அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்! அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - பாரக் ஒபாமா
******
காஃபி வித் கிட்டு - 91
நம்ம சொல்றது காதுல விழாதே!
(ராஜா காது கழுதைக் காது)
சென்னையின் பரபரப்பான எக்மோர் ரயில் நிலையம் அமைதியாக இருந்தது. எப்போதுமே மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கும் அந்த. இடத்தில் அன்று இருந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. யார் பேசினாலும் சற்று தள்ளி இருந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம்! ஆனாலும் ஒருவருக்குக் கேட்கவே இல்லை. அப்படியான ஒரு விஷயம் தான் இன்றைய ராஜா காது கழுதைக் காது பகுதியாக - சற்றே இடைவெளிக்குப் பிறகு!
ஒரு பெரியவர் இரண்டு கைகளிலும் பைகளோடு நடந்து கொண்டிருந்தார். அவருக்கு சற்று முன்னர் அவரது மனைவி சென்று கொண்டிருந்தார். தவறான வழியில் சென்று விடப் போகிறாரே என பெரியவர், தனது மனைவியிடம் சப்தமாக ”அம்மணி நேரா போகணும்” என்று நான்கு ஐந்து முறை சொன்னாலும் அவர் அதைக் கேட்காமல் இடது பக்கம் திரும்ப, ”நம்ம சொல்றது காதுல விழவே விழாதே! அவ இஷ்டப்படியே நடக்கறதே வேலை!” என்று சொல்ல சிரித்து விட்டேன் - பாவம் அவர் என்று தோன்றியது!
கிண்டில் பென் டு பப்ளிஷ்: அமேசானின் மின்னூல் போட்டி
இந்த வருடமும் அமேசான் கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டி அறிவித்திருக்கிறது. நண்பர் ஜோதிஜி அவர் பக்கத்தில் விவரமாக எழுதி இருக்கிறார்.சஹானா இணைய இதழ் பக்கத்திலும் அப்பாவி தங்கமணி விவரங்களை வெளியிட்டு இருக்கிறார் - அவரது யூட்யூப் சேனலிலும் விவரங்கள் உண்டு. தமிழில் வெளியிடப்படப்படும் மின்னூல்களுக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வருவதே கடினமாக இருக்கிறது. பென் டு பப்ளிஷ் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறது - பார்க்கலாம் - மார்ச் மாதம் வரை நேரம் இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாமே! பரிசும் உண்டு - பரிசு நம்மில் யார் பெற்றாலும் மகிழ்ச்சியே.
தொடரும் இடைவெளி:
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு எழுதுவதில் நீண்ட இடைவெளி வந்து விட்டது. தலைநகர் தில்லிக்கு, திரும்பி விட்டாலும் எழுதுவது தொடரவில்லை. வீட்டு வேலைகள், அலுவலக ஆணிகள் என ஏதோ ஒன்று எழுதுவதை தடை செய்து கொண்டிருந்தது - கொஞ்சம் சுணக்கமும் உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்! எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டால் மீண்டும் தொடர்வது கடினமான வேலை தானே! இந்த இடைவெளி நாட்களில் என்னை நலம் விசாரித்த சில நண்பர்களுக்கு நன்றி! விசாரிக்காத நட்புகளுக்கும் அன்பு! :) எழுதுவது மட்டுமல்லாது நட்புகளின் வலைப்பூக்கள் பக்கமும் வருவது தடைபட்டது. முடிந்த போது படித்து விட்டேன் - சில பக்கங்களில் வந்து படித்ததின் அடையாளம் விட்டுச் சென்றாலும், பல பக்கங்களில் படித்ததோடு சரி. இனிமேல் தொடர்ந்து படிக்க வேண்டும், எழுத வேண்டும் - இந்த வருடத்தில் எழுதிய பதிவுகளை விட வரும் வருடத்தில் அதிக பதிவுகள் எழுத ஆசை உண்டு! பார்க்கலாம்.
2020 எப்படி இருந்தது?
இந்த வருடம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது! இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது! இந்த வருடம் தீநுண்மி, உலகளாவிய பிரச்சனைகள், அதிக உயிரிழப்புகள் என பலருக்கும் வேதனை அளிப்பதாகவே இருந்திருக்கிறது. ஹிந்தியில் இப்போது ஒரு காணொளி மிகவும் பிரபலமாக, பலராலும் பார்க்கப்படுகிற, பகிரப்படுகின்ற காணொளியாக இருக்கிறது - ஒருவர் மற்றவரிடம் “இந்த 2020 வருடம் எப்படி இருந்தது?” என்று கேட்க, மற்றவர் “உயிருடன் இருக்கிறேனே அதுவே பெரிய விஷயம் இல்லையா” என்று கேட்பது போல இருக்கும் காணொளி பலரும் டிக்டாக் வீடியோவாக, ரீல்ஸ் காணொளியாக தொடர்ந்து வெளியிடப்படும் காணொளியாக இருக்கிறது! உண்மை தானே - உலகம் முழுவதும் தீநுண்மி காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இப்படிச் சொல்லத்தானே வேண்டியிருக்கிறது!
இந்த வாரத்தின் இசை - ட்ரெண்டிங் பாடல்
ஒரு பாடல் - ஆல்பம் பாடலாக இருக்கலாம்! அந்தப் பாடல் இப்போது கோடிக் கணக்கான மக்களால் விரும்பப்பட்டு ட்ரெண்டிங்-ஆக இருக்கிறது - ஹிந்தி பாடல் - பாடலைக் கேட்டால் அப்படி என்ன இந்தப் பாட்டில் இருக்கிறது என எனக்குத் தோன்றியது - உங்களுக்கும் தோன்றலாம் - கேட்டுப் பாருங்களேன்! “தித்திலியான்” என்ற ஆல்பத்திலிருந்து “பத்தா நஹி ஜி கௌன் சா நஷா கர்த்தா ஹே!” என்ற பாடல் தான் இப்போது மிகவும் பிரபலமான பாடலாக இருக்கிறது! கேட்டுப் பாருங்களேன்…
பின்னோக்கிப் பார்க்கலாம் - தடுப்பது மேல்
2011-ஆம் ஆண்டின் இதே நாளில் எழுதிய பதிவு ஒன்று - பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவாக இந்த நாளில் பார்க்கலாமா? அந்தப் பதிவிலிருந்து ஒரு சில வரிகள் இங்கேயும்…
மகப்பேறு மருத்துவமனையின் வரவேற்பு அறையில் காத்திருந்தனர் அந்த தம்பதி. அவர்களுக்கு முன் சென்றிருந்த பெண் வெளிவர எப்படியும் நேரம் எடுக்கும். அதற்குள் அந்தத் தம்பதியினரை கவனிப்போம்.
அழகாக அலங்காரம் செய்து, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து அழகிய உடை அணிந்திருந்த தன் குழந்தையை “கண்ணே, மணியே, முத்தாரமே” என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டு இருந்தார் கணவன். மனைவியின் முகத்தில் நிறைய கவலை ரேகைகள், ஒருவித கலக்கமும் தெரிகிறது.
உள்ளே சென்றிருந்த பெண் வெளியே வந்து விட்டார். அடுத்தது இவர்கள் தான் என்பதால் உள்ளே சென்ற அவர்களைத் தொடர்ந்து நாமும் செல்வது நாகரிகம் அல்ல! இருந்தாலும் கட்டுரைக்காக கவனிப்போம்...
முழுப்பதிவும் படிக்க…
இந்த வாரத்தின் விளம்பரம்:
Mahindra Youth Skilling விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளிவந்தது! நன்றாக எடுத்து இருக்கிறார்கள் - எனக்குப் பிடித்தது - உங்களுக்கும் பிடிக்கலாம்! பாருங்களேன்!
என்ன நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
சஹானா இணைய இதழ் பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா. Amazon போட்டி பற்றியும், முதல் முறை Amazonல் புத்தகம் வெளியிட விரும்புவோருக்கும் நான் கீழே பகிர்ந்துள்ள வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி
பதிலளிநீக்குhttps://youtu.be/jtCYVOVmW-M
மேலதிகத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அப்பாவி தங்கமணி
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாடல் அருமை...
பதிலளிநீக்குபென் டு பப்ளிஷ் போட்டியில் அவசியம் கலந்து கொள்ளுங்கள்...
பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ம்ம்ம். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வரும் வருடம் எண்ணம் போல நிறைய எழுதிட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதொகுப்பு நன்று.
வரும் வருடம் பதிவுகள் எழுதுவது தொடர வேண்டும் - வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விளம்பரப் படம் உண்மையிலேயே அருமை...
பதிலளிநீக்குவிளம்பரப் படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி எழில்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குநலமாப்பா. தினம் தேடிக் கொண்டிருந்தேன் உங்கள் எழுத்தை.
மீண்டும் படித்துவிட்டு வருகிறேன்.
நலம் வல்லிம்மா. சற்றே இடைவெளிக்குப் பிறகு எழுத ஆரம்பித்து விட்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகளை இப்போதே
பதிலளிநீக்குசொல்லிக் கொள்கிறேன். புது வருடத்தில் இன்னும் நிறைய
பதிவுகளை
எதிர்பார்க்கிறேன்.
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் மகிழ்ச்சியோடு
இருக்க வேண்டும்.
தித்திலியான் ஆல்பம் பாடல் மிக மிக இனிமை. எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக நன்றி.
உங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா. தொடர்ந்து பதிவுகள் எழுதவே ஆசை. பார்க்கலாம்.
நீக்குதித்லியான் ஆல்பம் பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மஹீன்றா விளம்பரம் மிக சிறப்பு. உலகத்தில் அனைத்துக் குஹந்தைகளுக்கும் நல்ல வாய்ப்பு
பதிலளிநீக்குதேடி வரவேண்டும்.
மிக மிக நன்றி மா.
விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வரும் வருடம் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படம் அருமை ஐயா
பதிலளிநீக்குபடம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.