சாய்
கேள்விப்பட்டிருக்கோம். அதே மாதிரி லிக்கர் அதாங்க சாராயமும்
கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டும் சேர்த்து லிக்கர் சாய் கேள்விப்பட்டதுண்டா?
என்னது லிக்கர் சாய்? என்று நீங்கள் கேட்கலாம். அது என்ன, ”பால் அல்லது தண்ணீருக்குப் பதிலா, சாராயம்
ஊற்றி சாய் போட்டு தருவாங்களா? இல்லைன்னா சாராயத்தில் சர்க்கரை போட்டுத்
தருவாங்களா? தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுடும் போல இருக்கே” அப்படின்னு ரொம்ப
குழப்பிக்காதீங்க.... எப்படியும் பதில்
சொல்லத் தான் போறேன் – அதுவும் இந்தப் பதிவிலேயே சொல்லிடறேன்!
சமீபத்திய வட கிழக்கு மாநில சுற்றுப்பயணத்தில் பல
இடங்களில் பகல் நேரங்களில் நீண்ட பயணத்தின் போது கொஞ்சம் சாய் கிடைச்சா நல்லா
இருக்குமே என்று வண்டியை நிறுத்துவோம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வித அனுபவம்.
பொதுவா, நம்ம தமிழ்நாட்டுல பால் சேர்த்து தான் சாயா சாப்பிடுவது வழக்கம்.
கேரளத்தில் பாலில்லாமல் கட்டஞ்சாய்! என்னுடன் வந்தவர்கள் நான்கு பேருமே
கேரளத்தினைச் சேர்ந்தவர்கள். அதில் இரண்டு பேர் பாலுடன் தேநீர் சாப்பிடவே
சாப்பிடாதவர்கள்.
அதனால் எங்கே சென்றாலும் முதலிலேயே இரண்டு Black Tea, மூன்று Milk
Tea என்று சொல்வது வழக்கமாகி
விட்டது. ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலத்தில் சொல்ல முடியாது என்பதால் ஹிந்தியில் தான்
சொல்வோம். இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொரு விஷயம் ஹிந்தி மொழி பற்றியது.
பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் ஹிந்தி பேசவும், புரிந்து கொள்ளவும்
செய்கிறார்கள். சின்னச் சின்ன கடைகளில், அதுவும் கிராமப் புறங்களில் இருக்கும்
கடைகளில் கூட ஹிந்தி மொழியில் பேசினால் புரிந்து ஹிந்தியில் பதிலும்
சொல்கிறார்கள்.
இந்த இடங்களில் Black Tea-ஐ “லால் சாய்” என்று சொல்கிறார்கள். ஹிந்தியில் லால் என்றால் சிவப்பு வண்ணம். என்னதான் ஆங்கிலத்தில் Black Tea என்று சொன்னாலும் ஹிந்தியில் சிவப்பு சாய்! பல
இடங்களில் இப்படி சிவப்பு சாய் தான் கிடைக்கிறது. பால் விட்ட சாய்க்கு பெயர் “DOODH CHAI”. அதாவது பால்
டீ. இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல
வேண்டும். பெரும்பாலான மலைப் பிரதேசங்களில் பால் கிடைப்பது அரிது. அதனால் பால்
சாய் என்று சொன்னவுடன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
லால் சாய் அதாவது Black Tea தயாரித்த பின்,
அதை ஒரு கப்பில் விடுகிறார்கள். பக்கத்திலேயே ஒரு மில்க் மெய்ட் டின் இருக்க,
அதிலிருந்து ஒரு ஸ்பூன் மில்க் மெய்ட் எடுத்து லால் சாயில் ஒரு கலக்கு! அதான் பால்
டீ! ஏற்கனவே சர்க்கரை போட்டிருக்க, இந்த இனிப்பான மில்க் மெய்ட் கலந்த பிறகு
ஒருவித அசட்டு தித்திப்புடன் நீங்கள் கேட்ட தூத் சாய் உங்கள் கைக்கு வருகிறது!
வாயில் வைத்த பிறகு தான் ஏண்டா இந்த தூத் சாய் கேட்டோம், பேசாம லால் சாயே
குடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் இப்படி மில்க்மெய்ட்
சாய் குடித்தபிறகு நான் சுதாரித்துக் கொண்டேன்.
ஒவ்வொரு இடங்களிலும் தரும் அளவுகளும், கோப்பைகளும்
மாறுபடுகின்றன. ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கோப்பைகள், ஒரு சில இடங்களில்
பீங்கான் கோப்பைகள் என்றால் கொல்கத்தா நகருக்கு வந்த பிறகு ”குல்லட்” என்று அழைக்கப்படும் மண் கோப்பைகளில் தேநீர்!
தேநீர் தயாரிப்பதில் தான் எத்தனை எத்தனை
வித்தியாசங்கள். நம் ஊரில் தண்ணீரில் தேயிலை போட்டு நன்கு கொதித்த பின் அதில்
சூடாக பால் சேர்ப்பார்கள். வடக்கில் நேர் எதிர் மாதிரி. பாலில் தேயிலை போட்டு
கொதிக்க வைப்பது வழக்கம். அதுவும் ஹரியானா பக்கங்களில் தண்ணீர் விடுவதே இல்லை!
அதற்கு மேல் கொதிக்கும் போது இஞ்சி தட்டிப் போட்டு, கார சாரமாக தேநீர் தருவார்கள்.
குஜராத்தில் தேநீர் கோப்பைகளில் தராமல் Saucer-ல் விட்டு அர்[dh]தி [ch]சாய்! என கொடுப்பது பற்றி வலைச்சரத்தில்
ஆசிரியராக இருந்த சமயத்தில் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நினைவில்லாதவர்களின் வசதிக்காக அதிலிருந்து ஒரு
பகுதி இங்கே....
தேநீர் அருந்த முதல் முறை நிறுத்தியபோது கிடைத்த அனுபவம் தான் இந்த “அர்[dh]தி [ch]சாய்”! அதாவது பாதி தேநீர் – நமது ஊரில் கட்டிங் சாய் என்றும், மஹாராஷ்ட்ராவில் “ஒன் பை டூ” என்றும் சொல்லப்படும் பாதி அளவு தேநீருக்கு இங்கே அர்[dh]தி [ch]சாய் என்று பெயர். இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு இது வழங்கும் விதம் தான் ஸ்பெஷல்!நமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய். இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன் தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர். ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும் தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார். அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்! இது தான் அர்[dh]தி [ch]சாய்.முதல் முறை தேநீர் என்று கேட்ட எனக்கு கையில் சாசரைத் தர நான் விழித்தேன்! அக்கம் பக்கத்தில் பார்த்த பிறகு எனக்கு கப்பில் அதுவும் முழு கப் வேண்டும் எனச் சொல்ல, என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு டம்ப்ளரில் விட்டுக் கொடுத்தார். அவரின் பார்வை, என்னைப் பார்த்து “தம்பி ஊருக்குப் புதுசோ!” என்று கேட்பது போல இருந்தது!
சரி.... இப்பதிவின் முதல் பத்தியில் சொன்ன லிக்கர்
சாய்! பற்றிய விஷயத்திற்கு வருவோம்.....
பெயர் தான் லிக்கர் சாயே தவிர இதில் சாராயம் கலப்பதில்லை. வட கிழக்கு
மாநிலங்களில் சொல்லப்பட்ட ”லால் [ch]சாய்” தான், கேரளாவின் கட்டஞ்சாயைத் தான்
கொல்கத்தாவில் லிக்கர் சாய் என அழைக்கிறார்கள். கொல்கத்தாவின் ஒரு பழம்பெரும்
வீதியில் தேநீர் கேட்டபோது அவர்கள் “லிக்கர் சாய்?” எனக் கேட்க
அதிர்ச்சியாக இருந்தது. லிக்கர் விட்டு தருவார்களோ என கேட்டபோது அந்தப் பெண்மணி
சொன்னது – “வேணும்னா அதுவும் கிடைக்கும்!”
என்ன
நண்பர்களே, இந்த வார சாப்பிட வாங்க பதிவில் கிடைத்த லிக்கரை ருசித்தீர்களா?
மீண்டும்
சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
கடல் பயணங்கள் சுரேஷ் குமார் டீ வகைகள் பற்றி பதிவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவரும் இதைப் படிக்க வேண்டுமே...
பதிலளிநீக்குமில்க் மெய்ட் சேர்க்கப் போகிறார்கள் எனும்போது லால் சாயில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விடலாமே.
லிக்கர் சாய் என்னவென்று தெரிந்து கொண்டேன்!
முதல் முறை மில்க் மெய்ட் சேர்ப்பார்க்ள் என தெரியவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஹா ஹா, தலைப்பைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சிதான் !
பதிலளிநீக்குமண் கோப்பைகள் அழகாகவும், புதிதாகவும் உள்ளன.
ஒரு முறை பயன்படுத்திய பிறகு உடைத்து விடுவார்கள்.... அதனால் அனைத்தும் புதிது புதிதாய்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
//சாப்பிட வாங்க: லிக்கர் சாய்//
பதிலளிநீக்குதலைப்பைப்பார்த்ததுமே ஒருவித கிக் ஏற்பட்டு ஓடிவந்தேன். கடைசியில் இப்படி ஆகிவிட்டதே !
//லிக்கர் விட்டு தருவார்களோ என கேட்டபோது அந்தப் பெண்மணி சொன்னது – “வேணும்னா அதுவும் கிடைக்கும்!”//
மனிதர்களின் அன்றாட அத்யாவஸ்யத் தேவைகளை அறிந்த புத்திசாலி விற்பனையாளர் அந்தப் பெண்மணி.
அடடா ஏமாந்து போனீங்களா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
பெட் த்வாரகாவில் இப்படி கெட்டில் டீயும் குடிக்க சாஸருமாத் தந்தாங்க. பூனா வந்த புதிதில், சாயாவை சாஸரில் ஊற்றிக்குடிப்பதை முதல்முதலாப் பார்த்ததும், அந்த உறிஞ்சிக்குடிக்கும் ஒலியும் கேட்டு, மாடு கழனிநீரை உறிஞ்சும் நினைவு வந்து சிரியோ சிரின்னு சிரிச்சுருக்கேன்:-) அப்புறம்.... அவசரமாக்குடிச்சுட்டுக் கிளம்பணுமுன்னா ஒரே உறிஞ்சல்தான்!
பதிலளிநீக்குஒரு முறை அதைப் பார்த்து சிரித்தாலும் அடுத்த முறை நானும் அது போல வாங்கி தேநீர் குடித்துப் பார்த்தேன்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
மில்க் மெய்ட் எப்படியெல்லாம் உதவுகிறது...!
பதிலளிநீக்குசுவையான பதிவு...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகுஜராத்தில் கப்பிலும் தேநீர் தருவாங்க. பொதுவாக தேநீர் அருந்துவது என்றாலே மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தானுக்கு அப்புறமாத் தான் மற்ற மாநிலங்கள். உபியில் போட்டு வைச்சிருப்பதையே சூடு பண்ணித் தருவாங்க. சகிக்காது. லிக்கர் சாய் இன்று தான் கேள்விப் படுகிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குவெளியூர் போனால் ஒரு டீ குடிப்பதற்கு... எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது பாருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி.
நீக்குஉங்க தயவால் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் போய் தயக்கப்படாமல் நமக்கு வேண்டுமன்கிற தேநீரைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு வரலாம் போலுள்ளது. பல அனுபவங்கள்.. பல பாடங்கள்.. லிக்கர் சாய்..சூப்பர்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குப்ளாக் டீ க்கு லிக்கர் சாய் என்னும் பெயரா. லால் சாய் என்றாலாவது பொருத்த்மாய் இருக்கிறது. லிக்கர் சாய்....?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குதேநீர் பெயர் பல, தெரிய வைத்தமைக்கு நன்றி. அப்புறம் அந்த மண்கோப்பை அழகாக உள்ளது, அருமையான பயனம். பாலமகிபக்கங்களுக்கும் சற்று வந்து செல்லலும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் ஜி!
நீக்குஉங்கள் பக்கமும் வருகிறேன்.....
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குஒவ்வொரு மாநிலத்திலும், டீ எப்படி என்ற விபரங்கள் அறிந்தேன். நானும் பதிவின் ஆரம்பத்தை பார்த்து "அப்படியும்" கலந்து தந்து விடுவார்களோ என்ற பயத்துடன் படிக்க இறுதியில் லிக்கர் சாய் சாதாரணமானது என்றதும் நிம்மதி .நல்ல அனுபவங்களுடன் ௬டிய பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குசாய் பற்றிய அனுபவம் அருமை இங்கு அரபு நாடுகளில் பால் கலக்காத சாய்தான் விரும்புவார்கள் அதே பழக்கம் இந்தியர்களுக்கும் தொற்றி விட்டது நானும் கூட ஊருக்கு வந்தாலும் இப்படித்தான் குடிக்கின்றேன் இங்கு அதன் பெயர் ''சுலைமானி''
பதிலளிநீக்குஐந்தருவி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஎல்லா டீயை பற்றியும் விலாவாரியாக சொன்ன நீங்க உங்க வீட்டம்மா தருகிற டீயை பற்றி சொல்லாம சென்றது ஏனோ? உங்க வீட்டம்மா போடுற டீ நல்லா இருக்குன்னு சொன்னா நாங்க எல்லாம் உங்க வீட்டிற்கு படை எடுத்துவிடுவோம் அப்புறம் உங்கவீட்டம்மா டீக்கடை மாஸ்டராக மாறிவிடுவார். அதுக்கு அப்புறம் ஏங்க இப்படி பண்ணிட்டீங்களே என்று உங்களுக்கு நல்லா அடி கிடைக்கும் அவங்க நல்லா போடுறது இல்லை என்று சொன்னால் வாய்யா வா வீட்டுக்குதான் வருவே அப்ப நல்ல கவனிச்சிகிறேன் என்று சொல்லி உங்களை கவனிக்கப் போறார். பாவம் நீங்க
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இந்திய வருவது என்றால் முதலில் தங்களின் படைப்புக்கள் ஒரு வழிகாட்டி ஐயா... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபயணம்தான் உண்மையான கல்வி ...
பதிலளிநீக்குஉணரவைத்த பதிவு
தொடர்க
வாட்சப்பில் போட்டுட்டேன்..
தம+
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குலிக்கர் சாய் என்ன என்பதை சஸ்பென்ஸ் வைத்து சொல்லி விட்டீர்கள்:).
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு