திங்கள், 3 டிசம்பர், 2018

சித்தி தமால் - ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த பழங்குடியினர் - நடனம்



சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தலைநகர் தில்லியில் ஆதி மஹோத்சவம் நடைபெறுகிறது என்பதை இந்த வாரத்தின் கடைசியில் தான் தெரிந்து கொண்டேன்.


16 முதல் 30 நவம்பர் வரை தலைநகரின் ஐ.என்.ஏ. பகுதியில் இருக்கும் தில்லி ஹாட்-ல் இந்த வருடமும் இந்த மஹோத்சவம் நடைபெற்றது.  சென்ற வருடம் இந்த மஹோத்சவம் சென்று அங்கே பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். இந்த வருடமும் மஹோத்சவம் பற்றி தெரிந்ததும், பத்மநாபன் அண்ணாச்சியை அழைத்து போகலாமா எனக் கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவிக்க, 28 நவம்பர் 2018 மாலை அலுவலகம் முடிந்த பின்னர், இருவருமாக தில்லி ஹாட் சென்றோம். தில்லி ஹாட் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு தளம். இங்கே அவ்வப்போது நிகழ்சிகள் நடப்பது வழக்கம்.


மீனாகரி வேலைப்பாடு....

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் குறைவான ஸ்டால்களே இருந்தன. உணவுப் பதார்த்தங்கள் விற்கும் நிலையங்கள் குறைவாகவே இருந்தன. விற்பனைக்கு வைத்திருக்கும் பொருட்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அழகாய் இருக்கிறதே எனப் பார்த்தால் விலை அதிகமாக இருந்தது. மீனாகரி வேலைகள் செய்திருந்த ஒரு தாம்பூலத் தட்டு பார்த்தேன் – ரொம்பவே அழகாக இருந்தது. வித்தியாசமான வடிவத்திலும் இருக்க, அது பிடித்திருந்ததால் விலை கேட்டேன் – 750 ரூபாய் சொன்னார். மிகவும் அழகாக இருந்தாலும், அத்தனை விலை கொடுத்து, ஒரு தாம்பூலத்தட்டு வாங்க மனம் வரவில்லை. அந்தக் கடைக்காரரிடம் தட்டில் இருந்த கலைநயத்தினைப் பாராட்டி விட்டு முன்னேறினோம். 

இந்த ஆதி மஹோத்ஸவம் நிகழ்ச்சியில் தினம் தினம் மாலையில் இரண்டு மணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாங்கள் சென்ற போதும் பல மாநிலங்களிலிருந்து வந்த கலைஞர்கள் தங்கள் திறமைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ராஜஸ்தானின் கூமர் நடனம், மணிப்பூரின் தாங்க்ஜோ நடனம் என நிறைய நிகழ்ச்சிகள். அன்றைய நிகழ்வின் கடைசி நடனமாக இருந்தது தான் நாம் இன்றைக்குப் பார்க்கப் போகும் சிdhத்dhதி dhதமால்/Gகோமா நடனம். தென்னாப்பிரிக்காவில் இருந்த சிdhத்dhதி பழங்குடியினர் சிலர் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் குஜராத் பகுதிக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களது பாரம்பரிய நடனம் தான் இந்த சிdhத்dhதி dhதமால்/Gகோமா நடனம்.  பார்க்க ரொம்பவே நன்றாக இருந்தது. சித்தி பழங்குடியினர் சிலர் கர்நாடக மாநிலத்திலும் இருக்கிறார்கள். அவர்களது உணவுப் பழக்கம் பற்றிய காணொளிகளும் இணையத்தில் காணக் கிடைத்தது – அந்தக் காணொளிகளில் ஒன்று பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

பல விலங்குகளின் குரல்களை எழுப்பியும், மயிலிறகுகளை இடுப்பிலும், தலையிலும் கட்டிக் கொண்டு, முகத்தில் விதம் விதமான கோடுகளை வெள்ளை நிறத்தில் பூசிக்கொண்டு இவர்கள் ஆடும்போது ஸ்வாரஸ்யமாக இருந்தது.  அதிலும் சில குரல்கள் எழுப்பும்போது ஒரு வித பயம் கூட உருவாகலாம் – நாம் காட்டுக்குள் வந்துவிட்டோமோ என்ற பயம்! பெரிய ட்ரம் இசைத்தபடியும், பாட்டு பாடியபடியும் நடனம் ஆடுகிறார்கள். பொதுவாக இந்தக் குழுவில் 12 பேர் உண்டு – நான்கு பேர் நின்றபடி/அமர்ந்தபடி இசைக்கருவிகளை இசைத்து பாட்டு பாட, மீதி எட்டு பேர் நடனம் ஆடுகிறார்கள். இவர்களது நடனத்தின் கடைசி பகுதி சற்றே அதிர்ச்சி தரக்கூடியது – முழுத் தேங்காயை மேலே வீசி, தலையால் உடைக்கிறார்கள்.

நம் ஊரில் கூட இப்படி தேங்காய் தலையில் உடைப்பது உண்டு – எனது பதிவில் கூட திருவரங்கத்து வீதிகளில் சித்திரைத் தேரின் முதல் நாள் இப்படி தலையில் தேங்காய் உடைப்பது பற்றி எழுதி இருந்தேன். இவர்கள் மேலே தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது மேல் நோக்கித் துள்ளி, தலையால் தேங்காயை உடைக்கிறார்கள். வித்தியாசமான நடன அசைவுகள், விலங்குகளின் குரல்கள் என ரொம்பவே நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நம்மை அவர்கள் உலகத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். இனிமையான அந்த நடனத்தினைக் கண்ட பிறகு தான் நாங்கள் ஆதி மஹோத்ஸவம் நடந்த தில்லி ஹாட்டிலிருந்து புறப்பட்டோம். அலுவலகத்திலிருந்து நேரே சென்றதால், கேமரா/அலைபேசி இரண்டும் என்னிடத்தில் இல்லை – அதனால் புகைப்படங்களும் காணொளிகளும் எடுக்கவில்லை.



நான் பார்த்த இந்த நடனத்தின் வேறு சில இடங்களில் நடந்தபோது எடுத்த காணொளி இணையத்தில் கிடைத்தது. அதனை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வேறு சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நடனம் அழகாக இருக்கிறது ஜி...கொஞ்சம் பார்க்க முடிந்தது. பின்னர் முழுதும் பார்த்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் நீண்ட காணொளி தான் (11.15 நிமிடங்கள்). முடிந்த போது பாருங்கள். நடனம் நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். தாம்பூலத்தட்டு 750 ரூபாயா? அடேங்கப்பா... அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      அதிகம் என்று தோன்றியதால் தான் வாங்கவில்லை. ஆனால் மீனாகரி வேலைப்பாடு கடினமானது. அழகானதும் கூட. அதனால் இவ்வளவு விலை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நடனம் சுவாரஸ்யம். ஆரம்பத்தில் தனியராக வந்து ஒருவர் யாஹூ என்று அலறும்போது "சாஹே கோயி முஜே ஜங்க்லி கஹே..." என்று தொடரத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  5. ஹாஹா.....

    இவர்களின் பாடலில் கூட நடுவே ஜங்கிளி வார்த்தை வந்தது.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. நடனத்தினைக் கண்டு ரசித்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. தாம்பூலத்தட்டின் அழகு கண்ணைக் கவர்ந்தது. நடனம் காணொளி பார்க்கணும். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு தான். இப்படி நிறைய வடிவங்களில், வண்ணங்களில் கிடைக்கிறது. சம்படங்கள் கூடக் கிடைக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. தாம்பூலத்தட்டு அருமை ஜி.
    காணொளி கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. தாம்பூலத்தட்டு அழகு.
    நடனம் அருமை.
    ஆரம்பத்தில் ஒருவர் ஆடிய நடன அசைவுகளை பிரபு தேவா நிறைய படங்களில் செய்வார்.
    காணொளி நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. இவர்களைப் பார்த்ததும், அந்தமான் தீவில் உள்ள பழங்குடியினரின் வாழ்வில் தலையிட்டு அவர்களைக் கொச்சைப்படுத்துகின்ற சிலரை நினைத்து வேதனையடைந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் - வேதனை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. இங்கே தங்கிவிட்ட தென் ஆப்பிரிக்க பழங்குடியினர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி.ஐயா.

      நீக்கு
  13. Presented the perfect picture of the show happened in Delhi. It is newly heard.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  14. டான்ஸ் சூப்பர். அதைவிட தட்டு சூப்பர். 750 ரூபாய் விலை அதிகம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  15. தாம்பூலத்தட்டு அழகாக இருக்கிறது. நல்ல வேலைப்பாடு. காணொளி நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி

    துளசிதரன்.

    வெங்கட்ஜி டான்ஸ் முழுவதும் பார்த்துவிட்டேன். மிக நன்றாக இருக்கிறது. ரிதம் அதற்கு ஏற்ப நடனம் என்று. முதலில் வந்த தனிநபர் சில விலங்குகள் போல மிமிக் செய்தது போலத் தோன்றியது....

    தாம்பூலத்தட்டு நல்ல கலை வேலை மீனாக்காரி....வேலை எல்லாமே அழகாக இருக்கும் தான்....ஆனால் விலை அதிகம் தான். அது செய்தவருக்குக் கொஞ்சம் தான் போய்ச் சேரும் என்று தோன்றுகிறது...மீனாக்காரி வேலைப்பாடுள்ள வளையல்கள், காதில் அணியும் ஆபரணங்கள் நெக்லஸ் என்று நிறைய நன்றாகவே இருக்கும்...குருகிராம் ல் இருக்கும் தங்கை பெண் ஃபேஷன் டெக்னாலஜயில் ஜுவெல்லரி மேக்கிங்க் ல் தான் ஸ்பெஷலைஸ் செய்திருக்கிறாள். அவள் டிசைனிங்க் செய்கிறாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

      நீக்கு
  16. அருமையான நடனம்.
    இன்னொரு நடனமும்(?) அதாவது வாள்ச்சண்டை நடனம் - நம்ம அரசக்கட்டளை எம்ஜியாரை நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  17. தட்டு மிக அருமை. பரிசாகக் கொடுக்க ஏற்ற பொருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசாகக் கொடுக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  18. ஆனா இந்த மாதிரி கஷ்டப்பட்டு செய்யறவங்க கிட்ட குறைந்த விலைக்கு வாங்கி, பெரிய கடைகள் நிறைய விலைக்கு விற்கும். செய்யறவங்களுக்கு எப்போதும்போல் மனத் திருப்தியும் குறைந்த பணமும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்பவர்கள் குறைவான பணமே பெறுவார்கள் என்பது வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  19. ஆதி விழா மிகவும் அருமை.அவர்கள் நடனம் சூப்பர். தாம்புல தட்டு அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....