செவ்வாய், 11 டிசம்பர், 2018

கதம்பம் – கோபி பராட்டா - பார்த்தாச்சு 2.0 - அபார்ட்மெண்ட் அலப்பறைகள்



சாப்பிட வாங்க – Gobhi paratta!! (Cauli-flower stuffed Chappathi ) - 5 டிசம்பர் 2018:



வாரச்சந்தையில் காய்கறி வாங்கிய போது காலிஃப்ளவர் இருக்கவே, எவ்வளவு என்றேன். பூ 35 க்கா! என்றார் கடைக்காரர். சின்னப் பூவா இருந்தா குடுங்க. இரண்டு பேர் தான் என்றேன். பெரிய பூவாக ஒன்றை என் பையில் போட்டு விட்டு, எடுத்துக்கோங்கக்கா!! பக்கோடா போட்டு சாப்பிடுங்க!! என்று சிரித்தார் :) பக்கோடா போட்டாலும் சாப்பிட ஆள் வேண்டாமா!! உங்களையெல்லாம் தான் கூப்பிடணும் என்றதும், கணவனும் மனைவியுமாக சேர்ந்து கொண்டு, "செய்துட்டு சொல்லுங்க, சாப்பிட கட்டாயமா வரோம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்..:))

சரி!! வாங்கியாச்சு! என்ன செய்வது??? பாதியை நேற்று பூக்களாக பிரித்து உப்பு சேர்த்த வெந்நீரில் போட்டு எடுத்து, பொடிப் பொடியாக நறுக்கி, எண்ணெயில் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் காயைச் சேர்த்து உப்பு, காரம், மசாலா, புளிப்புக்கு சற்றே ஆம்ச்சூர் பொடி (மாங்காய் தூள்) சேர்த்து பிரட்டினேன். சப்பாத்திக்குள் பூரணமாக வைத்து தேய்த்து போட்டு எடுத்தேன். சுடச்சுட பிரமாதமாக இருந்தது.

மீதி பூவை வைத்து பக்கோடா செய்யலாமா?? அல்லது கோபி மஞ்சுரியன் செய்யலாமா?? என்று யோசனை. :) மஞ்சுரியனை இதுவரை சுவைத்ததில்லை.

அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள் - 5 டிசம்பர் 2018

கரண்ட் எப்ப வரும்?? கம்ப்ளெயிண்ட் பண்ணி கேட்டுச் சொல்லுங்க??

குப்பை எடுக்க வரலை, இதை உங்க கிட்ட தானே சொல்லணும்!!! ( நான் என்ன குப்பைக்கு காண்ட்ராக்ட்டா எடுத்திருக்கேன் )

எங்க வீட்டு வாசல்ல நறநறன்னு இருக்கு..ஒழுங்காவே பெருக்கலை.

கார்ப்பெண்ட்டர் நம்பர் வேணும்??

ஹலோ!! நாங்க கார்ப்பரேஷனிலிருந்து பேசறோம் மேடம்! உங்க குடியிருப்பில் ஒருத்தர் இதுவரை வீட்டுவரி கட்டலை. கொஞ்சம் அவர் கிட்ட தெரியப்படுத்திடுங்க :)

இப்படி தினந்தோறும் இண்டர்காம் வழியாகவும், செல்ஃபோன் வழியாகவும் பலவித கேள்விகளும், சந்தேகங்களும் :))

கமிட்டியில் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்ட நாள்முதலாய் :)) கற்றுக் கொண்ட விஷயங்களும், புரிந்து கொண்ட விஷயங்களும் ஏராளம்.

மேடம் தான் வீட்டிலேயே ( வெட்டி ஆஃபீசர் ) இருக்காங்களே!!! நீங்களே டீல் பண்ணிக்கோங்க!! நீங்க இருந்து கவனிச்சுக்கோங்க!!

ஏம்ப்பா! எங்க வீட்டில் சமைக்கணும், மகளுக்கு எல்லாம் செய்து விடணும், வெளியில் வாங்க வேண்டியது என்று இதெல்லாம் செய்வது யார்????

2.0 – எந்திரன் பார்ட் 2 – 10 டிசம்பர் 2018



இப்படத்தை காண மகள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தாள். அப்பா வரும் போது போலாம் என்று சொல்லியிருந்தேன். நாங்கள் மட்டும் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவரோ நான் வருவதற்குள் எடுத்துவிட்டால், என்றார். இறுதியில் தம்பி திருச்சிக்கு அலுவலக வேலையாக வரவே, அவனோடு சென்று வந்தோம்.

இதுவரை 3D படம் எதுவும் நான் பார்த்ததில்லை. ஒருவித பயத்துடன் தான் சென்றேன். மகள் என்னை கேலி செய்தாள். படம் ஆரம்பித்த நொடியில் இருந்து இறுதி வரை பிரம்மாண்டம். ஒருவித மிரட்டல், அபாரமான கிராஃபிக்ஸ், படைப்பாற்றல் சேர்ந்த கலவை. தியேட்டரில் தலைவரின் ரசிகர்கள் விசில்களை பறக்க விட்டனர்.

இப்படத்தின் மூலம் நல்லதொரு மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தால் கெடுதலும் உண்டு, நல்லதும் உண்டு!! நமக்கு தெரியாமலேயே எவ்வளவோ அழிவுகளுக்கு நாம் காரணமாக இருக்கிறோம். எதையும் அளவாக உபயோகித்தால் ஓரளவுக்கு பிழைக்கலாம்.

செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் ஒவ்வொருமே கொலைகாரர்கள் என்று அக்‌ஷய் குமார் மிரட்டுகிறார். உண்மை தான்!! என்ன செய்ய!! தவிர்க்கவும் முடிவதில்லையே. இங்கு குடித்தனமே செல்ஃபோன் உரையாடல் வழியே தானே.

அவ்வப்போது கண்ணாடியை இறக்கி வித்தியாசத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். காட்சிகள் நம் அருகிலேயே வந்து செல்கிறது. வசீகரன், நிலா, சிட்டி, குட்டி சிட்டி, பக்ஷிராஜன் என எல்லா கதாபாத்திரங்களுமே ஜோர்.

இடைவேளையில் கிடைக்கும் பத்து நிமிடங்களில் கூட மக்கள் உடம்புக்கு கெடுதல் என தெரிந்திருந்தும் அள்ளி அள்ளி விழுங்கும் சிப்ஸ், பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ் போன்றவற்றை பார்க்கும் போது பக்ஷிராஜன் இதையெல்லாம் பிடுங்கிக் கொண்டு போய் உலகுக்கு உண்மையை உணர்த்த மாட்டானா என்று தோன்றியது.

மொத்தத்தில் அபாரமான படம். நிச்சயம் தியேட்டரில் பார்த்தால் தான் ரசிக்க முடியும். சங்கரின் படைப்பாற்றலுக்கு ஒரு சல்யூட்!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

  1. முகநூலிலும் பார்த்தேன். சினிமா பற்றிய விமரிசனத்துக்கும் நன்றி. நான் என்னமோ பார்க்கப் போவதில்லை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பார்க்கவில்லை. தமிழில் இல்லை - எடுத்து விட்டார்கள். ஹிந்தியில் பார்க்க விரும்பும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  2. தமிழின் முதல் 3D படம் மைடியர் குட்டிச் சாத்தான் பார்த்தோம். அதன் பின்னர் அம்பேரிக்காவில் ஒரு கிறிஸ்துமஸ் சமயம் சில 3D கார்ட்டூன்கள் பார்த்தோம். தண்ணீர் தெளிக்கும் காட்சி வரும்போது நிஜம்மாவே நம்ம மேலே தண்ணீர் தெளிக்கும். பூக்கள் வாசனை வரும். ஐமாக்ஸோ ஐநாக்ஸோ எதுவோ ஒண்ணு அந்தத் தியேட்டருக்குப் பெயர். இங்கேயும் சத்திரம் பேருந்து நிலையம் பக்கம் இருக்குனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுவரை ஒரு 3டி படமும் தியேட்டரில் பார்த்ததில்லை.
      ஐனாக்ஸ் - பழைய தியேட்டர் புதுப்பித்து இருப்பது - ஃபோர்ட் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. கோபி பராட்டா!...

    சுவையான குறிப்புகள்.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  5. >>> கமிட்டியில் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்ட நாள்முதலாய் :)).. <<<

    பொறுப்பு என்றால் சும்மாவா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  6. நீங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதுனால 2.0 படத்துக்குப் போறேன். நல்லா இல்லைனா நீங்கதான் ரூபாயைத் திருப்பித் தரணும். ஆமாம் டிரெயிலர் பார்க்கும்போது சீப் கிராபிக்ஸா இருக்கே....

    கோபி பரோட்டா அழகா இருக்கு. தொட்டுக்க தயிரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராட்டாவுக்கு ஊறுகாய் தயிர் தான் தொட்டுக்க...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. இயக்குனர் அலப்பறையும் ரசிக்கத்தக்கவையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. மனிதர்கள் உயிரோடு இருக்க பறவைகளும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற வசனமும் பாடலும் அருமை இல்லையா ஆதி?

    புள்ளினாங்காள் பாட்டு மகன் அனுப்பினான் வாட்ஸ் அப்பில்.
    கேட்டு ரசித்தேன் பற்வைகளை பற்றி சொன்னது அத்தனையும் உண்மைதானே!

    மற்ற அனைத்தையும் முகநூலில் படித்தேன், ரசித்தேன்.
    பொறுப்புகளை நன்றாக செய்வீர்கள் , வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா இந்தப் பாடலை ய்ட்யூபில் பார்த்தப்ப உங்க நினைவு வெங்கட்ஜி நினைவு வந்துச்சு...

      நானும் நிறைய எடுத்து வைச்சுருக்கேன் ஆனா எதுவும் பதிவாக வெளியிடவில்லை ஏனோ ஒரு சுணுக்கம்...

      பறவைகள் பறப்பதை எடுக்க வேண்டும் என்று ஆசை அதுவும் நீங்கள் வெங்கட்ஜி எல்லாம் அழகா எடுத்துப் போடும் போது எனக்கும் எடுக்க ஆசை இந்தப் பாட்டில் என்ன அழகு இல்லையா கூட்டமாகப் பறப்பதை பார்க்கறப்ப....

      கேமரா செம...

      பாட்டு ம்ம்ம்ம்ம் ஓகே மனதில் நிற்க மாட்டேங்குது....எல்லா பாடல்களும் ஒரே போல இருக்காப்ப்ல இருக்கு...

      கீதா

      நீக்கு
    2. படம் பார்க்காதது மட்டுமல்ல, பாடலும் கூட இதுவரை கேட்டதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    3. //எல்லா பாடல்களும் ஒரே போல இருக்காப்ல இருக்கு// ஹாஹா... இப்போதைய பாடல்கள் பலவும் கேட்கப் பிடிப்பதில்லை. ஒரு வேளை கேட்கக் கேட்கப் பிடிக்குமோ என்னமோ!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  10. சமைக்க, கூட்ட, துவைக்க, கழுவ, கடை, பேங்க் போய்வர, பிள்ளைகளை பார்த்துக்க, பெரியவங்களுக்கு தேவையானதை செய்ய, பக்கத்து வீட்டுக்கு உதவன்னு வீட்டில் வெட்டியாதானே இருக்கோம்??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை வேலைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. படத்தை ரசித்தீர்களா ஏதோ பொம்மைப் படம்போல் இருக்கிறது என்றார்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கும் மனைவிக்கும் பிடித்திருந்தது. நான் இன்னும் பார்க்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. எப்படியோ மக்களின் வாழ்வாதாரம் எப்படியாயினும் இவர்களுக்கு கோடிகள் வசூலாகி விடுகிறது.

    விஞ்ஞான வளர்ச்சி என்றுமே கேடுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  13. ஆதி! வெங்கட்ஜி இனிய மாலை வணக்கம்!

    ஆதி கோபி மஞ்சூரியன் செய்ங்க சூப்பரா இருக்கும்.

    கோபி பராத்தா ரொம்பப் பிடித்த ஒன்று. குட்டிகுட்டியாய் ப மி கட் செய்து போட்டால் அதுவும் நன்றாக இருக்கும். ரோஷ்னிக்குட்டிக்கு காரம் ஆகாது என்றால் தவிர்க்கலாம் ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை மிளகாய் போடுவதுண்டு - பொடியாக நறுக்கி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. கதம்பம் அருமை சகோதரி.

    2.0 பார்க்கவில்லை.

    பொறுப்புகள் அதும் சில சமயங்களில் இப்படித்தான்...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. 2.0 பற்றி மிக பாசிட்டிவ் ரெவ்யூ நீங்கதான் கொடுத்துருக்கீங்கன்னு நினைக்கிறேன்...அதாவது எனக்குத் தெரிஞ்சு....ஓ 3 டி படமா...

    அலப்பறைகள் ஹா ஹா பொறுப்பு ஆதி பொறுப்பு! நீங்க நல்லா ஹேண்டில் செய்வீங்கதான் இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான்...சில விஷயங்களை அவங்களே கவனிச்சுக்கலாம் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுப்பு எடுத்துக் கொண்டால் இப்படி நிறைய அவதிப்பட வேண்டியிருக்கிறது. கொஞ்சம் ஓவர் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....