புதன், 8 ஏப்ரல், 2015

எதிர்பார்ப்பு இல்லா அன்பு





புதன் கிழமைகளில் குறும்படங்கள் பகிர்ந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டன. இன்று அக்குறையை நீக்கப் போகிறேன்.  இன்று பகிர்ந்து கொள்ளும் குறும்படம் தாய்லாந்து நாட்டில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்றினை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்.  எனக்குத் தாய் மொழி – அட Mother Tongue இல்லை தாய்லாந்து மொழி தெரியாதே என கவலைப் படத் தேவையில்லை!  ஆங்கிலத்தில் Sub-Title இருக்கிறது. சில படங்களுக்கு மொழி என்பதே தேவையில்லை என்பதும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம்.


கல்லூரி/பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி. தினமும் வகுப்புகள் முடிந்ததும் தனது இருப்பிடம் நோக்கி வேகவேகமாகத் திரும்புகிறார். குழந்தையை தனியே விட்டு வந்ததால் வரும் வேகம்.  திருமணம் ஆகாமலேயே குழந்தை இருப்பதால் அவரது நடத்தை பற்றி முதுக்குக்குப் பின்னால் அவதூறு பேசும் சமூகம்.  ஆனாலும் அது பற்றிய கவலை அவருக்கு இல்லை.  அதற்குக் காரணம் என்ன என்று சொல்லும் குறும்படம்.

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு காண்பிக்கும் குணம் இப்போது யாரிடமும் இல்லை என்றே சொல்லி விடலாம். எதிலும் ஒரு எதிர்பார்ப்பு – நமக்கு என்ன கிடைக்கும், இதைச் செய்வதால் என்ன பலன் என்ற யோசனை இல்லாது எதையும் செய்வதில்லை. இப்பெண் அப்படி இல்லாமல் செய்தது என்ன என்பதை பாருங்களேன். இது நிஜத்தில் சாத்தியமா என்ற நினைப்பு வந்தாலும், நடந்ததைத் தானே குறும்படமாக எடுத்து இருக்கிறார்கள் என்ற உண்மையும் மனதில் உறைக்கிறது.

படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன். படம் தயாரித்தவர்களும், அதில் நடித்த கதாபாத்திரங்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக அப் பெண் குழந்தை......  அழகு!



என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. தரவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா
    பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பார்த்து கருத்தும் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. குப்பையில் கிடைத்த மாணிக்கம். கேள்விகளையும் லாஜிக்கையும் ஒதுக்கி விடுவோம். அன்புப் பாடத்தைப் படிப்போம்!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. தாயுள்ளத்திற்கு நிகரேது...? உருக வைக்கும் நிகழ்வுகளை மாற்றி மாற்றி படமாக்கிய விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

      நீக்கு
  4. பார்த்து நெகிழ்ந்தேன் சகோ..
    சுயநலமில்லா அளவற்ற அன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  5. புன்னகைக்குப் பன்முகப் பரிமாணம் உண்டோ? தாயின் முகத்திலும், மகளின் முகத்திலும் காணும் புன்னகையும் பிரதிபலிக்கும் அன்பும் நம்மை அதிகம் ஈர்த்துவிட்டன. மனதிற்கு இதமாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.. சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  7. காணொளி மிகவும் அழகு.
    நடுவில் கண்கலங்கச் செய்தது.
    ’எதிர்பார்ப்பு இல்லா அன்பு’ என்ற தலைப்பு அருமை.
    பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. மனம் நெகிழ்ந்தது..
    எதிர்பார்ப்பு இல்லாத அன்பு தான் - காலங்களைக் கடந்து நிற்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  9. என்னத்த சொல்ல. சிம்ப்லி பியூட்டிஃபுல்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  10. கலங்க வைத்த தாய்பாசம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. அருமை நண்பரே நல்ல தலைப்பு கண் கலங்கி விட்டது கதையின் ஓட்டம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. ஒன்றுமில்லை... வெறும் அன்பு மட்டுமே.... அருமை... அந்தக் குட்டிப் பெண் அப்படியே ஈர்க்கிறாள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  13. வார்த்தைகள் இல்லை! அன் கண்டிஷனல் லவ்! மிகவும் கடினமான ஒன்று ஆனால் இதனை நாம் எல்லோரும் பின்பற்ற முயற்சியேனும் செய்தால் உறவில் விரிசல்கள் இல்லாமல் இந்த உலகமே அன்புமயமாகி ஒளிரும்.

    இது மிக மிக உன்னதமான தாய்மை. நாம் பொதுவாகச் சொல்லும் தாய்மை அல்ல இது! அதனினும் உயர்வான ஒன்று. ஏனென்றால் நாம் சொல்லும் தாய்மை, அம்மாக்கள் எதிர்பார்ப்பு இல்லாதது அல்லவே!

    தாய்லாந்தில் கூட இது போன்று குழந்தைகளைக்குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் இருக்கின்றதா? சமீபத்தில் எங்கள் தளத்தில் கூட பெண்கள் தினத்தன்று கீதாவின் வீட்டின் வாசல் குப்பைத்தொட்டியில் எறியப்பட்டிருந்த பிறந்த பெண் குழந்தை எடுத்துக கீதா காப்பாற்றியது பற்றி எழுதியிருந்தோம்....

    கண்களை நிறைத்து இதயத்தைக் கனக்க வைத்துவிட்ட படம்! இதை உங்கள் அனுமதியுடன் முகநூலில் பகிர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. பாராட்டுகள் அனைத்துமே படம் எடுத்தவர்களுக்கும், படத்தில் நடித்தவர்களுக்குமே சேரும். பகிர்ந்து கொண்டது மட்டுமே நான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....