அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும் - அலக்ஸாண்டர் போவ்.
******
குழந்தையோட பேர் என்னம்மா??
வினயா!
டேட் ஆஃப் பர்த்? அப்பா பேர்?
அப்ளிகேஷனில் பூர்த்தி செய்வதற்காக வரிசையாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வந்தார் அந்த பள்ளியின் அலுவலர்!
விமலா அவ்வப்போது தன் அலைபேசியில் மணியைப் பார்த்தவாறே அந்த அலுவலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தில் சொல்லிட இயலாத அளவு கோபமும், ஏமாற்றமும் காணப்பட்டது. பொது இடத்தில் அதைக் காண்பித்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஒரு வாரம் கழிச்சு வாங்கம்மா! மேடம் பார்த்துட்டு சொல்லுவாங்க! அட்மிஷன் போட்டுடலாம்! என்று அந்த அலுவலர் சொல்லவே…..
விமலாவும் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி விட்டாள். மதிய உணவை சமைத்து குழந்தைக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்ட பின் வினயாவை தூங்க வைத்தாள்.
மூன்று மணி போல வாசலில் அழைப்பு மணியின் ஒலி! சற்றே கண்ணயர்ந்து விட்ட விமலா திடுக்கிட்டு விழித்தாள். விவேக் தான் நின்று கொண்டிருந்தான். அதுவரை மறந்து போன விஷயம் இப்போது நினைவுக்கு வந்தது. விமலாவின் முகமும் மாற்றம் கொண்டது.
ஆஃபீஸ் மீட்டிங்ல இருந்தேண்டா! அது தான் சைலண்ட்ல போட்டிருந்தேன்.
அப்புறம் ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? அட்மிஷன் போட்டுக்கலாம்ல?
வினயா குட்டிக்கு ஸ்கூல் புடிச்சிருந்ததா?
என்று வரிசையாக கேள்விகளாக கேட்டும் அவள் பதில் ஒன்றும் தராதது விவேக்கிற்கு அவளின் கோபத்திற்கான காரணத்தை உணர்த்தியது.
விம்மி! என்னாச்சுடா? ஸ்கூலுக்கு வர முடியாம போனதுக்காகவா இப்படி கோபப்படற! ஏண்டா செல்லம்! ஆஃபீஸ்ல ரொம்ப டைட்டு டா! நீ தான் என்ன சரியா புரிஞ்சிப்பன்னு பார்த்தா இப்படி பண்றியே!
சரி! அதெல்லாம் இருக்கட்டும்…
அப்புறம்! ஒரு விஷயத்தை பத்தி உங்கிட்ட சொல்லியே ஆகணும்டா! என்றான்.
கோபத்தை விட்டுவிட்டு 'என்ன விஷயம்'? என்பது போல ஆர்வத்துடன் பார்த்தாள்.
அது என்னன்னா 'இப்போ தான் ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா' என்றான்!
அதைக் கேட்டதும் விமலா அவனை ஆக்ரோஷத்துடன் முறைத்தாள்!
இப்போ அழகுன்னா இதுக்கு முன்னாடி எப்படி இருந்த தெரியுமா….!! என்று அவன் கேட்டதும் அவனை துரத்த ஆரம்பித்தாள்.
விவேக்கும் இவளிடமிருந்து தப்பித்துக் கொண்டே 'எனக்கு பசிக்குதுடா' என்று பாவமாய் சொன்னான்.
அடடா! நீங்க இன்னும் சாப்பிடலையா! வாங்க! சாப்பாடு எடுத்து வைக்கிறேன்! என்று சொன்னவாறு கிச்சனுக்குள் சென்றாள்.
பின்னே சென்ற விவேக் அவளை அணைத்துக் கொண்டவாறே நீயும் ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்! ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்! நான் கைல பிசைஞ்சு போடறேன்' என்றான்.
நான் ஒழுங்கா சாப்பிடலைன்னு எப்படித் தெரியும்? என்று கேட்டாள்.
அதான் என் மேல காட்டறதுக்காக கோபத்தை தான் நிறைய ஸ்டோர் பண்ணி வெச்சிருந்தியே..🙂 அப்புறம் எப்படி வயிறு நிறைய சாப்பிட்டிருப்ப சொல்லு! என்று சிரித்தான்.
அதைக் கேட்டதும் விமலாவுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. வெட்கத்துடன் தலைகுனிந்த வாறே சாதத்தை வாங்கிக் கொள்ள கையை நீட்டினாள்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் உன் கூடவே தான் இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா வேலையையும் பார்க்கணும் இல்லடா! நாம சந்தோஷமா இருக்க அது முக்கியமில்லையா சொல்லு!
வினயா குட்டிக்கும் இந்த விமலா குட்டிக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்ல! என்ன! அவள விட இவ கொஞ்சம் பெரிசா இருக்கா! அவ்வளவுதான்..🙂
குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவளின் முகத்தை பார்த்தவாறே 'இப்போ உன் மூக்குக்கு மேல கோபம் வந்திருக்கணுமே!' என்றான்.
நமட்டு சிரிப்புடன் அங்கே கலகலப்பு உண்டானது.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
எல்லா வீடுகளிலும் இப்படி மனைவி அமைந்து விட்டால் காலமெல்லாம் மகிழ்ச்சியே...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குவிவேக்
பதிலளிநீக்குவிமலா
வினயா
ஹா.. ஹா.. ஹா..
அந்த சமயத்தில் தோன்றியது சார். நன்றி.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
நீக்குகதை நல்லா இருக்கிறது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குசுவாரஸ்யமான தாம்பத்யம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குஇப்படியான சிறு சிறு ஊடல்கள்தான் குடும்ப வாழ்க்கையை நல்ல ரிதத்தில் கொண்டு செல்லும். கதை நன்று
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.
நீக்குகதை நல்லாருக்கு ஆதி.
பதிலளிநீக்குகீதா
தங்களின் வருகைக்கும் கதை குறித்த கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நீக்குசுவாரஸ்யமான கதை.
பதிலளிநீக்கு