வியாழன், 21 ஜூலை, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பத்தி ஆறு – இவள் செய்த உதவி!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உன்னைப் புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை ; உன்னைப் புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை - கௌதம புத்தர்

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

யாரிவள்! பகுதி நாற்பத்தி ஆறு - இவள் செய்த உதவி!



 

சுட்டிப்பெண் ஒவ்வொரு பருவத்திலும் கற்று வந்த கலைகளைப் பற்றியும் அவளுக்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். தொடர்ந்து வந்து கொண்டிருந்த தொடரில் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டதால் இடைவெளியாகி விட்டது. அவள் இப்போது ஒன்பதாம் வகுப்பில் இருக்கிறாள்.

 

ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டு அவள் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். தனக்கான வாழ்க்கை முறையும், கொள்கைகளும், சிந்தனைகளும் அவளை வழிநடத்திச் சென்றன. நிதானத்துடன் ஆரவாரம் ஏதுமின்றி நாட்களை கடந்து கொண்டிருந்தாள்.

 

கற்றுக் கொண்டிருந்த ஹிந்தி மொழியில் ஆறு நிலைகளில் தேர்வாகி விட்டாள். ஐந்தாம் நிலையான விஷாரத் பூர்வாத்தை அப்பாவின் அலுவலகத்துக்கு அருகேயுள்ள அஞ்சு முக்கில் கற்றுத் தேர்ந்தாள். ஆனால் ஆறாம் நிலையை கற்பதில் சிக்கல்கள் உருவானது. பள்ளியின் நேரம் அவளை தடுமாற வைத்தது. அங்கே இங்கே என வகுப்புகளை மாற்றி இறுதியில் தனக்குத் தானே ஆசானாக மாறி கற்றுத் தேர்வானாள்.

 

இனி! அடுத்த நிலையான ப்ரவீன் என்பதை இப்போதைக்கு வேண்டாம் என அப்பாவிடம் சொல்லித்  தவிர்த்தாள். அடுத்த வருடம் அவள் பத்தாம் வகுப்பு ஆயிற்றே! மாநிலத்திலேயே  முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது தான் அவள் தனக்காக அமைத்துக் கொண்ட இலக்கு! அந்த இலக்கை நோக்கியே செயல்படத் துவங்கினாள்!

 

டெல்லியில் உள்ள ஹிந்தி இயக்ககம் மூலம் ஆறு மாத  டிப்ளமோ பயிற்சி  செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒன்பதாம் வகுப்பிலேயே அதை முடித்து விடலாம் என அப்பாவும் அம்மாவும் எடுத்துச் சொல்ல தபால் வழி டிப்ளமோவும் கற்கத் துவங்கினாள். தபாலில் வந்த பாடங்களை படித்து தனக்கு தெரிந்த விதத்தில் அதற்கு பதிலளித்து பூர்த்தி செய்து அனுப்புவாள்.

 

பின்பு தேர்வு வைத்த போதும் தான் கற்றதை பக்குவமாக எழுதினாள். அங்கே அவளுடன் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். பதவி உயர்வுக்காகவும் ஊக்கத் தொகைக்காகவும் கற்றவர்கள். இவளின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் இவளின் விடைத்தாளை கேட்க சற்றும் யோசிக்காமல் கொடுத்து விட்டாள்! தரவில்லை என்றால் வெளியே வந்த பின் அடித்து விடுவாரோ என்ற பயம் அவளுக்கு!

 

அந்த மனிதரும் தனக்கு வேண்டிய விடைகளை இவளின் விடைத்தாளைப் பார்த்து எழுதிக் கொண்டு திருப்பித் தந்தார். இவள் அந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றாள். அந்த மனிதருக்கும்  பதவி உயர்வோ, ஊக்கத் தொகையோ கிடைத்திருக்கலாம்! 

 

இந்த ஒன்பதாம் வகுப்பிற்குள் ஹிந்தி பிரச்சார சபாவின் மூலம் ஆறு நிலைகளும், இயக்ககம் மூலம் ஒரு டிப்ளமோவும் முடித்து விட்டாள். இனி! அடுத்த வருடம் பள்ளிப்படிப்பில் மட்டுமே அவளின் கவனம் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டாள்! அப்படியிருக்க முடிந்ததா அவளால்! இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. மீண்டும் பதிவை தொடங்கியது மகிழ்ச்சி.

    அடுத்த படிப்பு நிலவரத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் வருகை தந்ததுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். இவை முகநூலில் படிச்சுடறேன். :)

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் தொடங்கி இருப்பதற்கு வாழ்த்துகள். மகிழ்ச்சி. இந்தத் தொடர் நானும் பேஸ்புக்கில் படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் பதிவு வருவது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    சுட்டிப் பெண் படு கெட்டிபெண்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹிந்தி டிப்ளமோ....சூப்பர். அந்த மனிதர் எப்படி இப்படி காப்பி...அடப்பாவி....வயதாகியும் புத்திய பாருங்க....
    காப்பி அடித்து பிரமோஷன்...ஊக்கத்தொகை....ம்ம்ம்..என்னவெல்லாம் எப்படி எல்லாம் செய்கிறார்கள்!

    மீண்டும் தொடர்வது குறித்து மகிழ்ச்சி, ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் நடந்ததா? நீங்கள் அப்போது சிறுபிள்ளை என்பதால் கொடுத்திருக்கிறீர்கள். ஹிந்தியில் பரீட்சைகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். முகநூலில் வாசித்தாலும் அங்கு லைக் மட்டும்தான் செய்கிறேன். இங்கு கருத்து.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் தொடர்.... மகிழ்ச்சி தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....