ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

திருவனந்தபுரம் ZOO நண்பர்கள் - கோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 3





சென்ற பகுதியில் கோவையில் எடுத்த சில படங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதி முதல் கேரளம். கேரள நாட்டிளம் பெண்களுடனே என்று பாரதி பாடியிருந்தாலும், நமது பயணம் ஆரம்பிக்கப் போவது கேரள நாட்டின் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களோடு! என்ன ஒரு கொலை வெறி!





மரம் ஏறுவது எனக்கு ரஸ்க் சாப்பிடறது மாதிரி!


இந்த மரத்தில் எந்த விலங்கும் இல்லை!


என் பூவெல்லாம் இப்படிக் கொட்டிக் கிடக்குதே!


ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
காத்திருக்குமாம் கொக்கு!


என் பெயர் சாம்பல் கானாங்கோழி!


ஐயோ என்னை ஃபோட்டோ எடுக்காதீங்க!
எனக்கு வெக்கமா இருக்கு!


என்னை வெளியில விடுங்கப்பா!


என் பேர் பார்த்துதான் சாம்பார் வந்துதா?


மான் கொம்பு சண்டை போட
என் கொம்பை உடைக்காதீங்க ப்ளீஸ்...


வெள்ளை பெயிண்ட் அடிச்சப்புறம் கருப்பு கோடு போட்டாங்களா? கருப்பு பெயிண்ட் அடிச்சப்புறம் வெள்ளை கோடு போட்டாங்களா?


கிட்ட வந்தா ஒரே போடு!


பாம்பு பார்த்தா எனக்கு பயமே கிடையாது!


நுழைவாயில் – புல் அலங்காரங்களுக்கு முன்
மின்னு, ரோஷ்ணி, கேஷவ்!

என்ன நண்பர்களே படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை.....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  2. parthen !

    rasiththen!

    anne!

    kuzhanthainga padam...
    vaarthaikal illaatha kavithai..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளே ஒரு சிறந்த கவிதை தானே சீனி!

      எங்கு சென்றாலும் குழந்தைகளை படம் எடுப்பது எனக்குப் பழக்கம் - அவர்களின் அனுமதியோடு தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  3. படங்கள் அருமை.. அதைவிட அவற்றின் கீழ் தங்களது கமென்ட்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  4. பாம்பு பார்த்தா எனக்கு பயமே கிடையாது!
    அதுதானே...! பாம்புக்குத்தானே பயமெல்லாம் ..!

    நுழைவாயில் – புல் அலங்காரங்களுக்கு முன்
    மின்னு, ரோஷ்ணி, கேஷவ்!

    ரொம்ப அழகு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆசை!

      நீக்கு
  6. 1) ஏறுமரமேறி ஓடி விளையாடுவேன்!

    2) இந்த மரத்தில் எந்த வில்லங்கமும் இல்லை!!

    3) சிக்கு மரம்! மழை வந்து நனைத்துப் பின்னி விட வேண்டும்!

    4)" 'டக்'குனு குளிச்சுட்டு வா... யாரும் பார்க்காம நான் பார்த்துக்கறேன்!"

    5) "குளிச்ச இடத்துல இப்படியா கல்யாண மோதிரத்தைத் தொலைப்பே... நான் எப்படித் தேடுவேன்?"

    6) "ஹா...ஹா... நானும் குளிக்கத்தான் போறேன்.. தைரியமிருந்தா பக்கத்துல வந்து படம் எடுங்க.."

    7) மலையாய் இருந்தாலும் சிலையாய் நிற்கிறேன்!

    8) சாப்பிட ஒண்ணுமே இல்லையே...

    10) சிக்கலாயிடுச்சி... கொஞ்சம் பிரிச்சு விடுங்கப்பு...

    11) பூ...புன்னகைப்பூ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு படத்திற்கான உங்களது oneliners அருமை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  8. ஆமாம்.. ஜூவுக்குள்ளேயே இருக்கும் மியூசியத்தைப் பார்த்தீங்களா?. திருவோந்திரத்தில் ஜூன்னு சொன்னா யாருக்கும் தெரியலை, மியூசியம்ன்னு சொன்னதும், "வோ.. அவிடயாணோ?"ன்னு சொல்லிக் கூட்டிப்போனார் டாக்சிக்காரர் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மியூசியம் பார்க்கும் அளவிற்கு குழந்தைகளுக்குப் பொறுமையில்லை! :) அதனால் வீட்டுக்குச் சென்று விட்டோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  9. zoo நண்பர்கள் பலரையும் காணோமே! மதிய உணவிற்கு பொய் விட்டார்களோ? அல்லது அடுத்த வாரம் வந்து அசத்த இருக்கிறார்களோ?

    ரோஷ்ணி, ரங்கமணி பார்த்தாயிற்று. தங்கமணியை எப்போ பார்ப்பது?

    எங்களையும் zoo விற்கு அழைத்துப் போனதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் இன்னும் சில புகைப்படங்கள் வெளியிடலாம் என விட்டுவிட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  10. நுழைவாயில் – புல் அலங்காரங்களுக்கு முன்
    மின்னு, ரோஷ்ணி, கேஷவ்!//
    குழந்தைகள் பச்சைபுல்வெளியில் அழகாய் பூத்தமலர்கள் போல் இருக்கிறார்கள்.
    படங்களும் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  11. படங்களும் அதன் கீழ் உங்கள் ஒற்றை வரி கமெண்டும் மிக அழகு.

    குழந்தைகள் படம் கொள்ளை அழகு.
    அன்றலர்ந்த மலர்களாய் இருக்கிறார்கள்.

    கேரளா சுற்றுப் பயணத்திற்கு எங்களையும் அழைத்துக் கொண்டு போவதற்கு நன்றி வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  12. குழந்தைகள் க்யூட்:)! படங்களும் அதற்கான கேப்ஷன்களும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. கண்டுகொண்டேன்.

    குட்டீஸ் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. படங்களும் உங்க வரிகளும் கியூட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  16. படங்கள் கண்களுக்கு விருந்து. நேரில் பார்த்ததுபோல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  17. நல்ல படங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி விமலன்.

      நீக்கு
  18. மானும் குட்டிகளும் வெகு அழகு.யானையும் தான். சாத்விக் காட்சி சாலையோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாத்விக் சாலை அல்ல! சிங்கம் புலிகளும் உண்டு! அடுத்த பகுதியில்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  19. அருமையான புகைப்பட பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  20. //என் பெயர் சாம்பல் கானாங்கோழி!//

    நாரையின் மறுபெயர் அல்லது மலையாள பெயர் சாம்பல் கானாங்கோழியா!

    நாரை என்றதும் எங்கள் தமிழ் ஆசான் ‘கற்கண்டு’ குமரேசபிள்ளை ஞாபகம் வருகிறார். கீழ்வரும் பாடலை சுவைபட அவர் சொல்லித் தந்ததால் இப்போதும் நினைவில் நிற்கிறது.

    ”நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

    நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
    சத்தி முத்த வாவியுட் தங்கி

    நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
    பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதி கூடலில்

    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்திக்
    காலது கொண்டு மேலது தழீஇ
    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே.”


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கறீங்க அண்ணாச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

      நீக்கு
  21. மிக அழகிய படங்கள். இந்த zoo விலும் white tiger உண்டு என கேள்வி பட்டிருக்கிறேன், அதன் படம் அடுத்த பதிவில் இடம் பெறுமா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில புலிகள், சிங்கம், சிறுத்தை ஆகியவை இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  22. படங்களும் வாசகங்களும் அருமையாக உள்ளது நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.

      நீக்கு
  23. படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

      நீக்கு
  24. //மரம் ஏறுவது எனக்கு ரஸ்க் சாப்பிடறது மாதிரி!// ;)))))

    நல்ல பகிர்வு. நானும் இங்கெல்லாம் நேரில் போய்ப்பார்த்து வந்துள்ளேன்.

    கடைசி படத்தில் குழந்தைகள் மூவரும் சூப்பர். நடுநாயகமாக ரோஷ்ணி ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நீங்களும் இங்கே சென்று வந்தீர்களா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....