வெள்ளி, 7 டிசம்பர், 2018

நான் ஒரு விளையாட்டு பொம்மையா…



மனது சஞ்சலப் படும் வேளைகளில் ஏதாவது இனிமையான இசை கேட்பது வழக்கம். அப்படி ஒரு நாள் கேட்ட பாடல் இந்த “நான் ஒரு விளையாட்டு பொம்மையா பாடல்” – பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் இது. கீர்த்தனா வைத்யநாதன் அவர்களின் குரலில் மிக இனிமையாக ஒரு பாடல். கேட்டுப் பாருங்களேன்.  பின்னணியில் அருவி பாய்ந்து கொண்டிருக்கும் இயற்கைக் காட்சியுடன் மிக அழகாக வந்திருக்கிறது இந்தக் காணொளி. கேட்டு ரசிக்கலாமே!



பாரதியார் பாடல்கள் என்றுமே உற்சாகம் தருபவை. பல கர்னாடக இசைக் கலைஞர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடிக் கேட்டிருக்கலாம். இந்தப் பாடல் கீர்த்தனா மற்றும் பிரசன்னா அவர்கள் இணைந்து பாடிய பாடல் – கேட்டுப் பாருங்களேன். பாரம்பரிய கர்னாடக இசை ரசிகர்கள் இப்படிப் பாடுவதை விரும்பாமல் போகலாம். இசை மட்டுமே ரசிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பாடலையும் ரசிப்பார்கள் என்று தோன்றுகிறது! நான் ரசித்த பாடல் இதோ உங்களுக்காக….



வேறு சில பாடல்களுடன் விரைவில் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். நானொருவிளையாட்டு பொம்மையா எனக்கு மிகவும் பிடித்தது டிகேபி குரலில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் எனக்கும் பிடித்திருக்கிறது. நானும் இதுபோன்ற பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சினிமாப்புகழ் கார்த்திக் இதே போல பாடி கச்சேரியே செய்திருக்கிறார்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வழக்கம்போல காணொளி பார்க்காமல் குரல் மட்டும் ரசிப்பது(ம்) பேரானந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரல் மட்டும் ரசிப்பது.... ;)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காற்று வெளியிடைக் கண்ணம்மா புதிய அனுபவம். ரெஹ்மான் போல இசையால் இரைச்சலாக / அலறலாக பாடலைச் சிதறடிக்காமல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை எனும் பெயரில் இரைச்சல்.... பெரும்பாலும் அப்படித்தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இரண்டுமே கேட்டிருக்கேன். இப்போதெல்லாம் இம்மாதிரியான முறையிலேயே கர்நாடக சங்கீதப் பாடல்கள் பலவும் யூ ட்யூபில் வருகின்றன. காதால் கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. டிசம்பர் இசைவிழா ஆரம்பித்து விட்டதே!
    பாடல்கள் கேட்டேன்.

    இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. இரண்டையும் கேட்டு ரசித்தேன் ஜி
    இடையில் வரும் "காச் மூச்" இது பாடலை கெடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் வரும் காச் மூச் - கொடுமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. முதல் பாட்டு செமயா இருக்குண்ணே.

    ரெண்டாவது பாட்டை விஷுவலா காட்டி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ?! பாடுறவங்க முகபாவம் பாடலை ரசிக்க வைக்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. எனக்கு இரண்டு பாடல்களும் பாடின விதம் பிடிக்கலை. சாம்பார் சாதம், தொட்டுக்க பர்கர், அப்புறம் நூடுல்ஸ்னு இருக்கற மாதிரி இருக்கு.

    இரண்டாவது பாடல் ஒருவேளை மகளுக்குப் பிடிக்கலாம். பாடல் என்பது வரிகளுக்கு உணர்வு தரணும். அது மிஸ்ஸிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. கர்நாடக இசையை மேற்கத்திய இசையில் சேர்த்து பாடுவதுஃபாஷன் ஆகி வருகிறது நானுமொரு பாடலைப் பதிவாக்கி இருக்கிறேன் ஃப்யூஷன் இசையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. அருமையான பாடல்...இவர் பாடியிருப்பதும் நன்றாக இருக்கிறது ஜி...நான் முதன் முதலில் இதைப் பாடிக்க் கேட்டது டிகேஜெ மற்றும் டிகேபி. தனிதனியயகவும் இருவரும் சேர்ந்தும் பாடியது அப்புறம் டிகேஜெ ஆல்பம் ஒலி நாடா...என் மாமா வாங்கியிருந்தார் அதில் கேட்டுக் கற்றுக் கொண்டேன்.

    ஃப்யூஷனும் நன்றாக இருக்கிறது...ஆனால் ரொம்ப ட்ரெடிஷனல் கேட்க விரும்புபவர்களுக்குப் பிடிக்காதுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல்....கார்த்திக் திரைப்பட பின்னணிப் பாடகர் இப்படி நிறைய செய்திருக்கிறார். அதற்கு முன் நம் ஹரிஹரன் கொலோனியல் கஸின்ஸ் செய்திருந்தார் அதுவும் மிக நன்றாக இருக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. கீர்த்தனா வைத்தியநாதன் நன்றாகப் பாடியிருக்கிறார்.

    இப்படி சமீபத்தில் சிங்கார வேலனே ஒரு பெண் பாட மற்றொரு பெண் வயலின் வாசிக்க அப்புறம் ஒருவர் தவில் வாசிக்க பாடிய காணொளி பார்த்தேன் நன்றாகவே இருந்தது. கடினமான பாடல் கூட நன்றாகப் பாடியிருந்தார்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....