ஞாயிறு, 31 ஜூலை, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி ஒன்று – இதுவும் கடந்து போகும்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட சிறகுகள் சிறுகதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் - வால்ட் டிஸ்னி

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி ஒன்று - இதுவும் கடந்து போகும்!



 

சுட்டிப்பெண் பொறுப்பான பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டாள். அம்மாவுக்கு இயலாத நேரத்தில் எல்லாவற்றையும் பொறுப்புடன் பார்த்துக் கொள்வது, தனக்கு தெரிந்த விதத்தில் சமையல் செய்வது, மற்ற வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வது, அப்பா அலுவலகத்துக்கு செல்ல உதவுவது, அம்மாவை கவனித்துக் கொள்வது என்று தன்னை பழக்கிக் கொண்டு விட்டாள். 

 

அம்மாவை மருத்துவமனையிலும், வீட்டிற்கு வந்த பின்பும் காண வந்தவர்கள் அம்மாவின் நலனை விசாரித்துக் கொண்டும் இவளின் பொதுத்தேர்வு முடிவுகளை கேட்டுக் கொண்டுமிருந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அம்மாவும், அப்பாவும் தங்கள் மகளின் மதிப்பெண்களைப் பற்றி பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

இதனிடையில் அப்பா இவளை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்து விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவள் படித்த பள்ளியிலேயே முதல் க்ரூப் தருவதாகச் சொன்னாலும், இவளின் கனவுப் பாதை தான் மாறி விட்டதே! இனி அந்தப் பாதையில் தடையின்றி நெடுந்தூரம் பயணிக்கனும் என்ற ஒரே எண்ணம் தான் அவளுக்கு இருந்தது.

 

கோவையின் அரசினர் பாலிடெக்னிக்கிலும், பிரபலமான கல்லூரி ஒன்றிலும் விண்ணப்பித்தார்கள். இரண்டிலுமே அவளுக்கு மெரிட்டில் இடம் கிடைத்தது. அப்போதைய பொருளாதார நிலையை எண்ணி அப்பா அரசுக் கல்லூரியில் இவளைப் படிக்க வைக்க நினைத்ததால் அட்மிஷனும் அதில் செய்தாகி விட்டது. 

 

இவளுக்காக தரப்பட்ட இரண்டு துறைகளில் கட்டுமானத் துறையும் இருந்தது. அப்பா பொதுப்பணி துறையில் இருப்பதால், அது வேண்டாம்! வித்தியாசமாக இருக்கும், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று இவளை இயந்திரவியலை தேர்ந்தெடுக்கச் சொன்னார். இனி இவளின் பாதை இயந்திரங்களோடு தான்! அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை!

 

அம்மாவுக்கு அதன் பின்பு 21 நாட்களுக்கு ஒருமுறை கீமோதெரபி செய்யப்பட்டது. முதல்நாள் மாலை அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் செய்வதும், அடுத்த நாள் காலை I.V மூலம் அம்மாவுக்கு நிதானமாக மருந்து செலுத்தப்பட்டு மாலை வீடு திரும்புவதும் வழக்கமானது. அப்போது ஒன்றும் தெரியாது!

 

அந்த மருந்தின் வீரியத்தால் அம்மாவால் இரண்டு நாட்களுக்கு இயல்பாக இருக்க முடியாது! கோபமும், அழுகையும், இயலாமையும் முகத்தில் தென்படும். படுத்துக் கொண்டிருந்த தலையணையில் கொத்து கொத்தாக அம்மாவின் தலைமுடி காணப்படும். இந்த அனுபவங்கள் எல்லாமே அவர்கள் எல்லோரையும் திகிலடைய வைத்தது! கவலை கொள்ள வைத்தது!

 

இந்த நிலை மாறுமா?? நாம் எல்லோரும் பழைய நிலைக்கு வருவோமா என்று ஏங்க வைத்தது! அதை பழகிக் கொள்வதற்குள் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது! மனது முழுவதும் துக்கம் நெஞ்சை அடைக்க, அம்மாவிடமும் அதை பெரிதாக காண்பித்துக் கொள்ள முடியவில்லை! இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்க வைத்தது!

 

இன்னும் என்னென்ன நிலைகளை காண வேண்டியிருந்தது அவளுக்கு!!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

8 கருத்துகள்:

  1. இக்கட்டான சூழ்நிலையில் படித்து வந்து இருக்கிறீர்கள்.
    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. கடினமான நாட்களை கடந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. தங்களது இன்றைய பதிவின் கனம் மனதை வருத்தமுற வைக்கிறது. நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சந்தோஷத்துடன், அம்மாவின் உபாதைகளை பார்த்து கவலைப்படும் சூழ்நிலைகளை தங்களுக்கு ஆண்டவன் தந்திருக்க வேண்டாம். என்ன செய்வது? விதியை நம்மால் என்றும் வெற்றி கொள்ளவே இயலவில்லையே? உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என தெரியவில்லை. அன்றைய நிலைமையில் கடினமான காலகட்டங்களை தாண்டி வந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக வேதனையான நாட்கள் ஆதி. இதையும் கடந்து வந்திருப்பது உங்களுக்கு நிறைய அனுபவப் பாடங்களைக் கொடுத்திருக்கும். இப்படியான சூழல் யாருக்கும் வரக் கூடாதுதான். நானும் நேரில் பார்த்து அனுபவித்ததும் உண்டு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனது முழுவதும் துக்கம் நெஞ்சை அடைக்க, அம்மாவிடமும் அதை பெரிதாக காண்பித்துக் கொள்ள முடியவில்லை! இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்க வைத்தது!//

      உண்மை, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தான் நினைக்க சொல்லும்.

      அந்த நிலையை கடந்து வர வெகு நாட்கள் ஆகி இருக்கும்.

      நீக்கு
  5. கொடிய நோய், கஷ்டமான சூழல். கடந்துவந்திருக்கிறீர்கள். நிறைய அனுபவங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கையில் மிகவும் வேதனையான தருணம் . அதையும் கடந்து வந்தீர்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....