அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
முந்தைய வெளியீடான அடுத்த மின்னூல் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அனுபவம் தவறுகளை திருத்திக் கொள்வது; ஆணவம் தவறுகளை நியாயப்படுத்துவது.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் விபா விஷா அவர்கள் எழுதிய “ஆழியின் காதலி” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்!
வகை: நாவல்
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: 263
விலை: ரூபாய் 99/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
ஆழியின் காதலி (Aazhiyin Kadhali) (Tamil Edition) eBook : விஷா , விபா
*******
சிறு வயதிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் வாசிப்பது - அதிலும் இரும்புக்கை மாயாவி போன்ற நூல்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் உண்டு. ஏனெனில் அதில் வரும் சம்பவங்கள், வீர தீர சாகசங்கள், அதில் வரும் கதாபாத்திரங்கள் செய்யும் பயணங்கள் - ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிச் சென்று கதாநாயகன் போராடி தன் முயற்சியில் வெற்றி அடைவது போல எழுதப்பட்ட கதைகள் எனக்குப் பிடித்தவை. அந்த வயதில் இப்படியான கதைகள் என் வயதொத்த அனைவருக்குமே பிடித்தமானவையாக இருந்திருக்கும். இப்போதும் இப்படியான கதைகள் எனக்குப் பிடித்தவை தான். அந்த வழியில் ஆசிரியர் விபா விஷா அவர்கள் எழுதிய ஆழியின் காதலி, படிக்க ஆரம்பித்ததிலிருந்தே விறுவிறுப்புடன் படிக்க முடியும் விதத்தில் இருந்தன - நூலில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தந்த சங்கடத்தினையும் தாண்டி! (நூலாசிரியர் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் ”வாணி” தளத்தினை பயன்படுத்துவது நலம்!)
ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் முதலாளி கடலுக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைத்த கப்பல் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகிறது. அனுப்பி வைத்த ஆராய்ச்சியாளர்களும், கப்பலும் என்னவாயிற்று என்று தெரியாத சூழல். இதனைக் கண்டுபிடிக்க யாரை மீண்டும் கடலுக்குள் அனுப்புவது என்று யோசித்து, முதலாளி அர்னவ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் விக்ரமுடன் கடலுக்குள் மீண்டும் பயணிக்கிறான். கடலுக்குள் சென்ற கப்பல் ஏன் பிரச்சனைக்குள்ளானது, இதில் ஏதும் சதி இருக்கிறதா? கடலுக்குள் சென்றவர்கள் என்ன என்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதை 263 பக்கங்களில் ஸ்வாரஸ்யம் குறையாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் நூலாசிரியர்.
இவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பலும் விபத்துக்குள்ளாகிறது - கரை ஒதுங்கிய இவர்கள் அங்கே சந்தித்தது யாரை - அவர்கள் தங்களது விடியலுக்காக அர்னவ் மற்றும் விக்ரம் ஆகிய இருவருவரையும் நம்பியது எதற்காக, அந்தத் தீவில் இருக்கும் மக்கள் யார்? அவர்களுக்கும் தேவலோக மயனுக்கும் என்ன சம்பந்தம் என்று முழுமுழுக்க சுவாரஸ்யத்துடன் சொல்லிக் கொண்டு சென்றிருக்கிறார். படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாத அளவு சுவாரஸ்யத்துடன் இந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை என்னால் இங்கே சொல்ல முடியும். இரவு உணவுக்குப் பிறகு படிக்க ஆரம்பித்து, நூலை முடித்த பிறகே உறக்கம் கொண்டே என்பதனையும் இங்கே சொல்லி விடுகிறேன்!
நிச்சயம் உங்களுக்கும் இந்த நூல் பிடிக்கலாம். தரவிறக்கம் செய்து வாசித்துதான் பாருங்களேன்! நூலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்.
பதிலளிநீக்குநூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிகுந்த சுவாரஸ்யத்துடன் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்! படித்துப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குமுடிந்த போது படித்துப் பாருங்கள் மனோம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசிக்க வேண்டும் ஜி... நன்றி...
பதிலளிநீக்குமுடிந்த போது படித்துப் பாருங்கள் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இது தொடராக சஹானாவில் வந்தப்போப் படிக்க ஆரம்பிச்சேன். ஆனால் நடுவில் வராமல் போனதில் பின்னர் விடுபட்டு விட்டது. முடிஞ்சால் மறுபடி படிக்கணும். இதற்கு முன்னர் இவர் எழுதியதும் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட விறுவிறுப்பான கதை.
பதிலளிநீக்குமுடிந்தால் வாசித்துப் பாருங்கள் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சுவாரஸ்யமான கதை என்று தெரிகிறது.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான கதை தான் ஸ்ரீராம். முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிச் சென்று கதாநாயகன் போராடி தன் முயற்சியில் வெற்றி அடைவது போல எழுதப்பட்ட கதைகள் எனக்குப் பிடித்தவை. //
பதிலளிநீக்குஆமாம். இந்தப் புத்தகமும் அந்த வகையில் மிகுந்த சுவாரசியம் என்று தெரிகிறது.
கீதா
சுவாரஸ்யமான புத்தகம் தான் கீதாஜி. முடிந்தபோது வாசித்துப் பாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆழியின் காதலி மற்றும் எழுத்தாளர் பெயர் ரொம்பவும் அறிந்த பெயராக இருக்கிறதே என்று பார்த்தால் உங்கள் விமர்சனம் வாசித்ததும் இந்தக் கதை கொஞ்சம் வாசித்த நினைவு வந்தது. சஹானாவில். வாசித்துவிடுகிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
சஹானாவில் முடிந்தால் வாசித்துப் பாருங்கள் கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்லதொரு அறிமுகம்.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குபடிக்கத் தூண்டும் விமர்சனம்
பதிலளிநீக்குநன்றி ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்.
பதிலளிநீக்குநூலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
முடிந்த போது வாசித்துப் பாருங்கள் அரவிந்த்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான மதிப்புரை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்கு