ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

மலரே பேசு மௌன மொழி.....




கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அதாவது மார்ச் 14 முதல் 29 வரை பதிவுலகம், முகப்புத்தகம் பக்கமே வராமல் இருக்க நேர்ந்தது. காரணம் ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணம் எனது நெடு நாள் ஆசையும் கூட. எங்கே பயணம் என்று கேட்குமுன்னர் சொல்லி விடுகிறேன். வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்று வந்தேன்.  சில நண்பர்கள் அங்கே செல்ல ஆர்வத்துடன் இருக்க, அனைவருமாய் அங்கே சென்று வந்தோம். பதினைந்து நாட்களில் கிடைத்த அனுபவங்கள் எத்தனை எத்தனை......

இப்பயணம் பற்றிய பதிவுகள் எழுத ஆரம்பித்தால் எத்தனை பதிவுகள் வரும் என்று சொல்வது கடினம்! உணவு, உடை, நடவடிக்கை, பழக்க வழக்கங்கள், சுற்றுலாத் தலங்கள், வரலாறு என எத்தனை எத்தனை விஷயங்கள் எத்தனை எத்தனை அனுபவங்கள்! தற்போதைய பயணத் தொடர் முடிந்த பின்னர் இந்தப் பயணம் பற்றியும் எழுதுவேன்.  இப்போதைக்கு, பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் – குறிப்பாய் மலர்களின் படங்கள் உங்களுடன் இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்.

ஒரு சில மலர்களின் பெயரோ அவை பற்றிய குறிப்புகளோ என்னிடம் கிடையாது.  ஆனாலும் பெயர் தெரிந்து தான் ரசிக்க வேண்டுமென ஏதும் சட்டமில்லையே! அதனால் இப்பூக்களை ரசிப்பீர்கள் தானே!

வாருங்கள் பூக்கள் பேசும் மௌன மொழியைக் கேட்போம்!

































மீண்டும் அடுத்த ஞாயிறில் வேறு சில படங்களுடன் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.  

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. வணக்கம் சார்...பயணக்கட்டுரை எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படி பூவை காட்டி எஸ்கேப் ஆகிட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய ஹிமாச்சலப் பிரதேச பயணம் பற்றிய தொடர் முடிந்த பிறகு இப்பயணம் பற்றியும் எழுதுவேன் என இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேனே ஜீவா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆகா
    காமிரா கவிஞரே
    தங்களின் படம் ஒவ்வொன்றும் அற்புதம்
    அழகோ அழகு
    நன்றி ஐயா
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மலர்கள் அனைத்தையும் பார்க்கும்போது அவை மௌன மொழியில் பார்ப்போரை நலம் விசாரிப்பதுபோல் இருக்கிறது. அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. ஆகா....! வர்ணங்களே மனதிற்கு எத்தனை இதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. தம +
    அருமை படங்கள்
    தி டிரன்ட் செட்டர் க்ரூப்ல் பகிர்கிறேன்

    வாட்ஸ் அப் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  7. பூக்கள் பேசும் மெள்ன மொழியை தங்களது ரசனை வழியாக மிகவும் ரசித்தோம். தங்களது பயணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. முதல் பூ Gulmohar..... தில்லியிலும் நிறைய பார்க்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

      நீக்கு
  9. அழகிய மலர்கள். அருமையான படங்கள். பயண அனுபவங்களை அறிந்திடக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. குல்மோஹர் கேள்விபட்டதுண்டு பார்த்து ரசித்தேன் ,மௌன மொழி என்றாலும் நன்றாக புரிகிறதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. புன்னகை சிந்தும் பூக்களின் பூவிதழ்
    மண் நகை விரும்பும் மனிடர்க்கு இடர்
    தொடர் வலம் வருகவே தோரணமாய்
    களிப்பில் கரைந்தேன் பூவே!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

      நீக்கு
  12. அழகிய படங்கள். பயண விவரங்கள் படிக்கக் காத்திருக்கிறேன். பயணங்கள் செய்வதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளில்லை வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைக்கும் போது பயணித்து விடுவது நல்லது..... சரிதானே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. உங்களுக்கு இருக்கும் அலுவலகப் பணிகள் ஊடே இத்தனை நாட்கள்பயணம் உங்களால் எப்படி மேற்கொள்ள முடிகிறது எனும் கேள்வி என்னுள் எழுகிறதுநான் ஒரு முறை கூடச்சென்றிடாத திக்கு. அனுபவங்களைக் கேட்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து கடுமையான பணி - நடுவில் இப்படி ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறதே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  14. மலர்களின் மெளன மொழி மனதை மயக்கியது! முதல் படம் Bottle Brush flower என நினைக்கிறேன்! படங்கள் அனைத்தும் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பூ - குல்மொஹர்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  15. மலர்கள் சிரிக்கின்றன அழகய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  16. மலர்கள் அத்தனையும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள் வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  17. மிக அழகான பூக்கள்.. பயணக் கட்டுரைக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  18. வணக்கம்
    ஐயா
    அழகிய மலருடன் ஆனந்தமடைந்தோம்.. பகிர்வுக்கு நன்றி த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  20. அத்தனைப் படங்களும் அற்புதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  21. அற்புதம்.. பயணக் கட்டுரையையும் அவசியம் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைய ஹிமாச்சலப் பிரதேசம் பற்றிய தொடர் முடிந்த பின் எழுத உத்தேசம் ஆவி. எழுதுவேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே!

    அத்தனை மலர்களும், நல்ல நல்ல வண்ணங்களோடு கண்ணை கவர்ந்தது. அழகிய நடையுடன் தங்களின் பயணக் கட்டுரையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பூக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  23. முதல் பூ bottle brush flower. இப்போது இவை இங்கும் பூத்துக் கிடக்கின்றன. பூக்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகு !

    பயணக் கட்டுரையை விரைவில் வெளியிடுங்கள். ஹும் .... வேலை, பயணங்கள், வலையுலகம் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      இப்போதைய பயணக் கட்டுரை முடிந்த பிறகு வட கிழக்கு மாநிலங்கள் பயணம் பற்றிய பதிவுகள் எழுதுவேன்..

      நீக்கு
  24. இதழ் வடிவில் இதழ் குவித்துப்பேசும் நான்காவது ப்ங்க் ரோஜா பேசும் மெளன மொழி வெகு சுகம். எட்டாவது மஞ்சள் மலரில் இயற்கையின் லைட் ஷேட் எவ்வளவு அழகு! கடைசி பேபி பிங்க் கவிதை! உங்கள் பயணங்களில் எங்களுக்கும் கிடைக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! நன்றி பயணப் பிரியரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூக்கள் அனைத்துமே ரசித்து அதில் சிலவற்றை குறிப்பிட்டுச் சொன்னது நன்று......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்ம நன்றி நிலாமகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....