அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்.
******
மகளின் அலப்பறை
என் தலைமுடியை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தவளிடம், 'இப்போ மண்டையை மறைக்க நாலு முடி தான் இருக்கு! எவ்வளவு அடர்த்தி இருந்தது தெரியுமா கண்ணா!!' என்றேன்.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். (ஏதோ வேலையாக இருக்கிறாள் போல இருக்கு!!)
சில நொடிகளில், எண்ணி நாலு முடியை கையில் பிடித்துக் கொண்டு “நிஜமா உனக்கு இவ்வளவா இருக்கு” என்கிறாள்...🙂 (ஹா..ஹா..ஹா..)
சஹானாவில் பயணக்கட்டுரை!!
சஹானா இணைய இதழ் டிசம்பர் மாத போட்டிக்கு பயணக்கட்டுரை ஒன்று அனுப்பியிருந்தேன். அது தற்போது பிரசுரமாகியுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒருநாள் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு அம்பத்தூர் முதல் மாமல்லபுரம் வரை பயணம் செய்த அனுபவத்தை பற்றி எழுதியிருக்கிறேன். வாசித்து பாருங்களேன்.
இந்த வாரத்தின் காணொளி - மட்டர் பனீர் க்ரேவி!
டெல்லியில் நாங்கள் இருந்த பகுதியில் இருந்த 'கோவிந்த் தாபா' எங்கள் நட்புவட்டத்தில் எல்லோருக்கும் பரிச்சயம்..அடிக்கடி எல்லோரும் சேர்ந்து போய் அரட்டையுடன் சாப்பிடுவோம்..இங்கு சுடச்சுட சுவைத்த மட்டர் பனீர், ஷாஹி பனீர், கடாய் பனீர், பாலக் பனீர், சோலே மசாலாவின் சுவை இன்றும் நினைவில். மேலே அமுல் பட்டர் போட்டு பரிமாறுவார்கள்..
சப்ஜி ஒரு ப்ளேட் விலை 35, 40, 50 ரூ இருக்கும். தந்தூரி ரொட்டி, தவா ரொட்டி என்று எல்லாமே 2 ரூ ,3 ரூ தான்.🙂 சென்ற வருடம் டெல்லி போன போது கூட கோவிந்த் தாபாவுக்கு போகணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தாபா இல்லையாம்..🙁
இந்த வாரம் Adhi's kitchen சேனலில் 'மட்டர் பனீர்' சப்ஜியின் செய்முறை தான் பகிர்ந்துள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
நீயா நானாவில் - Vloggers மற்றும் குடும்பத்தினர்:
இந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் Video blog செய்யும் இல்லத்தரசிகள் vs அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்! என்பது தான் தலைப்பு. எங்கள் வீட்டினரை நினைத்துக் கொண்டே பார்த்தேன்!
நான் யூட்யூப் சேனல் ஆரம்பித்து மூன்று மாதம் தான் ஆனாலும் எந்த சமையல் செய்வது என்றாலும் வீடியோவாக எடுக்கணும் என்று தான் தோன்றுகிறது..🙂 பார்க்கலாம் எங்கு கொண்டு செல்கிறது இந்த சேனல் ஆர்வம் என்று..🙂
இங்கு சோதனை எலியாக மாறுவது மகள் தான்..:))
Pentopublish4!:
Amazon நடத்தும் pen to publish contest பற்றி சஹானா இணைய இதழ் யூட்டியூப் தளத்தில் நிறைய தகவல்கள் சொல்லியிருந்தாங்க.. 'என்னிடம் புத்தகமாக்கும் அளவு ஏதும் விஷயங்கள் இல்லை' என்று விட்டுவிட்டேன்...🙂
என்னவரிடம் சொல்லி அவரை ஏதாவது மின்னூல் பதிவேற்றச் சொல்லலாம் என்று அவரிடம் சொன்னேன்! பார்க்கலாம்! எனக்கு நேரமேயில்லை! ஆஃபீஸில் நிறைய வேலை! என்று சொல்லி விட்டார்.
இப்படியிருக்க....
ஒருநாள் தோழி Bhuvana Govind , நீங்க ஏன் இந்த contestக்காக குக்கரி புக் போடக்கூடாது ஆதி?? என்று வாட்ஸப் வழி மெசேஜ் செய்தார்!
அதன் பின் யோசித்து பார்த்ததில் வரிசையாக விஷயங்கள் கிடைக்க, இப்போது அந்த போட்டிக்கு நானும் தயார் செய்து கொண்டிருக்கிறேன். மாலைநேரம் தான் லேப்டாப் என் வசம் கிடைக்கிறது..🙂 அன்றாடம் ஒரு மணிநேரம் புத்தகத்துக்காக டைப் செய்ய ஒதுக்கிறேன். அப்புறம் இரவு உணவு தயார் செய்யும் வேலை, சுத்தம் செய்யும் வேலை என்று சரியாக இருக்கிறது..🙂
போட்டிக்குள் தயார் செய்து விடலாம் என்று நினைத்துள்ளேன். பார்க்கலாம்! இந்த போட்டியை பற்றி சஹானா இணைய இதழின் யூட்யூப் பகிர்வில் பகிர்ந்த தகவல்கள் இங்கே.
இந்த வாரத்தின் இரண்டாம் காணொளி - Healthy cookies!
சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடியது.. அப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்றான pearl millet என்று சொல்லப்படுகிற கம்புமாவில், தோசை, இடியாப்பம் என்று செய்திருக்கிறேன்.. அந்த மாவுடன் இனிப்புக்காக நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து எளிதான குக்கீஸ் செய்முறை..
இந்த வாரம் Adhi's kitchen சேனலில் கம்பு மாவில் குக்கீஸ் செய்து பகிர்ந்துள்ளேன்..பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.
நட்புடன்
ஆதி வெங்கட்
கதம்பத்தை ரசித்தேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபதிவினை ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அடுத்த பதிவு வெளியிடுவதற்கு முன்பு வந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து விடுங்க. 2021 வாழ்த்துகள். ஒரு நாள் உங்களை சந்திப்பேன். எண்ணம் உண்டு.
பதிலளிநீக்குபதில் அளிக்க வேண்டும் ஜோதிஜி. இன்று செய்து விடுவேன்!
நீக்குஒரு நாள் சந்திப்போம் - விரைவில்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை ஜி... அனைத்து செயல்களிலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. கதம்பம் அருமை. சஹானா இணைய இதழில் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வாழ்த்துக்கள். முதல் பரிசை பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சமையல் காணொளிகளை விரைவில் காண்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் வளம் சேர்க்கட்டும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
Amazon நடத்தும் pen to publish contestல் தங்களின் புத்தகம் காண ஆவல் ...அதற்கு நானும் ஒரு மின்னூல் பதிப்பித்து உள்ளேன் ..
பதிலளிநீக்குஎந்த சமையல் செய்வது என்றாலும் வீடியோவாக எடுக்கணும் என்று தான் தோன்றுகிறது......ஆஹா உண்மை
பென் டு பப்ளிஷ் - உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் அனுப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் சிறப்பு. பென் டு பப்ளிஷ் போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பென் டு பப்ளிஷ் போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசு பெற வாழ்த்துகள். கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் பிஸ்கட் செய்த அனுபவம் எனக்கும் உண்டு. கேழ்வரகில் உண்மையிலேயே சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.