ஞாயிறு, 6 டிசம்பர், 2020

மானாவின் சைக்கிள் - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறு உங்களுக்கு நல்ல விதமாக அமைந்திடட்டும். நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மற்றவர் பார்வையில் அழகாய் வாழ்வதை விட மற்றவர் மனதில் அன்பாய் வாழ்வதே சிறப்பு. 


******



இந்த நாளில் நாம் பார்க்கப் போவது தாய்லாந்து நாட்டின் குறும்படம் ஒன்று.  சிறு வயதில், பள்ளிப் பிராயத்தில் நம் எல்லோருக்கும் இருந்த ஆசை நமக்கே நமக்காக ஒரு சைக்கிள்! இந்த ஞாயிறில் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கும் குறும்படமும் பள்ளியில் பயிலும் ஒரு சிறுவனுக்கு இருக்கும் சைக்கிள் ஆசையைப் பற்றிய படம் தான்.  அதிலும் சக மாணவர்கள் சைக்கிள் இல்லாத அச்சிறுவனைப் பற்றி தவறாக பேசும்போதும், அந்த மாணவனுடனும் நாமும் சோகமான உணர்வைப் பெறுகிறோம்.  அச்சிறுவனுக்கு சைக்கிள் வாங்க ஆசை!  ஆனால் வாங்க முடியாத நிலையில் பெற்றோர்!  


அச்சமயத்தில் கிராமத்தில் ஒரு ஓட்டப் பந்தயப் போட்டி வைக்கப் போகிறார்கள் என்று அறிவிப்பு வருகிறது. வெற்றி பெற்றவருக்குக் கிடைக்கப் போகும் பரிசு - நீங்கள் சரியாகவே யூகம் செய்திருக்கிறீர்கள் - ஒரு சைக்கிள்!  ஓட்டப் பந்தயித்தில் வெற்றி பெற தினமும் பயிற்சி செய்கிறான் சிறுவன் மானா!  பந்தயத்தில் வெற்றி பெற்றானா? சைக்கிள் அவனுக்குப் பரிசாகக் கிடைத்ததா என்பதை படத்தில் பாருங்களேன்!



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

Thai short film - มานะ (MA-NA) Eng Sub - YouTube


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 

புது தில்லி

16 கருத்துகள்:

  1. எனது பள்ளிக்காலத்தையும், சைக்கிள் நினைவுகளும் தூண்டப்பட்டது!  பள்ளியின் கடைசி மூன்று வருடங்கள் நான் எனது அண்ணனின் நண்பரின் சைக்கிளை உபயோகித்து பள்ளி சென்றுவ வந்தேன்.  ஆச்சர்யம் என்னவென்றால் அவர் இப்போது என் வீட்டருகில் இருக்கிறார்.  அவரிடம் சும்மா இருக்கும் ஆக்டிவா வண்டியை "சும்மாதான் இருக்கு..   எடுத்துக் கொண்டு ஆபீஸ் போய்வா" என்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு உங்கள் நினைவுகளை மீட்டதில் மகிழ்ச்சி.

      நல்ல மனம் கொண்ட அந்த மனிதருக்கு வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா. அவசரமே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. குறும்படம் நன்றாக உள்ளது. எப்போதுமே கனவு நிறைவேறும் போது மகிழ்ச்சிதானே.. இறுதியில் அந்தச் சிறுவனுக்கு சைக்கிள் கிடைத்ததும் நமக்கும் சந்தோஷமாக இருந்தது. சிறுவனும் நன்றாக நடித்துள்ளார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்காளுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      குறும்படம் மனதைத் தொடும் விதமாக இருந்தது என்பது நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காணொளியில் சென்று பார்த்தேன். அந்த பையனின் மன உறுதி பாராட்டுக்குரியது.
    அந்தப் பையன் அங்கு இருக்கும் சைக்கிள்களை தடவிப்பார்த்தபோது என் கல்லூரி நாட்களில், குடும்ப சூழல் காரணமாக நல்ல ஆடை அணிய இயலா நிலையில், துணிக்கடையின் ஷோ கேஸ் முன் நின்று எனக்குப் பிடித்த பேண்ட், சட்டைத் துணிகளை பார்த்துக்கொண்டே நின்றது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் வரும் பையனின் மன உறுதி - எனக்கும் பிடித்திருந்தது.

      உங்கள் நினைவுகளையும் இந்தப் பதிவு மீட்டெடுக்க உதவியிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. முயற்சி திருவினையாக்கும் சிறார்கள் காணவேண்டிய தன்னம்பிக்கை ஊட்டும் பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. இளமைக்கால நினைவலைகள் மனதில் எழுந்தன
    கல்லூரியில் காலடி எடுத்துவைத்த பிறகுதான் எனக்கே எனக்கான மிதிவண்டி கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமைக்கால நினைவுகளை உங்களுக்கும் தோன்றியது என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. குறும்படம் சிறப்பு. தொழில் நுட்பம் சுமார். சீனா மற்றும் அதனை ஒட்டி வரக்கூடிய நாடுகள் தொடங்கிய கம்போடியா தாய்லாந்து வியட்நாம் போன்ற நாடுகளில் வாழும் மக்களின் கண்களும் உள்ளே இடுக்கி காணாமல் இருப்பது போலவே இருப்பது ஆச்சரியம். முகம் வாழும் நாட்டுக்கு ஏற்ப மாறியுள்ளது. ஆனால் குரோமோசோம் ஆதிக்கம் அப்படியே உள்ளது. தோல் மட்டும் வெள்ளையாக இல்லாவிட்டால் தோற்றப் பொழிவு நன்றாக இருக்காது. பலமுறை யோசித்துள்ளேன். பசங்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....