மனது சஞ்சலப் படும் வேளைகளில்
ஏதாவது இனிமையான இசை கேட்பது வழக்கம். அப்படி ஒரு நாள் கேட்ட பாடல் இந்த “நான் ஒரு
விளையாட்டு பொம்மையா பாடல்” – பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் இது. கீர்த்தனா
வைத்யநாதன் அவர்களின் குரலில் மிக இனிமையாக ஒரு பாடல். கேட்டுப் பாருங்களேன். பின்னணியில் அருவி பாய்ந்து கொண்டிருக்கும்
இயற்கைக் காட்சியுடன் மிக அழகாக வந்திருக்கிறது இந்தக் காணொளி. கேட்டு ரசிக்கலாமே!
பாரதியார் பாடல்கள் என்றுமே
உற்சாகம் தருபவை. பல கர்னாடக இசைக் கலைஞர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடிக்
கேட்டிருக்கலாம். இந்தப் பாடல் கீர்த்தனா மற்றும் பிரசன்னா அவர்கள் இணைந்து பாடிய
பாடல் – கேட்டுப் பாருங்களேன். பாரம்பரிய கர்னாடக இசை ரசிகர்கள் இப்படிப் பாடுவதை
விரும்பாமல் போகலாம். இசை மட்டுமே ரசிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பாடலையும்
ரசிப்பார்கள் என்று தோன்றுகிறது! நான் ரசித்த பாடல் இதோ உங்களுக்காக….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி



