இந்த வார செய்தி:
பல இடங்களில் கிராம மக்கள்
தங்கள் இருப்பிடத்தினை விட்டு வெளியே செல்ல மிகவும் கஷ்டப்படுவது இந்தியாவில் பல
இடங்களில் இருக்கிற ஒரு பிரச்சனை. அவர்கள் இடத்திலிருந்து வெளியே செல்லத் தடையாய்
வழியில் ஒரு ஆறு அல்லது பள்ளத்தாக்கு இருந்தால் வெளியே செல்ல பாதையே இருப்பதில்லை.
பாலங்கள் அமைத்துக் கொடுக்க அரசு முயற்சி செய்யாத போது என்ன செய்ய முடியும்.
மக்களாகவே முயன்று செய்யக் கூடிய காரியமும் இல்லையே.
இவர்களைப் போன்றவர்களுக்கு
ஒரு ஆபத்பாந்தவனாக இருக்கும் ஒரு நபர் பற்றி ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் படித்த ஒரு
செய்தி இன்றைய செய்தியாக......
திரு கிரிஷ் [b]பரத்வாஜ் பற்றிய ஆங்கிலச் செய்தி
கீழே.
Girish Bharadwaj builds suspension bridges that
connect isolated villages with opportunity and link them to future.
Mechanical Engineer, Ist class, 1973 batch, P.E.S. College of Engineering, Mandya, Karnataka.On
father’s directive set up a workshop in Sullia to repair farm machinery.Girish
Bharadwaj’s story would have ended there, if Forest Officer Narayan had not
been transferred from Sullia to Kushalnagar. “Can you connect an island (Nisargadham)
in Cauvery to mainland?” he asked GB one day. It was a 50 m span and there were
big trees on both sides. With help from a friend who had seen the Lakshman
Jhoola, GB arranged to hang a pathway of wooden slats from wire ropes with
steel rods as suspenders. “There was no design,” he said. “Only trial and
error.”
He was the knight who would lead them out of
isolation. “I asked for time, referred to books and decided on a suspension
footbridge,” he said. “You know, I got my inspiration studying the Golden
Gate!”
Villagers in India are made of steely stuff.
“Make it low-cost,” they said, and went house to house raising money. When he
rolled his machinery to the site, 40 volunteers waited with building material.
Wooden planks stood stacked. Women served snacks and tea. Two months later, in
August 1989, GB’s first, self-designed suspension footbridge, three feet wide,
stood inviting. He became the local hero.
திரு கிரிஷ் பரத்வாஜ்
அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து....
இந்த வார முகப்புத்தக இற்றை:
LIES WILL DESTROY YOU. LIES WILL DESTROY OTHERS.
LIES, ONCE FOUND OUT, WILL MAKE EVERYONE QUESTION EVERYTHING YOU SAY. SO, DON’T
TELL THEM.
இந்த வார குறுஞ்செய்தி:
EVERYDAY IS A NEW BEGINNING. SO JUST SMILE, TAKE A DEEP BREATH AND START
AGAIN.
இந்த
வார காணொளி:
காசு படுத்தும் பாடு..... பாருங்களேன்
ஒற்றை நோட்டு என்ன பாடு படுத்துகிறது!
ராஜா காது கழுதை காது:
கடை வீதியில் நண்பருடன் நின்று கொண்டிருந்தேன்.
அவருக்கு அலைபேசியில் அழைப்பு. அழைத்தது அவர் மகன் – ஐந்து வயதாகிறது. “அப்பா நீ
வரும் போது ஒரு [b]பேபி [b]பாய் வாங்கிட்டு வா”. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ”வாங்கல்லாம்
முடியாதுப்பா....” என்று சமாளிக்க, “அதெல்லாம்
எனக்குத் தெரியாது. வரும் போது ஹாஸ்பிடல் போய், காசு கொடுத்து வாங்கிட்டு வா!” என்று கட்டளை. ”சரி முதல்ல வீட்டுக்கு வரேன்.
அப்புறம் வாங்கலாம்” என்று வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் கேட்க, அவர்
சொன்னது இது தான் – “பெண்கள் இருவரும் அவர்கள் தோழிகளுடன் விளையாட, இவர் தனியாக,
விளையாட முடியாததால் இப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்திருக்கிறது! அடுத்த
நாள் இதைச் சொல்லிவிட்டு, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் அவர் சொன்னது –
“மூணு நாலு வருஷம் முன்னாடி சொல்லிருந்தாலாவது முயற்சி செய்திருக்கலாம்!”
படித்ததில் பிடித்தது:
மாபெரும் இசைமேதை தன குழுவினருடன் இசை வெள்ளம்
உருவாக்கிக்கொண்டிருந்தார். அப்போது தட், தட் என்று சப்தம்.
திரும்பிப் பார்த்தால் அந்த அரங்கின் ஒரு பகுதியில்
தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள் .
''இப்படி இடையூறு செய்தால் ஒத்திகை பார்ப்பது எப்படி?'' என்று கோபப்பட்டார்கள். அவர்களின் தடுமாற்றத்தைக் கண்ட இசை மேதை ஒத்திகையை
நிறுத்தினார்.
தச்சு வேலை செய்பவர்கள் பக்கம் திரும்பிக் கேட்டார், ''ஐயா, எங்களின்இசை உங்களுக்கு
தொந்தரவாக இருக்கிறதா?''
ஆணியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள் அப்படியே
நிறுத்திக் கொண்டார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; நமக்குத் தொந்தரவாகத் தெரிபவர்களுக்கு நாம் தொந்தரவாகத்
தெரிகிறோம்.
-
முகப்புத்தகத்தில் நண்பர் ராஜகோபாலன் பகிர்ந்து கொண்டது. அவருக்கு நன்றி.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகவனத்தை பொறுத்து தொந்தரவு மாறும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகிரிஷ் பரத்வாஜ்க்கு வாழ்த்துக்கள் காணொளி ஸூப்பர் எல்லாப் பயல்களாலே டீ வியாபாரம் சூடு பிடிச்சதுதான் மிச்சம்.
பதிலளிநீக்குதமிழ் மணம் விழுந்து கொண்டே இருக்கும்.
டீ வியாபாரம் செமயா சூடு பிடிச்சுருக்கு! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
அனைத்தும் அருமை. பரத்வாஜ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழாக்கம் செய்திருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு புரிய ஏதுவாக இருக்கும்
அடடா.... உங்களுக்கு கஷ்டம் கொடுத்துவிட்டேனே..... அடுத்த பதிவிலிருந்து கவனத்தில் கொள்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
திரு கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஃப்ரூட் சாலட் – 130 அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குவணக்கமட
பதிலளிநீக்குஐயா
கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அவரைப்பற்றி ஆங்கிலத்தில் சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது... அத்தோடு கதையும் தகவலும் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅனைத்தும் - அருமை!..
பதிலளிநீக்குஆசை யாரைத் தான் விட்டது!?..
பதிவு கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குகடைசீல யாருக்கு அந்த நோட்டு கெடச்சுதுன்னு காட்டாமப் போயிட்டாங்களே?
பதிலளிநீக்குஆமாம். யாருக்குக் கிடைத்தது எனத் தெரிஞ்சா நல்லாத் தான் இருக்கும்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நல்லைருக்குங்க இன்றைய பழக்குவை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் ஜி!
நீக்குகிரிஷ் பரத்வாஜ் பற்றிய செய்தி பிரமிக்க வைக்கிறது.. வாழ்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஃப்ரூட் சலாட் எல்லாமே நன்று. காசுபடுத்தும் பாடு காணொளியை நான் என் பதிவில் முன்பே பகிர்ந்திருக்கிறேன்
பதிலளிநீக்குகாணொளி உங்கள் தளத்தில் பார்த்த நினைவில்லை ஐயா......
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
கிரிஷ் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇற்றை அருமை! சில சமயம் பொய் சொல்ல வேண்டி வருகின்றதே வள்ளுவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு!
காணொளி ஹாஹஹஹ் அந்த ஒரு நோட்டினால் அந்த ரெஸ்டாரண்டுக்கு செம வரும்படி!
ராஜா காது கழுதை காது ஹஹஹஹ்
படித்ததில் பிடித்தது மிக அருமையான பாடம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குஒரு வேளை ரெஸ்டாரெண்டு முதலாளியே அப்படிச் செய்திருப்பாரோ? டவுட்டு!
அவர் கிரிஷ் பரத்வாஜ்ஜா ,இல்லை ,பிரிஜ் பரத் வாஜ்ஜா?காணொளி கண்டு சிரித்து மகிழ்ந்தேன் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபரத்வாஜ் அவர்கள் பாராட்டிற்குரியவர்
பதிலளிநீக்குபாராட்டுவோம்
நன்றி ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஇந்த வார பழக்கலவை அனைத்தும் இனிப்பாக நனறாக இருந்தது. பரத்வாஜ் அவர்கள் பாராட்டப் படவேண்டியவர். காணொளி சிரிப்புடன் ரசித்தேன்
படித்ததில் பிடித்ததில் நயமுடன் கேட்ட விதம் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்கு