நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
கடந்த
காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள்
சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும் – அப்துல் கலாம்.
மார்கழி மாதம் முதல் பத்து நாள் கழிந்து பதினொன்றாம் நாளான
இன்று, கடந்த பத்து நாட்களாக எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டு வாசலில் இருக்கும்
சிறு இடத்தில், தினம் தினம் போட்ட கோலங்களைத் தொகுத்து இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சி. கோலம் போட்ட உடனேயே முகநூலில் பகிர்ந்து கொண்டாலும், இங்கேயும்
ஒரு சேமிப்பாகவும், முகநூலில் தொடராத நண்பர்களுக்காகவும், இங்கேயும் தொகுப்பாக பகிர்ந்து
கொள்கிறேன். இருக்கும் சின்ன இடத்தில் தினம்
தினம் இப்படிக் கோலங்கள் போட்டு வருவதும் மகிழ்ச்சியான விஷயம் தானே.
என்ன நண்பர்களே, இந்த நாளின் கோலங்கள் பதிவு உங்களுக்குப்
பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
அருமையான வாசகம். அழகான கோலங்கள்.
பதிலளிநீக்குவாசகமும் கோலங்களும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநீங்கள் போட்ட கோலங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. எது மிகவும் சிறப்பென்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையுமே மிக சிறப்பாக இருக்கிறது. கோலங்கள் போடுவது எனக்கும் மிகப் பிடித்தமான செயல். ஆகவே அனைத்தையும் ஒவ்வொன்றாக பெரிதாக்கி ரசித்தேன். அழகான கோலங்களை எங்களுக்கு பார்வையாக்கி தந்த தங்களுக்கு அன்பான பாராட்டுகளும், வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்து கோலங்களும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மார்கழி என்றாலே நினைவிற்கு வருவது கோலங்கள்தான். அழகான கோலங்கள்.
பதிலளிநீக்குமார்கழியும் கோலங்களும் பிரிக்க முடியாதவை தான் இராமசாமி ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் மிக அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅழகான கோலங்கள் சகோ.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஅனைத்தும் அழகு....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!
நீக்குஅப்துல் கலாம் வாசகமும்,
பதிலளிநீக்குஉங்கள் கோலங்களும் மிக அற்புதம் ஆதி. மிகக் கச்சிதமாகக்
கலக்கப் பட்ட வண்ணங்கள் .
கோடுகளை மீறாத வண்ணப் பொடிகள். உங்கள் பொறுமையையும் தன்னடக்கத்தையும் காண்பிக்கிறது.
அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.
முக நூல் பக்கம் அவ்வளவு செல்வதில்லை.
அதனால நீங்கள் இங்கே பதிந்தது நலம்.
கோலங்களில் கலக்கப்பட்ட வண்ணங்கள் கச்சிதமாக இருப்பது குறித்து நீங்கள் சொன்னதில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குமுகநூல் பக்கம் நான் கூட அதிகம் செல்வதில்லை - சில மாதங்களாக இணையம் பக்கம் வருவதே குறைந்திருக்கிறது எனக்கு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மார்கழி மாதம் வீட்டு அட்மினை 4.30 மணிக்கு எழச் செய்து விடுகின்றது. அவர் தினமும் போடுகின்ற கோலம் சந்துக்கே பிரசித்திபெற்றது. சில தினங்களுக்கு கோலங்கள் இணையத்தில் இருக்கின்றதா? என்று என்னை தேடச் சொன்னார். நான் காட்டியது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் மகள் தான் எடுத்துக் கொடுத்தார். அவருக்கு நிச்சயம் இந்தக் கோலங்கள் பிடிக்கும். உங்களின் இந்தப் பதிவை எங்கள் குடும்பமே இன்று இரவு பார்க்கும். படிக்கும். முதல் முறையாக.
பதிலளிநீக்குhttps://tinyurl.com/vvbt4rh நண்பர் உதயன் அவர்கள் கோலத்திற்காகத் தனித் தளமே வைத்துள்ளார்.
நீக்குமார்கழி மாதங்களில் விரைவாக எழுந்து கோலங்கள் போடுவது நல்ல விஷயம். வீட்டு அட்மின் - :) வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அன்று இரவு பதிவினை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். மகிழ்ச்சி ஜோதிஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கோலங்களுக்கென்று ஒரு தனி தளம் - தகவலுக்கு மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குமார்கழி கோலங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குமுகநூலில் பார்த்தாலும் இங்கும் பார்த்தேன் சேர்ந்தார் போல்.
கோலங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Kolam outside the doorstep looks beautiful and welcoming.
பதிலளிநீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.
நீக்குவிட்டு வாசலில் கோலம் என்றுமே அழகுதான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும் –அப்துல் கலாம்.
பதிலளிநீக்குதற்போதைய அரசியல் சார்பு தோன்றுகிறது.
கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லை: காந்தி நேரு படும் பாடு???
எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இன்மை.. :நாளை நமது குடியுரிமை பறிக்கப்படுமோ?? முள் வேலி முகாம்களில் அடைக்கப் படுவோமோ???
நமக்குள் சண்டை : ஆம் தற்போது மத சாதி வேறுபாடுகள் பெரிதாக்கி சண்டை இட்டுக்கொள்கிறார்கள்.!!!
தோல்வி அதிருப்தி தவிர வேறு என்ன கிடைக்கும். ஆம் வேலையின்மை, பொருளாதார சரிவு இவைதான் தற்போது நிலவுகின்றன.
பதிவுலகில் அரசியல் பேசினால் பொல்லாப்பு தான். மீ எஸ்கேப். மன்னியுங்கள்.
Jayakumar
பதிவுலகில் அரசியல் பேசினால் பொல்லாப்பு - :))) உண்மை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
பள்ளியில் படிக்கும் பொது எல்லோருக்கும் ரெக்கார்ட் நோட்டில் நீங்கள் தான் படம் வரைந்து கொடுத்தீர்களா? குறிப்பாக பயோலொஜி ரெக்கார்ட் நோட்டுகள். கோலங்கள் அதனை நினைவு படுத்துகின்றன.
பதிலளிநீக்குஹாஹா... நல்ல கேள்வி - படங்கள் அவருக்காக வரைந்து இருக்கலாம் ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கோலங்களை முகநூலிலும் பார்த்து ரசித்தேன். இங்கேயும்.
பதிலளிநீக்குமுகநூலிலும் இங்கேயும் கோலங்களைப் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வண்ணக் கோலங்களில் தங்களின் கைவண்ணம் தெரிகிறது. பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபத்தும் முத்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவண்ணக் கோலங்கள் மகிழ்ச்சிதருகின்றது.
பதிலளிநீக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு