன், இப்போ கிடைக்குதில்லை, மண்சட்டி ஒரு 6 மாதமானதும் வெளிப்பகுதி எண்ணெய்யாகி ஒட்டுதே, எப்படிக் கழுவினாலும் போகுதில்லை, அதனால அதனை எறிஞ்சுவிடுகிறேன்..
இங்கு ஒரு சாதாரண சட்டி, மூடி இல்லாமல் 10 பவுண்டுகள். அப்படியானாலும் பறவாயில்லை எனத் தேடினால் கிடைக்குதில்லை, பொங்கலுக்கு வரக்கூடும் எனக் காத்திருக்கிறேன்.
அதீத சப்தம் - அங்கே எனில் போலீஸில் சொல்லலாம்! இங்கே பெரிதாகப் பயன் இல்லை அதிரா...
நீக்குஆஹா மண்சட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்களேன்! :))) பத்து பவுண்டுகள்! அம்மாடி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம், சந்திப்பு, குயின், ரம்பா அனைத்தும் இந்த வருடத்தின் அழகிய நினைவுகள், இனி அடுத்தவருடம் உங்களை இங்கு சந்திக்கிறேன் ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குகதம்பத்தின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா...
நீக்குஅடுத்த வருடம் - ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகதம்பம் பதிவு அருமை. சந்திப்பு மகிழ்வை தந்தது என்று பகிர்ந்தது சந்தோஷமாக உள்ளது. நட்புகள் தொடரட்டும்.
கோலம் நன்றாக உள்ளது.
மட்பாண்டம் மிக அழகாக உள்ளது. அதற்கான கவிதை அருமை. ரசித்தேன்.
திரைத் தொடர் அடுத்த வருடந்தான் பார்க்க வேண்டும். ஹா. ஹா. ஹா. அனைவருமே நன்றாக உள்ளதென குறிப்பிடுகின்றனர்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வரும் புத்தாண்டு அனைவருக்கும் நலன்களை அள்ளித்தர ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
துளசி+கோபால் அவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி. கதம்பம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு