திங்கள், 8 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பாதாமீ பனீர்....


காலையில் IIAS, Shimla-வில் வெஜிடபிள் பேட்டீஸ் சாப்பிட்டபிறகு, இராணுவ பாரம்பரிய அருங்காட்சியகத்தில் தேநீரும் பிஸ்கெட்டும்! சுற்றிக் கொண்டே இருந்ததில் மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. வயிறு ”நான் இங்கே தான் இருக்கிறேன் – என்னையும் கொஞ்சம் கவனியேன்” என்றது. எங்கே சாப்பிடலாம் என்று ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் கேட்டபோது நீங்களே சொல்லுங்களேன் என்றார் – இது உங்கள் ஊர், நல்ல உணவகமாக, வயிற்றுக்குக் கேடு விளைவிக்காத இடமாக நீங்களே அழைத்துச் செல்லுங்களேன் என்ற போது சரி நான் ஒரு இடத்திற்கு அழைத்துப் போகிறேன் – வீட்டு சாப்பாடு போல இருக்கும் என்றார். சரி எங்கே அழைத்துச் செல்கிறார் எனப் பார்த்தால் ஒரு தங்குமிடம்.


ஆலு மேத்தி....

தங்குமிடத்தின் கூடவே ஒரு சிறு உணவகம் – ஆனால் உணவகம் போன்ற தோற்றமே இல்லாத ஒரு உணவகம். அழகிய வரவேற்பரை – நடுவே எட்டு குஷன் சோஃபாக்கள் – நான்கு நான்காக போட்டு நடுவே ஒரு பெரிய Centre Table – அது மாதிரி இரண்டு அமைப்புகள் – அவ்வளவு தான்! நாங்கள் சென்ற போது ஏற்கனவே ஒரு குழு – சில இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுடன் வந்திருந்து உணவை ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் – அதில் ஒரு பெண் தான் சாப்பிட்ட உணவு ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிப்பந்தியிடம். சரி தோற்றத்தைப் பார்த்து எடை போட வேண்டாம் போலும், உணவு நன்றாகவே இருக்கிறது என்ற முடிவுடன் எங்களுக்கு வேண்டியதைச் சொல்ல மெனு கார்டில் நோட்டம் விட்டேன்.


தால் மக்கனி....

இது மாதிரி இடங்களுக்கு கேரள நண்பர்களுடன் செல்லும் போது பெரும்பாலும் உணவு ஆர்டர் செய்வது நான் தான் – வட இந்திய உணவு எது நன்றாக இருக்கும் இருக்காது என அவர்களுக்குத் தெரியாததால் என்னிடமே இந்தப் பொறுப்பை விட்டுவிடுவார்கள். எப்போதும் போல நானே தேவையான உணவு வகைகளைப் பார்த்து அவர்களுடம் அது என்ன என்பதைச் சொல்லி சிப்பந்தியிடம் சொல்லி விட்டேன் – தவா ரொட்டி, சாலட், ஆலு மேத்தி, பாதாமி பனீர், தால் மக்கனி, ஜீரா ரைஸ் [நம் ஊர் மக்களுக்கு சாதம் இல்லாமல் முடியாதே!] மற்றும் மிக்ஸ் வெஜ் ராய்தா. அம்புட்டுதேன். அனைத்தையும் சொல்லிவிட்டு காத்திருந்தோம். பத்து நிமிடங்கள் வரை அன்றைய பொழுதின் நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததில் கழிந்தது. மேலும் சில நிமிடங்கள் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்த படம் பார்த்து கழிந்தது.


ஜீரா ரைஸ்...

எதிர்புறத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த குழு வேறு ரசித்து ருசித்து சாப்பிட்டது எங்கள் பசியை மேலும் அதிகரித்தது. உணவுக்கான ஆர்டர் கொடுத்து இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. குறுக்கும் நெடுக்குமாக சில சிப்பந்திகள் சென்று கொண்டிருந்தார்கள். எங்களுக்காக தட்டுகளும், ஸ்பூன், ஃபோர்க் போன்றவையும், தண்ணீரும் கொண்டு வைத்தார்கள். சில நிமிடங்கள் கழித்து சாலட் வந்தது. ஏன் இத்தனை நேரமாகிறது பார்க்கலாம் என்று வெளியே வந்தால் இருபது படிகள் கீழ் நோக்கிச் செல்கிறது. உணவு தயாரிக்கும் இடம் கீழே இருப்பதால் ஒவ்வொரு உணவையும் கீழே இருந்து கொண்டு வர வேண்டும் – இருபது படிகள் ஏறி இறங்க வேண்டும் – ஒவ்வொரு முறையும்! பாவம் கொஞ்சம் கஷ்டம் தான். ஒன்றும் சொல்ல வேண்டாம் என காத்திருப்பதைத் தொடர்ந்தோம்.


மிக்ஸ் வெஜ் ராய்த்தா....

நாங்கள் சொன்ன அனைத்தும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தது. கடைசியாக சுடச்சுட தவா ரொட்டி – ஒரு பிரம்புக் கூடையில் வைத்து மேலே சில்வர் ஃபாயில் சுற்றிக் கொண்டு வந்தார். உணவிலிருந்து வந்த வாசம் – உணவு நன்றாக இருப்பதைச் சொன்னது. வழக்கம் போல உணவுப் பதார்த்தங்களை படம் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த பயணங்களில் இதில் கவனமாக இருக்க வேண்டும்! இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து... உணவு வந்த பிறகு களத்தில் இறங்கினோம் – தவா ரொட்டியுடன் ஒவ்வொரு சப்ஜியாக தொட்டுக்கொண்டு உண்ணத் துவங்கினோம். சின்னச் சின்ன கட்டோரிகளில் [கிண்ணங்களில்] சப்ஜிகளை பிரித்து அவரவருக்கும் கொடுத்தார் ஒரு சிப்பந்தி. வீடுகளில் பரிமாறுவது போலவே பக்கத்தில் நின்று பரிமாறினார். தேவையானதைச் சொன்னால் போதும் – அவரே எடுத்துப் போட்டுவிட்டார். நடுநடுவே உணவு எப்படி இருக்கிறது என்ற கேள்விகளும். என்னடா இது இவ்வளவு கவனிப்பு இருக்கிறதே என்ற எண்ணம் மனதில்.

சாலட்....

இருப்பதிலேயே அதிக சுவை – அதிகமாகப் பிடித்தது பாதாமீ பனீர் தான் – இரண்டாவது முறையாகக் கேட்டுச் சாப்பிட்டோம். அந்த அளவிற்குச் சுவை இருந்தது. ஆலு மேத்தி, ராய்தா, தால் மக்கனி என அனைத்துமே சுவையாகவே இருந்தது. பொதுவாக உணவகங்களில் சாப்பிடும்போது, அனைத்துமே ருசியாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருக்கும். இங்கே குறை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ருசித்து ரசித்து சாப்பிட்ட பின்னர் பில் வந்தது. உணவு வகைகளை கீழே இறங்கிக் கொண்டு வந்தார் என்றால், பில் மேலே ஏறிச்சென்று கொண்டு வர வேண்டுமாம்! அதுவும் பதினைந்து படி! நான்கு பேர் சாப்பிடதற்கு மொத்தமே 830 ரூபாய் மட்டுமே – ரொம்பவே குறைவு தான்! இங்கே பெரும்பாலும் தங்குமிடத்தினருக்கு மட்டுமே உண்டான உணவகம். வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லையாம்.


தவா ரொட்டி....

ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களுக்குத் தெரிந்தவர் என்பதால் எங்களுக்கும் உணவு தந்திருக்கிறார்கள். அவருக்கு அங்கே எல்லா இடங்களிலும் அனுமதி! உள்ளூர்வாசி ஆயிற்றே! எங்களுடன் சாப்பிட அழைத்தபோது மறுத்து கீழே சென்று விட்டார். கீழேயிருந்த சமையல் அறையிலேயே தனக்குத் தேவையானதை ரஞ்சித் சிங் சாப்பிட்டு வந்தார். திருப்தியான உணவு சாப்பிட்ட பிறகு அடுத்தது எங்கே எனக் கேட்டோம் ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம். அடுத்தது எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். இதுவும் ஒரு மலைப்பகுதி தான்! ஷிம்லாவில் வேறு என்ன!

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....

24 கருத்துகள்:

  1. ஆகா படிக்கப் படிக்க பசியே வந்துவிட்டது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. சாலட் தமிழ்நாட்டுக்குள் இன்னும் முழுமையாக பரவவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவை பற்றியதான விழிப்புணர்வு நம்ம ஊருக்கு இன்னும் வரலைண்ணே. அதான் கண்டதையும் கிடைத்ததையும் சாப்பிட்டு முப்பது வயசுலயே பிபி, கொலஸ்ட்ரால்ன்னு அல்லல் படுறாங்க.

      நீக்கு
    2. உண்மை. சப்பாத்தி உடன் சாப்பிடுவது போல சாதத்துடன் யாரும் சாப்பிடுவது இல்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. விழிப்புணர்வு நிறைய மனிதர்களிடம் இல்லை....

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  3. உணவு வகைகளின் சுவை எப்படியாவது இருந்து விட்டும் போகட்டும்!..

    அழகான படங்களுடன் - பதிவு சுவையோ... சுவை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. அருமையான மனநிறைவான சாப்பாடு, கவனித்து பரிமாறியது, அன்பாய் உணவு சுவையை எப்படி இருக்கிறது என்று கேட்டது எல்லாம் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனித்து பரிமாறினால் மனதும் வயிறும் நிரம்புமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. எல்லாம் சரி, கழுத்துல கேமராவை மாட்டிண்டு சாப்பாட்டை படமெடுக்காம கோட்டை விட்டுட்டீங்களே! இது சரியா?!

    நம்ம ஊர் சாம்பார், ரசம்லாம் கிடைக்காதா?! ரொட்டிகூட நம்ம ஊர் மாதிரி மெல்லிசா இருக்காது. கனமாதான் இருக்கும். தொட்டுக்க நம்ம ஊர் குருமா மாதிரி இருக்காதுன்னு அம்மா சொன்னாங்களே! பொடி மாதிரி இருக்கும் அதைக்கூட அந்த ஊரில் சப்பாத்திக்கு தொட்டுக்குறாங்கன்னு அம்மா சொன்னாங்க. உண்மையா சகோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொட்டி கனமாவும் இருக்காது. ரொம்ப மெலிதாக வேணும்னால் நாம் ருமாலி ரொட்டி எனக் கேட்க வேண்டும். மெலிதாக இருக்கும்.பொதுவாக ஃபுல்கா ரொட்டி கனமாயெல்லாம் இருக்காது. அதே போல் பொடியெல்லாம் வைச்சுச் சாப்பிட்டதையும் பார்த்ததில்லை. குறைந்த பக்ஷமாக ஒரு கறி, ஒரு தால், ஒரு கூட்டு இருக்கும். அல்லது தால், கறி இருக்கும். சாலட் தினமும் இருக்கும். ப்ரம ஏழைகள் கூட முள்ளங்கி, காரட், வெங்காயம் சேர்த்து நறுக்கி உப்புத் தூவிச் சாப்பிடுவார்கள். அப்படியே ரொட்டியும் சாப்பிட்டுப்பாங்க! சோளம், கம்பில் பண்ணும் ரொட்டி தான் கனமாக இருக்கும். அதுக்கு வெங்காயம், பச்சை மிளகாய்தான் பெரும்பாலும் என்றாலும் கீரை வகைகள் போட்டு சாக் என்னும் க்ரேவி செய்வார்கள்.

      நீக்கு
    2. சில ஊர்களின் ஓட்டல்களில் இப்போல்லாம் தென்னிந்திய உணவு என சாம்பார், ரசம் எனக் கொடுத்தாலும் சாம்பாரில் சோம்பு அரைத்து விட்டு ரசத்தில் பருப்பு நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து என்றே கொடுப்பாங்க! அதுக்கு இதுவே சாப்பிட்டுக்கலாம். பல ஓட்டல்களிலும் ரைஸ் ஃப்ரீ! தால் ஃப்ரீ. தயிரோ, மோரோ கேட்டு வாங்கி சாதத்தோடு சாப்பிடலாம். ஜீரா ரைஸ் எல்லாம் ஆர்டர் பண்ணணும்.

      நீக்கு
    3. உணவு படங்கள் பெரும்பாலும் எடுப்பதில்லை.

      நம் ஊர் சாப்பாடு கிடைக்கும். ஆனால் நன்றாக இருக்காது. எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊர் உணவு சாப்பிடுவது நல்லது. மொழி தெரியாமல் இருப்பது ஒரு விதத்தில் கஷ்டம். கேட்டால் மெல்லிய ரொட்டி கிடைக்கும். தவா ரொட்டி மெல்லியதாக இருக்கும். தந்தூரி ரொட்டி கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
    4. பொடி வைத்து சாப்பிடுவதை நானும் பார்த்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
    5. ஜீரா ரைஸ் நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. பாதாமி பனீர் மட்டும் சாப்பிட்டதில்லை. மத்தது சாப்பிட்டாச்சு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதாமீ பனீர் நன்றாகவே இருக்கிறது. முடிந்தால் செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. நல்ல உணவு... ஆனால் படங்கள் எல்லாம் இணையத்திலிருந்து.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    பயணத்தைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. நீங்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் அனைத்துமெனக்கும் பிடிக்கும்பொல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. அருமையான சாப்பாடு. திருவரங்கம் வந்து விட்டீர்களா.
    நவராத்திரி,தீபாவளி என்று இருந்துவிட்டுப் போகவும்.

    அந்த விடுத்தியில் பரிமாறுபவர்கள் உடல் பெருத்தே இருக்காது.
    இவ்வளவு படிகள் ஏறி இறங்கினால் நல்ல தேகப் பயிற்சி கிடைக்குமே.
    மெனு பிரமாதம். சுவைத்து உண்ணுமாறு சொல்லி இருக்கிறீர்கள்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் சென்று இந்த வாரம் தான் திரும்பினேன் மா.... இரண்டு வாரம் அங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....