சோதனை எலிகள்:
உக்காரை - சென்ற வருடம் முதல் முயற்சியாக....
சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு
கதம்பம் பகிர்வு – இந்த வாரம் எல்லாமே சமையல் சம்பந்தமான விஷயங்கள் தான்! முதலில்
சோதனை எலிகள் பற்றி பார்க்கலாம்! :)
திருமணமானது முதல் ஒவ்வொரு பண்டிகைக்கும்
எனக்குத் தெரிந்த பலகாரங்களைச் செய்வேன். கடையில் வாங்கி மனையில் வைப்பது என்பது எங்கள்
வீட்டில் எந்நாளும் இல்லை. சமையல் புத்தகங்களைப் வாசித்தும், தொலைக்காட்சியில் சமையல்
நிகழ்ச்சியில் பார்த்தும், நட்புவட்டத்தில் தோழிகளிடம் கேட்டும் மனதில் குறித்துக்
கொள்வேன்.
எல்லா விஷயத்திற்கும் பயப்படும் நான்
சமையலில் சோதனை முயற்சி செய்ய மட்டும் துணிச்சல் தானாக வந்து விடும்..:) கொஞ்சமாவது
செய்து பார்த்துவிடுவேன்.. நன்றாக வரவில்லையென்றால், செய்த பாவத்துக்காக கொஞ்சம் சாப்பிட்டு
விட்டு, செய்த சுவடே தெரியாமல் செய்து விடுவேன்..:))
முதன்முறையாக செய்த போது அபாரமாக வந்த
பதார்த்தம் அடுத்த முறை சொதப்பலாகி விடும்..இல்லை முதல்முறையில் சொதப்பாகி விட்டால்
அடுத்தடுத்த முறைகளில் மெருகேறி விடும்...:))
ரிப்பன் நாடா, ஓமப்பொடி, தேங்காய் பர்ஃபி
என்று சுலபமான பதார்த்தங்களில் ஆரம்பித்து நட்பில் ஒருவரிடம் முறுக்கு செய்ய கற்றுக்
கொண்டேன். டெல்லியில் சந்தையில் 20 ரூபாய்க்கு வாங்கிய இரும்பு பூந்திக்கரண்டியில்
பூந்தி தேய்க்கத் துவங்கினேன். அப்படியே மிக்சர் செய்ய ஆரம்பித்தேன்.
மைசூர்பாகு சாதாரணமாகவே அவ்வப்போது
வீட்டில் செய்வேன்.. இதுவரை 25 முறையாவது செய்திருப்பேன். எல்லா முறையும் ஒரே மாதிரி
வராது. வாணலியை விட்டு எடுக்கும் போதே பாறாங்கல் என்று தெரியும், சிலநேரம் வாயில் போட்டால்
கரையும், இப்போது அதிலேயே பால்பவுடர் கலந்தும் செய்திருக்கிறேன்.
அதன் பிறகு வடநாட்டு இனிப்புகள், நம்
பாரம்பரிய இனிப்புகள், காரங்கள் என ஒவ்வொரு வருடமும் புதிதாக ஏதேனும் செய்யத் துவங்கினேன்.
இணையமும் இதற்கு பெரிதும் உதவுகிறது.
இப்போது என் முகப்புத்தக நட்புகள் என்னைப்
பார்க்கும் போதும், என்னிடம் பேசும் போதும் முதலில் குறிப்பிடுவது சமையல் தான். அம்மாவின்
கைப்பக்குவத்தில் சிறு துளி எனக்கு வரமாய் கிடைத்திருக்கிறது.
சிறுவயதிலிருந்தே எனக்கு சமைப்பதில்
ஆர்வம் உண்டு..அம்மா வெளியே போயிருக்கும் போது மீனாட்சி அம்மாள் புத்தகம் பார்த்து
சிலதை முயற்சி செய்திருக்கேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் சோதனை முயற்சிகளில்
ஈடுபட்டுத் தான் இன்று ஓரளவுக்காவது நன்றாக சமைக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த வருடம் பண்டிகை இல்லாததால் கைகளை
கட்டிப் போட்டது போல் உள்ளது..:))
இந்த சோதனைப் படலங்களில் எல்லாம் என்
பரிசோதனை முயற்சிக்கு உதவிய இரண்டு எலிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்...:))
அப்பள பஜ்ஜி:
ஞாயிற்றுக் கிழமை –
சாயங்காலம்! கொறிக்க ஏதாவது இருந்தா நல்லா இருக்குமே என்ற எண்ணம் வர, உடனே செய்தது….
அப்பள பஜ்ஜி! நீங்களும் எடுத்துக்கலாம்! எடுக்க எடுக்க குறையாமல் இருக்கு – மேலே படத்தில்!
தூதுவளைத் துகையல்:
இந்த பருவநிலைக்கு ஏற்றது. ஜூரம் மற்றும்
சளியை போக்க வல்லது. குடியிருப்புத் தோழி வழக்கமாக வாங்கும் காய்க்காரரிடம் சொல்லி
விட்டு தூதுவளை எடுத்து வரச் சொன்னார். எனக்கும் வேண்டும் என்று சொன்னேன்.
இந்த தூதுவளையில் இலையிலும், தண்டிலும்
நிறைய முட்கள் இருக்கும். பொறுமையாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும். இப்போது தான்
நேரம் கிடைத்தது. சுத்தம் செய்ததில் தேறியது கொஞ்சம் தான் :( என் பெரிய மாமியார் வீட்டில்
நிறைய இருக்கும். போகும் போது கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இருப்பதை வைத்து துவையல் அரைத்தேன்.
ரிஷபன் சார் பகிர்ந்து கொண்ட "தூது சென்ற தூதுவளை" நினைவுக்கு வந்தது.
தூதுவளையுடன் உளுத்தம்பருப்பு, வரமிளகாய்,
புளி, உப்பு, பெருங்காயம், சிறிதளவு மிளகு, தேங்காய்த்துருவல் சேர்த்து வறுத்து அரைத்திருக்கேன்.
ஐரீஸ் முறுக்கு:
நேற்று வெளியே போகும் போது ஒரு மனிதர்
கைகளில் பெரிய பைகளை வைத்துக் கொண்டு, அஞ்சறைப்பெட்டி முறுக்கு!!! ஐரிஸ் முறுக்கு!!
என்று கூவி கூவி விற்றுக் கொண்டு சென்றார்.
அஞ்சறைப்பெட்டி முறுக்கு என்றால் என்ன??
என்றவுடன், மகளிடமிருந்து அதற்கான விடை கிடைத்தது :)
ஐரிஸ் முறுக்கு என்றால் என்ன????
எங்கே!! இரண்டின் பெயரையும் நீங்கள்
சொல்லுங்க பார்க்கலாம் நட்புகளே!!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்
குட்மார்னிங் (திருமதி) வெங்கட்... கதம்பத்தை (இங்கும்( ரசித்தேன்.
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஐரிஸ் முறுக்கு = அரிசி முறுக்கு!
பதிலளிநீக்குஆமாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குகீதா
மாலை வணக்கம் கீதாஜி.
நீக்குஆதி உங்களைப் போன்றே தான் நானும் சமையல் கற்றுக் கொண்டது...என் பாட்டியிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்...
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் சோதனை எலிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஹா ஹா ஹா ஹா...பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி...எனவே அவர்கள் எல்லோருக்குமே நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் வீட்டில் சோதனை செய்யும் போது அது கொஞ்சம் சுமாராக வந்திருந்தாலும் தீர்ந்துவிடும். வேஸ்ட் செய்ய மாட்டார்கள். ரொம்பவே வாயில் வைக்க முடியாமல் போனால்தான் குப்பைத் தொட்டிக்குப் போகும்...ஆனால் அப்படி நிகழ்ந்தது வெகு அபூர்வம் ஓரிரு முறைகள்தான்.
இங்குள்ள பதார்த்தங்கள் செய்ததுண்டு...அப்பள பஜ்ஜி பார்க்கவே வெகு ஜோராக இருக்கு.
அரிசி முறுக்கைத்தான் அவர் உச்சரிப்பு அப்படி இருந்தது போலும்...
அஞ்சரைப் பெட்டி முறுக்கு என்பது அச்சு முறுக்கு தானே ஆதி?! அதில் ஓட்டை ஓட்டையாக ஒருக்குமே அதனால் என்று நினைக்கிறேன்..
கீதா
உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டு எடுத்திருக்கிறது. மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
கதம்பம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு///எல்லா முறையும் ஒரே மாதிரி வராது. வாணலியை விட்டு எடுக்கும் போதே பாறாங்கல் என்று தெரியும், சிலநேரம் வாயில் போட்டால் கரையும்///
பதிலளிநீக்குஹா.. ஹா.. ரசித்த வரிகள் சகோ.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஇரண்டுமே அருமை ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஐரிஸ் இங்க் கேள்விப்பட்டிருக்கேன் . இங்க் பேனா உபயோகித்த காலத்தில் அது proud ஆன விஷயங்களில் சேர்த்தி ஐரிஸ் முறுக்கு .... ?
பதிலளிநீக்குஅரிசி முறுக்கு தான் ஐரிஸ் முறுக்கு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
//என் பரிசோதனை முயற்சிக்கு உதவிய இரண்டு எலிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்//
பதிலளிநீக்குஹா! ஹா! நல்ல வேளை. அந்த எலிகள் திறமையான ஆராய்ச்சியாளரிடம் மாட்டிகிட்டது.
ஹாஹா....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.