ஞாயிறு, 4 ஜூலை, 2021

கடந்து வந்த பாதை - பகுதி ஏழு - சுப்ரமணியன்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN YOU DEVELOP THE ABILITY TO LISTEN TO NEGATIVE COMMENTS WITHOUT LOSING TEMPER OR CONFIDENCE, IT MEANS YOU’VE BECOME “MATURED AND TRULY EDUCATED”.


******




தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் ஆறு பகுதிகளை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன்.  அதனை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக அந்த முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று


கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு


கடந்து வந்த பாதை - பகுதி மூன்று


கடந்து வந்த பாதை - பகுதி நான்கு


கடந்து வந்த பாதை - பகுதி ஐந்து


கடந்து வந்த பாதை - பகுதி ஆறு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  





சென்ற பகுதியை முடிக்கும் போது, தில்லியை நோக்கிய ரயில் பயணத்தில் மதிய நேரத்தில் ஒரு பேரிடி கிடைத்தது எனச் சொல்லி இருந்தேன். அந்த பேரிடி என்ன என்பதை இனி பார்க்கலாம்! என் உடன் இருந்த அனைத்து வட இந்தியர்களும் அசைவப் பிரியர்கள்! அவ்வளவு தான் மூட்டை முடிச்சுகளையும் கைப்பற்றி, மூக்கைத் துண்டால் மூடி, குரங்குத் தாவலாய் மேலடுக்கில் ஏறியவன் தான்! அவர்கள் கொட்டம் அடங்கி படுக்கும் போது மட்டும் தான் இயற்கை அழைப்பிற்கு கீழே இறங்கினேன்.  உறவினர்கள் உண்ணக் கொடுத்த எதையும் தொடாமல், உணவகச் சிப்பந்திகள் (அந்நாளில் தமிழர்கள் தான் அதிகம்!) வரும்போது ஏதோ கொறிக்க மட்டும் வாங்கிக் கொண்டு காபி, டீயுடன் கடந்தது நேரம். அதீத மிரட்சியுடன் பேந்த பேந்த விழித்தபடி தில்லி வந்தடைந்தேன். அனைவரும் இறங்கிவிட, நான் டெல்லியே வரவில்லை என்ற நினைப்பில் பெட்டியிலேயே அமர்ந்திருக்க, சுமை தூக்கி - அதாங்க Porter வந்து ஏழு எட்டு முறை ”யே தில்லி, யே தில்லி” எனச் சொல்ல, மருண்டு போய் கீழே இறங்கி விட்டேன். 


அந்நாளில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏழாம் தளத்தில் - அதாவது நடைமேடை எனப்படும் Platform-இல் (தற்போது 17 தளங்கள் உண்டு!) இறங்கி, சுற்று முற்றும் பார்க்க, எங்கேயும் Delhi என்கிற எழுத்துக்கள் தெரியவில்லை. சற்று பரிதவித்த பின்னர், உறவினர் வந்தார். அந்நாளில் இளைஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தலைநகர் நோக்கி வருவோரின் சரணாலயமாக இருந்த Karol Bagh பகுதிக்கு அழைத்துச் சென்றார் அந்த உறவினர்.  அங்கே W.E.A. எனப்படும் Western Extension Area பகுதியில் தங்கினேன்.  ஒரு வழியாக ”அசால்ட் சுப்பு” தலைநகர் தில்லியில் காலடி எடுத்து வைத்து விட்டான்! இனி நாள் தோறும் தில்லியுடன் நான் வளர்ந்த, கடந்து வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்!  


1970-களில் அனுபவிக்க வேண்டிய இளமையை கிட்டத்தட்ட தொலைத்து, 1980-களின் பாதியில் அதாவது 1985-இல் மத்திய அரசுப் பணியிலும் சேர்ந்தாகி விட்டது. 


1985 ஏப்ரல் 17-ஆம் தேதி புதன் கிழமை மாலை நான்கு மாடி கட்டிடத்தின் மொட்டை மாடி அறையில் (தில்லியில்/ஹிந்தி மொழியில் மொட்டை மாடிக்குப் பெயர் Bபர்சாத்தி!) ஏற்கனவே அங்கே தங்கியிருந்த இருவருடன் சேர்ந்து மூவரானேன்! படிகள் ஏறி மேலே சென்றதும், ஒரே ஒரு அறை இருக்கும் - ஆரம்பித்த உடன் முடிந்து விடும் என்பது போல சிறியதாக இருந்தது. சென்னையிலிருந்து புறப்படும் முன்னர் அம்மை வந்ததால், மூன்றாம் முறை நீராடிய மறுநாள் புறப்பட்டு விட்டேன். தில்லியில் இறங்கியது முதலாய் உடல் அனலாய் கொதிக்க செய்வதறியாது பேந்த பேந்த விழித்தேன். கரோல் Bபாக் பகுதியிலேயே இருந்த ஒரு தமிழ் மருத்துவரிடம் செல்ல, அவரே நான் தங்குமிடத்திற்கு அருகில் இருந்த ஒரு வங்காள இனிப்பகம் (Bengal Sweet House) பெயரைச் சொல்லி ”தினசரி காலையும் மாலையும் அங்கு செல், ஒவ்வொரு முறையும் ரூபாய் 2/- கொடு” என்றார்!  


மருத்துவரிடமிருந்து அந்த உணவகம் சென்று இரண்டு ரூபாய் கொடுத்து மருத்துவரின் பெயர் சொன்னதும், “ஆவ் ஆவ் Bபை(t)டோ!” என ஏதோ சொல்ல, நமக்கோ ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் பெப்பே தான்! இதனை வேடிக்கை பார்த்து ரசித்த அறைத் தோழர், உன்னை அழைத்து அமரச் சொல்கிறார்கள் என்றார். தனியாக சமாளித்தால் தான் ஹிந்தி கற்க முடியுமாம்! கண்டிப்பான ஆசிரியராக இருந்தார் அந்த அறை நண்பர் - பொறியியல் பட்டம் பெற்று, அருகாமை மாவட்டமான Faridabad (ஹரியானா மாநிலம்) - இல் பணி புரிந்து வந்தார். ஆறு (6) அடிக்கு மேல் ஆஜானுபாகுவாய் நின்ற உயர்ந்த மனிதர்! சரி நான் கொடுத்த அந்த இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைத்தது? 


இரண்டு ரூபாய்க்குக் கிடைத்தது புளிக்காத சுவை மிகுந்த தயிர்! அந்நாளின் விலைவாசியைக் கவனிக்கவும். 2021-இல் நினைக்கும்போது கனவு போல உள்ளது 1980-களின் தில்லி! தற்போது முற்றிலும் தலைகீழாக மாறி விட்டது! இப்படியாக எனது தில்லி வாழ்க்கை தொடங்கியது!  தில்லி வந்ததும் மேலும் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர்… கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்! 


  1. 1985-ஆம் வருடம் ஏப்ரலில், நான் கல்லூரி சமயத்தில் எடுத்த முதல் சபதம் நிறைவேறியது! அது முழுக்கை சட்டை அணிவது! 

  2. கடும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்ததால் கல்லூரியில் தான் மிதிவண்டியே (சைக்கிள்) பயின்றேன். இன்றும் நின்றபடியே சைக்கிள் சீட்டில் அமர்ந்து (??) ஓட்டத்தான் தெரியும். தமிழர்களின் தலைசிறந்த, சர்வதேச அங்கீகாரம் பெற்ற, தத்தி ஏறுவது, அரை (குரங்கு) பெடல், முழு பெடல் போன்ற அனைத்தும் எனக்குத் தெரியாது - பெப்பே தான்! :) 

  3. அதனால் தில்லி வந்ததும் மீண்டும் ஒரு சபதம் எடுத்தேன்! சபதம் எடுப்பதே வேலையாகி விட்டது - அந்த சபதம் - எப்படியாவது இரு சக்கர வாகனம் கற்க வேண்டும் என சபதமேற்றேன்! 


இனி தில்லி! அடுத்த பகுதியில் தொடர்ந்து, கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...



19 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசம்.

    நண்பரின் அனுபவங்கள் மனப்பூர்வமாக வெளிப்படுகின்றன.  அப்போது அறை வாடகை என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      //அப்போது அறை வாடகை என்னவோ?// அந்தச் சமயத்தில் Barsati வாடகை 800/- ரூபாய் என்று சொல்கிறார் நண்பர் மணி. மூன்று பேர் தங்கி இருந்தார்கள் - மூன்று பேருமாகச் சேர்ந்து பணம் கொடுத்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாலியின் மனைவியின் காலெடுத்துத் தேய்னு மருத்துவ பாடலில் சொல்வதுபோல, கட்டித் தயிர் சாப்பிடச் சொல்லியா ப்ரிஸ்கிருப்ஷன்?

    தனியாக சமாளித்தால்தால் மொழி கற்க முடியும் என்பது உண்மை. இங்கிலிபீச்சை வைத்துச் சமாளித்ததால் ஒரு மொழியும் கற்க இயஙாது போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் சாப்பிடச் சொல்லி ப்ரிஸ்கிருப்ஷன் - இப்படியும் சில மருத்துவர்கள் இங்கே உண்டு நெல்லைத் தமிழன். நானும் சிலரை இப்படிச் சந்தித்து இருக்கிறேன்.

      தனியாக சமாளித்தால் தான் மொழி கற்க முடியும் - உண்மை. இங்கிலிபீச்சை வைத்துச் சமாளிப்பது கடினம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு ஸ்வாரஸ்யமாக இருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அனுபவ வெளிப்பாடுகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சுவாரசியம் ததும்ப அணுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் நன்பர்.
    வாசகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  7. மிகவும் அருமையான நினைவுகள். தில்லி வந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் நிறைய இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். தமிழகத்திலிருந்து தில்லி வந்த நம்மில் பலருக்கு இப்படியான அனுபவங்கள் கிடைத்தன இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பரின் தில்லி வாழ்க்கைப் பதிவு சுவாரஸ்யமாக செல்கிறது. நகைச்சுவையுடன் வாழ்வில் வரும் பிரச்சனைகள் எதையும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை நன்றாக கழியும். தொடர்ந்து வாசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தில்லி வாழ்க்கை குறித்த நண்பரின் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக அருமையாக தான் கடந்து வந்த பாதையை சொல்லி வருகிறார், படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டார்.

    Karol Bagh கடைகளில் பேரம் பேச தெரியவில்லை என்றால் நாம் ஏமாந்து போகும் அனுபவம் நிறைய கிடைக்கும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்து வந்த பாதை பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      கரோல் பாக் கடைகலில் பேரம் பேச தெரியாவிடில் ஏமாந்து போக நிறைய வாய்ப்புண்டு என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்பின் வெங்கட்,
    நல்ல வாசகத்துடன் ஆரம்பித்திருக்கும் பதிவு.

    பேரிடி உணவு ரூபத்தில் வந்ததா நண்பருக்கு:))
    அந்த இளம்வயதில் பாவம் ...இதெல்லாம் துன்பம் தான்.
    எப்படியோ வெக்கைக்கு ஏற்ற லஸ்ஸி கிடைத்ததே.!!!

    பிறகு சைக்கிளோ பைக்கோ ஓட்டினாரா
    என்று தெரிந்து கொள்ளலாம். !!!!
    அனேகமாக தில்லி சென்ற இளைஞர்களின்

    அனுபவங்களும்,
    தமிழ் நாட்டிலிருந்து வெளி மானிலங்களுக்குக்
    கிளம்பிச் சென்ற வாலிபர்களுக்கும் ஒரே மாதிரி அனுபவம் இருக்கும்.

    ஃபரீடாபாட் வேலைக்குச் சென்ற தம்பிக்கு வயது 21.
    சென்ற ஒரு வாரத்திலேயே கூட வந்த
    வாலிபன் தற்கொலை செய்து கொண்டான்.
    உடல் கொதிக்கும் ஜ்வரத்துடன்
    தில்லி மாமா வீட்டுக்கு வந்தவன்
    ஒரு மாதம் கழித்தே திரும்பினான்.
    இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....