தலைநகர் தில்லியில் நடந்த சுற்றுலா
பருவம் [பர்யாடன் பர்வ்] நிகழ்ச்சியில் நிறைய மாநிலங்களின் நடனங்கள் காண
முடிந்தது. தொடர்ந்து நடனங்கள் நடந்த வண்ணமே இருந்தது. ஒரு நடனக்குழு ஆடிக்கொண்டிருக்க,
அடுத்த குழு மேடையிலேயே பின் புறத்தில் நின்றபடியே ஸ்டெப்ஸ் போட்டுக்
கொண்டிருந்தார்கள். நடனமாடிய குழு நடனமாடியபடியே உள்ளே போக, பின்னால் குழு ஆடத்
துவங்கும். இப்படி இடையில்லா நடனம் சுமார் 30-45 நிமிடங்களுக்கு! பதினைந்து முதல்
இருபது குழுக்கள் நடனம் ஆடுகிறார்கள். என்ன நடனம் என்பதை சொல்வதற்கு இடைவெளி
இல்லாததால் – இன்றைக்கு இந்த நடனங்கள் என மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது போல சொல்லி விடுகிறார்கள்
ஆரம்பத்திலேயே! ஆரம்பத்தில் வரவில்லை
என்றால் என்ன நடனம் என்பது தெரியாமலேயே பார்க்க வேண்டியது தான்!
பல மாநிலங்களிலிருந்தும்
வந்திருந்த கலைஞர்கள் ஆடிய நடனங்களின் போது நான் எடுத்த படங்களும், நண்பர் எடுத்த
சில காணொளிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நாங்கள் ரசித்த விஷயங்களை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். உங்களுக்கும் இந்தப் படங்களைப் பார்க்க விருப்பம்
இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இதோ இந்த வரிசையில் இரண்டாம் தொகுப்பு – ஹரியான
மாநில நடனத்தின் சில காட்சிகள்.
என்ன நண்பர்களே நிழற்படங்களை
ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள்
கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....
திருவரங்கத்திலிருந்து....
இந்த உடையைப் போட்டுக் கொண்டு நடனம் ஆடுவதில் இருந்தே அவர்கள் திறமை புரியுதே! படங்கள் எல்லாம் வழக்கம் போல் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குதுரிதகதியில் ஆடுவது தெரிகிறது. அவர்கள் முகமலர்ச்சியுடன் ஆடுவது மேலும் சிறப்பு.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஆகா... அற்புதமான கலைநிகழ்ச்சியை நேரில் கண்ட மாதிரி இருக்கின்றது..
பதிலளிநீக்குவாழ்க கலை.. வளர்க கலைஞர்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅழகு... ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குதொடர்ந்து நடனங்களைக் கவனித்து வருகிறேன். அருமையான புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவிறுவிறுப்பான ஆட்டங்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதெனிந்திய நடனங்கள் இனிமேல்தானா அல்லதுஇல்லையா
பதிலளிநீக்குஒரு சில நடனங்கள் இருந்தன. ஒரு காணொளியாக இருந்ததை பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
அழகு வண்ணங்கள். அலங்கார ,கௌரவமான உடைகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி பொங்கும் முகங்கள். ஆனந்த நடனம்.
மிக நன்றி வெங்கட். காணக்கிடைக்கத காட்சிகளை அளிக்கிறீர்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குநடனத்தை காணொளியாக்கி இருக்கலாமோ?!
பதிலளிநீக்குகாணொளியும் சில இருந்தன. வெளியிட்டு இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.