வெள்ளி, 15 ஜனவரி, 2021

அந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட மன்னிக்க வேண்டுகிறேன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை - ஆஸ்கர் வைல்ட்.  


******







சஹானா இணைய இதழ் நடத்தும் ஜனவரி மாதத்திற்கான புத்தக வாசிப்புப் போட்டி பற்றி முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன்.  அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து புத்தகங்களில் எனது அந்தமானின் அழகு புத்தகமும் ஒன்று.  எனது மின்னூலுக்கு வந்த வாசிப்பனுபவங்கள் இரண்டினை இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாசிப்பனுபவத்தினை முகநூல் வழி பகிர்ந்து கொண்ட சகோதரி தீபா செண்பகம் அவர்களுக்கும் சகோதரி அகிலா வைகுந்தம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவர்கள் மொழியில் அந்தமானின் அழகு பற்றிய வாசிப்பு அனுபவங்களைத் தெரிந்து கொள்வோம். 


வாசிப்பனுபவம் - 1:  


சஹானா புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021. 

பதிவு-1

நூல். அந்தமானின் அழகு. 

ஆசிரியர். வெங்கட் நாகராஜ். 

வகை. பயண நூல். 

அந்தமானைப் பாருங்கள் அழகு, என பாடலின் வரிகளை நினைவுபடுத்தி ஆரம்பித்திருக்கிறது இந்தப் பயண நூல். அந்தமான் காதலி, சிறைச்சாலை படம் பார்த்ததும், எங்கள் உறவினர் ஒருவர் அந்த ஊரில் வியாபாரம் செய்தவர்கள், என்ற தகவலும் மட்டுமே இதுவரை அந்தமானுடனான எனது சம்பந்தம் இருந்நது. 


கற்பனையில் விரியும் அந்தமானும், இந்திய வரைபடத்தில் கிழக்கே இருக்கும் ஒரு தீவு, இந்திய யூனியன் பிரதேசம் என்ற புத்தக அறிவு மட்டுமே. 


ஆனால் ஆசிரியரின் இந்த நூல், அந்தமான் எனும் தீவை நம் கண் முன் கொண்டு வருகிறது. அங்கு கண்டு மனதை நிறைத்துக் கொள்ள வேண்டிய இடங்களைப் பற்றி முழு விவரத்தை தந்துள்ளார். 


அதிலும் அந்தமான் செல்ல விமான பயணம் முதல், நடை பயணம், டெம்போ, படகு-ஜெட்டி, கண்ணாடி படகு என நம்மையும் அவரோடு அழைத்துச் செல்கிறார். 


காலாபானியைப் பற்றிய வர்ணனையில் நமது வயிறு கலங்குகிறது. அவர்களின் தண்டனைகளைப் பற்றி சொல்லும் போது உடல் நடங்குகிறது. 


ஒலி, ஒளி காட்சியைப் பற்றி எழுதியது, எங்கள் ஊர் திருமலை நாயகர் மஹால் ஒலிஒளியை நினைவுக்குக் கொண்டு வந்தது. 


கார்பின்ஸ் கோவ் கடற்கரை, லக்ஷ்மன்பூர் சூரிய அஸ்தமனம், சீதாபூர் சூரிய உதயம், ஸ்கூபா டைவ், சீ வாக், பவளப்பாறை, கடல் வாழ் உயிரின அருங்காட்சியகம். என நம்மையும் தரிசிக்கச் செய்கிறார். 


பழங்குடி மக்களைப் பற்றி எழுதியிருந்தார். எங்கள் உறவினர் சொன்ன கதைகள் தான் ஞாபகம் வந்தது. அங்கிருந்து மர ஏற்றுமதி வியாபாரம் செய்தவர்கள். அது போல மரங்களை வாங்கச் செல்லும் போது கார் நிறைய பிஸ்கட்களை வாங்கிப் போட்டு செல்வார்கலாம், வழியில் தென்படுபடும் பழங்குடியினர் அதைத் தான் கேட்பார்கள், என்று சொல்லியிருக்கிறார்கள், அது நினைவு வந்தது. 


பயணத்தில் புல்புல் புயலைப் பற்றி குறிப்பிடவும், ஐயோ, பயணத் திட்டம் என்னாவது என நமக்கும் ஏமாற்றம் தொற்றுகிறது. ஆனாலும் தடைகளைத் தாண்டி சதுப்பு நிலக்காடுகள், சுண்ணாம்பு குகைகள், பவளப்பாறை என இயற்கையின் கொடைகளை நமக்கு சுற்றிக் காட்டியுள்ளார். 


இவரது பயணங்கள் தொடரட்டும், நாமும் பயணக் கட்டுரையில் இவரைத் தொடர்வோம். நன்றி சகோ. 


ஒரு பயணக் கட்டுரைக்கு பின்னூட்டம் என்பதும் எனக்குப் புதிது. ஆகவே நூலில் இருந்ததை, முழு பின்னூட்டமாகத் தர இயலவில்லை. மனதில் பதிந்ததைத் தந்துள்ளேன். நன்றி. 


வணக்கத்துடன். 


தீபா செண்பகம்.


*****

வாசிப்பனுபவம் - 2:  


நூல்: அந்தமானின் அழகு பயணக்கட்டுரை


ஆசிரியர்: வெங்கட் நாகராஜ்


அத்தமானுக்கு நானும் பயணித்த அனுபவம் நிறைய தகவல்கள் அவரோட ஸ்டைல் ல தந்திருக்காங்க. 


நகைச்சுவையோட அவரோட கட்டுரை அங்கங்க புன்னகைக்க வைக்கிறது.


ஆண்பாவம் பாண்டியராஜன் காலா ரஜினி வடிவேலுனு அங்கங்க சினிமாவை மேற்கோள் காட்டி விவரிச்சது அருமை.


சிறைச்சாலை பத்தி படிச்சி மனசு பாரம்.


போலீஸ்க்கு கோவில் பழைய இருபது ரூபாய் நோட்டுல இருக்கறது அந்தமானோட ஒரு தீவுங்கறது புதுத்தகவல் எனக்கு.


அந்தமானுக்கு அதிக படியா வாசித்த பெயர் சுமந்த் அந்த அளவுக்கு அவங்க உங்க பயண ஏற்பாட்டை கவனிச்சிருக்காங்க கடைசில எல்லா விவரங்களும் தந்தும் இருக்கீங்க.


சின்ன சின்ன விஷயங்கள் கூட கவனிச்சி எழுதறிங்க ஃபேமிலியா சாப்பிட்டது பட்டர் எடுத்தது எனக்கே பிரமிப்பு நேரில் பாத்த உங்களுக்கு சொல்லவே வேணாம்.


சதுப்பு நிற காடுகள்,ஸ்கூபா டைவிங் எல்லாமே நேரில் பாத்தது போல இருந்தது. பனானா ரைடு பிக் தேடினேன் அது மிஸ்ஸிங் ஆனாலும் தெளிவா விளக்கிருந்தீங்க


பார்த்த இடம் பார்க்காத இடம்னு பட்டியல் உபயோகமானது. செலவுகள் வரை தெளிவான குறிப்பு. உங்களோட 25 அமெஸான் மின்னுலையும் ஒன் பை ஒன்னா ஃபிரீ தாங்க சகோ வாசிக்க ஆவல் நா ரெண்டு விஷயம் கவனிச்சேன் கட்டுரைல ஒன்னு உங்க நகைச்சுவை இனி ஒன்னு எல்லாரையும் பொறுப்பா வழி நடந்தினது.


வாழ்த்துக்கள் சகோ உங்க அடுத்த கட்டுரைக்கு வெயிட்டிங் ❤️


அகிலா வைகுந்தம்.


*****


எனது மின்னூலுக்கான இந்த இரண்டு விமர்சனங்களை அனுப்பிய இருவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, இந்தப் பதிவு பற்றிய உங்களுடைய எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன் என்ற வேண்டுகோளுடன் இன்றைய பதிவினை முடிக்கிறேன்.  நாளை மீண்டும் காஃபி வித் பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


22 கருத்துகள்:

  1. தீபா ஷண்முகம் மதுரைக்காரர் போல...    அகிலா வைகுந்தமும் ரசனையாக எழுதி இருக்கிறார்.  அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  2. அந்தமானைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தை மிகுவித்தது உங்கள் நூலைப் பற்றிய மதிப்புரைகள். மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது நீங்களும் சென்று வாருங்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இரண்டு விமர்சனங்களும் அருமை... அவர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. விமர்சனம் அழகு ஜி மேலும் சிறக்கட்டும் மின்நூல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  6. தம்பி,

    இது போன்று பல பயணக் கட்டுரைகளை எழுதி அனைவர் மனதினையும் கொள்ளை கொள்ள வேண்டும். ஏன் என்றால் உன் பதிவில் ஒரு தெளிவு இருக்கிறது. படிப்பவர்களின் மனதில் அது பதிவாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமையை செவ்வனே செய்கிறாய். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... மகிழ்ச்சி ஸ்ரீபதி அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம்,

    “அழகிய அந்தமானை” நானும் இந்த வாசிப்பு போட்டிக்காக வாசித்தேன். வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டியது இந்த அந்தமான்.

    உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்து தங்கள் நூலின் வழியே அதை வாசிப்பவர்களையும் கூடவே பயணிக்க வைக்கும் அருமையான மொழி நடைகள்.

    நன்றிகள் 🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராம. தேவேந்திரன் ஜி. உங்கள் விமர்சனமும் முகநூலில் கண்டேன். மகிழ்ச்சியும் நன்றியும். மின்னூல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான விமர்சனங்கள்
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இரண்டு விமர்சனங்களும் மிகவும் அருமை. இதில் அகிலா சிறந்த வாசிப்பாளர். பாராபட்சம் பார்க்காமல் அனைவருடைய நூல்களையும் படித்து விமர்சிப்பவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு விமர்சனங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஞானசேகரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இரண்டு விமரிசனங்களையும் ஏற்கெனவே முகநூலிலும் படிச்சேன். அருமையாக விவரித்திருக்கின்றனர். தேர்ந்த எழுத்து. நல்ல முறையில் வந்திருக்கும் விமரிசனம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....