திங்கள், 10 டிசம்பர், 2018

பீஹார் டைரி – கோல் கர் – தானியக் கிடங்கு



Gகோல் Gகர், பட்னா
 
இப்போதைய பீஹார் மாநிலத் தலைநகரம் பட்னா – நாம் பார்க்கப் போவது இந்தப் பகுதியில் 1770-ஆம் ஆண்டு நடந்த சில நிகழ்வுகளை – அதாவது இன்றைக்கு 248 ஆண்டுகளுக்கு முன்பு – கடும் பஞ்சம் நிலவியது. Great Bengal Famine என அழைக்கப்பட்ட பஞ்சத்தினை சமாளிப்பது மட்டும் சரியான விஷயமாக இருக்காது – மீண்டும் இந்த மாதிரி ஒரு பஞ்சம் வந்தால் அதைச் சமாளிக்கும் விதமாக ஏதாவது ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் அந்தப் பகுதியில் அப்போது ஆங்கிலேய அரசாங்கத்தின் இராணுவப் பிரதிநிதியாக இருந்த Captain John Garstin. பஞ்சக் காலங்களில் பயன்படுத்துவதற்கென்றே தானியங்களைச் சேமித்து வைக்க ஒரு கிடங்கு அமைக்கவேண்டும் என்பது தான் அவர் செய்த யோசனை.



அவரது யோசனையில் உருவானது தான் Gகோல் Gகர்! ஹிந்தியில் Gகோல் என்றால் உருண்டை வடிவம், Gகர் என்றால் இல்லம்/வீடு.  உருண்டையான வடிவத்தில் அமைக்கப்பட்ட தானியக் கிடங்கு தான் இந்த Gகோல் Gகர். 1786-ஆம் ஆண்டு தான் இந்த தானியக் கிடங்கு உருவாகியது – அதாவது பஞ்சத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு! ஜனவரி 20 1784 ஆரம்பித்து, ஜூலை 20 1786 அன்று தான் வேலை முடிந்தது. 105 அடி உயரம் கொண்ட பெரியதொரு கிடங்கு இது. இந்தக் கிடங்கின் சுவர் மட்டுமே 3.6 மீட்டர் அகலம் என்றால் இந்தக் கிடங்கு எத்தனை உறுதியானதாக அமைந்திருக்கும் என்பதை உங்களால் உணர முடியும். இந்த கிடங்கின் வெளிப்பகுதியில் 142 படிகள் அமைத்து – வெளிப்பகுதியில் சுற்றிச் சுற்றி வரும்படி படிகள் - அதன் வழியே கிடங்கின் மேல் பகுதிக்குச் செல்ல முடியும்.


Gகோல் Gகர் – தானியக் கிடங்கு - படிகள்...

அந்த Gகோல் Gகர் இப்போது புனரமைப்புப் பணிகள் நடந்து வருவதால் மேல் பகுதிக்குச் சென்று பார்க்க அனுமதி இல்லை. மேலே இருந்து பார்த்தால் பட்னா நகரினை கழுகுப் பார்வையில் பார்க்க முடியும் என்பது சிறப்பு. நகரம் மட்டுமன்றி பட்னா நகரில் ஓடிக்கொண்டிருக்கும் கங்காஜி என மரியாதையுடன் அழைக்கப்படும் கங்கா நதியையும் மேலிருந்து காண முடியும். ஆனால் புனரமைப்புப் பணி நடப்பதால் நாங்கள் சென்ற போது அந்த அழகினை எங்களால் ரசிக்க முடியாமல் போனது. அந்தக் காலத்தில் வெறும் தானியக் கிடங்காக அமைந்தாலும், இப்போது அந்தப் பகுதியை ஒரு அழகிய பூங்காவாகவும் அமைத்திருக்கிறார்கள். Gகோல் Gகர் பார்க்க வருபவர்கள் பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் இயற்கையை ரசிக்க முடியும்.


Gகோல் Gகர் – ஃபோட்டோ டைம்....

பெரிய பெரிய மரங்கள், பூஞ்செடிகள், புல் தரை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்கா என இருப்பதால் நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அங்கே அமர்ந்து Gகோல் Gகர் அழகினை ரசிக்க முடியும் என்பது சிறப்பு. நுழைவுக் கட்டணமாக ஐந்து ரூபாய் மட்டும் வசூலிக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தேன்கூடு போன்ற வடிவத்தில் இருக்கிறது இந்த Gகோல் Gகர். நகரின் பல பகுதிகளிலிருந்து இந்த Gகோல் Gகர் தெரிகிறது என்றாலும் நாங்கள் அந்த இடத்திற்கு ஒரு மாலை வேளையில் சென்று வந்தோம். அஷோக் ராஜ்பத், சஜ்ஜூ பாக் என்ற இடத்தில் அமைந்திருக்கும் Gகோல் Gகர் பட்னா நகர் சென்றால் பார்க்க வேண்டிய ஒரு இடம்.


Gகோல் Gகர் – மேலிருந்து பட்னா நகரமும் கங்காஜியும்...
படம் - இணையத்திலிருந்து...

படிகள் வழியே மேலே சென்று மேல் பகுதியில் இருக்கும் இரண்டு அடி விட்டம் கொண்ட துளை வழியே தானியங்களை கிடங்கினுள் சேமிக்க வேண்டும். கீழ்ப் பகுதியில் இருக்கும் கதவைத் திறந்து தானியங்களை எடுக்க முடியும்.  இத்தனை சிறப்பாகத் திட்டமிட்டு தானியக் கிடங்கினைக் கட்டினாலும் இதில் இருக்கும் ஒரு சிறு தவறினால் முழு கொள்ளவு தானியங்களை இந்தக் கிடங்கில் ஒரு போதும் சேமிக்க முடிந்ததில்லை.  அது என்ன சிறு தவறு? கிடங்கினைக் கட்டத் திட்டமிட்டவர்கள், கீழ்ப்பகுதியில் அமைத்த கதவினை உள் பக்கம் திறக்குமாறு அமைத்துவிட்டார்கள்! அதனால் முழு கொள்ளவு கொள்ளும்படி தானியங்களை நிரப்பினால் உள் பக்கமாக கதவைத் திறக்க முடியாது! அதனால் இந்தக் கிடங்கில் எப்போதுமே முழுக் கொள்ளவு தானியங்களைச் சேமித்ததில்லை. அந்தக் காலங்களில் கதவினை மாற்றி அமைக்கவும் இல்லை! இப்போதும் அதை பழமையைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. அதைத் தவிர இப்போது இந்தக் கிடங்கு பயன்பாட்டிலும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

Archaeological Survey of India தான் இந்தக் கிடங்கினை புனரமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. பீஹார் அரசாங்கமும் பத்து லட்சம் ரூபாயை இந்தப் பணிக்காகத் தந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமே முடிந்திருக்க வேண்டிய பணி இன்னமும் முடியவில்லை!  பழையா காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுர்கி சூணா [Lime and powdered burnt red terracotta] கொண்டு தான் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது என்று சொல்லப்பட்டாலும் பல இடங்களில் சிமெண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஏதோ சீக்கிரம் புனரமைக்கும் பணிகளை முடித்தால் நல்லது.  

என்னதான் பெரிதாகத் திட்டமிட்டாலும், ஒரு சிறிய தவறு, கட்டப்பட்ட இடத்தினை முழுதாகப் பயன்படுத்த முடியாமல் போவது என்பது ஒரு இழுக்கு தானே! ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டி சில வருடங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமே இருக்கிறது இந்த Gகோல் Gகர்.  பட்னா நகரத்திற்குச் சென்றால் இந்த இடத்தினைப் பார்த்து, கூடவே அந்தச் சிறு பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே இந்த Gகோல் Gகர் திறந்திருக்கும். பீஹார் தலைநகர் பட்னா சென்றால் இந்த புராதனமான இடத்திற்கும் சென்று வரலாம்.

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    நேற்றைய பதிவை இப்பத்தான் பாத்துட்டுருக்கேன்...அத முடிச்சுட்டு இங்க வரேன்

    முதல் படம் பார்த்ததுமே ஏதோ தேங்காய் மூடியை கவிழ்த்துப் போட்டு வடிவம் செய்தது போல இருக்கு ஹா ஹா


    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 கீதாஜி.

      தேன்கூடு வடிவம் என்று சொல்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. தேங்காய் சிரட்டை....மூடின்னு சொல்லிட்ட்ன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... சில ஊர்களில் இப்படியும் சொல்வது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். மேலே செல்லும் படிகளின் வழியைப் பார்க்கும்போது அந்த இடத்தை அப்படியே மூடி போல மேலே திறக்க முடியும் என்பது போல ஒரு தோற்றம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் அப்படி தோன்றியது....வடிவம் ரொம்ப அழகா இருக்கு

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட உடனே என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து நல்ல முடிவாய்த்தான் எடுத்திருக்கிறார்கள்! ஆனால் அந்த சிறிய தவறு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசித்து உடனே செயல்படுத்தி இருப்பது நல்ல விஷயம். இப்படி ஒரு தவறான வடிவமைப்பு சரி செய்யப்பட்டு இருக்கலாம்

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஒரு சிறிய தவறினால் பயன்படுத்த முடியாமல் போனது வருத்தத்துக்கு உரியது. இதே மாதிரிக் குதிர்கள் இங்கே ஸ்ரீரங்கம் கோயிலிலும் உள்ளன. இத்தனை உயரம்னு சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுமையாக பயன்படுத்த முடியவில்லை - ஆனால் தானியக் கிடங்கு பயன்பாட்டில் இருந்தது.

      ஸ்ரீரங்கம் நெற்குதிர்கள் சிறியவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. மிகவும் அரிய தவல்களை கொடுத்த உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. எனக்கென்னவோ கதவு விசயத்தில் தவறு செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன் ஐயா. இப்போதிருக்கும் கதவு பிற்காலத்தில், கிடங்கின் சீரமைப்பின்போது மாற்றி தவறுதலாக வைக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு.கரந்தையார் அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது.

      நீக்கு
    2. இந்தத் தவறை Garstin's folly என்றே ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    3. இப்படியொரு தவறு நேரவும் வாய்ப்புண்டு. இதுமாதிரியான பல உதாரணங்கள் நம்ம ஊரிலும் பார்க்கமுடியும். மனிததவறுகள் எந்த காலத்திலும் நடக்க வாய்ப்புண்டு.

      நீக்கு
    4. தவறு நடந்திருந்தாலும், அதை சரி செய்ய முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. சில விஷயங்களை உண்மை என்று சொல்ல முடிவதில்லை. தவறு என்பது சரியாக இருக்கலாம்! :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  9. தவறான வடிவமைப்பு சரி செய்தால் நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. தானியகிடங்கு சரியாகி தானியங்கள் சேமிக்கப்பட வேண்டும் விரைவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. சரி செய்து செமிப்பு கிடங்காகவே உபயோகிக்கலாம் எனக்கு நிப்பான் பெயிண்ட் விளம்பரம் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. இதனைப் பார்த்ததும் திருப்பாலைத்துறையில் உள்ள தானியக்கிடங்கு நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பாலைத்துறை - இதுவரை கேள்விப்படாத ஊர். எங்கே இருக்கிறது முனைவர் ஐயா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. இந்த பெரிய சைஸ் தனியா கிடங்கைப் பார்த்ததும் எனக்கு எங்கள் வீட்டில் விதைநெல் சேமித்து வைப்பதற்கு இருந்த ஒரு பெரிய மண்ணால் செய்த குடுவை நினைவுக்கு வந்தது. அதை நாங்கள் குலுக்கை என்று சொல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலுக்கை - புதிய வார்த்தை எனக்கு அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
    2. ஹை அண்ணாச்சி அப்படி போடுங்க! நம்மூரு குலுக்கைல்லா...! ஹா ஹா ஹா...ஆமாம் இப்படியான குடுவைய வயல் வைச்சுருந்தவங்க வீட்டுல பாத்திருக்கேன் எங்க பாட்டி வீட்டுல கிடங்கு மாதிரிதான் இருக்கும் ...

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  15. அழகான தானியக்கிடங்கு! கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....