அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் - நேதாஜி
******
சுமோ கார்ட்:
நேற்றைய பொழுதில் அருகேயுள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிய வந்தது! சில நாட்களாக எனக்கும் பூஸ்டர் போட்டுக் கொள்ள கெடு வந்துவிட்டதாக மெசேஜ் வந்து கொண்டிருந்தது. சரி! போய் தான் பார்ப்போம் என்று கிளம்பினேன்.
பகல் 12 மணிக்கு முகாம் என்று தகவல் வந்திருந்ததால் 12:30 போல அங்கு சென்று பார்த்தேன். அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் தான் இருந்தார். 'இதுவரைக்கும் யாரும் வரலையேம்மா! உங்க நம்பர இங்கே எழுதி வெச்சுட்டு போங்க! வந்ததும் நா ஃபோன் பண்றேன்!' என்றார். எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.
கொஞ்ச நேரம் பார்க்கலாம் என்று 'யாரிவள்' தொடரின் 52வது பகுதியை டைப் செய்து கொண்டிருந்தேன். 1:30 மணி போல புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவே எடுத்தால்… 'அம்மா! அவங்க வந்துட்டாங்க! வரும் போது ஆதார் கார்டும், சுமோ கார்டும் எடுத்துட்டு வாங்க! என்றார். சுமோ கார்டா..???? என்ன இது??
'ஐயா! ரெண்டாவதா ஏதோ ஒண்ணு சொல்றீங்க! என்னன்னு புரியலையே! என்றேன். 'சுமோ கார்டு'ன்னா எப்படி சொல்றது!! மாசா மாசம் நம்ம ஜாமான் வாங்குவோமில்லம்மா! என்று சொன்னதும் தான் புரிந்தது..🙂 ரேஷன் கார்ட்! ஸ்மார்ட் கார்ட் தான் சுமோ கார்டாகி விட்டது. இதோ வரேன் ஐயா! என்று சொல்லி புறப்பட்டேன்.
ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மூன்று செவிலியர்கள் அந்த முகாமுக்கு வந்திருந்தார்கள். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை சோதித்த பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது! மக்கள் தொகை கணக்கெடுப்பும் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் வயது கேட்கப்பட்டு குறித்துக் கொள்ளப்பட்டது! செவிலியர்களும் கனிவுடன் பேசி தகவல்களைத் தெரிந்து கொண்டார்கள்.
அங்கே வந்திருந்த ஒரு பெண்மணி இந்த செவிலியர்களிடம் 'தான் அப்பல்லோவில் 900 ரூ கொடுத்து பூஸ்டர் போட்டுக் கொண்டதாக பெருமையடித்துக் கொண்டிருந்தார்..🙂 என்னுடைய முறை முடிந்ததும் செவிலியர்களுக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
ஓரிடத்தில் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அபார்ட்மெண்ட்டின் சின்சியர் வாட்ச்மேனிடம், ஐயா! ஃபோன் பண்ணி எனக்கு தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி! என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.
கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கும் இந்த நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
******
ஆடிப்பிறப்பு ஸ்பெஷல்:
ஆடிப்பால் காய்ச்சி அம்பாளுக்கு நிவேதனம்.
எல்லோரும் நலமோடு இருக்கட்டும்!நல்லதே நடக்கட்டும்!
******
அவளும் நானும்:
பண்பலையில் அன்றாடம் திருக்குறளின் ஒரு அதிகாரம் பொருளுடன் சொல்லப்படுகிறது. நேற்று முதல் தொடர்ந்து 133 நாட்களுக்கு என அறிவிப்பு..
இன்றைய அதிகாரம் வான்சிறப்பு என்று சொன்னவுடன் அம்மா எனக்கு அதுல நாலு குறள் தெரியும் என்றாள்.
உனக்கு??
எனக்கா!!
இருவரும் வரிசையாக அவரவருக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டு வந்தோம். அவள் படித்தது எனக்கு தெரியலை. நான் படித்தது அவளுக்குத் தெரியலை. இருவருக்கும் அறிந்ததும் இருந்தது.
&*&*&*&*&
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா!!
என்னோட ஃபேவரிட் கண்ணா! முன்னாடி ரிங்டோனா கூட வெச்சிருந்தேன்...
இப்போ என்னோட ப்ளே லிஸ்ட்ல வெச்சிருக்கேன் ம்மா. சாயங்காலம் நாம கேட்கலாம்! ஓகேவா!
&*&*&*&*&
'யாரிவள்' தொடரை அமேசான்ல மின்னூலாக்கணும். அட்டைப்படத்துக்கு ஒரு சுட்டிப்பெண் ஓவியம் வரைஞ்சு தாடா செல்லம்!
இது ஓகேவா பாரு!
சரி! நான் தொடரை முடிக்கறதுக்குள்ள வரைஞ்சு குடு!
ஓகே!
&*&*&*&*&
இப்படியாக புத்துணர்வுடன் துவங்கிய நாளில் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சுமோ கார்ட் - ரசித்தேன். நான் இன்னும் பூஸ்டர் போட்டுக் கொள்ளவில்லை. வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
பதிலளிநீக்குபூஸ்டர் போட்டுக் கொள்வது நல்லது சார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
133 நாட்களும் சிறப்பு...
பதிலளிநீக்குஆமாம் சகோ.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
நீக்குநான் இரண்டாவது பூஸ்டர் போட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்து விட்டது.
பதிலளிநீக்குபோடாமலே போட்டு விட்டதாக செய்தி வந்துள்ளதா!!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
பூஸ்டர் (மூன்றாவது ஊசி) போட்டுக் கொண்டாயிற்று இரு மாதங்களுக்கும் மேலாகிறது.
பதிலளிநீக்குசுமோ- ஹாஹாஹா சிரித்துவிட்டேன். முதலில் ஊகிக்க முடியவில்லை.
சுவாரசியமான பொழுதுகள் உங்களுக்கும் ரோஷிணிக்கும் இடையே.
கீதா
பூஸ்டர் போட்டுவிட்டீர்களா! நல்லது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
பதிவு அருமை.
பதிலளிநீக்குமுகநூலில் படித்தேன்.ரோஷ்ணியும் நீங்களும் பேசியதை ரசித்தேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகதம்பம் நன்று.
பதிலளிநீக்குபூஸ்டர் டோஸ் இனிதான் போட்டுக் கொள்ள வேண்டும்.
துளசிதரன்
வாய்ப்பு கிடைக்கும் போது போட்டுக் கொள்ளுங்கள் சார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
பூஸ்டர் போட்டது நன்று.
பதிலளிநீக்கு