இந்த வார செய்தி:
மனவளர்ச்சி
குன்றியவர்களுக்கு அன்னமிட்டு மகிழ்ந்த சேலம் திருநங்கைகள்
இந்த மாதத்தின் 15-ஆம்
தேதி திருநங்கைகள் தினமாகக் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இத் தினத்தை ஒட்டி சேலத்தில் உள்ள திருநங்கைகள்
நலச் சங்கத்தினர் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவளித்தது மட்டுமல்லாமல் பொது
மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி இருக்கின்றனர். இது பற்றி தி இந்து இணைய தளத்தில் வந்த
செய்தி....
சேலம் திருநங்கைகள்
நலச் சங்க தலைவி பூஜா, செயலாளர் கோபிகா, பொருளாளர் ரசிகா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் நேற்று காலை சேலம்
ஆட்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி திருநங்கையர் தினத்தை கொண்டாடியதோடு, ‘தூய்மை இந்தியா திட்டம்’ குறித்து
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆட்சியர்
அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தனர்.
கோரிக்கை மனு
பின்னர் திருநங்கைகள்
சார்பில் அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:
மகளிர் தினம், அன்னையர் தினம் என கொண்டாடப்படுவது போல் ஏப்ரல் 15-ம் தேதி
திருநங்கைகள் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில
அரசுகள் மூன்றாம் பாலினம் என திருநங்கைகளை அங்கீகரித்து, அரசு
வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க
வேண்டும். திருநங்கைகள் சமூக நல வாரியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட
14 கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.
மகிழ்வும், எதிர்பார்ப்பும்
இதுகுறித்து
திருநங்கைகள் நலச் சங்க தலைவி பூஜா கூறும்போது, “தீபாவளி, பொங்கல் பண்டிகைபோல் திருநங்கைகள் தினத்தை
நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். கூவகம் திருவிழாவில் கலந்து கொள்ள
ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், திருநங்கைகள் தின விழா
கொண்டாடுவது சிறப்பு. மற்றவர்களை போல் நாங்கள் மகிழ்ச்சியாகவும், கவலை இல்லாமல் இருக்கவும் தமிழக அரசு சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்க
வேண்டும்.
திருநங்கைகள் தினத்தை
ஆண்டுதோறும் வெகு விமர்சையாகவும், பிறருக்கு
உதவும் வகையில் பொதுசேவையாக கொண்டாடி வருகிறோம். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு
கோரிமேட்டில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து,
விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதில் திருப்தி அடைகிறோம். திருநங்கையர்
சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக இருப்பதை சுட்டிக்காட்ட தூய்மை இந்தியா
திட்டப்பணியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு விழாவாகவும் கொண்டாடினோம்” என்றார்.
அவர்களது இந்த சீரிய
பணியைப் பாராட்டுவோம். சேலம் நகர
திருநங்கைகள் அனைவருக்கும் நம் அனைவர் சார்பிலும் ஒரு பூங்கொத்து!
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார குறுஞ்செய்தி:
மன்னிப்பு.....
தமிழ் அகராதியில் எனக்குப் பிடிக்காத வார்த்தை எனச் சொல்வதுண்டு...... இங்கே
இச்சிறுவன் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்!
என்ன கொடுமை சரவணன்:
The Logical Indian’s Page என முகப்புத்தகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிர
மாநிலத்தில் உள்ள கிராமம் – தண்ணீர் கஷ்டம் நிறையவே அங்கே. தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
தண்ணீர் கொண்டு வருவதற்காகவே அங்கே ஒரே ஆண், இரண்டு-மூன்று பெண்களைக் கூட திருமணம்
செய்து கொள்வது வழக்கமாம்! சா[kh]காராம் [B]பகத் என்பவர்
இது போல மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டார் என்பதைச் சொல்லுகிறது அச்செய்தி.
இந்த வார ஓவியம்:
என் மகள் சமீபத்தில் வரைந்த ஒரு ஓவியம் – முகப்புத்தகத்தில் இரண்டு நாட்கள்
முன்னர் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
இருந்தும், முகப்புத்தகத்தில் என்னைத் தொடராத வலை நட்புகளின்
வசதிக்காகவும், ஒரு சேமிப்பாகவும் இங்கேயும்......
இந்த
வார காணொளி:
ராஜஸ்தானிலும் தில்லியிலும் நிறைய பொம்மலாட்டம்
பார்த்து ரசித்ததுண்டு. இது வெளி நாட்டு பொம்மலாட்டம்..... திரைக்குப் பின்னர் நின்று கொண்டு
ஆட்டுவிக்காமல் சாலையில் நடந்தபடியே......
நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!
> ഇത് നിര്മ്മിച്ച കലാകരന്റെ കരവിരുതിനു എത്ര ലൈക്ക് ചെയ്താലും മതിയാ
സൂപ്പര്.....ഇതിന്റെ പുറകിലുള്ള ആ കരങ്ങളെ എത്ര അഭിനന്ദിച്ചാലും മതി വരികയില്ല,Amazing creativity....ഇത് നിര്മ്മിച്ച കലാകരന്റെ കരവിരുതിനു എത്ര ലൈക്ക് ചെയ്താലും മതിയാവില്ല..ഇഷ്ടപ്പെട്ടാല് ഷെയര് ചെയ്യു...
Posted by Daily Indian Herald on Wednesday, September 10, 2014
படித்ததில் பிடித்தது:
மனிதன் ரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா
மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு !!!
கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம்
உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு !!!
குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக
உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு!!!!
இவை மூன்றும் மனிதனிடம் சொன்னது ..
மனிதா நீ எவ்வளவு அழகு.. உன் திறமைக்கு அளவே இல்லை..
ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம்
இல்லாவிட்டால் நீ இன்னும் அழகு !!!!
குறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு !!!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
திருநங்கைகள் பணி பாராட்டத்தக்கது. தண்ணீருக்காக கூடுதல் மனைவிகள் என்பது வேதனையான செய்தி. தங்கள் மகள் வரைந்த ஓவியத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமுதல் செய்தி பாராட்டப் படவேண்டிய ஒன்று. ரத்ததான தினமென்று இரண்டு மூன்று தினங்கங்களுக்கு முன்னால் அவர்கள் ரத்ததானம் செய்த செய்தியை புகைப்படத்துடன் செய்தித் தாளில் பார்த்தேன்.
பதிலளிநீக்குஇற்றை "வலம் போனாலும் இடம் போனாலும்", "உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல்" போன்ற வாசகங்களை நினைவு படுத்துகிறது!
தண்ணீருக்காக இரண்டு மூன்று திருமணம்..... கொடுமை!
உங்கள் பெண்ணின் ஓவியம் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அந்த சிவனின் முகத்தில்தான் என்ன குறும்பு! வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉங்கள் மகள் வரைந்த படம்தான் இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது. ஏதோ பாராட்டவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்லுகிறேன் சிறுவயதில் இருந்து கல்லூரி போகும் வரை நான் பார்க்கும் படகளை எல்லாம் வரைந்து கொண்டிருப்பேன். அதன் பின் அந்த பழக்கம் அப்படியே போய்விட்டது. ஹும்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குகொஞ்சம் நேரமெடுத்து ஓவியங்கள் வரையலாமே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
இந்த வார பழக்கலவையில் பகிர்ந்துள்ளவைகளில் குறுஞ்செய்தியும், தங்கள் மகள் வரைந்த ஓவியமும் நீங்கள் ‘படித்ததில் பிடித்ததும்’ அருமை. தங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
திருநங்கையர்களின் சேவை வரவேற்க வேண்டிய விடயம்.... மகளின் ஓ வியத்தை இரசித்தேன் காணொளி மிக அருமையாக உள்ளது
படித்ததில் பிடித்தது. எல்லாம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குசேலம் திருநங்கைகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதண்ணீருக்காக... (!!!)
ஓவியம் அழகு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇந்த வார ஃப்ரூட் ஸாலடில் எல்லாமே அழகோ அழகு!
பதிலளிநீக்குஇந்த பொம்மலாட்டம் ஏற்கெனவே பார்த்திருந்தாலும் இன்னொருமுறை ரசித்தேன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குபதிவு நேர்த்தியாக இருக்கிறது...
பதிலளிநீக்குதகவல்கள அருமை ..
தம +
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குதிருநங்கைகள் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்தவேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஃப்ரூட் சாலட் – 132 பொதுவாக அருமை.
பதிலளிநீக்குபொம்மலாட்ட காணொளி வியப்பளித்தது.
பகிர்வுக்கு நன்றிகள், ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஅத்துனையும் அருமை. நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன்.
நீக்குஇந்த வாரப் பழக்கலவையில் மாட்டிய துரும்பாக மூன்று பெண்களை மணக்கும் ஆண். :( கொடுமை! ரோஷ்ணியின் ஓவியத்தை முகநூலிலும் பார்த்தேன்; ரசித்தேன். சிரித்த முகத்தோடு பால சிவன் அழகோ அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குகுறையே இல்லாத ஃப்ரூட் சாலட்டில் எல்லாப் பகுதிகளுமே அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குப்ரூட்சாலட் வழக்கம்போல சுவையாகவே இருக்கின்றது. திருநங்கைகள் தினம் பற்றிய கருத்து பகிர்வினுக்கு நன்றி. மூன்று பெண்டாண்ட்டிக்காரர் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னீர்கள். தங்கள் செல்ல மகளின் கைவண்ணத்திற்கு வாழ்த்துக்கள். இந்த வாரக் காணொளியை ஏற்கனவே அய்யா G.M.B அவர்களின் தளத்தில் பார்த்ததாக நினைவு.
பதிலளிநீக்குத.ம.7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குஇம்மாதிரியான திரு நங்கைகளின் செயலால் பொதுவாக திருநங்கைகள் மேல் இருக்கும் அபிப்பிராயம் மாற வாய்ப்பு உண்டு. மன்னிப்புக்கு அருமையான விளக்கம்/ உங்கள் மகளின் ஓவியம் ரசித்தேன் படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குசேலத்தில் திருநங்கைகள் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது...
பதிலளிநீக்குசெல்லத்தின் சித்திரம் - அழகு!..
காணொளி - பொம்மலாட்டம் எனக்கும் Fb-ல் வந்திருந்தது..
வாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குதங்கள் மகளின் ஓவியம்அருமை
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
சேலம் திரு நங்கைகள் பாராட்டுக்குரியவர்கள் ப
பாராட்டுவோம்
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குசிறுவனின் மன்னிப்பு விளக்கம் அருமை! உங்கள் குழந்தையின் ஓவியம் அழகு! கடைசியில் வந்த அழகு குட்டிக்கதை அழகோ அழகு! திருநங்கையர்கள் தினத்தன்று அவர்களின் சேவை பாராட்டுக்குரியது! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குமூன்று பெண்களை மணந்தால் தண்ணிக் கஷ்டம் தீர்ந்து விடுமா ,பணக் கஷ்டம் வந்து விடாதா :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅருமையான பதிவு. திரு நங்கைகள் வளர்ச்சி பெற வேண்டும் காணொளிக்காட்சி மிக நன்றாக இருக்கிறது. ரோஷனி இன்னம் வளர வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குசிவன் சிரிப்பு அழகு. அட! பாம்பு கூட சிரிக்கிறதே! பிரமாதம் ரோஷிணி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குதிருநங்கைகளும் இவ்வுலகில் வாழப்பிறந்தவர்கள்தானே நமது குடும்பத்தில் ஒருவர் பிறந்து விட்டால் ? ? ? என்ற மனநிலையில் யோசித்தால் இதில் நல்ல தீர்வு கிடைக்கும் 80தே எமது கருத்து.
பதிலளிநீக்குஅவர்களின் செயல் பாராட்டுக்குறியதே...
காணொளி கண்டேன் அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபாராட்டுக்குரியவர்கள் சேலம் நகர திருநங்கையர். மகள் வரைந்த ஓவியம் பிரமாதம்.
பதிலளிநீக்குகுறுஞ்செய்தியும், முகப்புத்தக இற்றையும் அருமை. சிறப்பான தொகுப்பு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதிருநங்கைகள் கௌவுரமாக நடத்தப் பட வேண்டும்.என்ற கருத்து இளமையிலேயே குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும்.. அவர்களுடைய பிரச்னைகள் பற்றி விரிவாக அலசுவோம்..
பதிலளிநீக்குஉங்கள் மகளுடைய சிவன் ஏ கிளாஸ். சிவன் முகம் என்னைப் போல இருக்கிறதே! ரோஷினிக்கு என் ஆசிகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!
நீக்குதிருநங்கைகளின் செயல் பாராட்டிற்குரியது. இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை.
பதிலளிநீக்குகாணொளி மிகவும் ரசித்தோம். தங்கள் மகளின் ஓவியம் மிகவும் பிடித்தது. நல்ல திறமை இருக்கின்றது. டாட் ஆஃப் தெ சாலட்! ரோஷணிக்கு வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள்!
மனிதன் எப்பொதுமே குறைகள் கண்டுகொண்டிருப்பான்-படித்ததில் பிடித்தது எங்கலுக்கும் பிடித்தது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு