செவ்வாய், 6 ஜூலை, 2021

கதம்பம் - தடுப்பூசி அப்டேட் - காயம் - காரட் பராட்டா காணொளி - தள்ளுபடி - மருத்துவர் தினம் - அழுகை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள்… ஆனால் நிகழவே முடியாது என்று சொல்லும் எந்த விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டும் வலிமை உடையவை அவை.


******




தடுப்பூசி - கோவிஷீல்ட் அப்டேட் - 26 ஜூன் 2021: 





இரண்டு நாட்களாகவே ஜூரம், உடல்வலி, தலைபாரம், குளிர், பற்களில் கூச்சம், ஊசி போட்ட கையில் குடைச்சல், வலி என்று அற்புதமாக இருந்தது...:) மருந்து வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது...:)) 


ரெஸ்ட்டெல்லாம் எடுத்துக் கொள்ள முடியலை..:) வழக்கம் போல வேலைகள். மதிய உணவு மட்டும் ஒருநாள் மாமியாரும், ஒருநாள் நாத்தனாரும் சமைத்து தந்து விட ஒரு பொழுதுக்கான சமைக்கும் வேலை மிச்சமானது..:) இன்று நார்மலாகி விட்டேன் என்று தான் நினைக்கிறேன்.


******


காயம் - இதுவும் கடந்து போகும் - 26 ஜூன் 2021: 





சென்ற வாரம் பாத்திரங்களை சுத்தம் செய்து போட்டு வைக்கும் கூடையில் போட்டிருந்த காய்கறி நறுக்கும் கூரான கத்தி வெளியே துருத்திக் கொண்டிருப்பது தெரியாமல் வேகமாக சமையல் மேடையை நான் சுத்தம் செய்ய நடுவிரலை நன்றாகவே பதம் பார்த்து விட்டது..:)


ஆயிண்மெண்ட், மூலிகை எண்ணெய் என்று தடவி இப்போது சற்று பரவாயில்லை. ஆனாலும் சிலநேரங்களில் வேலை செய்யும் போது எதிலாவது அந்த காயம் பட்டுவிட்டால் உயிரே போகும் அளவு வலி..:) தண்ணீரும் தொடர்ந்து விரல்களில் பட்டுக் கொண்டே இருப்பதால் காயம் ஆற தாமதமாகிறது..:)


இதுவும் கடந்து போகும்!


******


காணொளி - கேரட் பராட்டா - 26 ஜூன் 2021:





எடுத்த வீடியோவிற்கு குரல் கொடுக்கவே முடியாமல் இன்று காலை தான் எழுந்து முதல் வேலையாக யாருக்கும் தொந்தரவில்லாமல் சற்றே தணிந்த குரலில் பேசி அப்லோட் செய்திருக்கிறேன்..:)


காலை/ இரவு உணவுக்கேற்ற வட இந்திய கேரட் பராட்டா செய்முறை Adhi's kitchen சேனலில்.


Carrot paratta/கேரட் பராட்டா/Stuffed Chappathi/Healthy/ breakfast/Dinner/North Indian Recipe!


******


தடுப்பூசி தள்ளுபடி - 1 ஜூலை 2021:


காலை fmல் கேட்டது...திருச்சியில் உள்ள குறிப்பிட்ட ஜவுளிக்கடை ஒன்றில் பர்சேஸ் செய்பவர்கள் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்ட சான்றிதழைக் காண்பித்தால் 10% தள்ளுபடியும், இரண்டாவது டோஸ் போட்ட சான்றிதழைக் காண்பித்தால் 20% தள்ளுபடியும் தருகிறார்களாம்...:)  நல்லது நடந்தா சரி!


******


டாக்டர் நஞ்சுண்டப்பன்! (பிளாஸ்டிக் சர்ஜன்) - 1 ஜூலை 2021:


கோவையில் இருந்தவரை இவரே எங்கள் குடும்ப மருத்துவர். மிகவும் பொறுமைசாலி. நிதானமாக சிரித்த முகத்துடன் சிகிச்சை தருபவர். இவர் அதட்டிப் பேசி நான் பார்த்ததில்லை.. அவரின் குடும்பமும் எங்களுடன் பண்பாக பழகக்கூடியவர்கள்.  ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு வரலஷ்மி நோன்புக்கு தவறாமல் வந்து கலந்து கொள்வார்கள்.


சிறுவயதிலிருந்து நான் பார்த்து வியந்த மனிதரை இன்றைய நாளில் நினைத்துக் கொள்கிறேன். உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு ஒரு சல்யூட்.


******


”தல” உடன் ஒரு Conversation - அழுகை - 1 ஜூலை 2021:




நான் பொறந்தவுடனே அழவே இல்லையாம்!! என்னை அடிச்சப்புறம் தான் அழுதேனாம்!!


இத நம்பவே முடியலையே!!


ஏன்!!!


19 வருஷமா நாந்தான் பார்க்கறேனே! ஆன்னா ஊன்னா tap-ஐ திறந்து விட்டுடறியே!! அதான் கேட்டேன்!! 


நிஜமா! எங்கம்மா சொல்லியிருக்கா!


மிஸஸ். சுந்தரி பாஸ்கரன்!! எங்கம்மா இருக்க! உங்க பொண்ணு சொல்றது கொஞ்சமாவது நம்ப முடியறதா!!


ஹா..ஹா..ஹா..:)


******



நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் அருமை
    சுவாரஸ்யமான சம்பவங்கள்.
    விரலில் கத்தி பட்ட காயத்தை தவிர...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாங்கள் கோவாக்சின் போட்டுக்கொண்டு இதே சிரமங்களை அனுபவித்தோம்.  இரண்டு டோஸும் போட்டுக்கொண்டாயிற்று.  இப்போது மூன்றாவது டோஸ் கூட போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களாமே..   விரல் காயத்தைப் பார்த்ததும் முதுகில் சிலீரென்கிறது.  அதை வைத்துக்கொண்டே வேலை செய்வதும் மிக கடினம்.  .!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவாக்சின் - நானும்! ஆனால் பிரச்சனைகள் ஏதுமில்லை. இரண்டு டோஸ் முடிந்து விட்டது. மூன்றாவது டோஸ் - இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. சில மருத்துவமனைகளில்/மருத்துவர்கள் பதிவு செய்யாமல் மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்வதை கேள்விப்படுகிறேன்.

      விரல் - தற்போது பரவாயில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    அச்சோ பாவமே ,ஆதி கைவிரலில் நல்ல காயம் பட்டிருக்கிறதே.
    அதென்னவோ மேடை சுத்தம் செய்யும் போது
    இது போல நானும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.
    வேலைகள் முடிந்து கடைசி வேலை இது அலுப்புதான் கொடுக்கும்.
    சுத்தம் செய்யும் அந்தக் கால
    ப்ரஷ் ஷின் முட்கள் என்விரலில்களிலும் ஏறி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா.

      கை காயம் இப்போது பரவாயில்லைமா. சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. திருச்சி ஜவுளிக்கடை ஏற்பாடு மெச்சத்தக்கது.

    வாக்சினேஷன் சில நபர்களை
    அசத்தி விடுகிறது.
    ஆதி நலம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மா. இப்போது பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை இப்படிக் கவரவும் செய்கிறார்கள்.

      வாக்சினேஷன் - சிலருக்கு பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சிலருக்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பிரார்த்தனை பற்றிய வாசகம் மிக நன்மை. உண்மையும் கூட.
    கடவுள் மட்டுமே கதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      நீக்கு
  6. 19 வருஷமா நாந்தான் பார்க்கறேனே! ஆன்னா ஊன்னா tap-ஐ திறந்து விட்டுடறியே!! அதான் கேட்டேன்!! ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////ஆதிமா, ஆண்களுக்குப் பெண்கள் மீது பொறாமை.

    காரட் பராத்தா பார்க்கிறேன் . நன்றி. பதிவு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆண்களுக்குப் பெண்கள் மீது பொறாமை// ஹாஹா... அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால் பெண்கள் ஒப்புக் கொள்ளவா போகிறார்கள்! :)

      காரட் பராட்டா - முடிந்த போது பாருங்கள் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் நன்று.

    கேரட் பரோட்டா செய்து பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      முடிந்த போது கேரட் பராட்டா செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வீரம் காயம் பகீர்...

    இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்கள் எண்ணிக்கையும் அதிகம்... ஒரு வருடம் கழித்து போட்டால் 200% சக்தி வாய்ந்தது என்று சொன்னாலும் சொல்வார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. இரண்டு நாட்களாகவே ஜூரம், உடல்வலி, தலைபாரம், குளிர், , ஊசி போட்ட கையில் குடைச்சல், வலி என்று corona வையே அநுபவிக்கவேண்டி வந்து விட்டது என நினைத்து கோபப்பட்டேன் இந்த கோணத்தில் நான் பார்க்கவில்லை எனக்கு போட்டது maradana
    நன்றி (அற்புதமாக இருந்தது மருந்து வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்து அற்புதமாக வேலை செய்கிறது - அதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி VIC.

      நீக்கு
  10. வேக்சின் போட்டு இரண்டு நாளில் வலி குறைந்துவிடும். விரலில் காயம் வருத்தம் அளிக்கிறது. ஆதி உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். கேரட் பரோட்டா ரெசிபி அருமை! பிரார்த்தனைக்கு வலிமை உள்ளது நிஜமே. எல்லோரும் நலமுடன் வாழ நாமும் பிரார்த்தித்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலி குறைந்து தற்போது நலமே...

      பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி வானம்பாடி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முகநூலில் படித்தேன்.
    இங்கும் படித்தேன்.
    விரலில் ஏற்பட்ட காயம் ஆறி வரும் என்று நினைக்கிறேன். காயம் ஆழமாக இருப்பதாலும் மடக்கும் இடத்தில் இருப்பதாலும் காயம் ஆற நாடகள் தேவைப்படும். கவனம் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி கோமதிம்மா.

      காயம் தற்போது பரவாயில்லைம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. விரல் காயம் விரைவில் முழுமையாய் குணமடையட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....