அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
இதுவரை
வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது, இனி வாழப்போகும் வாழ்வை அறியவும் முடியாது. நாம் கற்றுக்கொண்ட
பாடங்கள் தான் வாழ்வைக் கடக்க உதவும்.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில்
கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் ஆர்த்தி ரவி அவர்கள் எழுதிய “விலகிடுவேனா இதயமே” எனும் மின்னூல்.
மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!
வகை: நாவல்
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: 338
விலை: ரூபாய் 407/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
*******
நாயகன் இந்தியாவில் இருக்க, நாயகி எதோ
காரணத்தினால் விட்டு விலகி தான் வளர்ந்த அமெரிக்காவிற்கே .சென்று விடுகிறார். என்ன காரணமாக இருந்தாலும், தன்னிடம் பேசாமல் மேல்
படிப்பு படிக்க வேண்டும் என்ற காரணத்தினைச் சொல்லி விட்டு விலகி இருக்கிறாள். அதற்கான காரணம் என்ன? சில மாதங்கள் தொடர்பே இல்லாமல்
இருக்கிறாள் நாயகி. ஆனாலும் தனது நண்பன்
மூலம் அவளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருக்கிறான் நாயகன். இருவரும் பேசிக் கொள்ளாமல்
இருக்கிறார்கள். நாயகனின் வீட்டிலும்
அவளை எதுவும் கேட்காமல் இருக்கிறார்கள்.
பிறகு நாயகன் அமெரிக்கா சென்று சேருகிறான். அதன் பின்னர் என்ன நடந்தது, என்ன கோபம்
நாயகிக்கு என பல விஷயங்களை கதை மூலம்
சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். நடுநடுவே அமெரிக்கா
குறித்தும் அங்கே இருக்கும் சூழல் குறித்தும் நமக்குச் சொல்லி வருகிறார். இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளில் பயணிக்கும் கதை. இயற்கை மருத்துவம், நட்பு, குடும்பம், காதல், ஈர்ப்பு, சந்தேகம், விவசாயம் என பல தளங்களில் கதை பயணிக்கிறது. அத்தனையும் ஒரே கதையில் சொல்லி விட முயன்றிருக்கிறார்
ஆசிரியர். கூடவே அமெரிக்காவின்
நாகரீகத்திற்கும் இந்தியாவின் நாகரீகத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் இந்த நூல் சொல்கிறது.
பல விஷயங்களை கதையில் ஒரே கதையில் சொல்லியிருக்கிறார் என்பதால் சின்னதாய்
ஒரு அலுப்பு தட்டுகிறதோ என எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவரை அவரது இந்த
முயற்சிக்காகவே, பல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற அவரது
எண்ணத்திற்காகவே வாழ்த்தவும் தோன்றியது. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். வாசிக்கப்
போகும் உங்களுக்கு பாராட்டுகள்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர்
சுப்ரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம்
செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்:
மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
நல்லதொரு பகிர்வு. பாலகுமாரன் மெர்க்குரிப்பூக்கள் மற்றும் குறிப்பாக இரும்புக் குதிரைகள் கதையில் பல விஷயங்கள் குறித்து கதையோடு கூடவே சொல்லிக் கொண்டே வருவார். அவர் பாணி கூட அதுதான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.
நீக்குவிமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி வாழ்த்துவோம் நூலாசிரியரை...
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குநல்லதொரு அறிமுகம் என்பதோடு கதையும் அதாவது கதையின் முக்கியமான விஷயங்கள் என்னவாக இருக்கும் எதற்காக நாயகி அப்படிச் செல்கிறாள் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. குறித்து வைத்துக்கொண்டுவிட்டேன், ஜி
பதிலளிநீக்குகீதா
நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநல்லதொரு நூலரிமுகம் சார்.
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு நன்றி அரவிந்த்.
நீக்குவெகு நாள் முன்பு இவரை வாசித்த நியாபகம் ....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனு ப்ரேம் ஜி.
நீக்குநல்லதோர் அறிமுகம்.
பதிலளிநீக்குநூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு