அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
TAKE CARE OF YOURSELF FIRST OR YOU WILL HAVE NOTHING LEFT TO GIVE OTHERS; SELF-CARE IS NOT SELFISHNESS; IT’S A NECESSITY, YOU CANNOT SERVE FROM AN EMPTY VESSEL.
******
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி இரண்டு
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி மூன்று
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி நான்கு
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஐந்து
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஆறு
மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஏழு
சென்ற பகுதியில் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று அபிஷேகங்களை கண்டுகளித்த பின் அங்கிருந்து மதுரைக்கு கிளம்பியது வரை எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் அதைத் தொடர்ந்து நாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
மாலை 4 மணிவாக்கில் அம்பாசமுத்திரத்திலிருந்து கிளம்பிய நாங்கள் திருநெல்வேலி வழியாக மதுரையைச் சென்றடையும் போது 8:30 மணியாகி விட்டது. இடையில் ஒரே ஒரு இடத்தில் காஃபி, டீ போன்றவற்றுக்காக நிறுத்தியது தான். அதுவே காலையில் கோவிலுக்குச் செல்லும் போது 7 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பிய நாங்கள் அம்பாசமுத்திரத்தை எட்டும் போது 1 மணியாகி விட்டதே!
வேனிலிருந்து நாங்கள் ஆறு பேர் மட்டும் மதுரை பைபாஸில் இறங்கிக் கொண்டோம். மீதி எல்லோரும் நேரே மதுரையில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று விட்டார்கள். அங்கிருந்து மறுநாள் சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி என்று அவரவர் இடத்துக்கு சென்று விடுவதாக திட்டம்.
நாங்கள் ஆறு பேரும் காரில் ஏறி முதலில் இரவு உணவுக்காக ஹோட்டல் 'Sabarees''க்குச் சென்றோம். மதுரையில் இது ஒரு பிரபலமான ஹோட்டல் போல! நல்ல கும்பல். வெயிட்டிங்கிலேயே நிறைய பேர் இருந்தார்கள். நாங்களும் சிறிது நேரம் காத்திருந்த பின் தான் இடம் கிடைத்து சாப்பிட உட்கார்ந்தோம்.
அந்த நேரத்தில் எனக்கு பசியை விட தூக்கம் தான் கண்களை சுழட்டியது என்று சொல்லணும். காலையில் டேஷுக்கு மாத்திரை போட்டுக் கொண்டேன் என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா! அதே போல் மாலையிலும் கிளம்பும் போது போட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இந்த தூக்க கலக்கம்...:)
எல்லோரும் அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுக்க, என்னையும், மகளையும் பொறுத்தவரையில் வெளியில் சாப்பிடுவது என்பது மிகவும் அரிது என்பதால் என்ன ஆர்டர் செய்வது என்றே தெரியலை..:) எல்லோரின் ஆர்டரை கேட்டு விட்டு மகள் அவளுக்கு Chola poori என்று சொல்ல, எனக்கு எண்ணெய் பதார்த்தங்களே வேண்டாம் என்று சொல்லி ரொம்ப யோசித்து வெங்காய ஊத்தாப்பம் ஆர்டர் கொடுத்தேன்...:)
சட்னி, சாம்பாரோடு சுடச்சுட நன்றாகவே இருந்தது. அதற்கடுத்து ரவா தோசையும் சாப்பிட்டு எழுந்தேன். அங்கிருந்து அதன் பின் எல்லோரும் காரில் ஏறி சிவகங்கைக்கு புறப்பட்டோம். நான் பிறந்த மண்ணான சிவகங்கைச் சீமைக்கு மதுரையிலிருந்து ஒரு மணிநேரப் பிரயாணம். காரில் ஏறி அமர்ந்தது தான் தெரியும். காரில் ஆடியாடி விழுந்திருக்கிறேன்..:) அப்படி ஒரு தூக்கம்..:)
10:30 மணியளவில் சிவகங்கையை அடைந்ததும், அதன் பின் ஐந்து நிமிடங்கள் தான் எனக்கு தேவைப்பட்டன, உடையை மாற்றிக் கொண்டு படுத்து விட்டேன். புதிய இடம் என்பதால் மதுரையில் வேறு இரண்டு நாட்களாக தூக்கமே வரவில்லை. ஆனால் இப்போது ஒன்றுமே தெரியலை..:) அருமையான தூக்கம்..:)
அடுத்த நாள் மாலை வரை சிவகங்கையில் தான் இருந்தேன். என்ன செய்தேன்? எப்போது கிளம்பினேன்? போன்ற தகவல்கள் அடுத்த பகுதியில்..
******
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
ரவா தோசை... சாப்பிடும் ஆசை வருகிறது!
பதிலளிநீக்குஆசை வந்தால் சாப்பிட வேண்டியது தானே ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பின் ஆதி ,
பதிலளிநீக்குஅருமையான பயண விவரங்கள். இத்தனை தூரம் ஒரே நாளில்
பயணம் செய்வது கொஞ்சம் அலுப்புதான்.
அதுவும் வெவ்வேறு திசையில்.
சிவகங்கை எப்படி இருக்கும் என்றே தெரியாது.
படங்கள் எடுக்கவில்லையா.
ஒரே நாளில் அதிக தூரம் பயணிப்பது கடினம் தான் வல்லிம்மா. சிவகங்கை குறித்த சில பதிவுகள் இங்கே வெளியிட்டு இருக்கிறார். படங்களும் உண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முகநூலில் படித்தேன். மீண்டும் இங்கு படித்தேன்.
பதிலளிநீக்குஹோட்டல் 'Sabarees சென்று இருக்கிறோம். நன்றாக இருக்கும் உணவு.
ஹோட்டல் சபரீஷ் - நீங்களும் அங்கே சென்று உணவு உண்டது அறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா. சில உணவகங்கள் நன்றாகவே இருக்கின்றன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல பயண விவரங்கள்
பதிலளிநீக்குபயண விவரங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான பயணம்...
பதிலளிநீக்குபயணம் சிறப்பாகவே அமைந்தது தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவிளக்கமாக பயண விபரங்களை தந்துள்ளீர்கள். நாங்களும் இந்த கொரோனா வந்ததிலிருந்து வெளி உணவை இதுவரை சாப்பிடவேயில்லை. நீங்கள் ரவா தோசை என்றதும் ஆசை கொஞ்சமாக எட்டிப் பார்க்கிறது.:) அடுத்தப் பகுதியையும் தொடர ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபயண விவரங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.