கச்சோடி, சப்ஜி, ஜிலேபி!
பீஹார் மாநிலத்திற்குச் செல்லப்
போகிறேன் என்று சொன்னவுடன் அலுவலகத்தில் இருந்த பீஹாரைச் சேர்ந்த நண்பர்கள் அங்கே
என்ன பார்க்கலாம், என்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இடத் துவங்கினார்கள். அப்படி
பட்டியல் போட்ட சில உணவு வகைகள் பற்றி அவ்வப்போது இந்த பீஹார் டைரி பதிவுகளில்
எழுத எண்ணம் – அப்படிச் சொன்ன உணவு வகையில் ஒன்று தான் காலை உணவாக பீஹார்
மாநிலத்தில் கிடைக்கும் கச்சோடி – சப்ஜி – ஜிலேபி காம்பினேஷன்!
வட இந்திய மாநிலங்கள் – குறிப்பாக பஞ்சாப்,
ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும்பாலும் காலை உணவாக Stuff
செய்யப்பட்ட பராட்டாக்கள் தான் கிடைக்கும். அல்லது டபுள் ரொட்டி என அழைக்கப்படுகிற
ப்ரெட் டோஸ்ட் – வெண்ணை தடவிய இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்கள். கூடவே தேநீர். மலைப்பகுதிகளில்
நூடுல்ஸ். பீஹார் மாநிலத்தில் காலையில் கச்சோடி கிடைக்கும், ஜிலேபியுடன் சாப்பிட
ஆனந்தமாக இருக்கும் என்றெல்லாம் எங்களிடம் சொல்லி அனுப்ப, ஒரு காலை வேளை,
நாங்களும் கச்சோடி, ஜிலேபி ஆர்டர் செய்தோம். கச்சோடி என்பதும் பூரி போன்றதே தான். ஸ்டஃப்
செய்த பூரி தான் கச்சோடி – இதில் ராஜ் கச்சோடி என்பது மிகவும் பாப்புலர் வட
இந்தியாவில்!
கச்சோடி உடன் ஆலு தரிவாலி சப்ஜி – சப்பாத்திக்கு
தொட்டுக்கொள்ளும் சப்ஜிகள் இரண்டு வகை – ஒன்று ட்ரை சப்ஜி, மற்றது தரிவாலி. ட்ரையாக
இல்லாமல் கொஞ்சம் liquid form-ல் இருந்தால் தரிவாலி சப்ஜி என்று சொல்வது வழக்கம். கச்சோடி
கூட இவர்கள் தரிவாலி ஆலு [உருளைக் கிழங்கு] சப்ஜி தான் கொடுக்கிறார்கள். கூடவே ஒரு
ப்ளேட்டில் ஜிலேபி – பெரிய சைஸ் ஜிலேபி – நம்ம ஊர் ஏழு/ஒன்பது சுற்று முறுக்கு
அளவுக்கு இருக்கிறது இந்த ஜிலேபி! சாஃப்டான கச்சோடி, மொறுமொறு ஜிலேபி என நல்ல
காம்பினேஷன். சொல்லிவிட்டு காத்திருந்தோம். சுடச் சுட கச்சோடியும் சப்ஜியும்
வந்தன. கூடவே தனித் தட்டில் ஜிலேபி!
நான்கு ப்ளைன் கச்சோடி/பூரி ஒரு
தட்டில் ஆவி பறக்க வந்தது. கூடவே ஒரு கட்டோரி [கிண்ணத்தில்] ஆலு தரிவாலி சப்ஜி.
தனித் தட்டில் ஜிலேபி. பூரியை ஆலு சப்ஜியில் நனைத்து வாயில் வைக்க சுவை கொஞ்சம்
கொஞ்சமாக நாவினில் நர்த்தனம் ஆட ஆரம்பித்தது! அப்போது கொஞ்சமாக ஜிலேபியை ஒரு கடி.
ஆஹா ஆனந்தம்! நன்றாகவே இருந்தது பீஹார் மாநிலத்தவரின் கச்சோடி – ஆலு சப்ஜி மற்றும்
ஜிலேபி! பொதுவாக கச்சோடி என்றால் ஸ்டஃப் செய்தது தான் சாப்பிடுவது வழக்கம் –
பாசிபருப்பை வறுத்து சில பல மசாலா பொடிகள் சேர்த்து அதனை மாவினுள் [கோதுமை + மைதா]
வைத்து பொரித்து எடுப்பது தான் கச்சோடி. இங்கே ப்ளைனாக ஸ்டஃப்ஃபிங் இல்லாமல்
கச்சோடி கொடுக்கிறார்கள். ஸ்டஃப்ஃபிங் இருந்தால் கொஞ்சம் ஹெவியாக இருக்கும். அதிலும்
ராஜ் கச்சோடி ரொம்பவே ஹெவி – ஒரு ராஜ் கச்சோடி சாப்பிட்டாலே வயிறு நிறைந்து
விடும்.
என்ன நண்பர்களே, படத்தில்
பகிர்ந்து கொண்ட பூரி/கச்சோடி, சப்ஜி மற்றும் ஜிலேபி உங்களுக்குப் பிடித்ததா?
கச்சோடி எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இணையத்தில் நிறையவே
காணொளிகள் உண்டு. பார்க்கலாம்! கச்சோடி சாப்பிட்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து
கொள்ளுங்கள்! வேறு பதிவில் இன்னும் சில, பீஹார் மாநில உணவு வகைகளைப் பகிர்ந்து
கொள்கிறேன்.
வேறு சில செய்திகளோடு மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங் வெங்கட். படமும், விவரமும் உடனே சுவைக்கத் தூண்டுகின்றன.
பதிலளிநீக்குகாலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.
நீக்குசுவைக்கலாமே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ராஜஸ்தானிலே நாங்க இருந்த நசிராபாத் ராணுவக் கன்டோன்மென்டிலே கசோடா! பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாக இருக்கும். அதில் 100 கிராம் சாப்பிட்டாலே நீங்க சாப்பாட்டு ராமர்! ஜிலேபிகளும் அடுத்தடுத்து உள்ளே தள்ளுவாங்க! இங்கே வந்து அந்த மாதிரி ஜிலேபியே கிடைப்பதில்லை! :( மைதா ஜிலேபி தான் என்றாலும் நெய்யில்பொரிச்சு எடுத்திருப்பாங்க!
பதிலளிநீக்குஇந்த ஜிலேபி நம் ஊரில் கிடைப்பதுல்லை என்பது ஒரு இழப்பு. தில்லியின் சாந்த்னி சௌக் பகுதியில் காலை மாலை வேளைகளில் சுடச் சுட ஜிலேபி கிடைக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
பஞ்சாபியர் செய்யும் ஸ்டஃப் செய்த சின்னக் கசோரி ரொம்பவே நன்றாக இருக்கும். இந்த வருஷ ஆரம்பத்தில் குஜராத் போனப்போ அங்கே மால்புவாவும், கசோரியும் தான் சாப்பிட்டோம். ஆனால் ராஜஸ்தானின் புஷ்கரில் கிடைப்பது போல் சுவையாக இல்லை.
பதிலளிநீக்குமால்புவா - இனிப்பு ரொம்பவும் அதிகம் என்றாலும் சாப்பிடப் பிடிக்கும். கனாட் ப்ளேஸில் மல்லிக் ஸ்வீட்ஸ் மால்புவா நன்றாக இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
ஆஹா மால்புவா, கசோரி நா சுவைக்கிறது...
நீக்குரெண்டுமே வீட்டில் செய்ததுண்டு. நெட்டில் பார்த்துச் செய்ததுதான். மால்புவாவில் நான் ஸ்வீட் கம்மியாகப் போட்டுச் செய்ததுண்டு...
கீதா
மால்புவா நன்றாகவே இருக்கும். கச்சோடி இங்கே நிறைய கிடைக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
படங்களைப் பார்த்ததும் பசியே வந்துவிட்டது ஐயா
பதிலளிநீக்குஆஹா... பசிக்கு சாப்பிட வேண்டியதுதான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
காலையிலேயே ஜிலேபி!...
பதிலளிநீக்குஆகா!...
காலையிலும் சாப்பிடலாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
துரை செல்வராஜு சார்... காலைல அல்வா கொடுத்தாத்தான் தப்பு
நீக்குஹாஹா... இங்கே கிடைக்கும் ஹல்வா அவ்வளவாகப் பிடிப்பதில்லை - குறிப்பாக பாசிப்பருப்பு (மூங்க் தால்) ஹல்வா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
எனக்கு கச்சோரி எப்போதுமே பிடித்ததில் ஐ. வீட்ல எல்லோருக்கும் அது விருப்பம். அது ஸ்டஃப் பண்ணின கட்டியான ஆனால் வட்டமா இருக்கும். பூரிக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையே.
பதிலளிநீக்குமுதல் படத்தின் ஜிலேபி.... ஆஹா... அதுவும் சூடாக....
கெட்டியான கச்சோடி ஸ்டஃப் செய்தது. பீஹாரில் பூரியையும் கச்சோடி என்றே அழைக்கின்றனர்.
நீக்குசூடாக ஜிலேபியில் சுவை அதிகம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
வித்தியாசமாக இருக்கிறது ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குVenkataji I remember that we tasted this jelabi at Gaya. It was so tasty. One of my friend told me to taste Bihar's famous sweet Ghaja. Though we tasted that one but disappointed the way they keep it in shops, most unhygienic!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குஆஹா ..பார்க்கவே ஆசை வருதே..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.
நீக்குவடக்கில் உருளைக்கிழங்கில்லாமல் சப்ஜி பார்ப்பதே அரிது எனக்கு இன்றும் ஜிலேபி ஜாங்கிரி இரண்டுக்கும் குழப்பம்வந்து விடும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஉங்கள் நண்பர்கள் கொடுத்த பட்டியலை நீங்கள் பகிர்ந்தது எங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம். நாங்கள் செல்லும்போது அவசியம் பயன்படுத்திக்கொள்வோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம்.
நீக்குகச்சோடிக்கு சோடி ஜிலேபியா! நல்லாயிருக்கட்டும். இப்போ எனக்கு பசி நேரம். வயறு புவா புவாங்குது. நீங்க வேற மால்புவா மால்புவாங்கிறீங்க. அதுவும் மல்லிக் ஸ்வீட்ஸ் மால்புவாவா. நல்லாயிருங்கய்யா. நல்லாயிருங்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஜி கச்சோரி யா அல்லது கச்சோடி என்று சொல்லனுமா?
பதிலளிநீக்குபீஹாரில் கச்சோடி ஸ்டஃப் செய்யாமலா...புதுசா இருக்கு பூரியை கச்சோடி என்று சொல்கின்றனரோ?!! பூரியில் ஓமம் அல்லது ஜீரகம் போட்டுச் செய்வதுண்டு...
தரிவாலா சப்ஜியும் பார்த்டுக் கொண்டேன் நெட்டில்...செய்யனும்.
சூப்பரா இருக்கு நீங்க சொல்லியிருப்பது.
கீதா
ஆங்கிலத்தில்/ஹிந்தியில் எழுதும் போது கச்சோரி என்று தான் எழுதுவார்கள். ஆனால் படிப்பது கச்சோடி என்று தான். ர என வரும் பல வார்த்தைகளை ட எனப் படிப்பார்கள். அரோரா, சோப்ரா என்று எழுதினாலும், படிப்பது/சொல்வது அரோடா/சோப்டா என்று தான்.
நீக்குஓமம் பொதுவாகவே சப்பாத்தி, பூரி மாவு பிசையும் போது சேர்ப்பதுண்டு. நானும் சேர்த்து தான் செய்வேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!