அன்பு நண்பர்களுக்கு,
நன்றி: தினத்தந்திதமிழ் வருடங்கள் அறுபதில், 29-வது வருடமாக வருவது தான் மன்மத ஆண்டு. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் இருக்கும் பலனை ”வருடாதி வெண்பா” என்ற தலைப்பில் பாடல்களாக அக்காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்களாம். அப்படி இன்று பிறக்கும் மன்மத ஆண்டிற்கான வெண்பா பாடல்......இடைக்காட்டு சித்தர் எழுதிய 'மன்மத வருட வெண்பா'மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமேநன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும்கானப்பொருள் குறையுங் காண்.பொருள்: இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள் சேதமடைந்து குறையலாம்.பாடலின் பொருளை பார்க்கின்ற பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. மழைக்காக ஏங்கி மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் மழை வளம் பெருகும் என்று முதல் சொல்லாகவே குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சூறாவளிக் காற்று, இயற்கை சீற்றங்களின் விளைவாக காட்டில் விளையும் அற்புதப் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு உண்டு என்று குறிப்பிடப்படுகின்றது.
பாடல்
சொல்வதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
இந்த
“மனமத”
ஆண்டில் உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோய் நெருங்கிடா வாழ்வும், அள்ள
அள்ளக் குறையா செல்வமும், நீண்ட ஆயுளும், பெற்றிட எங்களது வாழ்த்துகள்!
நட்புடன்
வெங்கட்
ஆதி
வெங்கட்
ரோஷ்ணி
வெங்கட்
Vanakam vaalthukal paadal arumai.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி My Mobile Studios!
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
நீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கும், பதிவிற்கும் மிகவும் நன்றி. குடும்பத்தினர் யாவருக்கும்,ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குHappy thamizh new year!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதங்கி.
நீக்குமன்மதன் வந்தான். நல்ல சங்கதியும் சொன்னான்!
பதிலளிநீக்கு:))))
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குசீனத்திற் சண்டை உண்டா... சீனத்தால் சண்டை உண்டா, வருடம் பிறக்கும் போதே மழை பெய்கிறதே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குசித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
நீக்குஉங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம.5
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்கு//இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.//
பதிலளிநீக்குநம்பிக்கையூட்டும் நல்ல தகவல். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஜி.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குவணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குமன்மத ஆண்டைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி..
தங்களுக்கும், தங்கள் குடுபத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஅன்பு நண்பரே!
பதிலளிநீக்குவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் நுழைக்க... 7
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா......
நீக்குமன்மத வில்லங்கங்கள் பெருகாமல் போனால் சரிதான் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஅருமையான பாடலோடு புத்தாண்டுச் செய்தி இனிமை வெங்கட் சகோ, ஆதி & ரோஷ்ணி. :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
முப்பெரும் பதிவர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ தேனம்மை லக்ஷ்மணன் ஜி!
நீக்குமன்மத ஆண்டைப் பற்றியத் தகவல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅன்பு வெங்கட் பஞ்சாங்கம் படிக்க முடியவில்லையே என்று யோசித்தேன். நீங்கள் அந்தக் குறையைப் போக்கிவிட்டீர்கள் மிக நன்றி. எப்பொழுதும் நலம் சூழ வாழ வேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குதினமும் பதிவிட்டு பின்னிப் பெடலெடுக்கும் பதிவர்களுள் நீங்களும் ஒருவர்! இந்த மன்மத ஆண்டும் உங்களுக்கு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! அன்புடஎம்ஜிஆர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.
நீக்கு