அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
யாரிவள்! பகுதி நாற்பத்தி எட்டு - தவறாமல் வந்த ஜூரம்!
சுட்டிப்பெண் ட்யூஷன் சேர்வதற்காக சென்ற இடத்தில் அந்த ஆசிரியை 'கடைசி நேரத்தில் எல்லாம் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று சொல்லவும், அம்மா அவரிடம் டெஸ்ட் வைத்து நல்லா எழுதினா எடுத்துக்கோங்க! என்று சொன்னதால் ஆசிரியை டெஸ்ட் எழுத வைத்து இவளை சேர்த்துக் கொண்டார். அதன் பிறகான மூன்று மாதங்கள் அங்கே தான் சென்று வந்தாள்.
வீட்டிலிருந்து பத்து நிமிட நடையில் டியூஷனுக்குச் செல்ல வேண்டும். மாலை இவளே சென்று விடுவாள். இரவு அம்மாவோ, அப்பாவோ, தம்பியோ வந்து அழைத்துச் செல்வார்கள். அங்கே கணக்குக்கும், அறிவியலுக்கும் தான் ட்யூஷன் சென்றாள். அந்த ஆசிரியை மூலம் தான் இவளின் கனவுப் பாதையும் மாறியது.
ஒவ்வொருவரிடமும் பள்ளிப்பருவத்துக்கு பின் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்க, இவள் தன் மருத்துவராகும் கனவைப் பற்றியும் பெற்றோர் 'நீ எத்தனை தான் மார்க் எடுத்தாலும் எங்களால் படிக்க வைக்க இயலாது!' என்று சொல்வதாகவும் சொன்னாள்!
அப்போ நீ இஞ்சினியரிங் படிக்கலாமே! பத்தாவது முடித்ததும் பாலிடெக்னிக்ல சேர்ந்துடு! அப்புறம் டைரக்ட்டா செகண்ட் இயர் B.E ஜாயின் பண்ணிக்கலாம்! வேலை பார்த்துகிட்டே பார்ட் டைம்ல கூட படிக்கலாம் என்று சொல்லவே தன் கனவுப் பாதையை மாற்றிக் கொண்டாள். இரவும் பகலும் எப்படியாவது நல்ல மார்க் எடுத்து பாலிடெக்னிக்ல ஜாயின் பண்ணிடனும்! என்று முடிவு செய்து கொண்டாள்.
பள்ளியிலும் போட்டிப் போட்டு படிப்பவர்கள் இருந்ததால் வகுப்புத் தேர்வுகளில் யார் முதலிடம் என்ற விறுவிறுப்பு கூடிக் கொண்டே போனது! பொதுத்தேர்வும் வந்தது! ஒவ்வொரு பரீட்சையையும் சிறப்பாக செய்தாள். முதலிலிருந்தே கணக்கு பரீட்சை என்றால் இவளுக்கு தவறாமல் ஜூரம் வந்து விடும். புரிந்து விட்டால் விளையாட்டு போல போட்டு பார்ப்பாள். இல்லையென்றால் பயம் தான்..🙂 அறிவியல் இவளுக்கு பிடித்த சப்ஜெக்ட் ஆச்சே!
ட்யூஷன் டீச்சரிடம் கணக்குகளை சரியான முறையில் கற்றுக் கொண்டதால் கணக்கு இப்போது இவளுக்கு எளிதாக போய்விட்டது. விளையாட்டு போல நிறைய போட்டு பார்த்து திருத்திக் கொள்வாள். ஆனால் பரீட்சையன்று அந்த ஜூரம் தவறாமல் வந்து விட்டது..🙂 ஆம்! ஜூரத்துடன் தான் எழுதி விட்டு வந்தாள்!
மாலை ட்யூஷன் டீச்சரிடம் கேள்வித்தாளில் உள்ளவற்றில் ஒவ்வொருவரும் எப்படி அட்டெண்ட் செய்தார்கள் என்று கேட்ட போது இவளும் இவள் எழுதியவற்றை எல்லாம் சொன்னாள். 'எல்லாம் சரி! நீ அந்த பதிலை எடுத்து எழுதலைன்னு சொன்ன இல்லையா! அதுக்கு ஒரு மார்க் போயிடும்!' பார்க்கலாம்! என்றார்.
உங்க செல்ல பொண்ணு நல்ல மார்க் வாங்கிட்டா அவளுக்கு என்ன வாங்கித் தரப் போறேள்? ஒருநாள் அம்மா அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவ மட்டும் எடுக்கட்டும்! காசு சேர்த்து வெச்சு நான் என் குழந்தைக்கு அரை பவுன்ல மோதிரம் வாங்கிப் போடுவேண்டி!
பார்க்கலாம்! பார்க்கலாம்! நானும் பார்க்கத் தானே போறேன்! அம்மாவும் அப்பாவை சீண்டிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மோதிரம் கிடைத்ததா? கணக்கில் என்ன மதிப்பெண் எடுத்தாள்? தொடர்ந்து பார்க்கலாம்.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
சில நேரங்களில் லட்சியக்கனவின் பாதையை மாற்றிக் கொள்ள நேரிடுகின்றன. சூழல்.
பதிலளிநீக்குஆமாம் சார். உண்மை தான்.
நீக்குதங்களின் வருகைக்கும்
கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
மோதிரம் கிடைத்ததா ? என்பதை அறிய ஆவல்.
பதிலளிநீக்குஅடுத்த பகுதியில் தெரிந்து விடும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
வீட்டிலும் போட்டி... பரிசு கிடைத்ததா...?
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்
நீக்குகருத்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.
பரிசு கிடைத்து இருக்கும் அதில் சந்தேகம் இல்லை.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
தங்களின் வருகைக்கும்
நீக்குகருத்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்குபரிசு கிடைக்காமலா போயிருக்கும்!! நன்றாகப் படித்த ஆதிக்கு!!
நான் படிப்பில் ரொம்ப வீக். அதாவது மதிப்பெண் எடுப்பதில். வகுப்பு எடுக்கச் சொன்னால் நன்றாக எடுக்க வரும். என் கனவுப்பாதையும் மாறியதுதான். அதில் பல ட்விஸ்டுகள் உண்டு!!!!
கீதா
அப்படியா!! வகுப்பு நன்றாக எடுப்பீர்களா!!
நீக்குதங்களின் வருகைக்கும்
கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
நன்றாக படித்துவிட்டு உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கும் .
பதிலளிநீக்கு