பீஹார் டைரி பதிவுகள்
ஆரம்பித்தபோது நிழற்பட உலா தொகுதி ஒன்றை பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு இங்கே
பகிர்ந்து கொள்ளவில்லை. சமீபத்தில் பட்னா அருங்காட்சியகம் பற்றிய தகவல்களைப்
பகிர்ந்த போது அங்கே காட்சிபடுத்தியவற்றை எடுத்த படங்களில் வெகு சிலவற்றை மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடிந்தது. அப்படி விடுபட்டவற்றில் புராதனச் சிற்பங்கள்
முக்கியமானவை. பல சிற்பங்கள் அங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை
நிழற்படமாக எடுத்துக் கொள்ளும்போதே ஒரு வித வலி. எத்தனை சிற்பங்கள் சிதிலமுற்றவை
எனப் பார்த்த போது உண்டான வலி. சில அழிவுகள் இயற்கையால் என்றால், பல மனிதர்களால்
உண்டானவை. யார் செய்திருந்தாலும் இப்படிச் சிதைப்பது நல்ல விஷயம் அல்ல.
இன்னும் வருத்தமான விஷயம் ஒன்று
உண்டு என்றால், அது இந்த மாதிரி சிற்பங்கள் பல அங்கே வெளியே வைக்கப்பட்டிருந்தது
தான் – மழையிலும், வெய்யிலிலும் அப்படியே விடப்பட்டிருந்தது. அதான் ஏற்கனவே
உடைந்து போயிற்றே, அதற்கு எதற்கு ஒரு இடம் என்பது இவர்கள் எண்ணமாக இருக்கலாம்.
இந்த சிற்பங்களின் மதிப்பு தெரிந்தவர்கள், ஏன் திருடி விற்க மாட்டார்கள் எனத்
தோன்றுகிறது. இந்த ஞாயிறில் சில படங்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன். அடுத்த வாரம்
சில ஓவியங்களை பகிர்ந்து கொள்கிறேன். அவையும் சிறப்பான ஓவியங்கள். சரி வாருங்கள்
அங்கே எடுத்த நிழற்படங்களை இந்த ஞாயிறில் பார்க்கலாம்.
இது நம்ம முருகப் பெருமான்!
வேறு ஒரு பதிவில் மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ஜி!
நீக்குபடங்கள் அழகா இருக்கு வெங்கட்ஜி!
பதிலளிநீக்குபல சிலைகள் உடைந்து போய் இருக்கின்றனவே!
கடைசிப் படம் முருகனா?!!! ஆஆஆஆஆஆஅ....முருகா! என்னப்பனே! ஆஞ்சுவின் முக வடிவில் எப்போது அவதாரம் எடுத்தாய்!!!!???? ஹா ஹா ஹா ஹா
கீதா
சிலைகள் உடைந்து - ஆமாம். பார்க்கும்போதே மனதில் வலி!
நீக்குமுருகனே கார்த்திகேயன். கொஞ்சம் சிதைந்த நிலையில். ஆஞ்சு முக வடிவில்! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
வருத்தம் தான் ஜி சிலைகளை வெளியில் எல்லாம் வைத்து இருப்பது...ஏற்கனவே உடைஞ்சுருக்கு அவை இன்னும் உருக்குலையாதோ?!!
பதிலளிநீக்குமுதல் கருடர் சிலை வித்தியாசமாக அழகா இருக்கு..
அட! என் கதை ஒன்றில் வரும் நாயகி தாராவுக்குக் கூட சிலை வைச்சுருக்காங்களா!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....ஜோக்ஸ் அபார்ட் தாரா சிலை ரொம்ப அழகா இருக்கு திபெத்தில் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது...
கீதா
கருடன் சிலை - ஆமாம் ஜி. இப்படி ஒரு கருடன் முதன் முறையாகப் பார்க்கிறேன்.
நீக்குஉங்கள் கதை நாயகி தாராவிற்கு இங்கே நிறைய சிலைகள் இருந்தன ஜி. இந்தியா மட்டுமல்லாது திபெத்திலும் தாரா இருந்திருக்க வேண்டும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
குட்மார்னிங் வெங்கட். நம் மக்களுக்கு அதன் பண மதிப்பு மட்டுமே கண்ணுக்குத்தெரியும். உபயோகம் இல்லாதது போல ஓரமாகப் போட்டு விற்பனை செய்துவிடுவார்கள் கள்ளத்தனமாக...!
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குகபாடியில் விற்காமல் இருந்தால் சரி! :(
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கங்கை கொண்ட சோழபுரத்திலும் இப்படி சிதிலமடைந்த சிற்பங்களை ஓரம் கட்டி வைத்திருப்பதைப் பார்த்தேன். ஓரிடத்தில் வரிசையாக தங்கள் 'இட ஒதுக்கீட்டு'க்காகக் காத்திருந்ததை முகநூலிலும், தளத்திலும் பகிர்ந்திருந்தேன்!
பதிலளிநீக்குபல கோவில் வளாகங்களில் இப்படி சிதிலமடைந்த சிலைகள் பார்த்து வருந்தி இருக்கிறேன். சிதைந்த சிலைகள் பார்க்கும்போதே அந்த சிலையை வடித்த சிற்பியின் உழைப்பு இப்படி ஆகிவிட்டதே என்று தோன்றும். சிற்பி தம் கலை/சிலை இப்படி ஆகும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான கலை வேலைப்பாடுகளை கொண்ட சிலைகள். ஆனால் இந்த சிலைகளின் நிலைகண்டு வருத்தம் வருகிறது. எவ்வளவு சிலைகள் பாதியாக உடைந்து போயிருக்கின்றன. ஏன் அப்படி வெளியில் வைத்து அருமையான சிலைகளை பாழாக்க வேண்டும். கலையின் மதிப்பு புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள் போலும்... ஒரு படத்தில் புத்தர் கூட தன் அருகிலிருக்கும் சிலைகளின் நிலை கண்டு வருத்தப்படுவது போல் எனக்குத் தோன்றியது. இதன் (பீஹார் டைரி) முந்தைய பகுதிகளை நான் படிக்கவில்லை. அதையும் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பராமரிப்பு - நம் நாட்டில் இதற்கு யாருமே கவனம் செலுத்துவதில்லை. பெரிய பெரிய விஷயங்களை செய்து விட்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த விஷயம் நாள்பட நாள்பட அழிந்தே போகும் அபாயம் உண்டு என்பதை புரிந்து கொள்வதே இல்லை.
நீக்குபுராதனச் சிற்பங்களை மற்ற நாடுகள் பாதுகாக்கும் அளவிற்கு நம் நாட்டில் பாதுகாப்பதில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.
பீஹார் டைரி - தனித் தனிப் பதிவுகள் தான். பயணக் கட்டுரைகளை தொடராக எழுத வில்லை இந்த முறை. தனிப்பதிவு என்பதால் எந்த பதிவினையும் தனியாகவே படிக்கலாம். முடிந்த போது படியுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
அருமையான சிற்பங்கள் ஜி
பதிலளிநீக்குபழமையை பாதுகாப்பதில் இந்தியர்கள் பின்தங்கிகொண்டுதான் இருக்கிறோம்.
பழமையை பாதுகாப்பதில் இந்தியர்கள் பின் தங்கி இருப்பது உண்மை. கண்டுகொள்வதே இல்லை என்பதில் வருத்தம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
சிறப்பான ஓவியங்கள்...
பதிலளிநீக்குகவனிக்காமல் இருப்பது வேதனை...
வேதனை தான் தனபாலன். கொஞ்சமாகவது கவனிக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகோ அழகு
பதிலளிநீக்குஆமாம் ஐயா. எத்தனை அழகான சிற்பங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
எல்லா மாநிலங்களிலும் உடைத்த சிலைகளை அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். பீகாரில் மட்டுமே இந்த நிலமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குநம் வீட்டில் சில் பொம்மைகள் உடைந்து விட்டாலும் தூக்கி போட மனம் இல்லாமல் இருக்கிறது. காலம் கடந்து , சிற்பியின் பெருமையை பறைசாற்றும் சிலைகளை தூக்கிப் போட மனம் வராது.பீகாரில் அதை பாதுகாத்தால் நல்லது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு