திங்கள், 30 டிசம்பர், 2019

ஆர்கனைசர் - உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்



அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் ஒரு நல்வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.
 
லிங்கன் அவர்களின் கூற்று நூறு சதவீத உண்மை. ஒரு பொய்யில் ஆரம்பித்து அந்த பொய்யை மறைக்க வேறொரு பொய், அதை மறைக்க இன்னும் பொய் என மொத்தத்தில் புளுகு மூட்டையாக மாறிவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்தால் நிம்மதி இல்லை எனில் மனக்கஷ்டத்துக்கு நிச்சயம் உள்ளாக நேரிடும் இல்லையா! சரி இன்றைய பதிவுக்கு வருவோம்.  சென்ற சில நாட்களில் வாங்கிய இரண்டு பொருட்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

OVER THE DOOR ORGANIZER:



எங்கள் வீட்டில் ஆணி அடிக்கவோ, sticky hook ஒட்டவோ என்னவர் அனுமதிக்க மாட்டார். அவர் அனுமதி தந்தது ஒரே ஒரு காலண்டர் மாட்டவும், கடிகாரம் மாட்டிக் கொள்ளவும் மட்டுமே. Sticky hooks டைல்ஸில் ஒட்டினாலும் நிற்பதில்லை.

அப்போது தான் YouTube மூலம் இந்த ஆர்கனைசர் பற்றித் தெரிந்து கொண்டேன். ஆணி அடிக்காமல் கதவிலோ, ஜன்னல் கம்பிகளிலோ என்று எங்கு வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளலாம்.

கதவில் மாட்டினாலும் கதவை சாத்துவதில் இடைஞ்சல் இல்லை. ஆனால் உங்கள் கதவின் தடிமனைப் பொறுத்தது.

இந்த ஆர்கனைசரை Amazonல் ஆர்டர் செய்து வாங்கினோம். விலை 299 + டெலிவரி சார்ஜ் 75. Amazon Prime உறுப்பினராக இருந்தால் டெலிவரி சார்ஜ் இருக்காது. நல்ல உயர்தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக உபயோகமான பொருள் தான்.

எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று சில படங்களைத் தந்துள்ளேன். பாருங்க. உங்களுக்கும் இது போல் ஆர்கனைசர் பற்றித் தெரிந்தால் சொல்லுங்களேன்!

Space saving corner shelf!!!



நம்ம வீடு தானே!! முடியும் போது செய்துக்கலாம் என்று இருந்த எங்கள் Open shelf kitchen-ஐ சில மாதங்களுக்கு முன்பு தான் Make over செய்து மாற்றினோம். முழுவதும் Modular என்று சொல்ல முடியாது.

அப்போது கிச்சனுக்குத் தேவையான சிலவற்றை வாங்கிக் கொண்டேன். அதில் ஒன்று தான் இந்த கார்னர் ஷெல்ஃப். Amazonல் கார்னர் ஷெல்ஃப் கிடைக்கிறது என்றாலும் நான் வாங்கியது திருச்சியின் மாபெரும் பாத்திரக்கடலான மங்கள் & மங்களில்!!

தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டுள்ள இந்த கார்னர் ஷெல்ஃபை உங்கள் சமையல் மேடையின் மீதோ அல்லது சுவரிலோ பொருத்திக்கலாம். நம்ம வீட்டு ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் (!) சுவற்றில் மாட்ட ஒத்துக்க மாட்டார் என்பதால் நான் சமையல் மேடையின் மூலையில் வைத்திருக்கிறேன். இதை சுத்தம் செய்வதும் எளிது.

என்னுடைய சமைலறை முடிந்த அளவு "பிளாஸ்டிக் இல்லா சமையலறை" என்பதால் உப்பு, புளி, ஊறுகாய், எண்ணெய் என்று எல்லாம் பீங்கான் ஜாடிகளில். அது அருகே இருந்தால் தானே எடுக்க வசதியாக இருக்கும். அதனால் நான் ஜாடிகள் மற்றும் அஞ்சறைப்பெட்டியை இதில் வைத்து உபயோகித்து வருகிறேன்.

உங்கள் விருப்பம் போல் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். நல்ல எடை தாங்குகிறது.

Amazonல் இதன் விலை 800+. மங்கள் & மங்களில் நான் 700+ க்கு வாங்கினேன். கொஞ்சம் செலவு பண்ணினா தப்பில்ல, தப்பில்ல, என்று இதை வாங்கும் போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

என்ன நண்பர்களே, இன்றைக்கு பகிர்ந்து கொண்ட பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.   பொய்யை அல்லது பொய்களை நினைவு வைத்துக்கொள்ளுதல் சிரமம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இந்தக் கிச்சன் பொருட்கள் அமேசான் வரை போகவேண்டாம்.  பெரும்பாலும் எல்லாப் பாத்திரக்கடைகளிலும் கிடைக்கிறது.   இன்னும் எளிமையான உபயோகப்பொருட்கள் கூடக் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தில் இருக்கும் பாத்திரக் கடைகளில் கிடைப்பதில்லை ஸ்ரீராம். அதனால் தான் அமேசானில் தேடுவது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இவற்றை முகநூலிலும் பார்த்தேன். ரசித்தேன். இங்கேயும் பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் இங்கேயும் ரசித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்த பகிர்வை முகநூலில் பார்த்தேன்.
    அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் இங்கேயும் ரசித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நன்றி எனக்குத் தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கும் பயன்படும் என அறிந்து மகிழ்ச்சி ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. உங்களுக்குத் தேவை எனும் பக்ஷத்தில் வாங்கி உபயோகிக்கலாம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எனக்கு தெரிந்து வெற்றிகரமான பொய்யர்கள் இருவர் உண்டு. ஒருவர் டிரம்ப் அங்கிள் மற்றவர் மோதி அங்கிள். இருவரும் வெற்றிகரமானவர்கள். தங்கள் கூறுவது உண்மை என்று நம்புபவர்கள், நம்பவைப்பவர்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. Very useful items. One time investment. I wanted to buy these items. Long pending. Thanks for sharing.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  9. பொய் சொல்பவர்கள் அவற்றை நினைவில் வைத்திருக்கமாட்டார்கள் என்பது உண்மைதான். நீங்கள் வாங்கியுள்ள பொருட்கள் வாங்க தூண்டுகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கத் தூண்டியது இப்பதிவு - ஹாஹா... உங்களுக்குத் தேவை எனும் பட்சத்தில் வாங்கலாமே வே. நடனசபாபதி ஐயா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யாழ்பாவண்ணன்.

      நீக்கு
  11. இரண்டு பொருட்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....