காஃபி வித் கிட்டு – பகுதி – 13
ராஜா காது கழுதை காது –
சரக்கு பார்ட்டி:
படம்: இணையத்திலிருந்து....
சமீபத்தில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ்
மெட்ரோவில் பயணித்த போது, பக்கத்து இருக்கையில் ஒரு சர்தார்ஜி. ஷிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ
நிலையத்தில் அமர்ந்தவர் தொடர்ந்து யார் யாருக்கோ அலைபேசியில் அழைத்து பிரிட்டன்
போக விசா கிடைத்ததைச் சொல்லிக் கொண்டு வந்தார். ஸ்பீக்கர் வழியே அடுத்த பக்கத்தில்
இருப்பவர்கள் பேசுவது எனக்கும் கேட்டது! மூன்று பேருக்கு அழைத்ததில், மூன்று
பேருமே மாலை சரக்கு பார்ட்டி கேட்டார்கள். என்னால் சிரிக்காமல் இருக்க
முடியவில்லை. சர்தார்ஜியும், 25000 ரூபாய் கட்டணம் கொடுத்து விசா வாங்கி
இருக்கிறேன். இன்னும் பயணச்சீட்டு, மற்ற செலவுகள் எல்லாம் இருக்க இவர்களுக்கு
சரக்குப் பார்ட்டி வேண்டுமாம்! என்று தனக்குத் தானே பஞ்சாபியில் பேசிக் கொண்டு
வந்தார். எதுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தோன்றியது!
இருமலா, கழுத்தைச்
சீவுங்க…
படம்: இணையத்திலிருந்து....
எங்கள் பகுதியில் இருக்கும்
நண்பர்கள் தினமும் TTD தேவஸ்தானத்தின் கோவிலுக்கு இரவு கோவில் மூடும் சமயம்
செல்வது வழக்கம். இறைவனை தரிசித்து கொஞ்சம் அரட்டை அடித்து வருவது வழக்கமாக
இருக்கிறது – கொஞ்சம் பொழுதுபோக்கு, ஒரு நடை நடந்தது போலாகும் என்பதால் நானும்
சென்று வருவது வழக்கம். இந்த வாரம் அப்படி ஒரு நாள் போனபோது தான் இந்த “கழுத்தைச்
சீவ” சொன்னார் ஒரு பெண்மணி. ஏற்கனவே அவர் தமிழ் படித்த கதையை சொல்லி இருக்கிறேன் –
இருமலா இருக்கும் போது கழுத்தைச் சீவினா சரியாகிடும்னு சொல்ல இருமல் இருந்தவருக்கு
மட்டுமல்ல கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி! மொத்தமா கதையை முடித்து விடுவார் போல!
என்னது என்ற அதிர்ச்சியோடு அவரிடம்
வினவ, அவர் சொன்ன விஷயம், சீப்பால், கழுத்துப் பகுதியில் வருடினால் இருமல்
நிற்குமாம் – வட இந்தியாவில் இருக்கும் ஒரு பழக்கம் – அலுவலகத்தில் உள்ளவர்
சொன்னார் என்று விளக்கம் தந்தார் – நல்லவேளை கத்தியால் சீவ வேண்டும் எனச்
சொல்லவில்லை! அதற்கு அடுத்து நடந்ததும் காமெடி தான். யாருக்கு இருமல் இருந்தததோ
அவர் “இப்ப சீப்புக்கு எங்கே போக, வீட்டுக்குப் போனதும் செய்து கொள்கிறேன்” என்று
சொல்ல, “ஏன் உங்க வீட்டுக்காரர் பாக்கெட்ல சீப்பு இருக்குமே!” என்று சொல்ல
அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம் – இருமல் இருந்தவரின் கணவர் தலையில் குறைவான
முடிதான், வழுக்கைக்கு சீப்பு தேவையில்லை என்று சொல்ல, அந்தப் பெண்மணி, “உங்க
வீட்டுக்காரரை விட, என் வீட்டுக்காரருக்கு வழுக்கை அதிகம், அவரே வச்சிருக்காரே
சீப்பு!” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தோம்.
படித்ததில் பிடித்தது –
ஆங்கில படுத்தல்:
கல்லூரி காலம் தொடர்ந்து நண்பராக
இருக்கும் முரளியின் ஒரு பதிவு. எல்லா வார்த்தைகளையும் தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலத்தில் மொழி “பெயர்க்கும்” நபர்கள் பற்றிய சுவையான பகிர்வு.
தமிழ் மக்களை சிலபல
காலங்களாகவே ஒரு பேய் பிடித்து ஆட்டுகிறது. அதாவது எல்லாவற்றையும் ஆங்கிலப்
'படுத்துதல்'. இந்தப்பித்து பெரும்பாலும் அழைப்பிதழ்களிகளில் தலைவிரித்தாடும்.
சென்ற வாரம் எனக்கு ஒரு invitation வந்தது. 'House worming' ceremony?!!! எதற்காக
வீட்டில் புழுக்களை நிரப்ப வேண்டும்?!! Leave alone the spelling mistake. சில
வார்த்தைகளும் பழக்கங்களும் குறிப்பிட்ட மொழிக்கோ அல்லது சமூகத்திற்கோ உரித்தானது.
மஞ்சள் நீராட்டு விழா என்பது mostly தமிழ் வழக்கம். இதை ஏன் ஆங்கிலப் 'படுத்த'
வேண்டும்? மக்கள் Yellow water bathing function என்கிறார்கள். எங்க போய்
முட்டிக்க? கண்திருஷ்டி என்பதை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்?
பிறிதொரு அழைப்பில்
"ear boring function' என்றிருந்தது. நடுங்கி விட்டேன். நல்லவேளை, இஸ்லாமிய
சிறுவர்களின் விழாவிற்கு ஏதும் இதுவரை எனக்கு invitation வரவில்லை; அந்தத் தமிழை
நினைத்தே பார்க்க முடியவில்லை. நெய்வேலியில் ஒரு சமயம் shift மாறும்போது, ஒரு
technician, 'I heard some kasamusa sound in the boiler' என்று எழுதி வைத்துவிட்டு
சென்று விட 3 B.Tech.களும் 1 M.Tech உம் சேர்ந்துகொண்டு Oxford மற்றும் Cambridge
அகராதிகளின் பக்கங்களைப் பிரித்து மேய கடைசியில் அந்த technician-ஏ திடீரென்று
ஞாபகம் வந்தவராக phone செய்து கசமுசா சத்தம் என்று தமிழில் விளக்க ஒரு வழியாக
பிரச்சினை முடிவுக்கு வந்தது."My wife is distance, so not office
coming" என்று எழுதிய ப்ரஹஸ்பதிகளும் உண்டு. இப்படியே போனால் இட்லி, சட்னி
எல்லாம் வழக்கொழிந்து rice cake, coconut sauce ஆகிவிடும்.
சிற்றுந்து,
பேருந்து, மகிழுந்து, தொடரி இவை போன்ற தமிழ்ப்படுத்துதல்கள் மேலே சொல்லப்பட்டவைகளுக்கு
சற்றும் குறைந்ததல்ல. மக்கள் கார், பஸ், ட்ரெயின் இவைகளுக்கு நன்றாகவே பழகி
விட்டார்கள்!!
இந்த வாரத்தின் நிழற்படம்:
சமீபத்தில் சென்ற
பயணத்தில் தங்குமிடத்தில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டில். பார்க்க அழகாய் இருந்ததால்
எடுத்த படம்! கண்ணாடி பாட்டிலில் குழாய் வைத்து…
படக்கவிதை – ஸ்ரீராம்
சென்ற வாரம் வெளியிட்ட மேலுள்ள
படத்திற்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள் முகநூலில் கருத்துரையாகத் தந்த கவிதை –
இங்கேயும் ஒரு சேமிபாகவும், தகவலாகவும்…. வல்லிம்மாவும் படத்திற்கு ஒரு கதை
எழுதுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படிக்கும் மற்றவர்கள் கதை/கவிதை எழுத
நினைத்தால் எழுதலாம், இங்கேயோ அல்லது அவர்கள் தளத்திலோ பகிரலாம்!
உயரமாக மட்டுமில்ல,
நான்
உரமாகவும் இருந்தேன்
ஓடி உழைச்ச கால் ஓடாச்சு…
வைரம் பாய்ஞ்ச உடம்பு
கூடாச்சு
நாளும் போகுது பொழுது
பழைய நாட்களை நினைத்து
மனதுக்குள் அழுது...
வடியும் கண்ணீரும் காய்ந்தது
உடலுடன் மனமும் சோர்ந்தது…
காத்திருக்கேன் முடியும்
நாளுக்காய்...
இதே நாளில் – திரும்பிப்
பார்க்கிறேன்:
மனச்சுரங்கத்திலிருந்து என்ற
தலைப்பில் நெய்வேலி நினைவுகளை எழுதி வந்தேன். அப்படி எழுத ஆரம்பித்தது இதே நாளில்
தான்! டைலர் ராமதாஸ் அவர்களைப் பற்றிய பகிர்வு இது. இப்போது வலைப்பூவை வாசிக்கும் பலர்
இப்பதிவினை வாசித்திருக்கவில்லை. அப்போது வாசித்தவர்கள் சிலர், இப்போது பதிவுலகம்
பக்கமே வருவதில்லை! :( இதோ மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளின் முதல் பதிவாக…
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின்
காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச்
சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
அழகாக நம் தமிழில் எழுதிவிட்டுப் போகலாம். ஆங்கிலத்தில் எழுதுவதாகக் கூறிக்கொண்டு நம்மவர்கள் நம்மை படுத்துகின்ற பாடு சொல்லி மாளாது.
பதிலளிநீக்குபல சமயத்தில் ரொம்பவும் படுத்தி விடுகிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தைக் கையாள்வது வேதனைதான் ஐயா
பதிலளிநீக்குஉண்மை. வேதனைதான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
குட்மார்னிங் வெங்கட்...
பதிலளிநீக்குஎதற்கெடுத்தாலும் (சரக்கு) பார்ட்டிதானா?!!
காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.
நீக்குஎல்லா பார்ட்டியும் சரக்கு பார்ட்டி தான்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கழுத்தில் சீப்பால் சீவினால் இருமல் போய்விடுமா? என்ன நம்பிக்கை! சரி, தும்மலுக்கு என்ன செய்வார்கள்?!!
பதிலளிநீக்குஸ்ரீராம், சில சமயம் கண் இமையைத் தொட்டால் எனக்குத் தும்மல் வரும். சுஜாதாவும் ஒரு முறை இதுபோல பல செயல்கள் தும்மலைத் தூண்டும் என்று எழுதியிருந்தார்.
நீக்குநம்பிக்கை தானே எல்லாம். அதை மருத்துவம் என்கிறார் அப்பெண்மணி.
நீக்குதும்மல் வந்தால்... ந்ள்ள கேள்வி:)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சிலருக்கு மேகத்தினை/வானத்தினீப் பார்த்தால் தும்மல் வரும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
தமிழ் படுத்தல் சுவாரஸ்யம். முன்னர் லீவ் லெட்டர் அனுப்ப சிலபல காரணங்கள் ஆங்கிலத்தில் சொல்லி ஒரு எஸ் எம் எஸ் சுற்றிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா?!!
பதிலளிநீக்குஇது ஆங்கிலப் படுத்தல்....
நீக்குலீவ் லெட்டர் காரணங்கள் :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தண்ணீர் பாட்டில் ஓகே!
பதிலளிநீக்குஅடடே... என் கவிதையை... சரி... சரி... நான் எழுதியதை இங்கே எடுத்துப்போட்டு விட்டீர்களா?!! நன்றி.
நீங்கள் எழுதிய கவிதை நன்று.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் வாசித்திராத பதிவுகளாய் பார்த்துப் பார்த்து எடுத்துக் போடுகிறீர்கள்...!!!!! அங்கேயும் வாசித்து கருத்திட்டு விட்டேன்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நானும் வாசித்ததில்லை அப்படிப் போடும் பதிவுகள்....இதையும் பார்க்கணும்
நீக்குகீதா
நீங்கள் வாசித்திராத பதிவுகள் - இருக்கலாம். அதே நாளில் முன் வருடங்களில் வெளியான பதிவுகளை தருகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எனது ஆர்ம்ப கால பதிவுகள் பலரும் படிக்காதவை! :) இப்ப கொஞ்சம் பரவாயில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
மொழி பெயர்ப்பது விழி பிதுங்குகிறது...!
பதிலளிநீக்குமற்ற அனைத்தும் அருமை...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇருமல்லுக்கு சீவிவிடுவது புதிய தகவல். கண்ணாடி ஜாடி மிகவும் அழகாக இருக்கிறது.மொழி பெயர்ப்பு இல்லை மொழி கொலை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.
நீக்குஇருமல் வைத்தியம் கழுத்தை சீவிவிடுவது அருமை.
பதிலளிநீக்குஸ்ரீராம் கவிதை நன்றாக இருக்கிறது.
வல்லி அக்காவின் கதையை எதிர்ப்பார்க்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகழுத்தைச்சீவும் பெண்ணும் பயமுறுத்துகின்றாள்.
பதிலளிநீக்குபெருமைக்கு மாவு இடித்துவிட்டு பிறகு பார்ட்டி கேட்பவர்களை குற்றம் சொல்வதா ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅது என்னவோ தெரிய வில்லை
பதிலளிநீக்குதோல் சுருங்கி கையது கொண்டு மெய்யது பொத்தி
உடவாடி நாம் இருக்க அதைப் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்களே
என்ன சொல்ல இவர் அறியார் நம்மை ஒரு
காணும் பொருளாக்கி மகிழ்வது உமக்கு உடன்பாடா
என்று கேட்கிறாரோ இப்பெரியவர்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஶ்ரீராம் கவிதையை அங்கும் படித்தேன், இங்கும் படித்தேன். கதையை யார் எழுதினாலும் போய்ப் படிப்பது தான் நம்ம வேலை. உங்கள் பழைய பதிவையும் போய்ப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குபடிப்பது தான் நம்ம வேலை - அதே தான் இங்கேயும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
தண்ணீர் பாட்டில் மிகவும் அருமை. பிடித்திருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குகழுத்தை சீவல் // ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குதமிழ் மொழியை அப்படியே மொழி பெயர்த்தல் என்பது கொடுமை. சில ஆங்கில சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்குவது அல்லது இருப்பதை நாம் அறியத் தருவது பரவாயில்லை...ஆனால் தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் கொடுமை...
ஸ்ரீராமின் கவிதை நல்லாருக்கு...வல்லிம்மா கதை எழுதுவதை வாசிக்க ஆர்வம்...நான் அன்று இப்படத்தைப் பார்த்ததும் அட எபியில் ஸ்ரீராம் போட்டு படக் கதை கேட்கலாமே! கேட்பாரோ என்றும் நினைத்தேன்...எனக்கும் தோன்றியது கதை எழுதலாம் என்று இப்போது முடியுமா என்று தெரியவில்லை...பார்ப்போம்...
சர்தார்ஜி...ஹா ஹா இப்படித்தான் சில சமயம் சந்தோஷமாகச் சிலர் தங்கள் செய்தியை நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் சொல்ல எதிர்பாராத பதில்கள் அல்லது வேண்டிகோள்கள் அப்புறம் அதைவிட பல அட்வைஸ்கள் எல்லாம் வரும்...அதுக்கு சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்றும் தோன்றும்...
கீதா
வல்லிம்மா, நீங்கள், இன்னும் யார் யாரெல்லாம் இந்தப் படத்திற்கு கதை எழுதுவார்கள் என நானும் காத்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தண்ணீர் பாட்டில் செமையா இருக்கு....
பதிலளிநீக்குகீதா
ஆமாம். எனக்கும் பிடித்திருந்தது. அதனால் காமிராவில் சிறை படுத்தினேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
மாமியார் இருமலால் கஷ்டப்படும்பொழுது மருமகளிடம் யாரும் மாமியாரின் கழுத்தை சீவு என்று சொன்னால் என்ன கதியாகும்?
பதிலளிநீக்குஎங்களுக்கு தெரிந்த ஒருவர் பால் காய்ச்சுதல் என்பதை milk boiling function என்பார். அதே போல "நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஏன் குறுக்கே பேசுகிறாய்?" என்பதை "வென் ஐ டாக் ஒய் மிடில் மிடில் டாக்?" என்பார்.
தாத்தாவைப் பார்க்க, ஏனோ மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
மாமியாரின் கழுத்தை - ஹாஹா..... அவ்வளவு தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...
Glass jar is unique. I have not seen anywhere.
பதிலளிநீக்குஆமாம். வேறு எங்கும் நானும் இப்படிப் பார்த்ததில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.