ஞாயிறு, 8 டிசம்பர், 2019

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஒன்று

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த ஞாயிறை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?


உங்கள் எதிரிகளை கவனியுங்கள். அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
 
பதிவுலகம் பக்கமே வர இயலாத இடைப்பட்ட நாட்களில், சில மாதங்கள் முன்னதாகவே திட்டமிட்டிருந்த ஒரு பயணத்துக்குச் சென்று வந்தேன் – வந்தோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்! தில்லி வாழ் நண்பர்கள் சிலராகச் சேர்ந்து திட்டமிட்ட பயணம் இது – மொத்தம் 18 பேர்! பெரிய குழுதான் இல்லையா? மூன்று DSLR Camera-க்கள், நிறைய அலைபேசிகள் – அதில் குறிப்பாக சில One Plus 7T வகைகளும் உண்டு என்பதால் ஏகப்பட்ட நிழற்படங்களை சுட்டுத் தள்ளி இருக்கிறோம்! அனைத்தையும் தொகுத்த போது கிட்டத்தட்ட 7000 நிழற்படங்கள்! அனைத்தையும் வெளியிட முடியாது என்றாலும் சில படங்களை மட்டுமாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணம்! நான் எடுத்த படங்கள் மட்டுமே ஆயிரத்திற்கும் மேல்! ஆறு இரவுகள், ஏழு நாட்கள் முழுமையாக அந்தமான் தீவுகளில் இருந்திருக்கிறோம். ஒரு சில இடங்களில் புகைப்படம் எடுக்க முடியாத நிலை என்றாலும் இத்தனை படங்கள்! இந்த ஞாயிறில் அந்தமானின் அழகைக் காண்பிக்கும் விதமாகவும், பயணத்தின் அனுபவங்களைச் சொல்லும் விதமாகவும் சில படங்கள் – நிழற்பட உலாவின் முதல் பகுதியாக!


படம்-1:  கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடலாமா எனக் கேட்ட சூரியன்!



படம்-2:  வீழ்ந்த மரத்திலும், வெட்டப்பட்ட மரத்திலும் கலைவெண்ணம்.



படம்-3:  இடைவெளியே இல்லாது வேலை செய்ய இந்த கடலழகனால் மட்டுமே முடியும் என்று சொல்லும் கடல் அலைகள்!



படம்-4:  மனிதர்கள் மட்டுமே ”Sun Bath” எடுக்க வேண்டும் என்று யார் சொன்னது? தூங்கிக் கொண்டிருந்த செல்லம்! 


படம்-5:  சுடச் சுட பஜ்ஜி கிடைக்கும்! உங்களுக்கு என்ன பஜ்ஜி! எனக்கு மிளகாய் பஜ்ஜி!


படம்-6:  இயற்கை வடித்த வடிவங்கள் தான் எத்தனை அழகு - உளிகளே இல்லாமல் இப்படிச் செதுக்க எத்தனை மாதங்கள் உழைத்திருப்பான் கடலரசன்? பக்கத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் மூடி - வலி தந்தது!


படம்-7:  கடற்கரை ஓரமாக ஒரு காதல் பாதை!! தேனிலவு வந்த பல ஜோடிகள் காதல் சின்னம் பார்த்து வெட்கப்பட்டது அழகு!


படம்-8:  கஸ்டமர் ஒருத்தரையும் காணோமே எனக் காத்திருக்கும் வியாபாரி! சுடச் சுட பேல் பூரி - சாப்பிடலாமா? கடல் அலைகளைப் பார்த்தவாறே பேல் பூரி கொறிக்கலாம் வாங்க!


படம்-9:  சாலையோர விளக்கு அலங்காரம்! இருட்டில் பார்க்க எப்படி இருக்கிறது பாருங்கள்!


படம்-10:  நான் ரொம்ப மோசமானவன். என்கிட்ட வெச்சுக்காத சொல்லிட்டேன் - அப்படியே உன்னை முழுங்கிடுவேன்! என்று சொல்கிறதோ இந்தச் செல்லம்!



படம்-11:  புல்லிலும் அழகு! சேர்த்து வைத்து படம் எடுக்க, “கை கொடுத்து உதவிய” நட்புக்கு நன்றி.



படம்-12:  இயற்கை தான் எத்தனை எத்தனை அழகை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது - பூவும் மொட்டும்!


படம்-13: பூவில் மட்டுமா? இலையிலும் நல்ல வண்ணம் உண்டு! என்று சொல்லாமல் சொல்லும் செடி. 


படம்-14:  இவ்வளவு தொப்பி இருக்கே... வாங்கலாம்ல! ஃபோட்டோ மட்டுமே புடிச்சா எப்படி என்று கேட்கிறாரோ இவர்?



படம்-15:  குல்ஃபி யாரும் வாங்க வரலையே... சரி கொஞ்சம் குச்சியெல்லாம் ரெடி செய்வோம் என்று  உழைக்கும் உழைப்பாளி! கீழே மட்காவில் குல்ஃபி! ஒரு குல்ஃபி 25 ரூபாய் தான்! உங்களுக்கு வேணுமா சொல்லுங்க!


படம்-16:  படகுத்துறை - படகில் சென்றபடியே எடுத்த படம் - எத்தனை தென்னை மரங்கள் அக்கரையில்!


படம்-17:  நான் தேங்காயும் சாப்பிடுவேன் ... இளநீர் குடித்தபிறகு மக்கள் மானுக்கும் தேங்காய் கொடுக்க அசைபோட்டுச் சாப்பிடும் மான் ஒன்று...



படம்-18:  கடலுக்கு யார் தேங்காய் தருவார்கள்? அதனால் நான் தருகிறேன் என வளைந்து நிற்கும் தென்னை ஒன்று!



படம்-19:  இருபுறமும் தென்னை! பக்கவாட்டில் மான்கள் என அழகான நடைபாதை... அதுவும் சுதந்திரமாக உலவும் மான்கள்! கைநீட்ட பக்கத்தில் வந்து சாப்பிட ஏதும் கிடைக்குமா எனப் பார்க்கும் மான்கள்! ஆஹா... என்ன ஒரு இடம் இந்த இடம்!


படம்-20:  நெருப்புக் கோளமாக சூரியன் - பார்த்து சூரியனே... மரங்கள் எரிந்து விடப்போகிறது!

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. அழகிய படங்கள்.   'அந்தமானைப் பாருங்கள் அழகு...'  என்று தெரியாமலா பாடினார் கவிஞர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். கவிஞர் உணர்ந்து பாடியிருக்கிறார் என்பது அங்கே சென்ற போது புரிந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தூங்கும் செல்லம் பாவம்.    பஜ்ஜிகள் லிஸ்ட்டில் கத்தரிக்காய் இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. உங்களுக்குக் கத்திரிக்காய் பஜ்ஜி தான் பிடிக்குமா ஸ்ரீராம்? அங்கே காய்கறி விலை ரொம்பவே அதிகம் - பெரும்பாலும் கப்பல்/விமானம் வழி பொருட்கள் வந்து சேர்வதால் விலை அதிகம். உருளைக் கிழங்கு சமயங்களில் 150 ரூபாய் கூட விற்கிறது என்று தெரிந்தது! பெரும்பாலான காய்கறிகள் 150 ரூபாய்க்கு மேல் தான் அங்கே.

      தூங்கும் செல்லம் பாவம் - ஓய்ந்து போய் தூங்குகிறதோ என்று தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படம் 10:  "உன் மூஞ்சிக்குக் கோபம் செட் ஆகலை...   எனக்கு சிரிப்புதான் வருது..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நல்ல வர்ணனனை! ரசித்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. படம் 18 : "வர்றவங்க எல்லாம் கடலையே போட்டோ புடிக்கிறாங்கப்பா..    இப்படி எட்டிப் பார்த்தால்தான் கேமிராவில் நாமும் விழமுடிகிறது!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... ஆமாம். கடலை எடுப்பவர்கள் தான் அதிகம் ஸ்ரீராம். படத்திற்கு உங்களுடையது நல்ல கமெண்ட்! பாராட்டுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அந்தமானில் எடுக்கப்பட்ட அழகான படங்கள் மிக மிக அழகாக உள்ளன. படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது எனக்கும் "அந்தமானைப் பாருங்கள் அழகு" என்ற பாடல்தான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. (சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் அதையே நினைவாக குறிப்பிட்டு விட்டார்கள்.)

    முதலில் உற்சாகமாக அனைவரைப் பார்த்த மகிழ்வில் கண்ணாமூச்சி ஆடிய கதிரவன் களைப்பான பின் யாரையும் காணாத கோபத்தில் சிவந்து விட்டான் போலும்.! ஆகா... சிகப்பு சூரியன் மிக அழகு.

    கடலரசன் செய்த சிற்பம் ரசித்தேன். தென்னை மரங்களின் அணிவகுப்பு அருமையாக உள்ளது. அத்தனைப் படங்களும் அழகாக உள்ளது. எதை விடுவது, எதை விமர்சிப்பது எனத் தெரியவில்லை. ஆனால், அந்தமானின் அழகை கண்ணெதிரே கொண்டு வந்து தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்ததா? பாடலையே தலைப்பாக வைக்கலாம் என்று எனக்கும் தோன்றியது கமலா ஹரிஹரன் ஜி!

      படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னது மகிழ்ச்சி அளித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அழகிய படங்களும், அதன் வர்ணனைகளும் ரசிக்க வைத்தன ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எல்லாமே அழகான காட்சிகள். கவித்துவமான தலைப்புகள். காதலர் பாதையும் அழகு, மான்கள் வரும் பாதையும் அழகு! தென்னை மரங்கள் நிறைய இருப்பது தான் அந்தமானின் சிறப்பு! பக்கத்தில் உள்ள தீவுகளுக்கும் போனீர்களோ? ஆயிரத்தில் 20 படங்களே இத்தனை அழகு என்னும்போது மற்றப்படங்களும் சிறப்பாக வந்திருக்கும். அங்கே இருக்கும் மதராஸ் ஓட்டலுக்குப் போனீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அங்கே தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் என அனைத்தும் உண்டு. பச்சைப் பசேலென பார்க்கும்போதே பரவசம் தரும் இயற்கை எழில். அங்கே இருந்து திரும்பி வரவே மனதில்லை எங்கள் குழுவில் இருந்த யாருக்குமே! மதராஸ் ஓட்ட்ல் - போகவில்லை. எங்களுக்கு பெரும்பாலும் தங்குமிடத்திலேயே உணவும் சேர்ந்து இருந்தது. பக்கத்து தீவுகளுக்கும் சென்று வந்தோம் கீதாம்மா... விவரங்கள் பிறகு வரும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. முறைக்கும் செல்லத்தைப் பார்த்துத் திரும்ப முறைக்காத செல்லம் ரொம்ப சாதுவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சாது தான் கீதாம்மா - ரொம்பவே விளையாட்டு - எங்கள் குழுவில் பலரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள் இந்தச் செல்லங்களுடன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அந்தமானில் அத்தை (அப்பாவின் தங்கை) இருந்தார்கள், வரச்சொல்லி கொண்டே இருப்பார்கள்.

    மிக அழகான படங்கள் அனைத்தும் அழகு.
    சூரியன் மரங்களுக்கு இடையில் நெருப்புக் கோளமாக மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அழைப்பு வந்தபோது செல்ல முடியவில்லை என்றால் என்ன. முடிந்த போது சென்று வாருங்கள் கோமதிம்மா... நல்ல இடம். பார்க்க வேண்டிய இடமும் கூட.

      படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோசப் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  13. வழமைபோல படங்கள் மிக அழகு.. மான்பிள்ளை சூப்பர். அந்த சூரியன்.. நம்பமுடியவில்லை, ஏதோ பிளாஸ்ரிக் போல இருக்கு ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      பிளாஸ்டிக் போல இருக்கா சூரியன்... ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. அந்தமான் மிகவும் அழகு. ராஸ் தீவு நாங்களும் சென்று வந்தோம். மீண்டும் நினைவு படுத்தியதிற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் அந்தமான் சென்றதை இப்பதிவு நினைவூட்டியதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....