காஃபி வித் கிட்டு – பகுதி – 14
சாப்பிட வாங்க – லாய்: பீஹார் பயணத்தின் போது தெரிந்து கொண்ட இன்னுமொரு பீஹார் இனிப்பு லாய்
என்பது. மேலே வெள்ளை வெள்ளையாய் ராம்தானா [லாய்] ஒட்டி இருக்க, உள்ளே இருப்பது கோயா!
ராம் தானா என்பது கீரை விதைகள் – ராஜ்கிரா என்றும் அழைக்கப்படுவது. இந்த லாய்
பீஹார் மாநிலத்தின் கயாவில் அதிகம் கிடைக்கிறது. கயாவில் சுற்றி வரும்போது, மாலை
நேர உலாவில் இந்த லாய் சுவைத்தோம். நன்றாகவே இருந்தது. எப்படிச் செய்ய வேண்டும்
எனக் கேட்பவர்களுக்கு, இணையத்தில் ராம்தானா லட்டு எனத் தேடிப் பார்க்கலாம் என்பதே
பதில்!
வித்தியாசமான தடை: நவம்பர் 7-ஆம் தேதி பாரிஸ் – ஒரு வித்தியாசமான தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது – காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் பெண்கள் பேண்ட் அணிந்து
கொள்ளக் கூடாது எனும் தடை உத்தரவு தான் அது! இது என்ன கொடுமை! இப்படி கூடவா தனி
மனித உரிமைகளில் அரசாங்கம் தலையிடும். இது சரியல்லவே! எந்த வருடம் இந்த உத்தரவு
வந்தது தெரியுமா? அந்த வருடம் அப்படி என்ன ஸ்பெஷல்? இங்கே எதற்கு அதைப் பற்றிய
தகவல்… இப்படி சில கேள்விகள் இருக்கலாம். அனைத்திற்குமான விடை கடைசியில்!
ரசித்த நடனம்:
நேற்று முகநூலில் ஒரு நடனம்
பார்க்கக் கிடைத்தது. மூன்று பேர் நடனமாடினார்கள். நன்றாக இருந்தது. இணையத்தில்
பகிர்ந்து கொண்ட தில்லி சகோவிற்கு நன்றி. நீங்களும் பார்க்கலாமே….
படித்ததில் பிடித்தது – ஒரு கவிதை:
தனித்து மறுகும் மனம்
அவளுக்கு
திருமணத்திற்கு முன்
அனுமதி மறுக்கப் பட்டது
திருமணமானதும் திணிக்கப்பட்டது
திருமணத்திற்கு சிலகாலம் கழித்து
இல்லவே இல்லையெனப் பட்டது
வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்
செய்வதற்கு ஏதுமற்ற இரவில்
இந்தத் தனிமையை
ஏற்கத் தெரியாமல்
எதிர்கொள்ளத் திராணியில்லாமல்
வெதும்புகிறாள்
பகலில் அவளைக் கண்காணித்த கண்கள் எல்லாம்
இப்போது இன்பத்தின் பிடியில்
உவகைக்குப் பின்
உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதை
அவள் ஊகித்து அறிகிறாள்
பாலுக்கழுத பச்சிளம் குழந்தையின் அழுகை
பட்டென்று நின்றதெப்படி என்பதை
மனக்கண்ணால் கண்டு மறுகுகிறாள்
குழந்தையுண்டானால்
குமுறும் வலிகளுக்கு
கொஞ்சமாவது ஆறுதல்
கிடைக்குமென
குறுமகள் நினைக்கிறாள்
தாயாகவும் இல்லாமல்
மனைவியாகவும் இல்லாமல்
கன்னியாகவும் இல்லாமல்
வெறும் பெண்ணாக இருப்பதன்
வேதனை உணர்வெழுச்சிகளோடு
நாளும் நலிகிறாள்
யாருமறியாமலே !!
©® ஶ்ரீ
22nd DECEMBER 2017
டிக் டாக் தொல்லைகள்:
டிக் டாக் [Tik Tok] இந்த App
பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். நமது அலைபேசியில் இந்த App தரவிறக்கம் செய்து
கொள்ளலாம். பலரும் இந்த App மூலம் பிரபல சினிமா வசனங்களையும், பாடல்களையும் வைத்து
காணொளிகளை பதிவு செய்திருக்கிறார்கள். முகநூலிலும் இந்த காணொளிகளை பகிர்ந்து
கொள்கிறார்கள். சில காணொளிகள் நன்றாக இருந்தாலும், பலவற்றை பார்க்க சகிக்கவில்லை.
பாடுகிறேன் என்ற பெயரில் ஸ்ம்யூலில் [Smule App] படுத்திய பலர், இப்போது இந்த டிக்
டாக்-ல் ஆடிப் படுத்துகிறார்கள். பார்க்கவே கொடுமையாக இருக்கும் சில காணொளிகளை
முகநூலில் பகிர்ந்து கொள்பவர்கள் உண்டு. சில விநாடிகளுக்குள் அங்கிருந்து ஓட
வேண்டியிருக்கிறது! அந்த காணொளியை பார்க்க வேண்டாம் என Scroll செய்ய கை வைக்கும்போது
“நிறுத்து, தள்ளாதே” என மிரட்டுபவர்களும் இருக்கிறார்கள்! நல்லவையும் தீயவையும்
இரண்டுமே கலந்தது தான் இந்த இணையம் என்று தெரிந்தாலும், சொல்லாமல் இருக்க
முடியவில்லை!
மேலே வித்தியாசமான தடை என்று எழுதி இருக்கிறேன். பேரிஸ் நகரில் பெண்கள் கால்சராய்
அணிந்து கொள்ள தடை விதித்திருக்கிறார்கள். இது நடந்த வருடம் 1800! இந்தத் தடையை
நீக்கியது மிகச் சமீபத்தில் தான்! Redundant law ஆக இருந்ததை 2013-ஆம் ஆண்டு தான்
நீக்கியிருக்கிறார்கள்! 1800-ஆம் வருடம் நடந்த விஷயத்தினை இன்றைக்கு எதற்காக
குறிப்பிட வேண்டும் – அதற்கு விடை – இந்தப் பதிவு இப்பக்கத்தில் 1800-ஆவது பதிவு!
2009-ஆம் ஆண்டிலிருந்து இத்தளத்தில் எழுதி வருகிறேன். 1800 பதிவுகள் தாங்கி
இருக்கிறீர்கள் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது! பல பிரபலங்கள் இங்கே இருக்கையில்,
அடியேனும் 1800 பதிவுகள் எழுதிவிட்டேன் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து பதிவுலக நட்புகளுக்கும் மனம் நிறைந்த நன்றி!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
ஒன்பது வருடங்களில் 1800 பதிவுகளா? Wow! Great! Keep blog ging💐💐
பதிலளிநீக்குஒன்பது வருடங்கள் செப்டமரில் முடிந்தது. பத்தாம் ஆண்டில் இந்த வலைப்பூ பயணம்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.
காஃபி வித் கிட்டு வழக்கம் போல் ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா....
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்று காலையில் 5.30லக்கு காஃபியோடு காத்திருந்தேன்!!!! காஃபி வித் கிட்டு லேட்டு!!!!
பதிலளிநீக்குபரவால்ல காஃபி வித் கிட்டுன்னு காஃபி இல்லாம வாசிக்கலாமோ?!!! அதனால காஃபியோடு உக்காந்தா கிட்டுவோட பதிவுல ராஜ்கிரா லட்டு!!!!!
இந்த லட்டு சாப்பிட்டுருக்கேன். ஆனா செய்யறதுக்கு ராஜ்கிரா சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை..
கீதா
நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதே ஏழரை மணிக்கு மேலாக... அதனால் பதிவினை தட்டச்சு செய்து Schedule செய்து வைக்க முடியவில்லை. :( அதனால் இன்றைக்கு லேட்!
நீக்குராஜ்கிரா நம் ஊரில் கிடைப்பது இல்லை தான் - சில பெரிய மால்களில் கிடைக்கலாம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
லாய்... வித்தியாசமான பெயர். இனிப்பில் என்ன வேறுபாடு இருக்கப் போகிறது. சீச்சீ இந்த ஸ்வீட் புளிக்கும்!!
பதிலளிநீக்குநடனம் வித்தியாசம். அமலாவின் பெரியப்பா பெண்ணும் ஆடுகிறார் போலவே...!
தனித்து மறுகும் கவிதை அருமை. கவிதையை விட படம் அருமை.
1800வது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் வளர்க.
லாய் - ஸ்வீட் இனிக்கும்... புளிக்காது! :)
நீக்குஅமலாவின் பெரியப்பா பெண் - ஹாஹா... எனக்குத் தெரியாது!
படம், கவிதை இரண்டுமே எனக்குப் பிடித்தது. எழுதிய நெய்வேலி சகோ.
1800-வது பதிவு - வாழ்த்துகளுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீராம் உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் கடைல ராஜ்கீரா சிக்கி கிடைக்குது. இப்ப லட்டும் கண்டிப்பா கிடைக்கும் நீங்க வாங்கி டேஸ்ட் பார்க்கலாம்...
நீக்குகீதா
ஆஹா கிடைக்கும் இடம் சொல்லிட்டாங்க கீதாஜி. அதனால் வாங்கிடுடலாம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
இந்த டிக் டாக் ஆப் வைத்து என் தங்கை பெண் செய்யும் காணொளிகளை நான் மிகவும் ரசிப்பேன். நன்றாகச் செய்வாள், சிரிக்க வைப்பாள்.
பதிலளிநீக்குசிலர் ரொம்பவே நன்றாக பயன்படுத்துகிறார்கள். சில மட்டுமே ரசிக்க முடிகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
லட்டு ரொம்பவே நல்லாருக்கும் ஜி! ஸோ 1800 வது பதிவுக்கு லட்டுவோட கொண்டாடிட்டீங்க!!! ஹா ஹா ஹா...மனமார்ந்த வாழ்த்துகள்! பிரமிப்பாகத்தான் இருக்கு வெங்கட்ஜி! ஆனா நல்ல விஷயம் ஜி இது.எழுதிக் கொண்டே இருப்பது நம்மை நாமே சுறு சுறுப்பாகவும் எனர்ஜெட்டிக்காகவும் வைக்க உதவும். எனவே இன்னும் நிறைய உங்கள் பதிவுகள் பதிவாகவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎங்கள் தளம் கொஞ்ச மாசமாகவே அவ்வளவா பதிவுகள் இல்லாம போயிட்டுருக்கு. பதிவுகள் நிறைய இருக்கு... நானும் போடனும் போடனுன்னு நினைக்கிறேன்...ஏனோ கை வரலை...துளசி ஒன்று எழுதியிருக்கார் நான் இன்னும் அதை டைப் செய்து முடியலை...
இங்க பங்களூர்ல கிடைக்குது ராஜ்கிரா. வாங்கிச் செய்துடனும்.
கீதா
எழுதுவது நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்... உண்மை தான். உங்கள் தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள் ஜி.
நீக்குராஜ்கிரா உங்கள் ஊரில் கிடைக்கிறதா? செய்து படம் எடுத்து அனுப்பி வைக்கலாமே.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
காணொளி நடனம் ரொம்ப நல்லாருக்கு ஜி!
பதிலளிநீக்குடிப்டாப் ஆப் பற்றி சுத்தமா எனக்குத் தெரியலை. நோ ஐடியா...என்னன்னு பார்க்கனும்... ஸ்ரீராம் சொல்லிருக்கறத பார்த்தா நாமே ஏதோ விஷமம் எல்லாம் செய்ய முடியும் போல...!!!!
தனித்து மருகும் கவிதை நல்லாருக்கு! படமும் ரொம்ப அழகு...
கீதா
டிக்டாக் ஆப் -சில பார்க்கும் படி இருக்கிறது.
நீக்குகவிதையை ரசித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
1800 !!!!!
பதிலளிநீக்குவாழ்த்துகள் பல...
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகவிதை அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதனித்து மருகும் பெண் மனதில் நிற்கிறாள். கவிதை உண்மையைச் சொல்கிறது! ராஜ்கிரா லட்டு பத்தியும் இந்த ஸ்ம்யூல், டிக் டாக் பத்தி எல்லாம் இப்போத் தான் கேள்விப் படறேன். எல்லா, புதுசு, கண்ணா, புதுசு! :))) 1800 பதிவுகளுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து 2000 க்கும் மேல் எழுதவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபல நாட்களில் எழுத ஒரு சுணக்கம் வந்து விடுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
1800-வது பதிவுக்கு 1800 பேண்ட் கொடுத்து வாழ்த்த வேண்டும்.
பதிலளிநீக்குதொடர்ந்து 2000-த்தை தொடவும் வாழ்த்துகள் ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்கு1800 -வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை, நடனம் என்று பதிவு அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு1800க்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிதை அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு1800 பதிவுகள் என்பது சாதாரண காரியமல்ல
பதிலளிநீக்குமிகப்பெரும் சாதனைதான் ஐயா
வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவாழ்த்துகள் வெங்கட். தொட்ர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குரசித்த கவிதை.. அழகிய படத்தோடு.. மனதை என்னமோ பண்ணுகிறது உண்மைதானே.. அடுத்தவருக்கு கட்டளைபோடும் உலகம் தான் மட்டும் தன் வேலைகளை ஒழுங்காக செய்து மகிழ்கிறது.. இதனால்தான் அடுத்தவர்களுக்கு பயப்படக்கூடாது என்பது, நாம் தவறு செய்தால் கண்டிக்கும் இவ்வுலகம், நாம் துன்பப்படும்போது மட்டும் அதில் தலையிடாமல்.. தான் இன்பமாக இருக்கும்...
பதிலளிநீக்குரிக் டொக்:) அடிக்கடி மொபைலில் வந்து குறுக்கிடுகிறது.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ் என பேசாமல் விட்டு விட்டிருக்கிறேன்...
நமக்கெதுக்கு ஊர் வம்ஸ் - அதானே... இது நல்ல பாலிஸி! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி அதிரா.
எதுவும் அறியாமல் ஆயிரம் பதிவுகள் என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கிறேனே அயல் நாடுகளிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது நாமெவ்வளவொ மேல் வாக்குரிமை வயது வந்த எல்லோருக்கும் பலநாடுகளில் மறுக்கப்பட்ட ஒன்று
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களுக்கு முன்னர் நானெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா. நிறைய விஷயங்கள் உங்களிடம் உண்டு. எண்ணிக்கை பெரிய விஷயமே இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி! மேலும் தங்களின் பதிவுகள் பெருகி பெருமை சேர்க்கவும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅயல்நாட்டிலும் இப்படி ஒரு தடையா! ஆச்சரியமான தகவல்.
லட்டு சாப்பிட்டதில்லை. வாய்ப்பும் மிகக் குறைவு.
ஆப் பற்றிய அதிகம் அறிவு இல்லை வைத்துக் கொள்வதும் இல்லை ஜி. பயம் தான் காரணம்.
துளசிதரன்
அயல்நாட்டிலும் இப்படி இருந்திருப்பது ஆச்சரியம் தான் எனக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
காணொளி நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குகவிதை வாசித்த போது மனது கொஞ்சம் வேதனை அடைந்தது.
துளசிதரன்
கவிதை நிதர்சனம் சொல்கிறது என்பதால் வேதனை எனக்குள்ளும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
வாழ்த்துகள். தொடரட்டும் பல ஆயிரங்கள் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதலில் தங்களது 1800 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விரைவில் 2000 க்கும் மேலாக தொடரட்டும்..
நடனம் வெகு அருமையாக இருந்தது. இனிப்பும் தகவல்களும் சிறப்பாக உள்ளது. கவிதை மிக அருமை. படைத்தவருக்ககு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். டிக் டாக் பற்றி தெரியாது. சமயம் வாய்க்கும் போது அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காஃபி வித் கிட்டு எப்போதும் போல சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
டிக் டாக் - அறிந்து கொள்ளாவிட்டாலும் பெரிய இழப்பில்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!