புதன், 5 டிசம்பர், 2018

கதம்பம் – அப்பம் – தோசை – ஊறுகாய் – மண்ஜாடி



சாப்பிட வாங்க – அப்பம் - 26 நவம்பர் 2018:


வழக்கமான செய்முறையான பச்சரிசி அரைத்து செய்யவில்லை. கையிலிருந்த மைதா, கோதுமை மாவு, ரவை, தேங்காய், பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை என்று எல்லாவற்றையும் அளவுகளே இல்லாமல் சிறிதளவு சேர்த்து செய்தது.

ஆனால் நல்ல மிருதுவாக, சுவையுடனும் அற்புதமாக இருந்தது.

எல்லாரும் கண்களால் பார்த்து ருசியுங்களேன்.

மாங்காய் ஊறுகாய் - 29 நவம்பர் 2018



அடிக்கடி சமையல் பகிர்வுகள் தான் வர மாதிரி இருக்கு...:) ஆனா எடுத்த படங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியுமா!!!

சீசனே இல்லாத போது மாங்காயைப் பார்த்ததும் வாங்கி வந்தேன்.. துண்ட மாங்காய் போட்டு வைத்தேன்.. 50 ரூ மண்ஜாடி ஊறுகாய்க்கு நல்லா இருக்கு!!!

இலுப்பசட்டி தோசை - 26 நவம்பர் 18:



Geetha Sambasivam மாமி பதிவில் பார்த்தேன். செய்தேன்.

இலுப்பச்சட்டி தோசை!!! கூடவே சாதா தோசையும்.

ஜூர சீசன் - 30 நவம்பர் 2018

மகளுக்கு மூன்று நாட்களாக ஜலதோஷமும், ஜுரமும். டாக்டரிடம் வர மறுத்துக் கொண்டிருந்தாள். இன்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றேன். டோக்கன் வாங்கி உட்கார்ந்தாச்சு.

எங்களுடைய டோக்கன் எண் 18. எங்களுக்கு முன் உள்ள இரண்டு டோக்கன்களுமே வயதானவர்கள் தான். அவர்களுக்குள் யார் முன்னாடி செல்வது என வாக்குவாதம். அதிகபட்சமாக ஐந்திலிருந்து பத்து நிமிட வித்தியாசம் தான். அதற்குள், நான் தான் முன்னாடி வந்தேன், அதனால 16 நம்பர் டோக்கன் எனக்கு தான்!! என்று உரிமைப் போராட்டம். இறுதியில் 16 நம்பர் டோக்கன் தாத்தா தன்னிடமிருந்த டோக்கனையே கொடுத்து விட்டார்.

இது மாதிரி ஒவ்வொரு இடத்திலும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். கொஞ்ச நேரம் பொறுமை காக்க முடிவதில்லை.

எங்களுடைய முறை வந்ததும் உள்ளே சென்றோம். ஊசியா? மாத்திரையா? என டாக்டர் கேட்கவும், பாய்ந்து கொண்டு மாத்திரை என்றாள் மகள். இரண்டு நாளைக்கு எழுதித் தந்தார். அறிவுரைகளும் சொல்லி அனுப்பி வைத்தார்.

கஜா புயல் – ரோஷ்ணி கார்னர் – 1 டிசம்பர் 2018:

மகள் தன்னுடைய நோட்டில் எழுதி வைத்த வரிகள் இதோ...



ரோஷ்ணி கார்னர் – மண் ஊதுவத்தி ஸ்டாண்ட் – 2 டிசம்பர் 2018



இன்று கடைத்தெருவில் மண்ணாலான ஊதுவத்தி ஸ்டாண்டைப் பார்த்ததும் அழகாக இருந்ததால் வாங்கிக் கொண்டேன். விலை 40 ரூபாய்.




சில நாட்களுக்கு முன்பு குல்ஃபி செய்ய ஐந்து பானைகள் வாங்கினேன். அதில் ஒன்றையும் மகள் பெயிண்ட் செய்து தந்திருக்கிறாள். செயற்கை மலர்களால் அலங்கரித்து பூ ஜாடி ஆக்கியாச்சு!!

அகர் அகர் புட்டிங்!! ( சைனா கிராஸ் )  - 04 டிசம்பர் 2018



எங்கள் ப்ளாக் திங்க கிழமை பகிர்வில் நெல்லைத் தமிழன் அவர்களின் மகள் இளநீரில் செய்ததாக பகிர்ந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் செய்யும் ஆவல் மேலிட்டது.

ஏற்கனவே சுதந்திர தினத்தன்று முதன்முறையாக செய்தததை பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அப்போதும் திருப்தி தரவில்லை. நேற்று செய்த போதும் பக்குவம் சரியாக இருந்த போதும் ஏனோ இன்னும் நன்றாக வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. Crunchy ஆக வர அடுத்த முறை தான் செய்து பார்க்க வேண்டும்.

சைனா கிராஸ் முற்றிலும் சைவம் மட்டுமே என்றும், வயிற்றுப் புண்களை குணமாக்க வல்லது என்று படித்து தெரிந்து கொண்டேன். எந்த ஃப்ளேவருடனும் நிறமுடனும் செய்து பார்க்கலாம். நான் பால் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்திருக்கேன்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

54 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    கலஃபுல் கதம்பம் அதுவும் திங்க முதலில்....இதோ வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். முதலில் தலைப்புப்பற்றி... பாலகுமாரன் நாவல் தலைப்பு ஞாபகம் வருகிறது. அப்பம் வடை தயிர்சாதம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தலைப்பு - எனக்கும் அதே தலைப்பு நினைவுக்கு வந்தது.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அப்பம் மாங்காய் ஊறுகாய் சூப்பர் ஆதி...அந்த மண் ஜாடிய்ம் தான் இந்த மண் ஜாடிகள், பீங்கான் ஜாடிகள் எனக்கும் க்ரேஸ் உண்டு...அதனாலேயே என் கஸின்கள் எனக்கு இப்படி ஏதாவது வாங்கிக் கொடுத்துடுவாங்க...ஹா ஹா ஹா

    இலுப்பசட்டி தோசை ரொம்ப பிடிக்கும்....அழகா வந்திருக்கு உங்க தோசை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண் ஜாடி - இங்கேயும் கிடைக்கிறது. சமீபத்தில் தான் மண் தவா வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தேன்.

      ஆஹா கசின்களிடம் இருந்து மண் ஜாடிகள் - வாவ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. ஆமாம் ஜி மண் தாவா இப்ப சில வட இந்தியய்ர்கள் சென்னையில் சிக்னல்களில் விற்பதைப் பார்த்தேன்....நன்றாக இருந்தது. கைப்பிடியுடன்....வாங்கவில்லை...

      கீதா

      நீக்கு
    3. இங்கேயும் சிக்னல்களில் விற்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது. நான் வாங்கியதில் கைப்பிடி தான் கொஞ்சம் நீளம் குறைவு - பார்த்துக் கையாள வேண்டியிருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. அப்பம் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.

    மாங்காய் ஊறுகாய்- காரம் போதாது!!!!! ஹிஹிஹி...

    இலுப்பச்சட்டி தோசை சுவாரஸ்யம்! சாப்பிட்டு நாளாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பம் - சாப்பிடவும் நன்றாக இருந்ததாக தகவல்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ரோஷ்ணியின் திறமைகள் வியக்க வைக்கின்றன. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    இளநீர் புடிங் அதற்குள் செய்து பார்த்து விட்டீர்கள்... பாராட்டுகள்.. ம்..ஹூம்... ஸ்ரீரங்கத்தில் குடியிருந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கத்தில் குடியிருந்திருக்கலாம்! :)))

      இளநீர் இல்லாமல் புடிங்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மகளின் ஜுரம் சரியாகிவிட்டதா? இப்போது எப்படி இருக்கிறார்?

    ஆமாம் இப்ப ஜூர சீசன்....க்ளினிக்கிலும் சரி பொது இடங்களில் வரிசையிலும் சரி இப்படித்தான்...பார்த்துப் பழகிப் போன ஒன்று...

    அப்பம் கவர்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூரம் சரியாகி விட்டது ஜி. இப்போது பரவாயில்லை.

      அப்பம் - :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. ரோஷினிக் குட்டி ஹையோ அப்படியே உங்களை ஹக் பண்ணி கொஞ்சனும் போல இருக்கு....!!! செமையா எழுதிருக்கீங்க....புலிகளுக்குப் பிறந்தது பூனையாகுமா!!!!!!!!!

    வாவ்! எண்ணங்கள் அழகான எண்ணங்கள்...கவிதை! யு ராக்! பலகலை நிபுணர்!

    வாழ்த்துகள் பாராட்டுகள்! காட் ப்ளெஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ரோஷினிகுட்டி செய்த ஊதுவத்தி ஸ்டாண்டா அந்த மண் கலரில் இருப்பது!!! வாவ்!! இன்னொரு ஹக் குட்டிக்கு!!! திறமைகள் வியக்க வைக்கிறது! பாட் பெயிண்டிங்க் எல்லாமே சூப்பர் ரோஷினிகுட்டி...வாழ்த்துகள்!

    கூடவே என் இளம் வயது மற்றும் கொஞ்சம் வருடம் முன் வரை நினைவு படுத்துது. இப்படித்தான் வீட்டில் பலரும் மட் காஅ குல்ஃபி வாங்கிச் சாப்பிடுவாங்க உடனே அவங்க கிட்ட பானைய தூர போடாதன்னு வாங்கி வைச்சு பெயின்டிங்க், மிரர் வொர்க் பாசி வொர்க் என்று செய்து அவங்களூக்கே கொடுத்துருவேன்...இப்ப சென்னையில் வீட்டில் இருந்த கைவினைப் பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி ஒரு ரூமில் போட்டாச்சு....பங்களூருக்கு வந்துவிட்டதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊதுவத்தி ஸ்டாண்ட் - கடையில் வாங்கி அதில் பெயிண்டிங்...

      உங்கள் இளவயது நினைவுகளை மீட்க பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

      பல கைவினைப் பொருட்கள் செய்து விட்டு அதை பாதுகாப்பதும் ஒரு கனமான வேலை தான். ஆனாலும் செய்வது பிடித்திருந்தால் பராமரிப்பதும் பிடித்து விடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. புரிந்துவிட்டது இப்ப மீண்டும் இரு படங்களையும் பார்த்ததும் புரிந்துவிட்டது...! அழகா இருக்கு...

      கீதா

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. ஆதி சைனா க்ராஸ் நல்லதே...சைவமும் தான். உங்க புட்டிங்க் நன்றாகத்தான் வந்திருக்கு....பார்க்கவே அழ்கா இருக்கு...சுவையும் வந்திருக்குமே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவை நன்றாக இருந்ததாக மகளும் ஆதியும் சொன்னார்கள். செவி வழிச் செய்தி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. கதம்பம் நல்ல தஞ்சாவூர் கெட்டி கதம்பம் போல நன்றாக இருக்கிறது. ஶ்ரீரங்கத்திலும் கதம்பம் நன்றாக இருக்கும். சென்னையில் காட்டுமல்லியோடு கனகாம்பரத்தை சேர்த்து கட்டி அதை கதம்பம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கத்து கதம்பமும் புகழ்பெற்றதாயிற்றே. சாத்தார வீதிக்குச் சென்று பூ வாங்குவதே ஒரு அலாதி இன்பம் - எவ்வளவு பூக்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  11. நீங்கள் செயதிருக்கும் வகையில் அப்பம் சுவையாக இருக்கும்.
    ரோஷிணியின் கைவண்ணம், சொல்வண்ணம் இரண்டுக்கும் பாராட்டுகள. God bless

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  12. முகநூலிலும் பார்த்தேன். ரோஷ்ணிக்கு இப்போது உடம்பு சரியாகி இருக்கும் என நம்புகிறேன். மண் சட்டிகளில் பெயின்டிங் அருமையா இருக்கு. கைவேலைகளில் மிகவும் திறமையைக் காட்டுகிறாள். குழந்தைக்கு வாழ்த்துகள் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்ததில் மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. அனைத்தும் முகநூலில் படித்து மகிழ்ந்தேன்.
    ரோஷிணியின் திறமைகளை பாராட்ட வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    ஆதி, ரோஷிணி இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    கதம்பம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. மண்ணாலான ஊதுவத்தி ஸ்டாண்டை நானும் வாங்கி வைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே என்னிடம் கூட ஒன்று இருந்ததும்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. ஆஹா.... உணவுப் படங்கள் ஆசையைத் தூண்டும் வித்த்தில் இருக்கு. கன்னா பின்னாவென இனிப்புகள் மிக அதிகமாகச் சாப்பிடுவதால் நேற்றுத்தான் ஒரு வாலம் இனிப்பைத் தொடக்கூடாது என்று நினைத்தேன். இன்று ஆவலைத் தூண்டும் அப்பம் படம்.

    நான் மாங்காய் 80ரூ கிலோ விற்றபோதும் வாரம் ஒரு முறை வாங்கி ஊறுகாய் போடுகிறேன்.

    கையெழுத்து அருமை

    எப்படி இருந்தாலும் புட்டிங் உடலுக்கு நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரம் ஒரு முறை ஃப்ரெஷ் ஆக ஊறுகாய் - இங்கே கிடைத்தாலும் நான் செய்வதில்லை. ஊறுகாய் சேர்த்துக் கொள்வது குறைவு என்பதால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  17. நாவூற வைக்கும் ஆதியின் உணவுவகைகளும் கண்குளிர வைக்கும் ரோஷ்ணியின் கலைத்திறமும் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு ரசிக்கவைக்கின்றன. பாராட்டுகள் இருவருக்கும். ரோஷ்ணி இப்போது
    நலம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி.

      நீக்கு
  18. மகளின் எழுத்தினை ரசித்தேன். அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  19. இன்று உங்கள் வலைப்பதிவு மிகவும் வண்ணமயமானதாக உள்ளது. அப்பம், தோசை மற்றும் ஊறுகாய் ஆகியவை எனக்கு பசியை உணர்த்தின. ரோஷ்ணி பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  20. ரோஷினியின் கை வண்ணம் மிக அருமை முகநூலில் பார்த்து லைக் செய்வேன் கமென்ட் பண்ண நேரம் இருக்காது, அகர் அகரும் பார்த்தேன், ஊறுகாய் நாவூற வைத்து விட்டது, மொத்தத்தில் கதம்பம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா சகோ.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  22. கார்கால மாங்காய் வந்து விட்டதா? எப்படி இருந்தாலும் மாங்காய் ஊறுகாயை மிஞ்ச வேறொன்றும் இல்லை. ஊறுகாய் ஜாடி மிகவும் அழகு! ரோஷ்ணியின் கவிதை அதையும் விட அழ்கு!
    சைனா கிராஸில் ஆரஞ்சு ரசம், தேங்காய்ப்பால், பால் பவுடர் இப்படி எல்லாவற்றிலும் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  23. ரோஷ்ணியின் திறமைகள் அபாரம்... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  24. ஊதுவத்தி ஸ்டாண்ட் பிரமாதம்

    அளவில்லாம, கைக்கு கிடைச்சதை கொண்டு அவசரமா சமைக்கப்படும் பதார்த்தம் எப்பவுமே நல்லா இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  25. ரோஷ்ணியின் கைவண்ணமும் கவிவண்ணமும் அருமை.
    இலுப்பச்சட்டி தோசையை அலுப்புத் தட்டாம சாப்பிடலாம் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....