செவ்வாய், 25 டிசம்பர், 2018

காஃபி வித் கிட்டு – சிவ சம்போ – கதவைத் திறந்த போது – மூக்குப்பொடி - கோலங்கள்



காஃபி வித் கிட்டு – பகுதி – 15

கதவைத் திறந்த போது:

சென்ற சனிக்கிழமை காலை எட்டரை மணி. நல்ல குளிர் – 3 டிகிரி என்கிறது அலைபேசியில் இருக்கும் Accuweather App. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனதே இல்லை – குளிர்காலத்தில் இந்த ரஜாய்/கம்பளிக்குள் நுழைந்துவிட்டால் வெளியே வர மனதிருப்பதில்லை. அப்படியே உள்ளேயே இருந்துவிடலாம் என்று தோன்றும். அப்படி இருந்தபோது, வாசலிலிருந்து அழைப்பு மணி ஓசை. குப்பை எடுக்க வரும் நபர் கூட பதினோரு மணிக்கு தானே வருவார் [என் வீட்டுக்கு வேறு யாரும் வருவதில்லை! ஹாஹா], யாராக இருக்கும் என நினைத்தபடியே கம்பளியிலிருந்து வெளியேறினேன். கதவைத் திறந்து பார்த்தால் ஒரு உருவம் – தலையில் தொப்பி. வாய், மூக்கு ஆகியவற்றை மூடியபடி கண்களை மட்டுமே திறந்து வைத்திருக்கும் ஒரு உருவம்.

தலை முதல் கால் வரை நல்ல பேக்கிங்! வெளியே குளிர் அப்படி – அவர் என்ன செய்வார் பாவம். கதவைத் திறந்தபோது மூடியிருந்த வாய் வழியே ஒரு குரல் – Fresh to Home, Fresh to home! என்பதை மட்டுமே சொல்கிறார் – குரலை விட அதிகம் புகை தான் வந்தது. இந்தக் குளிரில் நாம் விடும் மூச்சுக்காற்றுக் கூட புகைரூபத்தில் தெரியும்! நான் எதற்கும் சொல்லவில்லையே, என்ற குழப்பத்துடன் கேட்க, இது 1-ஆம் நம்பர் ப்ளாக் தானே, 3-ஆம் நம்பர் வீடு தானே, என்று ஒவ்வொன்றாய் கேட்க, அனைத்திற்கும் ஆமாம் என்பதே என் பதிலாக இருந்தது. அப்ப நீங்கள் தானே ஆர்டர் கொடுத்தீர்கள் எனக் கேட்க, இல்லையேப்பா, பெயர் என்ன போட்டிருக்கு என்று கேட்க வேறு பேர் சொன்னார். ப்ளாக், வீடு ஆகியவற்றைச் சரியாகக் கண்டுபிடித்தவர் செக்டர் மாற்றி வந்திருக்கிறார் பாவம்.

அலைபேசி எண் இருந்தால் கேட்டு, சரியான விலாசத்திற்குச் செல்லுங்கள் எனச் சொல்லி அனுப்பினேன். அமேசான், பிக் பாஸ்கெட், ஃப்ளிப் கார்ட் போல வீட்டிற்கு ஏதோ அனுப்பும் தளம் போல இந்த ஃப்ரெஷ் டு ஹோம் தளம் – நிலத்திலிருந்து ஃப்ரெஷ்-ஆக எடுக்கப்பட்ட காய்கறிகளை வீடுகளுக்கு நேரடியாக அனுப்புவார்கள் போலும், என்ன என்ன கிடைக்கும் எனப் பார்க்கலாம் என அத்தளத்தில் நுழைந்தேன்! நல்ல வேளை அந்த மனிதரிடம் இருந்த கவரை வாங்கிக் கொள்ளவில்லை! அந்தத் தளம் வழியே மீன் மற்றும் இறைச்சியை வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்களாம்! உங்கள் அலைபேசியில் எங்கள் App தரவிறக்கம் செய்து கொள்ளுங்களேன் என்று வேறு கேட்டது அத்தளத்திலிருந்து வந்த ஒரு Pop up!

மூன்று முகம் – முகநூலில் இருந்து:


நம் ஒவ்வொருவருக்கும் மூன்று முகங்கள் இருக்கு...

1. வெளி உலகிற்கு நாம் காட்டும் முதல் முகம்....

2. நமது நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு காட்டும் இரண்டாவது முகம்....

3. எந்த சூழலிலும் எவருக்குமே காட்டாத மூன்றாவது முகம் ஒன்று உள்ளது... அது.... மறை_முகம்

அதுவே நமது உண்மையான முகம்...

ரசித்த பாடல்:

திரு குல்தீப் எம். பய் அவர்களின் வழிகாட்டுதலில் பாடும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அறிந்திருக்கவில்லை என்றால் இப்போதும் காலம் தாழ்தாமல் அறிந்து கொள்வது சிறப்பு. எத்தனை எத்தனை பாடல்களை இனிமையாகத் தருகிறார்கள் அந்தச் சிறுவர்களும், சிறுமிகளும். மிகச் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பாடலை இந்த வாரத்தின் ரசித்த பாடலாகக் கேட்கலாம் வாருங்கள். இந்தப் பாடலில் இருக்கும் சிறுமி நிரஞ்சனா முதல் முறையாக இப்படிக் காணொளிகளில் பாடுகிறாராம். ஆஹா அந்தக் குழந்தையின் சிரிப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு. பாருங்களேன்.



படித்ததில் பிடித்தது – ஒரு கவிதை:



பெற்றோர் வைத்த பெயரும்
“பிணம்” என்று மாறுது…
விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என்று ஆகுது
பாடுபட்டு சேர்த்த சொத்தும்
வாரிசு இடம் சேருது
கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா சாகுது?
ஓடி, ஓடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு கிடக்குது!
உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்
ஊமையாக நிற்குது!
சொந்தம் என்று சொன்னதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை!
நீ வந்த இந்த உலகில்
அவன் தந்த உடம்பில்
சொந்தம் என்பது ஏதுடா
தங்கி செல்லும் வழிப்போக்கனே!

ஹிந்தி வார்த்தை - மூக்குப்பொடி:

சில பதிவுகளுக்கு முன்னர் கழுத்தைச் சீவுவது பற்றி எழுதி இருந்தேன். அதே சகோதரி, திடீரென ஒரு நாள் வந்து என்னிடம் “சார் மூக்குப்பொடிக்கு, ஹிந்தியில என்ன பேர் சார்?” என்று கேட்டார் – நான் ஹிந்தியில் ஏதோ பெரிய அப்பாடக்கர் என அவருக்கு நினைவு. நம் ஊரில் கிடைக்கும் பல பொருட்களின் பெயர்கள் ஹிந்தியில் தெரிந்து கொள்ள முடிவதில்லை – குறிப்பாக அந்தப் பொருள் நமக்கு அவசியம் இல்லை என்றால். மூக்குப்பொடி போடும் வழக்கம் எனக்கோ நண்பர்களுக்கோ இருந்ததில்லை என்பதால் நானும் அதன் ஹிந்தி வார்த்தையைக் கற்றுக் கொள்ளவில்லை. எதுக்கு கேட்கிறார் எனக் கேட்டபோது அலுவலகத்தில் ஏதோ பேச்சு வந்த போது மூக்குப்பொடி பற்றிய பேச்சு வந்ததாம் – இவருக்கு ஹிந்தி வார்த்தை தெரியாததால் – நாக் பௌடர் என்று சொன்னேன் என்று சொன்னார்! ஹிந்தியில் நாக் என்றால் மூக்கு! அது சரி ஹிந்தியில் மூக்குப்பொடிக்கு என்ன பெயர்? நாஸ், நஸ்வார் அல்லது சூங்கணி!

பதிவுலகில் இதே நாளில்:



இதே நாளில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்து கொண்ட பதிவு – திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தலைநகர் தில்லி கோவிலில் எங்கள் பகுதி பெண்கள் போட்ட கோலங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எத்தனை உழைப்பு. இப்போது தினம் தினம் போட வேண்டாம் என பெயிண்ட்-ஆல் வரைந்து விட்டார்கள் கோவில் நிர்வாகத்தினர். அது ஒரு விதத்தில் இழப்பு தான்! பாருங்களேன் அப்போது பகிர்ந்து கொண்ட கோலங்களை! இதில் கருத்துரைத்த பலர் இப்போது பதிவுலகம் பக்கமே வருவதில்லை என்பதும் சோகம்.



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

62 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    காஃபியோடு வந்தாச்சு கிட்டுவோடு சம்சாரிக்கான்!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      ஆஹா... இங்கேயும் காஃபி ஆச்சு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். "போர்வையிலிருந்து வெளியேறினேன்" என்கிற வரி எந்த அளவு போர்வைக்குள் பொதிந்திருந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. டெல்லி குளிர் டிகிரி அப்ற்றி நேற்றைய செய்தித்தாளில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் குளிர் கொஞ்சம் அதிகம் தான் - பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு குளிர் அதிகமாக இருக்கிறது. நேற்று காலை இரண்டு டிகிரி. பகல் நேரங்களில் 18-20 என இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. முகம் பற்றிய கருத்து சரிதான். தன் உண்மையான முகமே தெரியாதவர்கள்கூட உண்டு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை முகம் எது என்பதில் முகத்துக்கு உரியவருக்கே குழப்பம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நிலத்திலிருந்து ஃப்ரெஷ்-ஆக எடுக்கப்பட்ட காய்கறிகளை வீடுகளுக்கு நேரடியாக அனுப்புவார்கள் போலும், //

    வெங்கட்ஜி முன்பு எல்லாம் இடைத்தரகர்கள் விவசாயிகளின் பொருளாதாரத்தை அடிமட்டமாக்கியவர்கள் என்றால் இப்போது ஆன்லைன் இடைத்தரகர்கள் இன்னும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. விவசாயிகள் நேரடியாக ஆன்லைன் வர்த்தகம் புரிந்தால் அவர்களுக்கு அந்த கணினி அறிவு இருந்தால் இது நல்ல விஷயம்...ஆனால் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை...இதுவரை அப்படி ஒரு கட்டுரையையோ செய்தியோ என் கண்ணில் படவில்லை. ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்தி போட்டால் தெரியவரலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன் வர்த்தகம் - வெகு சிலரே இப்படி நேரடியாக வர்த்தகம் செய்கிறார்கள். இங்கேயும் இடைத்தரகர்கள் தான் காசு பண்ணுகிறார்கள் என்பது சோகம். உழைப்பாளி கடைசி வரை உழைத்துக் கொண்டே இருக்க, உட்கார்ந்த இடத்தில் சம்பாதிப்பவர்கள் தான் இங்கே அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. கீதா ரங்கன்/வெங்கட் - இதுல என் எண்ணம் வேற. ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டணும், பல்வேறு பொருட்கள் இருக்கணும், அப்போதான் 'வியாபாரம்' என்பதைச் செய்யமுடியும். விவசாயி, கோதுமையோ இல்லை நெல்லோ இல்லை ஏதாவது ஓரிரண்டுதான் விளைவிப்பார். அவர் மகன் படித்திருந்தாலும், அந்தப் பொருட்களை வாங்கும் வியாபாரி(களை)தான் தேடணும். இப்போ, காய்கறி விளைவிக்கறவர்கிட்டயே, நாம் நேரடியாப் போனாலும், குறைஞ்ச காசுக்குக் கொடுப்பார்னுதான் போறோம். அவர், அவருடைய வேலையான விவசாயத்தை விட்டுவிட்டு நமக்காகக் காத்திருக்கமுடியாது.

      நாம ஃபலூடா 150-200 ரூபாய் கொடுத்துச் சாப்பிட்டிருப்போம். அதுல பால், சேமியா தவிர மற்றதை ஒவ்வொரு இடங்களிலிருந்தும் வாங்கி (டூட்டி ஃப்ரூட்டி, பாதாம், தேன், முந்திரி, கிஸ்மிஸ், ரோஸ் எசென்ஸ், ஜெல்லி, ஐஸ்க்ரீம் என்று) இவன் ஜஸ்ட் கலக்கிக் கொடுத்து நம்மகிட்ட 150 ரூ வாங்கறான். போட்ட பொருட்களோட மொத்த விலை 30-40ஐத் தாண்டாது.

      மதிப்பு கூட்டாததனாலும், (அதாவது வெறும் மாங்காயை விற்பதைவிட, மாங்காய், மாம்பழம், மாங்காய் ஊறுகாய், ஜாம், வற்றல் என்று மதிப்பு கூட்டுவது), பல்வேறு பொருட்களை ஒன்றாக விற்காததாலும்தான் விவசாயியினால் நேரடி லாபம் பெறமுடியலை. வெளிநாட்டுல, உருளை பயிரிடறவன், மொத்தமா ஹெக்டேர் கணக்குல பயிரிட்டு லேஸ் போன்ற மொத்த கொள்முதல் நிலையங்களுக்கு ஒரேயடியா விற்றுவிடுகிறான், அவனுக்கு நிரந்தர வருவாய். நம்ம ஊர்ல அதனாலதான் குறு விவசாயிகள் கஷ்டப்படறாங்க.

      நீக்கு
    3. சென்னைல (அதாவது திருத்தணி போன்ற இடம்னு நினைக்கறேன்), பங்கனப் பள்ளி மாம்பழம் நேரடியாக விற்க ஒரு விவசாயி முயற்சிக்கிறார். நமக்கு எவ்வளவு கிலோ வேணும்னு சொன்னா டெலிவர் பண்ணிடுவார். மருந்து கலக்காத பழங்கள். இதுமாதிரி முயற்சி பலர் செய்ய ஆரம்பிக்கும்போது (வாட்சப் போன்ற மீடியாவை உபயோகப்படுத்தி), அதிலும் உபயோகிக்கும் பொருளை-எண்ணெய் வகைகள், வெல்லம், வடகம் போன்று... வெறும்ன 'அரிசி வாங்கலையோ அரிசி'ன்னு கூவினால் உபயோகிப்பாளர்கள் வாங்கமாட்டாங்க, விற்றால் நேரடியாக விவசாயி லாபம் சம்பாதிப்பார். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.... இங்கு இடம் இல்லை.

      நீக்கு
    4. நேரடி வியாபாரம் பற்றிய தகவல்களுக்கும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. //'அரிசி வாங்கலையோ அரிசி'ன்னு கூவினால் உபயோகிப்பாளர்கள் வாங்கமாட்டாங்க, விற்றால் நேரடியாக விவசாயி லாபம் சம்பாதிப்பார். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.... இங்கு இடம் இல்லை.//

      நிறைய எழுதலாம்... எழுதி அனுப்புங்கள் ஜி. இங்கேயோ அல்லது எங்கள் பிளாக்கிலோ வெளியிடலாம்! நீங்க ரெடின்னா வெளியிட நாங்களும் ரெடி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. தில்லி குளிரையும், மணாலியின் குளிரும் அனுபவித்த நினைவுகள். இங்கு அப்படி ஒன்றும் குளிர் இல்லை ஜி...பங்களூர் வெதர் எல்லாம் மாறிவிட்டது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் நினைவுகள் இனிமை.... எவ்வளவு குளிராக இருந்தாலும் சமாளித்துவிடலாம் - ஆனால் கோடை தான் கொடியது. என்னைப் பொறுத்த வரையில் தில்லியின் குளிர்காலம் சுகமானது! எல்லா இடங்களிலும் வெதர் மாற்றம் நிறையவே வந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. நல்லவேளை, காணொளியைபின்னர் பார்க்கலாம் / கேட்கலாம் என்று ஒத்திப்போடாமல் கேட்டேன். என்ன ஒருஇனிமையான பாடல்? என்ன ராகம் அது கீதா ரெங்கன்? இரண்டு குழந்தைகளும் தூள் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் செமையா பாடுறாங்க...ராகம் மோகனம்!!! கேட்க இனிமையா இருக்கு...அதுவும் இக்காலை யில் ஆனால் கொஞ்சம் தான் கேட்டேன் அப்புறமா முழுவதும் கேட்கனும்...இப்ப முழுவதும் கேட்க முடியாது...ஹெட்செட்டும் இல்லையே!!

      கீதா

      நீக்கு
    2. ஹாஹா... அதற்குத் தான் காணொளிகளையும் பார்க்க/கேட்க வேண்டும். சில சமயங்களில் அருமையான விஷயங்களை காணொளியாப் பார்க்க முடிகிறது! :) இரண்டு குழந்தைகளுமே நன்கு பாடுகிறார்கள். அதிலும் சின்னப்பெண் சிரிப்பு ரொம்பவே ஈர்ப்பு. நான்கு ஐந்து நாட்களில் பல முறை கேட்டு விட்டேன் இப்பாடலை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. எனக்கும் இந்த ராகம் என்றெல்லாம் தெரியாது! :) கேட்க இனிமையாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். முழுதாகக் கேட்டு ரசியுங்கள் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. படித்தவுடனேயே எனக்கும் பிடித்தது - உண்மையான கூற்று தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. திரு குல்தீப் எம். பய் அவர்களின் வழிகாட்டுதலில் பாடும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.//

    மிக்க நன்றி ஜி கண்டிப்பாகக் கேட்கிறேன்...இதுவரை அறியாதது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுப் பாருங்கள் கீதாஜி. நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. ஆமாம் ஜி இரு குழந்தைகளுமே ஈர்க்கிறார்கள் அந்தச் சிரிப்பு கள்ளமில்லா சிரிப்பு

    அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  10. மூக்குப்பொடி விஷயம் சுவாரஸ்யம்.

    ப பி கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. பழைய பதிவு - அங்கு நான் என்ன கமெண்ட் போட்டிருக்கிறேன் என்றும் பார்த்து வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உங்கள் கருத்துரை அங்கே உண்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. கவிதை அருமையாக இருக்கு. உண்மையை அப்பட்டமாகச் சொல்லிச் செல்லும் கவிதை. குல்திப் பய் அவர்களின் வீடியோக்கள் நிறையப் பார்த்திருக்கேன். அதுவும் எங்க குட்டிக் குஞ்சுலுவுக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்கள் அதிலே தான் நிறைய இருக்கு! போட்டால் போதும். அசையாமல் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும். சில சமயங்களில் கைதட்டலும் டான்ஸ் ஆடுதலும் உண்டு. இப்போ அதுக்கு சிவோஹம் பாட்டின் மேல் மோகம். பெரிய உம்மாச்சி என்று சொல்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்டிக் குஞ்சுலுவும் பாடல்கள் கேட்டு ரசிப்பதில் மகிழ்ச்சி. பெரிய உம்மாச்சி! வாவ்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. மூக்குப்பொடி விஷயம் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது. பழைய பதிவிலும் போய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... மூக்குப் பொடியை நீங்களும் ரசித்தீர்களா.... மகிழ்ச்சி. பழைய பதிவிலும் உங்கள் கருத்துரை - மகிழ்ச்சியும் நன்றியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. //தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!// ஹையா, நான் "யங்" ஆயிட்டேனே! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! :)))))))

      நீக்கு
    3. ஹாஹா... என்னவொரு மகிழ்ச்சி உங்களுக்கு கீதாம்மா! :))))

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      இரண்டு தடவை கீதாம்மா! :)))) நீங்க கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்றதுக்குள்ள நான் எஸ்கேப்!

      நீக்கு
  14. கவிதை தத்துவம்!!! ரசித்தோம்!

    தங்கி செல்லும் வழிப்போக்கனே!///ஆமாம் இதுதானே யதார்த்தம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தைச் சொல்லும் கவிதை - ஆனாலும் பலருக்கு இந்த யதார்த்தம் புரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. நாக் பௌடர் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைக்கு அந்த சகோ சொன்னபோது நாங்கள் அனைவருமே சிரித்தோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. கோலங்கள் பார்க்கப்போகிறேன் ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள். பார்த்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். முன்னரே உங்கள் கருத்துரை இருக்கிறது என நினைவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. பாடலை கேட்டேன், மிக அருமை. குழந்தையின் சிரிப்பு அருமை.
    மூக்குபொடி, கவிதை, கோலம் ,மூன்று முகம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் ரசித்தீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  19. மூன்றாவது முகம் - உண்மைதானே.... சிவாஜி சொல்றா மாதிரி, 'என் மனசுல அடியாழத்துல எத்தனையோ இருக்கு'....

    இந்த மாதிரி காணொளிகளை நான் பெரும்பாலும் நம்புவதில்லை. பாடறவங்க யாரேனும் இருந்து வெறும்ன வாயசைக்கறாங்களோன்னு எப்போவும் சந்தேகம் வருது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம் - ஹாஹா.... இவர்களது காணொளி நிறைய இணையத்தில் இருக்கிறது. நன்றாகவே பாடுகிறார்கள். சிறுவர்களின் கச்சேரி சில நிகழ்ச்சிகளிலும் நடந்திருக்கிறது. சூர்யாகாயத்ரியின் நிகழ்ச்சி ஒன்று நேரடி ஒளிபரப்பாக ஒரு தொலைக்காட்சியில் வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  20. கோலங்களை பழைய பதிவில் சென்று பார்த்தேன். அருமை!!
    மூக்குப்பொடிக்கு ஹிந்தியில் என்ன என்று தெரிந்ததா?
    ஒரே ஒரு முகம் மட்டும் உள்ளவர்கள் மகான்கள். மூன்றாவது முகத்தை வெளியுலகிற்கு தெரியாமல் வைத்துக் கொள்பவர் கிரிமினல். மூன்றாவது முகம் இருப்பதே தெரியாதவர்கள் நம்மைப் போன்ற சாமான்யர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூக்குப் பொடிக்கு ஹிந்தியில் என்ன? பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் மா - நாஸ், நஸ்வார் அல்லது சூங்கணி என்பது தான் ஹிந்தி வார்த்தை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  22. குழந்தைகள் மிக நன்றாக பாடினார்கள். 'கனி காணும் நேரம்..." என்று விஷுக்கனி பாடல் ஒன்று இதே ராகத்தில் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.

      நீக்கு
  23. சிலருக்கு அவர்களே அறியாத முகமுமிருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  24. இன்றைய போஸ்ட் அனைத்தும் நன்றாக இருக்கு.. மூகுப்பொடி ஹிந்தி அழகு.. கவிதை அருமை.. குழந்தைகள் பாட்டு சூப்பர்... எனக்கொரு டவுட்.. இப்படி வாசம் முழுக்க சுட்டி வைத்தால் எப்படி வீட்டுக்குள் ஏறுவார்களோ?:)..

    அங்கு ஃபிரெஸ் மரக்கறி, பழங்களுக்கு bigbasket என ஒரு வெப்சைட் இருக்குது வெங்கட்.. அங்கு அரிசி முதல் தேங்காய் வரை அனைத்தும் ஹோம் டெலிவரி.. ட்ரை பண்ணிப் பாருங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசம் முழுக்க சுட்டி வைத்தால்.... புரியல 😖 நான் தமிழ்ல டி இல்லை 👎

      பிக் பாஸ்கெட் பயன்படுத்தி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    2. அச்சச்சோ அது ம் அல்ல ல், வாசல் முழுவதும் சுட்டி விளக்கேற்றியிருக்கிறார்களே.... எனச் சொன்னேன்:).....

      அப்போ உங்களுக்கு டமிலில் டி இல்லைத்தான்:)..

      நீக்கு
    3. ஹாஹா.... வாசலில் கொஞ்சம் வழி விட்டுதான் விளக்கு வைப்பார்கள்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  25. உங்கள் அனுபவம் ஸ்வாரஸ்யம் ஜி

    ஆமாம் மூன்று முகம்...சரிதான்...அட்ஜஸ்ட் செய்வதும் இதில் சேர்த்தியாகுமோ?

    தத்துவக் கவிதை அருமை. யதார்த்தம்.

    அனைத்தும் அருமை ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....