வெள்ளி, 1 ஜனவரி, 2021

இருபதிலிருந்து இருபத்தி ஒன்று!



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த வருடத்தில் நாம் அடைந்த சோதனைகள் தீர்ந்து வரும் வருடத்தில் நல்ல விஷயங்கள் நடக்க எனது பிரார்த்தனைகள். 


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்! கோபம், வெறுப்பு, கௌரவம், போட்டியென இல்லாமல் ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்தும் விட்டுக் கொடுத்தும் வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்! முயற்சி செய்து தான் பாருங்களேன்!


******




இந்த புத்தாண்டினை இனிப்புடன் ஆரம்பிக்கலாமா!  வீட்டிலேயே செய்த சாக்லேட்-உடன் ஆரம்பிக்கலாம்!  எப்படிச் செய்வது என்பதற்கான குறிப்பு எனது யூ ட்யூப் சேனலில் இருக்கிறது.  இதுவரை பார்க்காதவர்களின் வசதிக்காக அதன் சுட்டி - ஹோம் மேட் சாக்லேட்.


2020!


நோய்த்தொற்று, முகக்கவசம், சேனிடைசர், பொது முடக்கம், ஊரடங்கு, சமூக இடைவெளி என்று இதுவரை கேள்விப்படாத விஷயங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட வருடம் இது. சாதாரண இருமல், தும்மல் வந்தால் கூட நம் அருகிலிருப்பவர் நம்மைக் கண்டு அலறியடித்து ஓடிய வருடம்! இன்னும் எதுவும் முழுமையாக மாறவில்லை. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து வந்து விடுவோம் என்னும் நம்பிக்கை மட்டுமே மாறாமல் உள்ளது. 


இந்த வருடம் என்னை பொறுத்த வரை முதலில் சில மாதங்கள் வழக்கமான வேலைகளுடன், சற்றே வெறுமையாகவும் தான் கடந்தது. பின்பு சுதாரித்துக் கொண்டு நேரத்தை பயனுள்ள வகையில் மாற்றிக் கொண்டேன்.


கடந்த பத்து வருடங்களாக இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் இந்த வருடம் அந்த எழுத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் Amazonல் மூன்று மின்நூல்களை (E books) வெளியிட்டதில் மிக்க  மகிழ்ச்சி. தற்போது வரை உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவரால் வாசிக்கப்படுகிறது என்பது பெரிய விஷயம்!


புதிதாகவும், சற்றே வித்தியாசமாகவும் முயற்சி செய்து பார்த்த பதார்த்தங்களை புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த போதெல்லாம் யாரேனும் ஒருவராவது, நீங்க சேனல் ஆரம்பிக்கலாமே என்று இரண்டு வருடங்களாகச் சொல்லியும் சற்றே யோசனையாக இருந்தேன். ஆனால்! நீங்க இப்போ ஆரம்பிப்பது என்பது சந்தேகம் தான்! உங்களால் தனித்து எதுவும் செய்ய முடியாது! என்ற வார்த்தைகள் தான் உடனே ஆரம்பித்து விட வேண்டும் என்ற வேகத்தை உண்டாக்கியது 🙂  அதை செயல்படுத்தும் விதமாக ஆகஸ்ட் மாதம் முதல் Adhi's kitchen YouTube channel துவங்கியதும் உண்மையில் மிகப்பெரிய விஷயம். வீடியோ, பின்குரல், எடிட்டிங் என்று நேரம் சரியாக இருக்கிறது.


தோள் கொடுக்கவும், கைதூக்கி விடவும், ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ஒரு நட்பு இருந்து விட்டால் எதையும் சாதிக்கலாம். அப்படிப்பட்ட நட்பாக தோழி புவனா கோவிந்தின் சஹானா இணைய இதழும் எனக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறது. மாதந்தோறும் என்னுடைய பங்களிப்பை தந்து வருகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து தன்னுடைய நூலை (நேரலையில்) திறனாய்வு செய்ய வைத்தார். தீபாவளி போட்டிகளில் நான் பெற்ற personalised trophy, E certificate, oxidised jewellery என்று எல்லாமே மனதுக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையும் தந்தது.


பிறக்கும் புத்தாண்டில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மின்நூலை வெளியிட்டு Amazon pen to publish contest-இல் கலந்து கொள்ள வேண்டும். சேனலை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும். நுணுக்கமான பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எண்ணம்! நல்லதே நடக்கும்! என்று நம்புகிறேன்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - எங்கள் குடும்பத்தினர் அனைவர் சார்பிலும்!


நட்புடன்,


ஆதி வெங்கட்


32 கருத்துகள்:

  1. நன்றி.  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. தங்களனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகமும் பதிவும் அருமை. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனிப்புடன் கூடிய தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  7. உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். சாக்லேட் எளிதாக, அழகாக செய்து காண்பித்தது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் வெங்கட் சார் , ஆதி வெங்கட் மற்றும் ரோஷிணிக்கு ....

    தங்களின் சாக்லேட் செய்முறை பார்த்தேன் ..எளிதாக உள்ளது செய்து பார்க்கிறேன் ...
    சஹானா இணைய இதலில் தங்களின் கட்டுரைகள் மற்றும் சமையல் குறிப்புகளை வாசித்தேன் அருமை ..
    தொடரட்டும் இனிய பதிவுகள் ..

    youtube வீடியோ சில நிமிடங்கள் என்றாலும் பின்னால் நமது உழைப்பு அதிகமே ...புதிதாக கற்றுக்கொள்கிறோம் என்ற எண்ணமே நமது நாட்களை வண்ண மயமாக செய்யும் ...

    வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யாழ். பாவாணன்.

      நீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஐசி.

      நீக்கு
  13. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு


  14. நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்றிக் கொண்டது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. வீட்டில் செய்த சாக்லேட் 👌
    சாதனைகளுக்கும் மென்மேலும் சாதிக்கவும் வாழ்த்துகள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஆதி மற்றும் வெங்கட் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.நல்லபடியாக ஆக்கபூர்வமாகப் பொழுதைக் கழிப்பதற்கு வாழ்த்துகள். சாக்லேட் இனிமேல் தான் பார்க்கணும். முகநூலிலும் பார்த்தேன். ரோஷ்ணியின் சானலிலும் வந்திருப்பதற்கு வாழ்த்துகள். மேன்மேலும் புத்தகங்கள் வெளியிடவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....